கற்பூர முல்லை Episode 33

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 33

இவள் ஏன் இப்படி பேசுகிறாள்....? அகில் என்று கேட்டாள்.....

அதற்கு அவன், அது வந்து...... என்று இழுத்தான்.

‌ அதற்குள் ஒரு பைரவி ஏன் தயங்குகிறீர்கள்? நான் தான் உங்களை கல்யாணம் பண்ணிக் கொள்வேன் என்று தைரியமாக அவளிடம் கூறுங்கள் என்று கூறினாள்....

அதைக் கேட்டதும் தமிழுக்கு பூமியே நழுவி போவது போல் இருந்தது...

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் நிலை தடுமாறியவளை திவ்யா தாங்கி பிடித்தாள்.

அண்ணி..... அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி அங்கு தங்களது வீட்டில் நடந்தவைகளை கூறினாள்...

இப்பொழுது தமிழ் அகிலனிடம் திரும்பி ஏன் இதையெல்லாம் என்னிடம் மறைத்தீர்கள்....? என்று கேட்டாள்.

இன்னொருத்தி வந்து நம் அந்தரங்கத்தை இவ்வளவு பேரு மத்தியில் பேசுமளவிற்கு ஏன் இதை விட்டீர்கள்...? என்று கேட்டாள்.

அதற்கு அவனிடம் பதில் இல்லை.

இருந்தாலும் அகிலன் அவளை சமாதானப்படுத்த முயன்ற பொழுது எனக்கு எதுவும் தெரிய தேவையில்லை. ஏற்கனவே தெரிந்தது வரை போதும் என்று கூறி அங்கிருந்து வேகமாக கிளம்பினாள்.

அகிலன் தடுத்தும் அவள் நிற்கவில்லை.

கோபமாக கிளம்பியவள் தன் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள். வண்டியில் வரும் பொழுதும் கூட அவள் அங்கு நடந்ததே நினைத்துக் கொண்டிருந்தாள்...
அதையே நினைத்துக் கொண்டு வந்ததில் நிலை தடுமாறி எதிரே வந்த வண்டியின் மீது மோதி கீழே விழுந்தாள். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்படியே சுயநினைவின்றி கிடந்தவளை அங்கிருந்தவர்கள் ஒன்று கூடி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆஸ்பத்திரியில் அங்கிருந்த நர்ஸ் அவளுடைய பொருட்களை பார்த்து அவளின் கைபேசியின் மூலமாக கடைசியாக டயல் செய்த நம்பரை பார்த்ததும் அதில் அகிலன் என்றிருந்தது உடனே அந்த நம்பருக்கு அழைத்தாள்.

அந்த நம்பரை பார்த்து அழைத்ததும் அகிலன் போன் சிணுங்கியது. ஏற்கனவே பைரவியின் மீது இருந்த கோபத்தில் இந்த நேரத்தில் யாரது என்று செல்போனை பார்த்தான். அதில் தமிழ் என்று வந்திருந்தது. அந்த நேரம் அனைவரும் அருகில் இருந்தனர்.
தமிழ் தான் கால் பண்ணுகிறாள் என்று கூறி அட்டென்ட் செய்தான்.

ஆனால்... பேசிய வாய்ஸ் வேறாக இருந்தது.

உடனே நீங்கள் யார்....? இந்த போன் எப்படி உங்களிடம் வந்தது ....?என்று கேட்டான்.
அதற்கு அந்த நட்ஸ் இதை வைத்திருந்தவருக்கு ஆக்சிடென்ட் ஆகி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுதுதான் இங்கு கொண்டு வந்த சேர்த்தார்கள் அவர்களின் ஃபோனை பார்த்த போது கடைசியாக உங்கள் நபருக்கு டயலாகி இருந்தது. அதனால்தான் உங்களிடம் விவரம் கூறலாம் என்று போன் செய்தேன் என்று கூறினாள்.

அதைக் கேட்டதும் அகிலன் அதிர்ச்சியில் உறைந்து போனான். அந்த செய்தி அங்கிருந்த அனைவரையும் நிலை தடுமாற செய்தது.

அகிலனோ என் தமிழுக்கு என்ன ஆயிற்று? அவளுக்கு என்ன ஆயிற்று என்று பதறியபடி கேட்டான்...

இப்பொழுதுதான் உள்ளே கொண்டு சென்றிருக்கிறார்கள் இனிமேல்தான் தெரியும் என்று கூறி அந்த நர்ஸ் ஆஸ்பத்திரி அட்ரஸை தந்தாள் . அவனும் சற்று நேரத்தில் வருவதாக கூறினான்.

உடனே சுற்றுப்புற மறக்க அவன் கிளம்பி தான். அப்பொழுதுதான் அவன் அதை கவனித்தான். கோபத்தில் அவள் ஹெல்மெட் அணியாமல் சென்றது ஞாபகம் வந்தது. அவள் வைத்துவிட்டு போயிருந்த ஹெல்மெட் கண்ணில் பட்டது.

அவன் கண்களில் இருந்து கண்ணீர் தரை தரையாக வந்தது. .

அழுதவாறே ஆஸ்பத்திரிக்கு சென்று சேர்ந்தான்.
ரிசப்ஷனில் விசாரித்ததில் ஐசியூவில் சேர்த்து இருப்பதாக சொன்னார்கள். அதைக் கேட்டு இன்னும் அதிர்ச்சி அடைந்தான்.

பின்னர், அறையில் இருந்து வெளிப்பட்ட டாக்டரிடம் தமிழை பற்றி விசாரித்தான்.
அவரிடம் தன்னை போலீஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டான்.

அவரிடம் தமிழைப் பற்றி விசாரித்த போது அவர் சில டெஸ்ட்கள் செய்ய வேண்டும். அதன் ரிசல்ட் வந்தா தான் தெரியும். அது போக இன்னும் 12 மணி நேரத்திற்கு எதையும் கூற முடியாது என்று கூறிவிட்டார்.

அதைக் கேட்டு அகிலன் பித்து பிடித்தவன் போல் நின்றான். அந்த நேரம் குமாரும் மற்றும் பைரவி உட்பட குடும்பத்தினர் அனைவரும் அங்கு வந்து சேர்ந்திருந்தனர்.
குமாரை பார்த்ததும் என் தமிழை பார்த்தாயா....? என்று கதறியபடி அழுதான்.

அவனை எப்படி தேற்றுவது என தெரியாமல் நின்றான் குமார்.

மாலை இரவு ஆனது. இரவு அடுத்த நாள் காலை ஆனது. காலை மதியமானது. டாக்டர் சொன்ன நேரமும் வந்தது.

அதுவரை அன்னம் ஆகாரம் ஏதுமின்றி அறையின் வெளியே தவித்துக் கொண்டிருந்தான் அகிலன்.
அந்த நேரம் டாக்டர் தமிழின் அறையில் இருந்து வெளிப்பட்டார்...

உடனே அவரிடம் சென்று விசாரித்தான் அகிலன்...
ஒரு சர்ஜரி மட்டும் செய்ய வேண்டும். அவர்களுக்கு நிறைய ரத்தம் தேவையாய் இருக்கிறது. அதிக அளவில் ரத்தம் வெளிப்பட்டிருக்கிறது. அதனால் அந்த சர்ஜரிக்கு நிறைய ரத்தம் தேவைப்படுகிறது என்று கூறினார்.

அவர்களிடம் விசாரித்ததில் அகிலனுக்கும் அதே ரத்த வகை இருப்பது தெரிந்தது. உடனே அவன் இரத்தம் தர தமிழுக்கு சர்ஜரி தொடங்கியது.

சரி சரி முடிந்து ஆறு மணி நேரத்திற்கு பிறகு தமிழை வார்டுக்கு மாற்றம் செய்தனர்.

அதற்குள் அகிலன் கைலாஷிற்கும் காயத்ரிக்கும் தகவல் கொடுத்து இருந்தான் அவர்களும் அங்கு வந்து சேர்ந்திருந்தனர்.

இப்படியே ஒரு வாரம் போனது. தமிழும் நார்மல் நிலைக்கு வந்திருந்தாள். இதற்கிடையில் அகிலனும் தமிழும் பேசிக்கொள்ளவே இல்லை தமிழுக்கு அகிலன் தான் ரத்தம் கொடுத்தான் என்று தெரியும் ஆனாலும் அவள் பேசிக்கொள்ளவே இல்லை.

அகிலன் வருவான் வந்து தமிழை பார்த்து விட்டு டாக்டரிடம் மட்டும் விசாரித்து விட்டு சென்று விடுவான்.

தமிழின் டிஸ்சார்ஜ் தேதியை டாக்டர் அறிவித்தார். காயத்ரியிடம் தமிழ் ஹாஸ்பிட்டலுக்கான பணத்தை கொடுக்கும்படி கூறினாள் .ஆனால் அகிலனோ அதற்கு முன்னதாகவே முழுத் தொகையும் கட்டி இருந்தான்.

மலரும்..............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top