தீத்திரள் ஆரமே -16

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், இடைக்காலச் சோழர்களின் காலத்திலிருந்தே இருப்பதாக நம்பப்படுகிறது. இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் இக்கோயிலில் கொண்டாடப்படுவது தனிச் சிறப்பு.

பாலா போன ஐந்து நிமிடத்தில் தடதடவென்று நான்கு பேர் உள்ளே வந்தவர்கள் குடோனில் இருந்த வேலையாட்கள் இருவரையும் வெளியே அனுப்பினர்,

ஆரா உள்ளே இருந்ததால் அவர்களுக்கு ஆரா இருந்தது தெரியவில்லை..

வேகமாக சுற்றி இருந்த கதவுகளை அடைத்தனர் அந்த நால்வரும்,

திறந்திருந்த ஒற்றைக் கதவின் வழியாக சக்தி அதிரடியாக உள்ளே நுழைய, அவன் பின்னால் ஒருவனை தரதரவென்று இழுத்து வந்தனர் அந்த நால்வரும் அவர்களுக்கு பின் சசி வந்தான்.

சசி உள்ளே வந்ததும் திறந்திருந்த ஒன்றைக் கதவையும் மூடினர்...

கதவையும் யாரும் திறந்துவிட கூடாது என்று வெளியே இருவர் நின்றுக் கொள்ள

உள்ளே இருந்த சேரில் சக்தி கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் ஆட்களைப் பார்த்து தலை அசைக்கவும் சக்தியின் காலுக்கு அடியில் இழுத்து வரப்பட்டவனைப் போட்டனர் .

கடைசிவரை சென்றுப் பார்த்துவிட்டு முன்னால் வந்த ஆரா கதவை அடைக்கும் சத்தம் கேட்டு வேகமா முன்னே ஓடி வர

அதற்குள் சக்தியின் படை உள்ளே வந்துவிடவும் ஆரா தன்னை மறைத்துக் கொண்டாள்.

சக்தி கீழே கிடந்தவனின் பின்தலை முடியை இறுக்கிப் பிடித்தவன், "நீ எவ்வளவு பெரிய காரியம் பண்ணிருக்கேனு உனக்கு தெரியுமா?நம்பிக்கை துரோகம் என்னோட கோட்டைக்குள்ள வந்துட்டு என்னையே அசைச்சிப் பார்க்க நினைச்சிருக்க" என்றான்...

"சார் அது ஏதோ ஆசையில பண்ணிட்டேன், என்னைய மன்னிச்சிடுங்க சார்,இனி இதுமாதிரி என் லைப்ல பண்ணமாட்டேன்,என்னைய எதுவும் பண்ணிடாதீங்க சார் ப்ளீஸ் ப்ளீஸ்"என்று கதறினான்.

"நீ பண்ண தப்புக்கு இவன் தண்டனையை அனுபவிச்சான்,தப்பு பண்ணதும் இல்லாம அதை அடுத்தவன் மேல போட்டுட்டு தப்பிக்கப் பார்த்துருக்க" என்று சசியைக் கையைக் காட்டவும் அப்போதுதான் ஆரா சசியைப் பார்த்தாள்.

"அண்ணா நீங்களும் இவனோட ஆளா?" என்று நினைத்தவள், எதோ தண்டனைனு சொன்னானே அண்ணாவுக்கு என்ன தண்டனை என்று யோசிக்க , சசி அன்று கீழே விழுந்து விட்டேன் என்று வந்தது தான் நினைவிற்கு வந்தது..

ஆரா வேக வேகமாக தன் கையில் இருந்த போனில் நடப்பதை சாமர்த்தியமாக சசியை தவிர்த்து மற்ற அனைத்தையும் வீடியோ எடுத்தாள்.

"உன்னய கொன்னு அவன்கிட்ட அனுப்பி வைக்கிறோம் அப்போதான் அவன் இனி இதுமாதிரி எதுவும் பண்ண மாட்டான்,இந்த ஈஸ்வர்கிட்ட வெச்சிக்கிட்டா இந்த கதிதான்" என்றவன் தன் கையில் இருந்த கன்னை எடுத்து கீழே கிடந்தவனின் வாயில் விட்டு அழுத்திக் கொடுக்க அவன் கண்ணில் மரண பீதி தெரிந்தது.

அங்கு நடப்பதைப் பார்க்க பார்க்க ஆராவிற்குள் உதறல் எடுக்க கை, கால்கள் நடுக்கம் கண்டது.

சக்தி அவனை பயமுறுத்திவிட்டு விட்டு விடுவான் என்று நினைக்க.. கண் இமைக்கும் நேரத்தில் கீழே இருந்தவனின் வாயில் குண்டை இறக்கி விட்டான் சக்தி..

அதைப் பார்த்ததும் ஆரா கத்திவிட.. அனைவரது பார்வையும் அவளை நோக்கி தான் சென்றது.

ஆரா பயத்தில் நடுங்கிய வண்ணம் நிற்க சசி வேகமாக அவள் அருகில் போக போனவனை முந்திக் கொண்டு சக்தி அவள் அருகில் சென்று விட்டான்.

சக்தி பக்கதில் வர வர ஆராவின் இதய துடிப்பு அதிகரிக்க..

"நீ எதுக்கு இங்க வந்த அம்மு?" என்று கத்திய சசி,"சார் அவ தெரியாம இங்க வந்துட்டா,இங்க நடந்ததை அவ யார்கிட்டயும் சொல்ல மாட்டா ப்ளீஸ் அவளை எதுவும் பண்ணிடாதீங்க" என்று சக்தியிடம் சசி கெஞ்சினான்.

அதுமட்டும் தான் ஆரா கடைசியாக கேட்ட வார்த்தை, அதிகபட்ச அதிர்ச்சியில் அப்படியே மயங்கி கீழே விழுந்துவிட்டாள்.

அவள் விழும்போது தாங்கிப் பிடித்த சக்தியிடம் இருந்து ஆராவை வாங்க முயன்றான் சசி, ஆனால் சக்தி அவனிடம் கொடுக்காமல் ஆராவை கையில் ஏந்தியவன், அங்கிருந்தவர்களிடம் "இவனை பேக் பண்ணி அந்த அபிஷேக்கு அனுப்பி வைங்க" என்று சொல்லிவிட்டு அவனது ரூமிற்கு சென்றான்.

ஆராவின் கையில் இருந்த போனை எடுத்துக்கொண்டு சக்தியை பின் தொடர்ந்த சசியால் சக்தியை எதிர்த்து எதுவும் பேசமுடியவில்லை.

இப்போது இறந்தவனின் இடத்தில் தான் ஒரு மாதத்திற்கு முன் சசி இருந்தான். அன்று மட்டும் அவன் மீது கூறப்பட்ட புகாரை சக்தி நம்பிருந்தால் அன்றே சசிக்கு பால் ஊத்திருப்பான்,ஏதோ சசியின் நல்ல நேரம் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது போது போல் உயிர் போக இருந்த இடத்தில் அடியுடன் போய்விட்டது.

சக்தி ஆராவை அவன் அறையில் இருந்த சோபாவில் படுக்க வைத்து ,தனதுக் கோட்டைக் கழட்டி ஆராவின் மீது போர்த்தியவன் தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்தான்.

சக்தி செய்வதை அனைத்தையும் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சசி

கண் விழித்த ஆரா சக்தியைக் கண்டு மருண்ட மான் போல் விழித்தவள் அவன் பின் நின்ற சசியைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டாள்

"அம்மு உனக்கு ஒன்னுமில்ல பயப்படாத" என்று அணைத்துக்கொண்டான் சசி.

'அண்ணா நீங்களும் இவனோட ஆளா..?"என்று தயங்கி தயங்கி அழுதப்படியே கேட்டாள்.

"அப்படிலாம் இல்லை ஆரா, உனக்கு எதுவும் தெரியாது எதுவும் தெரியாம சாரை மரியாதை இல்லாமல் அவன் இவன்னு சொல்லக்கூடாது,மரியாதை யா பேசும்மா" என்றான்.

"இவன் ஒரு கொலைக்காரன் பொம்பள பொறுக்கி.. சை இப்படிப்பட்ட மனுஷன்கிட்ட தான் நம்ம வீட்டுல எல்லோரும் வேலைப் பார்க்கறோம்னு நினைக்கும் அசிங்கமா இருக்கு," என்றாள் கண்களின் வழிந்த கண்ணீருடன், அவளுக்கு ஏதோ ஒன்று ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது.

ஆரா பேசப் பேச தன் பேண்ட் பாக்கெட்டில் இரண்டு கையையும் விட்டு கம்பீரமாக நின்றபடிக் கேட்டுக் கொண்டிருந்தான் சக்தி.

அவனின் நிமிர்வே தன்னிடம் எந்த தவறும் இல்லை என்று பறைசாற்றியது.

அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் ஆரா இல்லை."ஒரு மனுசனோட உயிரை எடுக்க நீ யாருடா?கொலைக்காரா, மனசுனு ஒன்னு இருந்தா தானே அடுத்தவீங்க கஷ்டத்தைப் புரிஞ்சிருப்ப நீயே மனசு இல்லாத மிருகம்"என்று கண்டபடி பேசிக் கொண்டேப் போனவளை தடுக்கப் போனான் சசி

"விடுங்க சசி அவ பேசட்டும்" என்றவனை "பேசதான் போறேன் இங்க இல்லை போலீஸ் ஸ்டேஷன்ல,நீ கொலைப் பண்ணதுக்கு நான்தான் எவிடென்ஸ், உன்னைய சும்மா விட மாட்டேண்டா சீக்கிரம் கம்பி எண்ண ரெடியா இரு" என்று சசியின் கையைப் பிடித்து இழுத்தவள் "இனி உங்களுக்கு இந்த வேலை வேண்டாண்ணா வாங்க" என்றாள்.

சசி சக்தியைப் பார்க்க அவன் போகச் சொல்லி கண்ஜாடைக் காட்டினான்.

ஆராவுடன் கிளம்பிய சசி "இப்போ எதுக்கு இங்க வந்த அம்மு,இதை நான் உங்கிட்ட ஆயிரம் முறையாவது கேட்டுட்டேன் நீ பதில் சொல்லவே இல்லை" என்றான் கடுமையாக.

"நான் பாலாவோட புது ப்ராஜெக்ட்க்கு டைல்ஸ் பார்க்க வந்தேன்" என்றாள்.

அப்போது தான் நேற்று பாலா தனக்கு போன் செய்து நாளைக்கு டைல்ஸ் பார்க்க வருவேன் என்று சொன்னது சசியிக்கு நினைவில் வந்தது.

பாலா என்றதும் அவன் அங்குதானே இருப்பான் என்று நினைத்த ஆரா, சசியிடம் இருந்த தன் போனை வாங்கி பாலாவிற்கு அழைத்தாள்.

பாலா தன்னுடைய கொட்டேசனை கொடுக்கச் சென்றவன் வழியில் சக்தியையும் சக்தியின் ஆட்களைப் பார்த்தது அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்றுப் பார்த்தான்.

அனைவரும் குடோனை நோக்கி போகவும் உள்ளே ஆரா இருப்பதை நினைத்து ஓடிவருவதற்குள் கதவை அடைத்துவிட்டனர்.

கதவுக்கு காவல் இருந்தவர்களிடம் சார் உள்ள என்னோட பிரண்ட் இருக்காங்க என்று பதறினான்.

அதுலாம் சார் வெளிய வரும்போது பார்த்துக்கலாம் வெளிய வெயிட் பண்ணுங்க என்றனர்.

அதன்பின் ஒவ்வொரு நொடியும் நெருப்பில் நிற்பது போல் அங்கும் இங்கும் நடக்க சிறிது நேரத்தில் திறந்த கதவின் வழியே ஆராவை சக்தி தூக்கிக் கொண்டு செல்ல அவனுக்கு பின் சசி ஓடினான்.

அங்கு இருந்தவர்களின் மூலம் சசி தான் ஆராவின் அண்ணன் என்பதை தெரிந்துக் கொண்ட பாலா ஆராவை நெருங்க முடியாமல் அவளுக்கு என்ன ஆனதோ என்று தவித்துப் போனான்.

இப்போது ஆரா அவனின் எண்ணிற்கு அழைக்கவும் எடுத்தான்.

"பாலா நான் அண்ணாக்கூட வீட்டுக்குப் போறேன் என்னைய தேடாம நீங்க கம்பெனிக்கு போங்க" என்று மட்டும் சொன்னவள் போனை வைத்து விட்டாள்.

இந்த பக்கம் போனையேப் பார்த்துக்கொண்டிருந்த பாலாவுக்கு நட்பை பிரிந்த துயரம் மனதை கலக்கியது.

மனம் உலைக்கலமாக கொதித்துக் கொண்டிருந்தது, சக்தி ரவுடி என்று ஏற்கனவே தெரிந்த ஒன்று தான் ஆனால் கொலை செய்யும் அளவிற்கு செல்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை

சக்தியை ரோட் சைட் ரோமியோவாகப் பார்க்கும் போதுக் கூட மனம் இந்த அளவுக்கு வலிக்கவில்லை ஆராவிற்கு, ஆனால் இன்று ஒருக் கொலைக்காரனாகப் பார்த்ததும் உள்ளம் சொல்ல முடியா துயரத்தில் துடித்தது.
அண்ணனும் தங்கையும் ஒன்று சேர்ந்து வந்ததும் இல்லாமல், மதிய வேளையிலையே வீட்டிற்கு வந்ததைப் பார்த்து திலகா அதிசயிக்க..

வண்டியில் இருந்து இறங்கியது சசியிடம் எதையும் பேச விரும்பாமல் நேராக அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.

"ஏன் சசி இந்நேரத்துக்கே ரெண்டுப் பேரும் வந்திட்டிங்க உடம்புக்கு எதுவும் முடியலையா? அம்மு எதுவும் பேசாம போறா அவளை எங்கப் பார்த்த?என்னாச்சி அவளுக்கு"என்றார் திலகா தவிப்புடன்

"உடம்புக்கு ஒன்னுமில்லம்மா எனக்கு கொஞ்சம் சுடுத் தண்ணிக் கொண்டு வாங்க" என்று சோர்ந்துப் போய் சோபாவில் அமர்ந்தான் சசி.

பிள்ளைகளின் முகமே சரியில்லை ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பது புரிந்தாலும் அது என்ன என்று தெரியாமல் பெற்ற மனம் தவித்தது.

சசிக்கும் கூட சக்தி அவனை கொலைச் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை திடீரென்று நடந்த ஒன்றால் அதிர்ச்சியில் இருந்த சசிக்கு அதைவிட பெரிய அதிர்ச்சியாக ஆராவை அங்குப் பார்த்ததும் உண்டானது.

தன்னை அன்று அடித்து துன்புறுத்தியது போல ஆராவையும் ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற பயம் தான் சசிக்கு அப்போதைக்கு இருந்தது.

ஆனால் சக்தி ஆராவிடம் காட்டிய அக்கறையில் சிறிது தெளிந்தவனுக்கு மீண்டும் எதற்காக சக்தி தன் தங்கையின் மீது இவ்வளவு அக்கறை காட்ட வேண்டும் என்று யோசிக்கும் போது மீண்டும் குழம்பிப் போனான்...
இதை எல்லாம் நினைக்க நினைக்க தலை வெடித்துவிடுவது போல் வலிக்கவும் சோபாவில் தலை சாய்த்து அப்படியே படுத்துவிட்டான்.

அறைக்குச் சென்று அங்கும் இங்கும் குட்டிப் போட்ட பூனைப் போல நடந்தவள்,பல யோசனைக்கு பின் ஒருமுடிவுடன் வெளியே வந்தாள்.

ஹாலின் சோபாவில் கண் மூடியப்படி சசி அமர்ந்திருக்க அவனிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டாள் ..

கோவமாக போன ஆரா இப்போதைக்கு அறையை விட்டு வெளியே வரமாட்டாள் என்று தான் கண் மூடினான் சசி.

சசி அசந்த நேரம் வீட்டை விட்டு கிளம்பியவள் நேராக போலீஸ் ஸ்டேசன் முன் சென்று நின்றாள்.

எப்போது ஆரா தான் செய்த கொலையைப் பார்த்துவிட்டாள் என்று சக்திக்கு தெரிந்ததோ அப்போதே அவளை கண்காணிக்க ஆள் வைத்துவிட்டான் சக்தி.

அந்த ஆள் ஆரா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்ததை சக்தியிடம் கூறிவிட்டான்

தனது போனில் சக்தி கொலை செய்த வீடியோ ஆதாரம் இருக்கிறது என்ற தைரியத்தில் தான் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்திருந்தாள் ஆரா.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top