தீத்திரள் ஆரமே -19

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:மயிலாடுதுறையின் மிகப்பெரிய கோயிலாக விளங்கும் ஸ்ரீமயூரநாத சுவாமி கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாகக் குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்தக் கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் 'மயூரா நாட்டியாஞ்சலி' நிகழ்ச்சி மிகவும் பிரசித்தம் பெற்று விளங்குகிறது.

யார் கண்ணில் கண்ணீர் வரக்கூடாது என்று தங்களுக்கு வந்த கஷ்டத்தைக் கூட அவளிடம் சொல்லாமல் மறைத்தார்களோ அவளே இன்று கதறி அழுகவும் அனைவர்க்கும் பெரும்வேதனையாக இருந்தது.

"அம்மு அழாதடி உன்னைய அடமானம் வெச்சிட்டு மீட்க முடியலைனா எங்க உடம்புல உயிர் இருக்காதுடி அம்மு புரிஞ்சிக்கோ, நாங்க நாலுபேர் இருக்கோம் எதுக்கு கவலைப்படற?" என்று சாய் அணைத்து ஆறுதல் சொல்ல

"உனக்கு தெரியாது சாய், இவன் ஒரு பிராடு பொறுக்கி, பணம் வேணும்னா யாரையும் கொலைப் பண்ணக் கூட தயங்க மாட்டான், நானே கண்ணாலப் பார்த்துருக்கேன்", என்று அழுதவளின் தலையை வருடிக் கொடுத்த சாய்

"திரும்பவும் இதை தான் சொல்றேன்,கூடப் பிறந்த நாங்க மூனுப்பேர் இருக்கோம், நீ எதுக்கு பயப்படற?"என்று எப்படி எப்படியோ ஆறுதல் சொல்லிப்பார்த்தனர்.

"உங்க ட்ராமா முடிஞ்சிருச்சுன்னா சைன் பண்ணிக் குடுக்க சொல்லுங்க எனக்கு வேற வேலை இருக்கு" என்றான் சக்தி கடுமையாக..

அதைக் கேட்டதும் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தவள், பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு சக்தியிடம் "உன்மேல இருக்கற பயத்துல சைன் பண்ணல, எங்க அண்ணன்ங்க மேல இருக்க நம்பிக்கையில சைன் பண்ணிருக்கேன்.." என்று அவன் முகத்திலையே தூக்கி அடித்தாள்.

"எந்த நம்பிக்கையில போட்டா எனக்கு என்ன? எனக்கு தேவையானது கிடைச்சிருச்சி" என்றவன், "இன்னும் ஒரு மாசம் டைம் அதுக்குள்ள எல்லாத்தையும் செட்டில் பண்ணிடுங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்..

சக்தி கிளம்பியதும் வீட்டில் புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது..

அனைவரும் சோர்ந்து போய் சோபாவில் அமர.. ஆரா மட்டும் திலகாவின் மடியில் படுத்து குலுங்கி குலுங்கி அழுதாள்...

"அழாத அம்மு எதுவும் நடக்காம அப்பாவும் அண்ணண்ங்களும் பார்த்துப்பாங்க" என்றார் திலகா...

"இந்த வீட்டை அடமானம் வெச்சிடலாம்" என்றார் வேலு.

"அடமானம் வெச்சா யாருப்பா 50லட்சம் குடுப்பாங்க, வித்துடலாம்" என்றான் சசி.

"என்ன விளையாடுறீங்களா?, வித்துட்டா இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம் வெச்சிருக்கோமே வரப் போற பொண்ணை நடுத் தெருவுலையா நிறுத்த முடியும்?, சம்மந்தி வீட்டுல இந்த வீட்டை வெச்சிதான் கல்யாணத்துக்கே சம்மதம் சொல்லிருக்காங்க, எல்லோரும் அதை மனசுல வெச்சுக்கோங்க" என்றார் திலகா..

"இந்த பொண்ணு இல்லைனா இன்னொரு பொண்ணுப் பார்த்துக்கலாம் ஆனால் நம்ப அம்முவை நம்ப விட்டுக் குடுக்க முடியுமா?" என்றான் சசி.

"இப்போ பேச நல்லா இருக்கும்டா ஆனா பின்னாடி யோசிச்சு பார்த்தா தான் தங்கச்சிக்காக நம்ப மனசுக்கு பிடிச்ச பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டமேனு கவலையா இருக்கும்" என்றார்.

"அப்படிலாம் சொல்ல நான் ஒன்னும் காதலிக்கலையே?" என்று சசி சொல்லவும் தான் சாய்க்கு விதுர்ணாவின் நினைவு வந்தது.

தன் தங்கையை பணயம் வைக்க சொல்லிவிட்டு அவன் தங்கையை மட்டும் பத்திரமாக வைத்துக் கொள்வானா?என்று கோவம் வர..விதுவை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தான் சாய்.

"நான் ரூமுக்கு போறேன்" என்று தனது அறைக்குச் சென்றவள்,விதுர்ணாவின் எண்ணிற்கு அழைத்தாள்.

ஆராவின் அழைப்பைப் பார்த்ததும் முதலில் எடுக்க தயங்கிய விது பின் இவ்வளவு நாள் இல்லாமல் இன்று அழைக்கிறாளே ஏதாவது முக்கியமான விசயமாக இருக்கும் என்று நினைத்து எடுத்து "சொல்லு" என்றாள்.

"எனக்கு உன்னோட ரெண்டாவது அண்ணனோட போன் நம்பர் வேணும்" என்றாள்.

"எதுக்கு?"

"வேணும் தா"

"எதுக்குன்னு சொல்லாம கேக்கறவிங்களுக்கு எல்லாம் நம்பர் குடுக்க எங்க அண்ணா ஒன்னும் நீ நினைக்கற மாதிரி சாதாரணமானவர் இல்ல,"என்றாள் விதுர்ணா கோவமாக

"அதுதான் எனக்கு நல்லாவே தெரியுமே, நம்பர் குடு.. இல்லையா உங்க அண்ணாகிட்ட என்னோட நம்பர் குடுத்து எனக்கு போன் பண்ண சொல்லு" என்றாள்.

"அது எப்படி அப்படி செய்ய முடியும்?" என்று தயங்க

"அப்போ எனக்கு நம்பர் குடு காரணம் இல்லாம நம்பர் கேக்க நான் ஒன்னும் நீ நினைக்கற மாதிரி பொண்ணு இல்ல"என்று பட்டென்று முகத்தில் அடித்தது போல் பேசினாள்.

"நீ தப்பான பொண்ணுனு நான் சொல்லலையே"

"வீண் பேச்சு எதுக்கு?, நம்பர் தரப் போறியா? இல்லையா?"

"அண்ணா, நீ அன்னிக்கு அடிச்ச கோவத்துல இருக்காங்க வீணா போன் பண்ணி இன்னும் வாங்கிக் கட்டிக்காத"

"அதைப் பத்தி நீ கவலைப்படாத ,இவ்வளவு நாள் உங்க அண்ணாவோட தானே இன்டென்ஷிப் செஞ்சேன்" என்றவளை "சரி நம்பர் சென்ட் பண்றேன்" என்று பேச்சை முடித்துக் கொண்டாள் விது.

இருவரும் போனை வைத்துவிட அடுத்த ஐந்து நிமிடத்தில் விதுர்ணாவிடம் இருந்து சக்தியின் போன் நம்பர் வந்தது.

அதைப் பார்த்த ஆரா போன் செய்யலாமா? வேண்டாமா? என்று தடுமாறினாள்.

பேசறதுக்கு நம்பர் கேட்டுட்டு இப்போ பேசலாமா வேண்டாம்னு ஒரு பட்டிமன்றம் தேவையா? என்று சக்திக்கு அழைத்துவிட்டாள்.

ஆராவிடம் இருந்து விரைவில் போன் வரும் என்று எதிர்பார்த்தான் தான், ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவன்

"ஹெலோ" என்றான்.

"நான் ஆரா பேசறேன்"

"ம்"

"எந்த ஆரான்னு கேப்பனு நினைச்சேன், பரவால நம்பர் எல்லாம் கைவசம் வெச்சிருப்ப போல" என்றவளின் குரலில் எப்போதும் இருக்கும் குதூகலம் இப்போது இல்லை.

"விஷயம் என்னனு சொல்லு" என்றான் பட்டென்று

தான் பேசுவதையே கேக்க விரும்பாதவன் தன்னுடன் வாழ்நாள் முழுக்க எப்படி வாழ்வான் என்று நினைத்து தன்னை கல்யாணம் செய்து கொள்ள கேட்கிறான் என்றுதான் தோன்றியது.

"ஹெலோ போன் பண்ணிட்டு எதுக்கு பேசாம இருக்க..?"

"ஹா.. நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும்"

"கொலைகாரன்கிட்ட பேச என்ன இருக்கு..?"

"இவனை ..." என்று பல்லைக் கடித்தவள், "அது நீ எப்படி இவ்வளவு அழகா கொலைப் பண்ற?இதுக்குன்னு கிளாஸ் போவியானு அதைப்பத்தி பேசணும்.."என்றாள்

"ஓ .., நான் கிளாஸ் போனது இல்ல போதுமா, வெச்சிடட்டுமா?"

"ஹே.. வெச்சிடாத உண்மையாவே உன்கிட்ட பேசணும், போன்ல வேண்டாம்" என்றாள்.

"நான் கொலைப் பண்றதுல பயங்கர பிஸியா இருக்கேன் அதனால இன்னும் ஒன் மந்த்க்கு எனக்கு டைம் இல்ல".

"அடேய் பாதகா... வந்து தொலையேண்டா"என்று முனவியதை அந்தப் பக்கம் கேட்டுவிட்ட சக்தி,

"எங்க மீட் பண்ணலாம்"என்றான்.

"ரொம்ப தூரமா வேண்டாம், வீட்டுல எங்க போறேன்னு கேப்பாங்க, நாளைக்கு நான் கம்பெனிக்கு வரேன், அங்க இருந்து எங்க வேணா போலாம்".என்றாள்.

"எங்க வேணாலும் போலாமா?", என்றவனின் பேச்சில் எரிச்சல் ஆனவள்.

"பேசறதுக்கு போலாம்னு சொன்னேன்" என்றாள்.

"ஓகே" என்று சக்தி போனை வைத்துவிட, நாளை அவனிடம் என்ன என்ன பேசவேண்டும் என்று ஒருமுறை ஒத்திகைப் பார்த்தாள்.

இன்று ஒருநாளில் மட்டும் எத்தனை எத்தனை அதிர்ச்சிகள், ஒரே நாளில் வாழ்க்கை முழுவதும் மாறியது போல் இருந்தது இதற்கு எல்லாம் ஒரே காரணம் சக்தி என்று மனதில் உறுப்போட்டுக் கொண்டாள்.

இன்று நடந்தை நினைத்துக் கவலைப் பட்டுக் கொண்டே இருந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க முடியாது என்பதில் தெளிவாக இருந்த ஆரா..

வீட்டில் இருப்பவர்களை சமாதானம் செய்து அன்று மீண்டும் இன்டென்ஷிப் செய்ய கம்பெனிக்கு கிளம்பினாள்.

பரணி ஆராவைக் அழைத்துப் போனான்.

அவர்கள் இருவரும் கிளம்பியதும், சசி, வேலு இருவரிடமும், திலகா "உங்க ரெண்டு பேர்கிட்டையும் பேசணும்" என்றார்.

"என்னம்மா சொல்லுங்க?"

"எனக்கு நேத்து அந்த சக்தி தம்பி சொன்னது தப்பா தெரியல,உங்களுக்கு எப்படி தப்பா தெரிஞ்சிதா?" என்றார்.

"என்னமா சொல்றிங்க பணத்துக்காக அம்முவை கல்யாணம் பண்ணிக்க குடுக்க சொல்றது தப்பு இல்லையா?"என்று கேட்டான் சசி அதிர்ச்சியாக.

"அவங்களுக்கு நம்பகிட்ட இருந்து பணம் வாங்க வேற வழி இல்லைனு நினைக்கறீங்களா?, ஆயிரம் வழி இருக்கும் போது எதுக்கு அம்முவை பொண்ணு கேக்கணும், அதும் இல்லாம நேத்து அம்மு எப்படிலாம் அந்த தம்பியை பேசிச்சினு எல்லோருக்கும் தெரியும் ஆனா அவர் அம்முவை ஏதாவது சொல்லிருப்பாரா?இதுல இருந்தே உங்களுக்கு தெரியவேண்டாமா?"என்றார்.

"அந்த சந்தேகம் எனக்கும் இருக்குது" என்று வேலு சொல்ல,

"எனக்கும் தான்" என்றான் சசி.

"அந்த தம்பி பெரிய இடத்து பிள்ளை, அதுமேல அம்மு கேஸ் குடுத்தும் அதைப் பத்தி ஒரு வார்த்தை பேசாம பணத்தை பத்தி மட்டும் பேசிட்டு போனது, எனக்கு என்னமோ அந்த தம்பிக்கு நம்ப அம்மு மேல இஷ்டம் இருக்குமோனு தோணுது, அதை நிறைவேத்திக்க தான் பணத்தை காரணம் காட்டறாங்களோனு யோசனையா இருக்கு"என்றார்.

"அதுக்கு நேரடியாவே பொண்ணுக் கேட்டுருக்கலாமே, யார் தரலைன்னு சொல்லப் போறோம்?" என்று சசி கேக்க.

"அம்மு வேண்டாம்னு சொல்லுவா, அவளை மீறி நம்மளால கல்யாணம் பண்ணிக் குடுக்க முடியுமா?"

"ஏன் வேண்டாம்னு சொல்ல போறா?"

"கொலை பண்ணிட்டாருங்கற கோவமும் , உன்னைய அடிச்சிட்டாங்கற கோவமும் அம்முக்கு இருக்குல்ல அப்புறம் எப்படி அந்த தம்பியை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுவா?"

"அது இருக்கட்டும் உன்னைய அடிச்சதுக்கும் அவர் பண்ண கொலைக்கும் சம்மந்தம் இருக்கா சசி?" என்று கேட்டார் வேலு

"ஆமா அப்பா, ஆனா அது தப்பான எண்ணதுல நடந்தது இல்ல, அந்த இடத்துல சக்தி சாரோட அப்பா, அண்ணானு யாரா இருந்திருந்தாலும் அவர் இதைதான் பண்ணிருப்பார்" என்றான்.

"அப்படி என்னதான் பிரச்சனை சொல்லு."என்று வற்புறுத்தி வேலு கேட்கவும்.

நடந்த உண்மையை சொல்லிவிட்டான் சசி.

"அடப்பாவிங்க இப்படியுமா பண்ணுவாங்க?" என்று திலகா வாயை மூடவும்

"பண்ணிட்டாங்களே அதனால தான் முதல என்னைய மாட்டிவிட்டு அவங்க தப்பிக்கப் பார்த்தாங்க. ஆனா சக்தி சார் என்ன நினைச்சாரோ என்னய விட்டுட்டார், அதுக்குன்னு முழுசா என்னைய நம்பிட்டாங்கனு அர்த்தம் இல்லை.. என்னைய கண்காணிக்க ஆள் வெச்சிருந்தார். அப்புறம் தான் அந்த ஆளு மாட்டுனான்" என்றான்.

"எனக்கு பயமா இருக்கு சசி இப்படிலாமா பண்ணுவாங்க" என்று திலகா கண் கலங்க

"பயப்படாதீங்கமா நான் உங்க பையன் ஒருநாளும் அப்படி பண்ணமாட்டேன். நியாயம் தான் எப்போவும் ஜெயிக்கும்" என்றான்.

"சரி விசயத்துக்கு வாங்க இப்போ என்ன பண்றது?"

"எனக்கு என்னமோ நீங்க ரெண்டு பேரும் அந்த தம்பிக்கிட்ட பேசிப்பாருங்க..பணத்தைக் கூட எப்படியாவது திருப்பிக் குடுத்துடலாம் ஆனா அவர் ஏன் அப்படி கேட்டார்னு ஒரு தெளிவு வேணும்னுல அப்போதானே நாமாலும் துணிஞ்சி நிற்க முடியும்" என்றார் திலகா.

"சரி கேட்டுப் பார்க்கறோம்" என்று இருவரும் கிளம்பிவிட்டனர்.

கம்பெனிக்கு சென்ற ஆரா அங்கு பாலாவைக் காணாமல் தேடினாள்.

"யாரை தேடுற ஆரா?" என்று பாலாவின் பக்கத்து சீட் பெண் கேக்க

"பாலா இன்னைக்கு லீவா?"

"இல்லை அவரை வேற கம்பெனிக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க"

"ஏன்! எதுக்கு?" என்றாள் அதிர்ச்சியாக

"தெரியல அதலாம் நம்ப கேக்க முடியுமா? கம்பெனி முழுக்க பாலா தான் ஏதோ தப்பு பண்ணிட்டாருங்கற மாதிரி பேசிகிட்டாங்க".என்றாள்.

"யார் அப்படி சொன்னது" என்று ஆரா இங்கு சத்தம் போட்டுகொண்டிருக்க அவளைக் கடந்து சென்ற சக்தி ஒரு நொடி நின்று ஆராவைப் பார்த்தவன் "வா" என்று சொல்லிவிட்டு அவனது தனிப்பட்ட அறைக்குச் சென்றான்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top