கற்பூர முல்லை Episode 24

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 24

அகிலனும் தமிழும் அங்கிருந்து கிளம்பினார்கள்... அவர்கள் போன வழியில் அன்றைக்கு அவர்கள் சென்ற பார்க் இருந்தது... அகிலன் அதை பார்த்ததும் பார்க்கிற்கு செல்லலாமா....? என்று கேட்டான்... என்ன திடீரென்று பார்க்கிற்கு என்று கேட்டான் அகிலன்... இல்லை அன்று நாம் செல்லும்போது அது ஒருதலை காதலாக இருந்தது... இன்று தான் இருவரும் சேர்ந்து விட்டோமே சரி கொஞ்ச நேரம் சேர்ந்து உட்காரலாம் என்று தான்... அவள் சரி என்று சொல்லவே பார்க்கின் வாயிலில் வண்டியை நிறுத்தினான்...

அங்கே சிலர் ஜோடி ஜோடியாக அமர்ந்திருக்க சற்று தூரம் தள்ளி இவர்கள் அமர்ந்தனர். அவர்கள் அமர்ந்ததும் சற்று தூரம் தள்ளி இன்னொரு ஜோடி வந்து அமர்ந்தது...
இருவரும் காலேஜில் படிப்பவர்கள் போலும். சற்று எல்லை மீறியே நடந்து கொண்டிருந்தார்கள்... அகிலன் அதை கண்டும் காணாமல் இருந்தான்.. அப்பொழுதும் அகிலனின் சுண்டுவிரல் கூட தமிழ் மீது படாது இருந்தது.

தமிழ் இன்னும் அவன் அருகில் நகர்ந்து உட்கார்ந்து அவன் தோளில் தலை சாய்த்து கொண்டாள்... அவன் என்ன என்பது போல பார்த்தான்....
அவள் ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தாள்...

சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு பின்னர் இருவரும் அகிலனின் வீட்டிற்கு சென்றனர். அங்கு செல்வதற்கு முன்பாகவே அகிலன் தன் தம்பி தங்கைகளுக்கு விவரம் சொல்லி அவர்களையும் வர சொல்லி இருந்தான்..
இவன் விவரம் சொல்லவும் அவர்கள் அனைவரும் இவர்களின் வரவுக்காக ஆவலோடு காத்திருந்தனர்.

அங்கே அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம்.... அகிலனின் வாழ்வில் இப்படி ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று அவர்கள் இவ்வளவு நாள் காத்திருந்தனர். அதற்கு நல்ல பலனாக தமிழ் கிடைத்துவிட்டாள்.

ராசாத்தி அக்கா இரண்டு பேரையும் ஜோடியாக பார்த்ததும் என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது என்று திருஷ்டி கழித்தார். பாசங்களின் பிணைப்பை தமிழ் அங்கு உணர்ந்தாள்.
இப்படி ஒரு அழகிய உறவுகளை தவறவிட்டு விட இருந்தோமே.... என்று நினைத்தவாறு பவிக்கு மனதில் நன்றி சொன்னாள்.

இனிமேல் உங்களை உரிமையாய் அண்ணி என்று அழைக்கலாம்... ஆமாம் என்றாள் தமிழ்...

நீங்கள் கல்யாணம் ஆகி இந்த வீட்டிற்கு வந்த பிறகு உங்க கூட கொஞ்சம் நாள் இருந்து விட்டு தான் நான் கல்யாணம் ஆகி கிளம்புவேன் என்றாள்....

அது சரி..... உனக்கு கல்யாணம் பண்ணாமல் உன் அண்ணா எப்படி கல்யாணம் பண்ணுவார்....?

அது எல்லாம் முடியவே முடியாது என்றாள்....

இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்குமாறு அகிலன் முதலில் உன் படிப்பை முடி...
என் கல்யாணத்தை பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றான்...

பிறகு சரி அக்கா.... நான் போய் தமிழிலேயே டிராப் செய்து விட்டு வருகிறேன் என்று கூறியவாறு இருவரும் கிளம்பலானார்கள்.

அதுக்கு ராசாத்தி அக்கா கணவர் ஏன் அதற்குள் கிளம்பி விட்டீர்கள்? இருங்கள் ஏதாவது சாப்பிட்டு போகலாம் என்று கூறினார்...

அதற்குள் ராசாத்தி அக்கா ஏங்க நீங்க வேற அவன் ட்ராப் மட்டுமா பண்ண போறான் வேற எங்காவது போயிட்டு வரட்டுங்க...... என்ற கூறினார். ஓ.... அது வேறு இருக்கிறதா.... அதை நான் மறந்தே போய் விட்டேன் என்று கூறினார் மயில்சாமி...

திவ்யா இடைப்பட்டு அண்ணா அப்படியா அண்ணா என்று கேட்டாள்....

அக்கா.... சும்மா இருங்க அக்கா.... என்று கூறியவாறு அகிலன் தமிழோடு கிளம்பினான்....

போகும் வழியில் வேறு எங்காவது செல்லலாமா....தமிழ் என்று கேட்டான் அகிலன். அவளும் சரி என்று சொல்லவே வண்டியை பீச்சுக்கு விட்டான்.

மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம்... காற்று இதமாக வீசியது. அகிலனும் தமிழும் கடற்கரை மணலில் அமர்ந்தனர்..

இப்பொழுது அகிலன் பேச ஆரம்பித்தான். வாழ்க்கையில் நான் எதற்குமே ஆசைப்பட்டது இல்லை தமிழ். ஆசைப்படாமலே எல்லாமே என் கைக்கு கிடைத்தது.. அப்பா, அம்மா, தம்பி ,தங்கைகள் எல்லோரும் என் மேல் பாசம் வைத்திருந்தனர். ஒரு பாசமிகு குடும்பம் எனக்கு அமைந்தது. அதுபோக இங்கு வந்ததுக்கு அப்புறம் ராசாத்தி அக்கா மயில்சாமி அவர்களும் நன்றாக பேசினர் பழகினர்.

இது எல்லாமே நான் எதிர்பார்க்காமல் எனக்கு கிடைத்தது. நான் ஆசைப்பட்ட ஒரே விஷயம் நீ மட்டும் தான் தமிழ்.

ம்ம்ம்ம்ம்..... அப்போது நான் கிடைக்காமல் போயிருந்தால்.........

அதற்கு அவனிடம் பதில் இல்லை... மாறாக கண்களில் கண்ணீர் தான் நிறைந்திருந்தது.....

வேண்டாம் அகில்.... உங்கள் கண்ணீரே அதற்கு விடையை கொடுத்து விட்டது என்று கூறினாள்.

இது போதும் தமிழ்.... என் உண்மையான காதலுக்கு பரிசாக நீ கிடைத்து விட்டாயே, அதுவே போதும் தமிழ் என்றான்.

அது எப்படி அதுவே போதும் என்று விடுவீர்கள்..... இன்னும் எவ்வளவு கடமைகள் இருக்கிறது என்றாள்....

கண்டிப்பாக தமிழ்..... அதுவும் உண்மைதான்.

முதலில் திவ்யாவுக்கு படிப்பு முடிந்ததும் நல்ல வரனாக பார்த்து கல்யாணத்தை நடத்தி முடிக்க வேண்டும். பிறகு கார்த்திக் கல்யாணம்...

அதற்கு அப்புறம் தான் நம் கல்யாணம் என்று கூறினான்.

அவன் கரத்துடன் தன் கரத்தை கோர்த்து இதற்கெல்லாம் கண்டிப்பாக உங்க கூடவே இருப்பேன் அகில்.... என்றாள்.

வெறும் கை மட்டும் தானா.... என்றவனின் தோளில் தலையை சாய்த்தாள் தமிழ்.....

தோளில் தலை சாய்த்த அவளை தன்னோடு சேர்த்து அணைத்து
கொண்டான்....

இரவு நேர காற்றும் அவர்களை இதமாக தழுவி சென்றது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top