கற்பூர முல்லை Episode 17

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 17

சொன்னது போலவே காயத்ரியும் கைலாக்ஷூம் சென்னை வந்து விட்டார்கள். கைலாஷும் உடன் வந்திருந்தான். அவனுக்கும் இங்கு நடந்த அனைத்தும் காயூவின் மூலமாக தெரிந்திருந்தது.வந்தவர்கள் நேராக தமிழின் வீட்டிற்கு சென்றார்கள். அவர்கள் நினைத்தது போலவே தமிழ் அங்கு இருக்கவில்லை. ஆபீஸிற்கு சென்றிருந்தாள். ஏனென்றால் இவர்கள் வருவது தான் தமிழுக்கு தெரியாதே...

இருவரும் தமிழின் வீட்டிற்கு சென்று லக்கேஜ்களை வைத்து விட்டு சமையலமாவிடமும் சொல்லிக்கொண்டு திரும்ப தமிழின் ஆபீசுக்கு வந்தனர். இதற்கு இடையில் அகிலனுக்கும் கால் செய்து தாங்கள் வந்த செய்தியை அறிவித்து இருந்தனர். இவர்கள் இருவரும் செல்வதற்கு முன்பே அகிலன் தமிழின் ஆபீஸ்க்கு சென்று இருந்தான்.

தமிழுக்கு இவனை பார்த்ததும் ஐயோ மறுபடியும் வந்து விட்டானா என்று இருந்தது.... இதற்கு இடையே காயூவும் கைலாசஷும் ஆபிசிற்கு வந்து விட்டனர். எதிர்பாராமல் இவர்களை கண்ட ஆச்சரியத்தில் காயூவை கட்டிக் கொண்டாள் தமிழ். இருவர் கண்களிலும் ஆனந்த கண்ணீர் வழிந்தது.... இந்த கண்ணீரை இருவரின் நட்பை பறைசாற்றும் விதமாக இருந்தது.

பின்னர் தமிழை அமர வைத்து விட்டு தானுமபின்னர் தமிழை அமர வைத்து விட்டு தானும் அமர்ந்தாள். கைலாஷும் அமர்ந்து கொண்டான்.

முதலில் தமிழே ஆரம்பித்தாள்.... என்னடி ஒரு போன் கூட இல்லாமல் திடீரென்று வந்து விட்டாய் என்று கேட்டாள்... திடீரென உன்னை பார்க்க வேண்டும் என்று தோன்றியது அதனால்தான் வந்து விட்டேன் ஆபீசிலும் வேலை குறைவாக இருந்தது என்று கூறினாள்.
கைலாசம் தனது பங்குக்கு மேடம் உங்களை பார்க்காமல் அங்கு என் வேலை ஓடவே இல்லை அதனால் தான் திடீர் விஜயம் என்று கூறினான்.....

பின்னர் அகிலனை அறிமுகம் செய்து வைத்தாள். என அகிலனுக்கும் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள் தமிழ். அகிலனோ இருவர் வந்ததற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதவாறு அமர்ந்திருந்தான். அதேபோல் காயத்ரியும் அகிலனை பற்றி எதுவும் விசாரிக்காமல் இருந்தார்
தமிழுக்கு இதற்கு மேல் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அதற்குள் ஹரி சில விவரங்களை கேட்டவாறு உள்ளே வர அவள் தகவல்களை கவனிக்கலானாள்.
ஆபீஸ் அலுவல்களை கவனித்ததில் மதியமாகிவிட்டது. மதிய நேரம் வந்ததும் காயூ வெளியே சென்று சாப்பிடலாம் என மற்றவரையும் அழைத்தாள்...

அதற்கு அகிலன் என்ன மேடம் நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து வெளியில் சாப்பிட்டால் எப்படி எங்கள் வீட்டிற்கு வாருங்கள் சாப்பிடலாம் என அழைத்தான். அதற்கு கைலாசும் அட இது கூட நல்லா இருக்கிறதே அப்போ இந்த மதியம் நல்ல வீட்டு விருந்து தான் என்று கூறினான்.... அதற்கு அகிலனோ அதற்கென்ன தாராளமாய்... என்று கூறினான். காயத்ரியும் அகிலன் வீட்டிற்கு செல்ல சம்மதித்து விட்டாள். ஆனால் தமிழுக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. காயு எப்படி முன்பின் தெரியாத வீட்டில் சாப்பிட வருவாள் என்று நினைத்தாள். ஆனால் இதை அவளிடம் கேட்க கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது ஏனென்றால் கூடவே அகிலனும் இருந்தான். தமிழ் குழம்பியதை காயத்ரியும் அகிலனும் அறிந்து கொண்டார்கள் ஆனால் இருவரும் வெளிக்காட்டி கொள்ளவில்லை மனதுக்குள் சிரித்துக் கொண்டார்கள்...
காயத்ரியும் ஒத்துக் கொண்டதால் வேறு வழியின்றி அகிலன் வீட்டுக்கு செல்ல சம்மதித்தாள் அவள்... நால்வரும் தமிழின் காரிலேயே சென்றனர் தமிழ் காயத்ரி இருவரும் முன் அமர்ந்து கொள்ள ஆண்கள் இருவரும் பின்னால் அமர்ந்து கொண்டனர்.

அங்கே அகிலன் வீட்டிற்கு சென்றதும் இவர்களுக்கு விருந்து தயாராக இருந்தது ராசாத்தி அக்கா வீட்டில். அது தமிழை இன்னும் குழப்பியது. ராசாத்தி அக்கா வந்தவர்கள் அனைவரையும் உபசரித்து விருந்து பரிமாறினாள்.... கூடவே அவள் கணவரும் இருந்தார். ஒருவாறு அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்...
சாப்பிட்டு முடிந்ததும் தமிழ் செல்லலாமா என காயத்ரியிடமும் கைலாசிடமும் கேட்டாள்... அதற்கு அகிலனிடம் இருந்து பதில் வந்தது .மேடம் நீங்கள் வேண்டுமானால் செல்லுங்கள் அவர்கள் கொஞ்சம் இருந்து விட்டு மாலை வரட்டும்
என்று கூறினான். அதற்கு காயத்ரி எந்த மறுப்பும் தெரிவிக்காதது அவளுக்கு ஆச்சரியமாகவே இருந்தது... என்னவோ எனக்கு இது எதுவும் சரியாக படவில்லை என்று கூறிவிட்டு அவள் தான் வந்த காலிலேயே சென்றுவிட்டாள்...

அவள் சென்றதும் காயத்ரி அகிலனிடம் ஏன் இ அவளுக்கு தெரியாமல் இது எல்லாம் செய்வதீர்கள் அவரளிடம் சொல்லிவிட்டே செய்திருக்கலாமே என்று கூறினாள்.... ஐயோ மேடம் இதையெல்லாம் சொல்லிவிட்டு செய்திருந்தால் கண்டிப்பாக உங்கள் தோழி மறுத்து இருப்பார்கள் என்று கூறினான்... பின்னர் ராசாத்தி அக்கா மாமா அவர்கள் குடும்பம் பற்றியும் தன் தம்பி தங்கைகளை பற்றியும் காயத்ரியிடம் தெளிவாக எடுத்து கூறினான்... காயத்ரிக்கும் அவன் மேல் முழு நம்பிக்கை வந்தது...

இதையெல்லாம் நீங்கள்தான் எடுத்துக் கூறி என் காதலுக்கு உங்கள் தோழியிடம் சம்மதம் வாங்கி தர வேண்டும் என்கின்ற வாவனையில் அகிலன் கூறினான்... அதற்கு அவள் கண்டிப்பாக என்னால் முடிந்த வரை உதவி செய்கிறேன் என்று கூறினாள்...

தமிழுக்கு ஆபீஸ் சென்றதும் இதையெல்லாம் மறந்துவிட்டு அலுவல்களை கவனிக்கலானாலள். வேலைகள் பல இருந்ததால் மாலை வரை நேரம் சரியாக இருந்தது...
மாலை ஆபீஸ் முடிந்ததும் காயத்ரி கங்கு போன் பண்ணலாமா என்று நினைத்தாள் ஆனாலும் வேண்டாம் அவளே பண்ணட்டும் என்று நினைத்தாள்....
அவள் அப்படி நினைத்தது தான் தாமதம் அந்த நிமிடமே காயத்ரியிடம் இருந்து தமிழுக்கு கால் வந்தது... தான் நேராக வீட்டுக்கு வந்து விடுவதாக கூறினாள்.. சரி என்று சொல்லிவிட்டு தமிழ் இணைப்பை துண்டித்தாள். அவள் வீட்டிற்கு வரட்டும் பின்னர் பேசிக் கொள்ளலாம் என்று இருந்தது அவளுக்கு.

மலரும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top