தீத்திரள் ஆரமே -20

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளதுபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் உள்ளது. சிதம்பரத்தில் நடராஜர் நின்றாடும் நடனம் ஆனந்த தாண்டவம் என்றும், திருவாரூரில் தியாகராஜர் அமர்ந்தாடும் நடனம் அஜபா நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. முக்கியமாக இக்கோயிலில், நவக்கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் நின்ற நிலையில் அருள்பாலிக்கும் அபூர்வத்தை இங்கு மட்டுமே காணமுடியும்.

அவனை தொடர்ந்து போன ஆரா உள்ளே நுழைந்தும் "எதுக்கு பாலாவை டிரான்ஸ்பர் பண்ணுன?" என்றாள்.

"அதுக்குள்ள விஷயம் வந்துடுச்சா?"

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு"

"அவங்களுக்கு கொடுத்த வேலையை செய்யாம எக்ஸ்ட்ராவான வேலையை செஞ்சா இப்படிதான் டிரான்ஸ்பர் நடக்கும், சொல்லப் போனா டிஸ்மிஸ் பண்ணிருக்கணும் அதை செய்யாம விட்டேன்னு சந்தோசப்படு" என்றவன் "வெளியே போகணும்னு சொன்னியே போலாமா?"என்றான்.

"உனக்கு நான் பாலாகிட்ட பேசுறதுல பொறாமை அதுக்கு தான் வேணும்னே இப்படி பண்ணிருக்க.பாவம் பாலா எனக்கு ஹெல்ப் பண்ண போய் அவருக்கு கஷ்டமாயிடுச்சி" என்று கவலைப்பட்டவளை

ஒரு நிமிடம் ஆழ்ந்துப் பார்த்தவன்.

"அப்படி நீ நினைச்சா நான் எதுவும் பண்ண முடியாது. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு" என்றான்

"ம்" என்று மட்டும் ஆரா சொல்ல,

அவளைப் பார்த்து புன்னகைத்தவன் "வா" என்றான்.

"இவன் கூப்பிட்டதும் பூனைக் குட்டி மாதிரி பின்னாடியே போய்டணும் ஆளைப் பாரு.. பனைமரம் மாதிரி வளர்ந்து இருக்கறதை" என்று சக்தியை மனதிற்குள் திட்டிக் கொண்டிருக்க

"என்னைய திட்டி முடிச்சிட்டா நம்ப கிளம்பலாமா?" என்றான்.

சக்திக்கு பதில் கொடுக்காமல் அவன் பின்னால் சென்றாள் ஆரா.

சக்தி காரை எடுக்க.. பின்னால் ஏறப் போனவளை அவன் பார்வை தடுத்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பின்னால் ஏறி அமர்ந்தாள்,

பின்பு காதில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு இருக்கையில் தலைசாய்த்து பாட்டுக் கேட்க ஆரம்பிவிட்டாள் ஆரா.

கண்ணாடி வழியாக அவள் செய்வதைப் பார்த்த சக்திக்கு கோவம் வருவதற்கு பதில் சிரிப்பு தான் வந்தது.

"இவ என்ன மாதிரியான பொண்ணு நேத்துதான் அவ்வளவு பெரியக் குண்டை தூங்கிப் போட்டுட்டு வந்தேன், இந்நேரம் வேற பொண்ணா இருந்திருந்தா கண்ணை கசக்கிட்டோ, இல்ல சோக ரசத்தை பிழிஞ்சுட்டோ இருந்துருக்கும்,ஆனால் இவ ஹாயா பாட்டுக் கேட்டுட்டு வரா" என்று நினைத்தவனுக்கு அவள் மீதான காதல் அதிகரித்து கரைப் புரண்டு ஓடியது.

அதை முகத்தில் காட்டாதவன் காரை ஒரு பெரிய ஹோட்டலுக்கு முன் நிறுத்தினான்.

அப்போதும் ஆரா இறங்காமல் இருக்கவும், அவனே இறங்கி வந்து கார் கதவை திறந்து விட்டவன் "போலாமா மேடம்?" என்றான் கிண்டலாக..

சக்தியின் நக்கலை புரிந்துக் கொண்டவள், "சாரி நான் ஹோட்டல் வந்ததை கவனிக்கல".என்றாள் தயக்கமாக.

"இட்ஸ் ஓகே நோ ப்ரோப்லேம்" என்றவன் ஹோட்டலை நோக்கி நடக்க, அவன் வேகத்திற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் பின்னால் ஓடினாள் ஆரா.

"கொஞ்சம் மெதுவா தான் போறது,இவ்வளவு வேகமா நடந்தா நான் எப்படி கூட வரது?" என்றாள்,சக்திக்கு மட்டும் கேக்கும்படி மெதுவாக.

"நீங்க கொஞ்சம் வேகமா நடந்து வாங்க மேடம்" என்று அவனும் பதில் கொடுக்க. சக்தியைப் பார்த்ததும் அந்த ஹோட்டலின் மேலாளர் ஓடி வந்து மரியாதைக் கொடுத்தார்

"டேபிள் ரெடியா?"

"எஸ் ரெடி சார்" என்றவர் குளிரூட்டப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்றார்.

அவர்களுக்கு பின்னால் சென்ற ஆராவோ "எதுக்கு இங்க டேபிள் புக் பண்ணிருக்கீங்க?, வெளியவே புக் பண்ணிருக்கலாம்ல" என்றாள்.

அதற்குள் மேலாளர் கிளம்பிவிட அவர்கள் இருவரும் மட்டுமே அந்த அறையில் இருந்தனர்.

"எனக்கு இவ்வளவு அதிகமான ஏசி ஒத்துக்காது முதல ஆப் பண்ண சொல்லுங்க ப்ளீஸ்" என்றாள் நடுங்கியபடியே

சக்தி முன்பதிவு செய்ததால் அவர்கள் வருவதற்கு கால்மணி நேரத்திற்கு முன்பே அறையை குளிரூட்ட ஆரம்பித்திருந்தனர்,
அதனால் உள்ளே நுழைந்தவுடனே ஆராவிற்கு குளிரவும்,சக்தி தனது கோட்டைக் கழட்டி அவளிடம் கொடுத்து போட்டுக்க சொன்னான்.

"பரவால, இதுலாம் வேண்டாம் ஏசி மட்டும் ஆப் பண்ண சொல்லுங்க"என்றாள்.

"போட்டுக்கோனு சொன்னேன், நீயா போட்டுக்கறியா? நானா போட்டுவிடட்டுமா?" என்று குரல் உயர்த்தாமல் அழுத்தமாக சக்தி கேட்கவும்,

அவன் செய்தாலும் செய்வான் என்று வேகமாக சக்தியின் கோட்டைப் போட்டுக்கொண்டாள் ஆரா.

கோட்டில் சக்தியின் வாசனை திரவியம் பலமாக வீசவும் அதன் வாசனையை கண்களை மூடியவாறு ஒருமுறை மூச்சை இழுத்து நுகர்ந்துப் பார்த்தாள் ஆரா.

அவள் செய்வதை புன்னகையுடன் ரசித்தவன் "என்ன ஸ்மல் நல்லா இருக்கா?"என்றான்.

"ச்ச, நல்லாவே இல்லை.. அதுதான் ஸ்மல் பண்ணிப் பார்த்தேன்" என்றவள் கோட்டை இழுத்து போர்த்திக் கொண்டாள்.

"சரி என்ன ஆடர் பண்ணட்டும்?"

"நான் வரும்போது வீட்டுல சாப்பிட்டு தான் வந்தேன் அதனால காபி போதும்"

"ஓ சரி நான் சாப்பிட்டு வரல அதனால் எனக்கு டிபன் ஆடர் பண்ணிக்கறேன்" என்றான்

"நீ எதையோ ஆடர் பண்ணிக்கோ,எனக்கு என்ன?" என்று நினைத்தவள் ..

"நான் என்ன பேசணும்னு வந்தேனா?" என்று ஆரம்பிக்க அதற்குள் பேரர் வந்துவிட்டான்.

"சொல்லுங்க சார்"

"சப்பாத்தி,சிக்கன் நூடுல்ஸ்,மசால் தோசை, கோல்டு காபி, ஹாட் காபி எல்லாத்துலயும் ஒன்னு கொண்டு வாங்க" என்றான்.

பேரர் போனதும் "போதுமா இது?" என்று கண்களை விரித்தாள் ஆரா.

"ஏன் உனக்கு வேணுமா?"

"எனக்குல்லா வேண்டாம்" என்றவள் "அது வரதுக்குள்ள நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன்"என்றாள்.

"ம்ம்"

"நேத்து நீங்க போட்ட அக்ரிமெண்ட்ல எனக்கு சம்மதம் இல்ல, நீங்க தப்பு பண்ணுணிங்க அதுக்கு தான் நான் கேஸ் குடுத்தேன் அதுக்காக நீங்க என்னைய பழிவாங்கரேன்னு இதுல என்னோட குடும்பத்தை இழுத்து உள்ளே போடறது எனக்கு சுத்தமா பிடிக்கல". என்றாள்.

"சரி அதுக்கு என்ன பண்ணலாம்?"

"நான் கேஸையும் வாபஸ் வாங்க மாட்டேன்".

"நான் வாங்க சொல்லலையே, அதுக்கு முன்ஜாமீன் வாங்கிட்டேன் சோ எனக்கு உன்னோட ஹெல்ப் தேவை இல்லை"

"ஓ" என்றவள், "அப்புறம் எதுக்கு எங்க அப்பாவை ப்ளாக்மெயில் பண்றீங்க? நாங்க மிடில் கிளாஸ் பேமிலி உங்கள மாதிரி பணத்தை எல்லாம் தண்ணி மாதிரி வாரி எறைக்கவீங்க இல்ல, எங்ககிட்ட அவ்வளவு பணமும் இல்ல"என்றாள்.

"அப்போ எங்களுக்கு மட்டும் 50லட்சங்கறது சாதாரணமானதா?"

"அது நான் அப்படி சொல்லல.. பணத்தை எடுத்தவனை கண்டுபிடிச்சி அவன்கிட்ட இருந்து வாங்கலாம்ல, எங்க அப்பாவை எதுக்கு தொந்தரவு செய்யறீங்க?".

"அவர் வேலைக்கு சேரும் போதே பண விசயத்துல என்ன பிரச்சனை வந்தாலும் அதுக்கு நான் பொறுப்புனு சொல்லி சைன் பண்ணிட்டு தான் வேலைக்கு வந்துருக்கார்.அப்படி இருக்கும் போது அவர்கிட்ட கேக்காமல் வேற யார்கிட்ட கேக்க முடியும்?, இது அவரோட கவனக்குறைவு.. அவர்தான் பதில் சொல்லணும்" என்றான்.

"எங்கப்பா இதுக்காக வீட்டை விக்கறேன்னு சொல்றாரு, நான்கூட அடுத்த வீட்டுக்கு போற பொண்ணு, ஆனா என்னோட அண்ணன்ங்க மூனுப்பேரும் இருக்கற ஒரு வீட்டையும் விட்டுட்டு என்ன பண்ணுவாங்க" என்றாள் சோகமாக.

"அதுக்கு தான் நீ என்னைய கல்யாணம் பண்ணிட்டா இந்த ப்ரோப்லேம் சால்வ் ஆகிடும்ல"

"இவன் என்ன நான் சிம்பதியை கிரியேட் பண்ணி பிரச்சனையில இருந்து வெளிய வரலாம்னு பார்த்தா அங்க சுத்தி இங்க சுத்தி கல்யாணத்துலையே வந்து நிற்கறான்".என்று யோசித்தாள்.

அவளது யோசனையை படித்தவன் போல் சிரிப்பை சிந்தியவன்,"உன் வேலையை நீ என்கிட்டையே காட்டரியா ..?" என்று நினைத்துக் கொண்டான்.

"அது எனக்கு உங்கள கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல".

அதற்குள் பேரர் உணவுடன் வரவும் அவர்களது பேச்சுவார்த்தை அத்தோடு அந்தரத்தில் நின்றது.

பேரர் மேஜையின் மீது உணவுகளை கடைப் பரப்பியவன் "சார்" என்றான்

"ஏதாவது தேவைன்னா கூப்பிடறேன்"

"தேங்க் யூ சார்" என்று அவன் கிளம்பி விட

"சாப்பிடும் போது எனக்கு பேச பிடிக்காது சோ சாப்பிட்டு பேசலாமா?"

"ம்ம்"என்றவள் அவளுக்காக காபியை மட்டும் எடுத்துக் கொள்ள

சக்தி அவனுக்காக உணவை ரசித்து சாப்பிட ஆரம்பித்தான்.

அதைப் பார்க்க பார்க்க ஆராவின் வயிற்றில் சத்தம் வந்தது.. பின்ன இரண்டு வேளை சாப்பிடாமல் இருந்தால் பசிக்காதா, சக்தி சாப்பிடுவதைப் பார்க்க ஆராவின் நாவில் எச்சில் ஊறியது..

அதைப் பார்த்தவன் அவள் பக்கம் சிக்கன் நூடுல்ஸையும் சாப்பாதியையும் தள்ளி வைத்து "சாப்பிடு" என்றான்

"இல்லை எனக்கு காபி போதும்"

"ஆனா எனக்கு அது போதாதே நீ பேச வந்ததை பேசி முடிக்கணும்ன்னா முதல இதை சாப்பிடணும்"என்றான்.

ஆராவிற்கு அவளது காரியம் தான் முக்கியம் என்று அவன் கொடுத்ததை தவிர்த்துவிட்டு அவனிடம் இருந்த மசால் தோசையை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

"அண்ணாவுக்கு கல்யாணங்கறதால நோ நான்வெஜ்"என்றாள்.

"அப்போ சப்பாத்தி"

"அது எவன் சாப்பிடுவான் வராட்டி மாதிரி இருக்கும்" என்றாள்.

சிக்கன் நூடுல்ஸில் இருந்த ஸ்பூனை பக்கதில் இருந்த கிண்ணதில் போட்டவன் அவள் சாப்பிடும் அழகை ரசிக்க ஆரம்பித்தான்.

"அப்படி பார்க்காதீங்க எனக்கு வயிறு வலிக்கும்"

"நானே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் கவலைப்படாத" என்று அவளையே புன்னகையுடன் பார்த்தவன், "காலையில சாப்பிட்டேன் சொன்னது பொய் தானே" என்றான்.

"அது அப்போ சாப்பிட்டா இப்போ பசிக்காதா?"

"ஓ" என்றவன் அவள் சாப்பிடும் வரை அமைதியாக இருந்தான்.

ஆடர் செய்ததில் பாதிக்கு மேல் ஆரா சாப்பிட்டு விட மீதி இருந்ததை சாப்பிடாமல் அலைந்துக் கொண்டிருந்தான் சக்தி.

"சாப்பாட்டுல இப்படி அலையக் கூடாது" என்றவளின் உதட்டின் ஓரம் தாண்டி கன்னதிலும் மசால் ஒட்டிருக்க அதை தன் கை விரலால் துடைத்து விட்டான் சக்தி.

"ஹா நான் பார்த்துக்கறேன்" என்றவள் அவளிடம் இருந்த கைகுட்டையால் துடைத்துவிட்டு அதை மேஜையின் மீது வைத்தாள்.

"சரி இப்போ சொல்லு" என்றவனும் சாப்பிட்டு வாயை துடைத்தான்.

"அதுதான் சொன்னேனே நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது" என்றாள்.

"காரணம் கேட்டா நான் கொலைப்பண்ற ரவுடினு சொல்லுவ?"

"அதும் தான் ஆனா நீங்க" என்று இழுத்தவளை

"நேத்து யாரோ மானாவரியா வார்த்தையை என்மேல அள்ளி தெளிச்ச மாதிரி இருந்தது, இன்னிக்கு என்னமோ மரியாதை தூள் பறக்குது.. நீ எவ்வளவு ட்ரைப் பண்ணுனாலும் நான் அக்ரிமெண்டை கேன்சல் பண்ண மாட்டேன் அப்பறம் எதுக்கு தேவை இல்லாம நடிக்கற, நீ நீயாவே இரு" என்றான்.

"கண்டுபிடிச்சிட்டானே ச்சை இவன்கிட்ட நடிக்கக் கூட முடியல ,இதுல வாழ்நாள் முழுக்க எப்படி வாழ முடியும்? என்றவளுக்கு தெரியவில்லை.

மனதிற்கு பிடித்தவர்களிடம் நடிக்க தான் முடியாது ஆனால் வாழ்நாள் முழுக்க சந்தோசமாக வாழலாம் என்று.

'இப்போ என்ன தான் முடிவா சொல்ற?" என்று எப்போதும் போல் மரியாதையை காற்றில் பறக்கவிட்டு கேட்டாள்.

"நீ என்னதான் தகிடு தத்தம் பண்ணுனாலும் என்கிட்ட வேலைக்கு ஆகாது" என்றவன். "ஒன்னு பணம்,இல்லையா? பொண்ணு எதுன்னு நீயே முடிவு பண்ணி அதுக்காக வேலையை சீக்கிரம் ஆரம்பி" என்றான்.

சக்தி சொன்னதில் கோவமானவள் "நீ ரவுடியையும் தாண்டி ஒரு பொம்பள பொறுக்கி",என்று சற்று நிறுத்தியவள். " நான் சொல்றது ஏன் உங்களுக்கு புரிய மாட்டிக்கிங்குது எனக்கானவன் தோள்ல முதலும் கடைசியுமா நான் மட்டும் தான் சாயணும்,என்னோட கூந்தல்ல இருந்து தான் பூவோட வாசத்தை அவன் தெரிஞ்சிக்கணும், அவனோட மார்புல நான் மட்டும் தான் படுக்கணும்னு,இப்படி எனக்குனு சில ஆசைகள் இருக்கு,ஆனால் பலப் பேருக்கு அந்த இடத்தைக் கொடுத்த உன்னால எனக்கான இடத்தை குடுக்க முடியாது,அதனால தான் என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது போதுமா?" என்றாள்.

"பேசி முடிச்சிட்டியா?"என்று சாதாரணமாக கேட்டான்.

"ம்ம்"

"அப்போ கிளம்பலாமா?"

"நான் சொன்னதுக்கு பதில் சொல்லவே இல்லை".என்று ஆரா கேட்ட அடுத்த நொடி

வேகமாக இருக்கையை விட்டு எழுந்தவன் அதே வேகத்தில் ஆராவின் கழுத்தைப் பிடித்தான்.

"என்ன பண்ற விடு என்னையும் கொல்லப் போறியா?" என்று திக்கி திணறி ஆரா கேக்க..

"நான் கொலைப் பண்றவன் தான்டி ஆனா நீ சொன்ன மாதிரி பொம்பள பொறுக்கி கிடையாது, எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா, வீட்டுல அம்மா பாட்டி அண்ணின்னு பொண்ணுங்க இருக்காங்க,வீட்டுல பொண்ணுங்கள மதிக்கற அளவுக்கு வெளியவும் பொண்ணுங்களை மதிக்க தெரியும். யாரையும் சீப்பா நினைச்சி அவங்க கற்போட விளையாட மாட்டேன்" என்றவன் அவளின் கழுத்தை விட்டான்.

சக்தி கழுத்தை பிடித்ததில் குரல்வளை வலிக்கவும் வேகமாக இரும்பியவள், " நீ ஒரு பொண்ணோட ஹோட்டல இருந்ததை நானேப் பார்த்துருக்கேன், பெருசா சொல்ல வந்துட்டான், போடா" என்றாள்.

"கண்ணுலப் பார்க்கறது எல்லாம் உண்மையாகிடாது"

"ஆனா என்னோட கண் பொய் சொல்லாது"

"அப்போ நான்தான் பொய் சொல்லுவேன்,வெல் சூப்பர்" என்றவன், "கிளம்பு" என்றான் கர்ஜனையாக .

"எனக்கு ஒரு முடிவு தெரியனும் அப்போதான் வருவேன்" என்று அடம்பிடித்த ஆராவின் முகத்தின் அருகே சென்றவன்.

"பணத்தை ஏற்பாடு பண்ணுங்க, இல்லனா நீ ரொம்ப கஷ்டத்தை அனுபவிக்கனும்" என்று மட்டும் சொல்லிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியே சென்றுவிட்டான்.

வேகமாக அவன் பின்னால் ஓடிய ஆரா "நான் சாப்பிட்டதுக்கு காசு இந்தாங்க" என்றாள் மூச்சுவாங்க..

சக்தி நின்று திரும்பி அவளைப் பார்க்க

"என்ன தப்பா சொல்லிட்டேன்" என்றவளை "கார்ல ஏறு சொல்றேன்" என்றான்.

எதுவும் பேசாமல் காரில் ஏறியவளிடம், "நீ சாப்பிட்டதுக்கு, உன்ன என்னோட கார்ல பிக்அப் அண்ட் ட்ராப் பண்ணதுக்கு சேர்த்து மொத்தம் ஐஞ்சாயிரம் ஆகுது, நாளைக்கு குடுத்தாலும் ஓகே தான்,இப்போ குடுத்தாலும் ஓகே தான்"என்றான்.

"என்னது ஐஞ்சாயிரமா?" என்று வாயைப் பிளக்க

"நீ சாப்பிட்டது ஹைஜெனிக் ஃபுட் ரேட் என்ன தெரியுமா?"

"என்ன பெருசா ஹைஜெனிக் ஃபுட் எங்க அம்மா செய்யறதை விட அவ்வளவு பெரிய சுத்தம்னு எதுவும் இல்ல.."என்றவள் "இங்க சாப்பிட சாப்பாட்டுக்கு ஒருவாரத்துக்கு எங்க வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிடலாம்" என்றவள் "நீங்களே போங்க நான் பிக்அப் ட்ராப்க்குலாம் பணம் தரமாட்டேன், அதும் இல்லாம என்னோட ஒருநாள் வெளிய வாங்க ரோட்டுக் கடை சாப்பாடு எல்லாம் இதை விட சூப்பரா சுத்தமா இருக்கும்னு காட்டறேன்"என்றாள்.

அவள் முன்பு பேசியதில் பயங்கர கோவத்தில் இருந்தவனுக்கு ,இப்போது பேசியதில் கோவம் எல்லாம் பின்னுக்கு சென்று சிரிப்பு தான் வந்தது சக்திக்கு.

தன்னை ஒருத்தி வூமனைசர் என்று சொல்கிறாள் என்ற கோவத்தையும் தாண்டியும் அவள் மீதிருந்த ஏதோ ஒன்று சக்தியை ரசிக்க செய்தது.

"சரி பிக்கப்க்கு பணம் கேக்கல கார்ல ஏறு" என்று அவளை அழைத்துக் கொண்டு அவளது வீட்டிலையே விட்டவன்.. "சீக்கிரம் பணத்தை ஏற்பாடு பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிட்டான்..

சக்தியின் கோட்டை ஆரா அணிந்திருக்கிறாள் என்று இருவருமே மறந்து போயினர்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top