என் மன்னவன் நீ தானே டா...6

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்க்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இதோ அடுத்த பதிவு..



என் மன்னவன் நீ தானே டா..6



ஆர்.ம் கார்மெண்ட்ஸை அடைந்த உடன் திவ்யாவிற்கு மனதில் ஒரு இனம் புரியாத அமைதி உருவானது.தன் வீடு வந்து சேர்ந்த பறவையை போல.அனைவர் வரவேற்பையும் ஏற்றவள்,தனது அலுவலக அறை நோக்கி சென்றாள்.நடக்கவிருக்கும் மீட்டிங்கிற்கு தனது குறிப்புகளை சேகரித்துவிட்டு,கார்மெண்ட்ஸை பார்வையிட சென்றாள்.

செல்வமோ கிருஷ்ணனை பலமுறை எழுப்பியும் அவன் எழவில்லை என்றவுடன்,மருத்துவரை அழைத்தார்,

"ஹலோ..டாக்டர்..." என்றவுடன்,கிருஷ்ணன் பதறி அடுத்திக்கொண்டு எழுந்து அமர்ந்தான்.

"அங்கிள்..."இப்ப எதுக்கு டாக்டரெல்லாம் கூப்பிடுரிங்க நான் நல்ல தான் இருக்கேன் என்றான்.அவனை கண்டு குழம்பிய செல்வம் என்னாச்சு இவனுக்கு பேயரஞ்ச மாதிரி இருக்கான்,வீட்டுக்கு போய் வேப்பிலை தான் அடிக்கனும் போல என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

கிருஷ்ணனோ கடவுளே என்ன அவளுக்கு நியபகம் இருக்க கூடாது என்று வேண்டிக்கொண்டு இருந்தான்.

அப்பொழுது அங்கு வந்த செல்வம்,

"என்ன டா ஆச்சு உனக்கு...." என்றார்.

"ஒன்றுமில்லை.."என்று சொல்லவும்.

"சரி வா...மேடம் வராங்க..."என்றார்.ஒருவித கலக்கத்துடன் சென்றான்.அங்கே திவ்யா ஒவ்வொரு பிரிவாக பார்வையிட்டுக் கொண்டு இருந்தாள்.இவர்கள் பிரிவில் உள்ளவர்களை அறிமுகபடுத்திக் கொண்டு வந்தாள் அவளது செயலார்.செல்வதிடம் இவர் இந்த பிரிவின் மேலாளர் என்று கூறியவள்,பக்கத்தில் இருந்த கிருஷ்ணனை அறிமுகபடுத்தினாள்.

திவ்யா நெருங்கி வர வர கிருஷ்ணனுக்கு கைகள் நடுங்க தொடங்கியது கடவுளே இவளுக்கு என்னை நியாபகம் இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டான்.

"ஹலோ..."என்று திவ்யாவின் குரல் அருகில் கேட்கவும் தன்னிலை பெற்றவன்.

"ஹ..ஹலோ..."என்றான் திவ்யாவுக்கு தன்னை தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டு இருந்தான் அவளோ இவனை கடந்து சென்றிருந்தாள்.

"ப்பா.."நியாபகம் இல்ல போல என்று நினைத்தவன் இல்லனா நம்ம நிலைமை ரொம்ப மோசமாயிருக்கும் என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.

"டேய் தம்பி...நாளையிலிருந்து ஒழுங்கா நேரத்துக்கு வந்துடு.."என்று சொல்லிக்கொண்டு இருந்தார் செல்வம்.

கிருஷ்ணனோ எனது சீக்கிரம் வரனுமா நானே வேற வேலை தேடனும்னு யோசிச்சிட்டு இருக்கேன் என்று மனதில் நினைத்தவன் செல்வத்திடம்,

"முயற்சி பண்றேன் அங்கிள்.."என்று கூறி அவரை வெறுப்பேற்றிவிட்டு சென்றான்.

பின் மீட்டிங்கில் திவ்யதாரணியை முறையாக அறிமுகம் செய்தார் அவர்களது வக்கீல் வரதராஜன்.பின் தன்னை அறிமுகம் செய்து கொண்ட திவ்யா பொதுவாக பேசிவிட்டு தொழில் தொடர்பாக சில குறிப்புகளைக் கொடுத்துவிட்டு மீட்டிங்கை முடித்தாள்.

"ஷ்..ப்பா..இப்பவே கண்ணகட்டுதே..."என்று நோந்துகொண்டு வெளியில் வந்தான் கிருஷ்ணன்.

திவ்யா தனது வேலையில் ஆழ்ந்து போனாள்.வெகு நாட்களுக்கு பிறகு மனது சற்று அமைதி அடைந்திருந்தது.வரவிருக்கும் டெண்டர்களை வரிசை படுத்திக்கொண்டு இருந்தாள்,அப்பொழுது உள்ளே வந்த வக்கீல் வரதராஜன்

"என்ன திவிம்மா...என்ன முடிவு பண்ணிருக்க..."என்றார்.

"இன்னும் முடிவு எடுக்கல அங்கிள்....பார்க்கலாம் வேற எதாவது வழி இருக்கானு..."என்றாள்.அவள் மிகவும் குழப்பத்தில் உள்ளாள் என்பதை ஊகித்தவர் மேலும் அவளை குழப்ப மனதில்லாமல்,

"சரி ம்மா..நல்ல யோசி.."என்று சொல்லி செனறுவிட்டார்.அவர் சென்றவுடன் மீண்டும் திவ்யாவின் முகம் இறுக தொடங்கியது.அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் வெளியில் கிளம்பினாள்.

தனது காரில் அமர்ந்தவளுக்கு வீடு செல்ல விருப்பமில்லை,எங்கு செல்ல யோசிக்கும் நேரம்.

பள்ளியில் வீட்டு மணி அடித்ததும் ஓடி வரும் பிள்ளை போல ஓடி வந்துகொண்டிருந்தான் கிருஷ்ணன்.திவ்யாவின் காரின் பக்கத்தில் தான் கிருஷ்ணன் தனது வண்டியை நிறுத்தியிருந்தான்,அதை எடுப்பதற்கே இந்த ஒலிம்பிக் ஓட்டம்.

"ச்ச...ஒரு அரைமணி நேரம் பர்மிஷனுக்கு இவ்வளவு அக்கபோற...எவ்வளவு பொய் சொல்ல வேண்டி இருக்கு...டேய் கிருஷ்ணா சீக்கரம் ஓடிரு இல்ல அங்கிள் கிட்ட மாட்டிப்ப,அப்புறம் டாக்டர் தான் ஊசி தான்..."என்று வாய்விட்டு பொலம்பியவன் தனது பைக்கை எடுத்துக்கொண்டு பறந்தான்.

திவ்யா அவன் வந்ததிலிருந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்

"இவன் மாறவே இல்ல..."என்று சொன்னவள் கைகள் தானாக தனது கன்னத்தை தடவியது.உன்ன மறக்கமுடியுமா என்யவே அடிச்சல இனிமே தான் இருக்கு உனக்கு என்று சொன்னவள் முகத்தில் வன்மம் இல்லை மாறாக சிரிப்பு இருந்தது.இவ்வளவு நேரம் இருந்த மனநிலை சற்று மாறி முகத்தில் ஒரு குறுநகை இருந்தது அதே மனநிலையுடன் வீடு நோக்கி சென்றாள்.

அங்கே இவளை எவ்வாறு வீழ்த்துவது என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள் சகுந்தலா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top