எள்ளு துவையல்

Advertisement

Bhuvana

Well-Known Member
எள்ளு துவையல் :

தேவையான பொருட்கள்:

கருப்பு எள்ளு - 25 கிராம்
தேங்காய் துருவல் - 1 கைப்பிடியளவு
மிளகாய் வற்றல் - 7
புளி - 1 நெல்லிக்காய் அளவு
பூண்டு - 4 பல்
உளுந்தம் பருப்பு - 2 டீ ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

ஒரு கடாயில் எண்ணெய் விடாமல், சூடானதும் எள்ளை போட்டு வெடிக்கும் வரை வறுத்து எடுக்கவும். கருக விடாதீர்கள். அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பூண்டு, புளி ஆகியவற்றை வறுக்கவும், இறுதியாக தேங்காய் துருவலையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி அணைத்து விடவும்.

ஆறிய பின் போதுமான தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் துவையல் அரைத்து எடுக்கவும்.
உளுந்தம் பருப்பு சாதத்திற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

16640632_1005827156189896_5111887185522512679_n.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top