கருத்துக்களுக்கு நன்றி ஜோஹர். இது வெறும் வரலாற்றைத் தோண்டும் முயற்சியன்று. நம் உரிமைகளை எப்படி நாம் மெல்ல மெல்ல இழந்து வருகிறோம் என்கிற உண்மை. இந்தியா முழுமையும் பரவிக்கிடந்த நாம், தற்போது தமிழ்நாட்டைக் கூட ஆளும் உரிமையை இழந்து நிற்பது நிதர்சனம். இதெற்கெல்லாம் மூல காரணம் நாம் நமது வரலாற்றைத் தொலைத்து நிற்பது தான்.
1000 ஆண்டுகளாக நமக்கு எட்டாத நம் வரலாறு, நமது அடுத்தத் தலைமுறைக்காவது போய் சேர வேண்டும். வரலாறு என்றாலே பழங்கதை என்று ஒதுக்கித்தள்ளியதன் விளைவைத்தான் நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். வரும் தலைமுறையேனும் நம் இனத்தை எண்ணி பெருமிதம் கொள்ளட்டும். இந்த மண் (இந்தியா) நமக்கு சொந்தமானது, நாம் ஆளலாம் என்ற நம்பிக்கையோடு வளரட்டும். அந்த நம்பிக்கை மரம் வளர, இது போன்ற கட்டுரைகள் உரமாகட்டும்.
வரும் தலைமுறை......... சிரிப்பு தான் வருது........ யார் படிக்கிறா.........
100-ல் 25 பேருக்கு தான் தமிழ் நன்றாக எழுத படிக்க தெரியுது...........
இன்னும் 10 வருடம் போனால் அது கூட குறைந்து விடும்..........
இந்த site-ல வந்து தான் பல வருடங்களுக்கு பிறகு தமிழில் எழுத ஆரம்பித்தேன்......
நம் உரிமை நம் கையில் தான்........ வரலாற்றை தொலைத்தால் நம் உரிமையை இழக்கவில்லை............. காசுக்கு விலை போகும் அவலம் தான்............ இதை என்ன சொல்ல.........
உங்க Profile பார்த்தேன்........
திருநெல்வேலி மாவட்ட காற்றாலை (காவல் கிணறு area) 2000-ம் வருடத்தில் எப்படி தொடங்கியது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.......
அதே மக்கள் இப்போ நிலம் போச்சேன்னு பதறுகிறார்கள்..........
இதே மாதிரி தான் எல்லா விஷயத்திலும்........
ஒருத்தனை ஏமாற்றணும்னா ஆசையை தூண்டனும்.......... அது perfect-ஆ நடக்குது.......