கைதி - அத்தியாயம் 5

Advertisement

Nuha Maryam

Active Member
ஹோட்டலில் இருந்து கிளம்பியவர்கள் ஊட்டியை சென்றடையவே மதியமானது.

அவர்கள் முதலில் சென்ற இடம் ஊட்டி வெக்ஸ் வேர்ல்ட் (Wax World).

wax-world-museum.jpg




wax-world-museum (1).jpg




wax-world-museum (2).jpg

மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், அன்னை தெரேசா, டாக்டர்.அப்துல் கலாம் மற்றும் பல சிறந்த ஆளுமைகளின் மெழுகுச் சிலைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதே சமயம் உள்ளூர் மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் மெழுகுச் சிலைகளும் இங்கு காணலாம்.

அனைத்தையும் பார்த்து முடித்து வெளிவரவே நேரம் சென்றது.

அன்றைய பாதி நாளே பயணத்தில் கழிந்ததால் அடுத்து காமராஜ் சாகர் அணை சென்று பார்வையிட்டு பின் இரவு அனைவருக்கும் தங்க ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு செல்ல முடிவெடுத்தனர்.

சுற்றுலா மற்றும் திரைப்பட படப்பிடிப்புக்கு பிரபலமான இடம் காமராஜ் சாகர் அணை.

kamaraj-dam1.jpg




IMG_20210907_142506.jpg

ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த அணை சாண்டிநல்லா நீர்த்தேக்கம் என்ற பெயரிலும் அழைக்கப்படும்.

மிகவும் அமைதியான சூழல் மட்டுமன்றி பல்வேறுபட்ட பறவைகளையும் இங்கு காணலாம்.

மாலையை நெருங்க அங்கிருந்து கிளம்பி ஊட்டி ரெட் ஹவுஸ் சென்றனர்.

1156512_16042800260041875515.jpg

இங்கு தான் அவர்கள் டூர் முடியும் வரை தங்க ஏற்பாடு செய்திருந்தனர்.

அத்தியாவசியமான அனைத்து வசதிகளும் அங்கு செய்து தரப்படும்.

சுற்றி கண்ணைக் கவரும் வண்ணப் பூக்களுடன் கூடிய தோட்டம் என அழகான இடம்.

அன்றைய களைப்பு தீர குளித்தவர்கள் தோட்டத்தில் நடுவில் நெருப்பு மூட்டி சுற்றி வட்ட வடிவமாக அமர்ந்து கதையளந்தனர்.

லாவண்யா, அக்ஷராவுடன் பேசிக் கொண்டிருந்த சிதாரா தமக்கு சரி நேராக அமர்ந்திருந்த அவளின் மற்ற தோழிகள் சிலரின் பார்வை அவர்கள் பக்கமிருக்க கேள்வியுடன் அவர்கள் பார்வை இருந்த திக்கைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.

அவளுக்கு பக்கத்தில் ஆண்களுடன் அமர்ந்திருந்த ஆர்யான் ஆதர்ஷ், அபினவ்வுடன் பேசி பேசி அடிக்கடி அவர்களைப் பார்த்து இளித்துக் கொண்டிருந்தான்.

இதனைக் கண்டவளின் மனதில் ஒரு திட்டம் உதயமாகியது.

மெதுவாக ஆர்யானின் பக்கம் நெருங்கி அமர்ந்தவள் அவனின் வலது புஜத்தைக் கட்டிக் கொண்டு மெதுவாக அவன் காதில், "சேர் என்ன பண்றீங்க.." என்றாள்.

அவள் செயலால் அங்கு ஒருவனின் பீபி ஏறிக்கொண்டு இருந்ததை சிதாரா அறியவில்லை.

அதுவரை அப் பெண்களைப் பார்த்து இளித்துக் கொண்டிருந்தவன் திடீரென அவர்கள் அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு மறுபக்கம் திரும்பிக் கொள்ள எதுவும் புரியாமல் விளித்தவன் அப்போது தான் சிதாராவின் கேள்வியில்,

"அடப் பாதகத்தி... உன் வேலையா இது... நான் கூட என்னடா இதுங்க நம்மள இப்படி கேவலமா லுக்கு விடுதுங்களேன்னு பாத்தா நீ இப்படி இருந்தா அதுங்க வேற என்ன பண்ணும்..." என்க சிதாரா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

அதில் கடுப்பான ஆர்யான் அவள் கையை உதறி விட்டு, "உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா மினியன்.. நான் சொன்ன விஷயத்த பத்தி நீ எதுவுமே சொல்லல... அங்க உன்னோட மூஞ்சயே பாத்து பாத்து சலிச்சிட்டேன்.. சரி இங்க இருக்கும் வர இந்த பொண்ணுங்கள சைட் அடிக்கலாம்னு பாத்தா அதுக்கும் நல்ல வேட்டா வெச்சிட்டாய்..." என்க,

அதைக் காதிலே போட்டுக் கொள்ளாத சிதாரா தன் பாட்டில் லாவண்யாவுடன் பேச ஆரம்பித்தாள்.

தன்னால் இயன்ற மட்டும் அவளை முறைத்தவன் பின் மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கழித்து தன்னிடத்தில் இருந்து எழுந்த சிதாரா, "இப்படி ஆளாளுக்கு தனியா பேசிட்டு இருக்கவா நம்ம டூர் வந்தோம்... ஏதாச்சும் கேம் ப்ளே பண்ணலாமா ஃப்ரென்ட்ஸ்.. " என்க,

நண்பர் பட்டாளத்தில் சாரு, "என் கிட்ட ஒரு நல்ல ஐடியா இருக்கு.." என்க அனைவரும் அவள் சொல்வதைக் கேட்க தயாராகினர்.

எழுந்து நின்றவள், " இது ட்ரூத் ஆர் டேர் கேம் தான்.. பட் கொஞ்சம் டிஃபரன்ட்டா இருக்கும்.. பாட்டில் சுத்தாம ரெண்டு பாக்ஸ் வெச்சி இருப்போம்.. ஒரு பாக்ஸ்ல எல்லாரோட நேமும் எழுதி போட்டு இருக்கும்.. என்ட் மத்த பாக்ஸ்ல கொஞ்சம் டேர்ஸ் எழுதி போட்டு இருக்கும்.. ஒவ்வொருத்தர் கிட்டயும் நாம நேம் பாக்ஸ தருவோம்.. அதுல ஏதாச்சும் ஒரு சீட்டு எடுத்து அந்த சீட்டுல இருக்குறவங்க கிட்ட ட்ரூத் ஆர் டேர்னு கேப்போம்.. ட்ரூத்னா நேம் செலக்ட் பண்ணவரு மத்தவர் கிட்ட அவங்களுக்கு பிடிச்ச என்ன கேள்வின்னாலும் கேக்கலாம்.. டேர்னு சொன்னா மத்த பாக்ஸ்ல இருக்குற சீட்டுல ஒன்ன எடுத்து அதுல இருக்குற டேர செய்யனும்.. ரெண்டயுமே செய்யாதவங்களுக்கு நாம பனிஷ்மன்ட் குடுக்கலாம் பட் ஃபனியா..." என்க அனைவரும் சம்மதித்தனர்.

முதலில் சாருவிடமிருந்தே ஆரம்பித்தனர்.

அவளிடம் நேம் பாக்ஸ் நீட்டப்பட அதிலிருந்து ஒரு துண்டை எடுத்தாள்.

அனைவரும் யாரு.. யாரு எனக் கத்த சீட்டைப் பிரித்துக் காட்டினாள்.

மதன் என்ற பெயர் வந்திருக்க மதன் டேர் செலக்ட் பண்ணினான். 'மனதிலுள்ள காதலை உரியவரிடம் வெளிப்படுத்த வேண்டும்' என வந்திருந்தது.

அவனோ அங்கிருந்தவர்களில் தன் மனதிற்குரியவளைத் தேடி அவளைக் கைப்பிடித்து அழைத்து வந்தான்.

அனைவருமே யாழு... யாழு.. எனக் கத்த யாழினி என்றவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.‌

அனைவரும் ஆவலோடு அவர்களை பார்த்துக் கொண்டிருக்க மதனோ யாரும் எதிர்ப்பாரா வண்ணம் பட்டென ஒற்றைக் கால் நிலத்தில் ஊன்றி மண்டியிட்டவன், "எனக்கு ப்ரபோஸ் எல்லாம் பண்ண தெரியல யாழ்.. பட் ஒன்னு மட்டும் நல்லா தெரியும் நான் உன்ன ரொம்ப நல்லா பாத்துப்பேன்.. ஐ லவ் யூ.. " என்க அவன் சாதாரணமாக சொன்னதும் யாழினிக்கு புஸ் என்றானது.

பெண்களின் பக்கமிருந்து, "யாழு நோ..‌ யாழு நோ.." எனக் குரல் வர அதிர்ச்சியில் எழுந்த மதன் அவர்களைப் பார்த்து, "என்னம்மா நீங்க... இப்படி பண்றீங்களேம்மா..." என்க,

அக்ஷரா, "பின்ன என்ன சீனியர் நீங்க... எவ்ளோ ரொமான்ட்டிக்கா சொல்லுவீங்கன்னு பாத்தா இப்படி பட்டுன்னு சொல்லிட்டீங்க.." என்றாள்.

"ஆமா.. அக்ஷரா சொல்றது கரெக்ட்.. இதுக்காகவே உங்க ப்ரபோசல நான் ரிஜக்ட் பண்றேன்.. ஏதாச்சும் புதுசா ட்ரை பண்ணுங்க.. அப்ப யோசிக்கலாம்.." என்று விட்டு செல்ல மதனும் அவள் பின்னே கெஞ்சிக் கொண்டு அவளைத் தொடர்ந்து சென்றான்.

பின் ஒவ்வொருவராக மாற்றி மாற்றி தம்மிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலையும் வழங்கப்பட்ட டேரையும் சிலர் பனிஷ்மன்ட் பெற்றும் விளையாடினர்.

லாவண்யாவுக்கு ஆதர்ஷுடன் கப்பிள் டான்ஸ் ஆட வர இருவருமே தமக்குள் மெய் மறந்து ஆடினர்.

அக்ஷரா ட்ரூத் செலக்ட் பண்ண பாடசாலையில் இருக்கும் போது இருந்த சீக்ரட் க்ரஷ் பற்றி கேட்க அவளும் அந்த நாட்களைப் பற்றி ரசனையுடன் ஏற்ற இறக்கத்தோடு கூற அபினவ்வுக்கோ காதில் புகை வராத குறை.

மீண்டும் அவள் தன்னிடத்துக்கு செல்லும் போது அபினவ் அவளைப் பார்த்து முறைக்க, அக்ஷராவோ அவனுக்கு கண்ணடித்து விட்டுச் சென்றாள்.

அக்ஷரா க்ரஷ் பற்றிக் கூறினாலே தவிர பெயர் கூறவில்லை.

அதனால் அபினவ் அறியாத ஒன்று அக்ஷராவின் சீக்ரட் க்ரஷ்ஷே தான் தான் என்று.

அவள் இடத்துக்கு வந்ததும் அவளைப் பிடித்துக் கொண்ட லாவண்யா சிதாராவிடம், "பாருடி இவள.. அவ்ளோ இருந்தும் நம்ம கிட்ட கூட சொல்லல.. நம்ம தான் சொல்லிட்டு திரியுரோம் நம்ம மூணு பேருக்கும் இடைல எந்த சீக்ரட்டும் இல்லன்னு.." என்க அக்ஷரா அவர்களைப் பார்த்து சமாளிப்பாக இளித்து வைத்தாள்.

மீண்டும் கேம் ஆரம்பமாக அனைவரும் அதில் கவனம் பதித்தனர்.

தொடர்ந்து பிரணவ்விடம் வர அவன் தேர்ந்தெடுத்த பெயரை அவனே எதிர்ப்பார்க்கவில்லை.

அவன் யாரென்று பெயரைக் கூறாமல் அமைதியாக இருக்க, அபினவ் கையிலிருந்த சீட்டை வாங்கிப் படித்தவன் சிதாராவை நோக்கி, "சித்து.. நீ தான்.. வா.." என்று விட்டு தன்னிடம் சென்றமர்ந்தான்.

ஆர்யான் அதிர்ச்சியில் சிதாராவின் முகம் பார்க்க அவளோ புன்னகையுடன் பிரணவ்விடம் சென்று நிற்கவும், பிரணவ் அவள் கண்களைப் பார்த்து "ட்ரூத் ஆர் டேர்" என்றான்.

சிதாரா பதிலுக்கு அவன் கண்களை நேராகப் பார்த்து, "அஃப்கோர்ஸ்.. ட்ரூத்..." என்றாள்.

பிரணவ் மனதில்,"நல்ல வாய்ப்பு கெடச்சி இருக்குடா... கேக்க வேண்டியத்த கேட்டுரு.." என நினைத்தவன்,

"யாருக்காக இந்த மாற்றம்.. ஐ மீன் எல்லா விஷயத்துலயும்.." என மனதில் சிரித்த வண்ணம் அவளிடம் கேட்டான்.

அவன் என்னவோ எதிர்ப்பார்த்தபடி கேட்டான்.

ஆனால் சிதாரா யோசிக்காமல் உடனே பதிலளித்தாள்.

"யாருக்காகன்னா.... ஓஹ் யாரையாச்சும் இம்ப்ரஸ் பண்ணுறத்துக்காக என்னோட ட்ரஸிங் ஸ்டைல் எல்லாம் சேன்ஜ் பண்ணி இருக்கேனான்னா.. ஐம் ரியலி சாரி... அப்படி எந்த விதமான நோக்கமும் எனக்கில்ல... ஃபர்ஸ்ட் அப்ரோட் போய் படிக்க கிட்ட நான் மட்டும் தனியா எங்க ஊரு பொண்ணுங்க போல இருந்தா எல்லாரும் என்னமோ ஏலியன பார்க்குற மாதிரி பார்ப்பாங்க.. என்ட் எனக்கு அங்க இருக்குற மத்த பசங்க கூட ஒரு ஒட்டாத தன்மை ஏற்படலாம்... அதனால தான் அந்த இடத்துக்கு ஏத்தது போல என்ன மாத்திக்கிட்டேன்.. அதுக்காக நான் ஒன்னும் நம்மோட கல்ச்சர விட்டு குடுக்கலயே.. ஒரு பொண்ணு ட்ரெஸ்ஸிங் ஸ்டைல மாத்தினா கல்ச்சரயே மாத்திட்டதா எண்ணினா அது சுத்த முட்டாள்த்தனம்..‌ என்ட் ஃபைனலி நான் யாருக்காகவும் என்ன மாத்திக்கனும்னு அவசியமில்ல... எனக்கு எப்படி இருக்க தோணுதோ அப்படி தான் நான் எப்போதும் இருப்பேன்.." எனக் கூறி பிரணவ்வின் எதிர்ப்பார்ப்பில் மண்ணள்ளிப் போட்டாள்.

அங்கிருந்த அனைவருக்கும் பாதி புரிந்தும் புரியாத நிலை.

ஆனால் புரிய வேண்டியவனுக்கோ நன்றாக புரிந்தது.

அவன் அவசரமாக, "அப்போ எதுக்காக..." என ஏதோ கேட்க ஆரம்பிக்கும் போதே "ஒரு கேள்வி தான் கேக்க முடியும்னு நெனக்கிறேன்.." என கூறி விட்டு தன்னிடத்தில் சென்று அமர்ந்தாள்.

அவள் அமர்ந்ததும் ஆர்யான் அவள் கையை அழுத்தி அவளைப் பார்த்து கண்களை மூடித் திறந்தான்.

அவனுக்கு புன்னகையைப் பதிலாக அளித்தாள் சிதாரா.

தொடர்ந்து அனைவரும் தமக்கு வந்ததை செய்ய கேம் முடிந்தது.

மணி நள்ளிரவை எட்ட தமக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றனர்.

சிதாரா, லாவண்யா, அக்ஷரா மாத்திரம் தோட்டத்தில் இருந்தனர்.

புல்வெளியில் மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க சற்று நேரத்திலெல்லாம் அக்ஷரா சிதாராவின் மடியில் தலை வைத்து லாவண்யாவின் மடியில் கால் நீட்டி உறங்கி இருந்தாள்.

இருவரும் வெகுநேரம் வெண்மதியின் எழிலைக் கண்களால் பருகிக் கொண்டிருக்க, லாவண்யாவே அவ் அமைதியைக் களைத்தாள்.

"சித்து.. நான் ஒன்னு கேட்டா உண்மைய மட்டும் சொல்லுவியா.." என்ற லாவண்யாவின் கேள்விக்கு நிலவை வெறித்த வண்ணமே ஹ்ம்ம் என சம்மதித்தாள்.

"ஒன்ன வேணாம்னு தூக்கி போட்டுட்டு போனவங்க திரும்ப உன் லைஃப்ல வந்த நீ என்ன பண்ணுவாய்.. அவங்கள ஏத்துக்குவியா.." என்க,

சிதாரா, "அது ஒவ்வொருத்தரையும் பொறுத்தது வனி.. ஏதோ ஒரு இக்கட்டான சிச்சுவேஷன்ல நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க வேற வழியே இல்லாம நம்ம லைஃப விட்டு போய்ட்டு அப்புறம் அந்த சிச்சுவேஷன் ஒழுங்கானத்துக்கு அப்புறம் திரும்ப நம்மல தேடி வந்தா நாம அவங்கள நம்ம லைஃப் உள்ள அனுமதிக்காம பிடிவாதம் பிடிச்சா அது அவங்களையும் கஷ்டப்படுத்தும்.. நம்மளையும் கஷ்டப்படுத்தும்.. நம்மளால ரொம்ப நாளெக்கி நாம பாசம் வெச்சவங்கள வெறுத்து ஒதுக்கவும் முடியாது... ரெண்டு பக்கமுமே அன்பும் பாசமும் நம்பிக்கையும் ஒருத்தொருக்கொருத்தர் உண்மையாவும் இருக்குறவங்களுக்கு இது பொருந்தும்...

இதே நாம எவ்வளவு தான் உண்மையாவும் அன்பு, பாசம், நம்பிக்கை எல்லாத்தையும் அவங்க மேல கொட்டி வெச்சி இருந்தாலும் நம்ம கூட தேவைக்கு மட்டும் பழகி பாசமா இருக்குற மாதிரி நடிச்சி எங்கடா வாய்ப்பு கெடக்கும் நம்மள தூக்கி போட்டுட்டு போறத்துக்குன்னு இருக்குறவங்க நம்மள விட்டு போனா அவங்கள அப்படியே விடுறது தான் நமக்கு நல்லது... நாம உண்மையான அன்போட தான் இருந்திருப்போம்.. அதனால நிச்சயமா அவங்களோட பிரிவு கஷ்டத்த கொடுக்கும்... திரும்ப அவங்க நம்ம லைஃப்ல வர ட்ரை பண்றது கூட ஏதோ நம்ம கிட்ட அவங்களுக்கு வேண்டியது இருக்குறதால மட்டும் தான்...

அதனால அப்படிப்பட்ட மனுஷங்களுக்கு நிச்சயமா என் லைஃப்ல திரும்ப இடம் கொடுக்க மாட்டேன்.."

இதை சொல்லி முடிக்கும் போதே அவள் கன்னங்கள் கண்ணீரால் நனைந்திருந்தன.

அவளை பக்கவாட்டில் அணைத்த லாவண்யா, "எதுக்காக இந்த பொய்யான வேஷம் சித்து... நீ முன்ன இருந்து மாதிரி இப்ப இல்ல.. ரொம்ப மாறிட்ட.." என்க,

அவளைப் புரியாமல் நோக்கிய சிதாரா, "இது பொய்யான வேஷம் இல்ல வனி.. நான் மாறிடேங்குறது உண்மை தான்.. இல்லன்னு சொல்லல... பட் அதுக்கு காரணம் என்னோட கஷ்டத்தையோ கவலையையோ மறைக்கனும்னு இல்ல... திரும்பவும் ஒருத்தர் என்ன கஷ்டப்படுத்த கூடாதுன்னு தான்.. அதுக்காக என்ன நானே மாத்திக்கிட்டேன்... யாருக்கிட்டயும் எந்த எதிர்ப்பார்ப்பும் வெச்சிடக்கூடாதுன்னு எனக்கு நானே சொல்லி சொல்லி மாத்திக்கிட்டேன்... இப்போ யாருக்கா இருந்தாலும் அவ்வளவு ஈஸியா என்ன ஹர்ட் பண்ண முடியாது... ஏன்னா என்னோட இதயத்த இரும்பா மாத்தி இருக்கேன் நான்..." என முகத்தில் ஒரு வித தெளிவுடன் கூறியவளை அணைத்துக் கொண்டாள் லாவண்யா.

இங்கு தனது அறை ஜன்னல் வழியாக சிதாராவையே பார்த்துக் கொண்டிருந்த பிரணவ் மனதில், "நாளைக்கு நிச்சயமா இதெல்லாத்துக்கும் ஒரு முடிவ கொண்டு வந்தே தீருவேன் தாரா... யாராலையும் உன்ன என்ன விட்டு பிரிக்க முடியாது.." என தனக்குத் தானே சபதம் எடுத்துக் கொண்டான்.

இவை எது பற்றியுமே அறியாது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஆர்யான்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க பார்க்கலாம் விதி நாளை இவர்களுக்கு என்ன கொடுக்க காத்திருக்கிறது என்று.

❤️❤️❤️❤️❤️



- Nuha Maryam -
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top