Bhuvana
Well-Known Member
தக்காளி பிரியாணி :
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 2
பட்டை - 1 சின்ன துண்டு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
வெங்காயம் - 1 {நீளவாக்கில் நறுக்கியது}
தக்காளி - 8 {மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும் }
கொத்தமல்லி இலை - சிறிதளவு {பொடியாக நறுக்கியது}
உப்பு, நெய் - தேவைக்கு ஏற்ப
அரைத்து கொள்ள:
இஞ்சி - 1 சின்ன துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 5
கொத்தமல்லி இலை - 1 கைப்பிடியளவு
புதினா இலை - 1 கைப்பிடியளவு
அரிசியை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும். அரைத்து கொள்ள வேண்டிய பொருட்களை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
குக்கரில் கொஞ்சம் நெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அரைத்த தக்காளி மற்றும் விழுதை சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வதக்கவும்.
அரிசியை அதனுடன் சேர்த்து, தேங்காய் பால், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி ஆரம்பித்தவுடன் குக்கரை மூடி வெயிட் வைத்து குறைந்த அனலில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
பிரஷர் இறங்கியவுடன் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி சூடாக வெங்காயம், வெள்ளரிக்காய் சேர்த்த தயிர் பச்சடி, உருளை சிப்ஸுடன் பரிமாறவும்.