என் மன்னவன் நீ தானே டா...5

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..

என் மன்னவன் நீ தானே டா..5

மணிமேகலையின் மாலையிட்ட படத்தை பார்த்துக்கொண்டு இருந்தார் ராம்.எதில் தவறினார் என்று தன்னை தானே கேள்வி எழுப்பிக்கொண்டு இருந்தார்,தொழிலில் வெற்றி பெற்றவர் தந்தை என்ற பதிவியில் தோற்றுவிட்டதாக வேதனைபட்டார்.ஆனால் காலம் தாழ்ந்த யோசனையில் என்ன பலன்.மணிமேகலை படத்தின் பக்கத்தில் மாட்ட பட்டிருந்த சுகுமாரின் படத்தை பார்த்தவர் கண்கள் கோபத்தை கக்கியது.என்ன இல்லை இவனிடம் அனைத்தும் இருந்தும் இப்படி வாழ்க்கையை வாழ தெரியாமல் அழித்துக்கொண்டனே..என்று மனது வெம்மியது.

சுகுமார் இறந்து ஒரு வாரம் ஆகிறது.அன்று நலவாழ்வு மையத்தில் இருந்து அழைக்கவும் சற்று கலக்கத்துடனே சென்றனர் அனைவரும்.அங்கு சுகுமார் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தார்.என்ன என்று விசாரித்த போது சுகுமார் போதை பொருள் கிடைக்காத காரணத்தால் காவலர்களை தாக்கி விட்டு ஓடும் பொழுது,கல் தடுக்கி கீழே விழுந்ததில் கீழ் இருந்த கல்லில் தலைமோதி விட்டதாக கூறினர்.அதீத ரத்தபோக்கு காரணமாக உயிர் பிழைப்பது கடினம் என்றனர்.கலைவாணி தான் கதறி தீர்த்துவிட்டார்.உள்ளே செல்ல மறுத்தவரை வர்ஷினி கை தாங்களாக அழைத்து சென்றாள்.

சுகுமார் நடுக்கத்துடன் வரும் மனைவியை கண்டவர் கண்கள் கரித்தது.கலைவாணி கணவனின் அருகில் அமர்ந்து கைகளை பற்றிக் கொண்டார்.சுகுமார் நடுங்கும் தன் கைகளை மனைவியின் கைகளில் அழுத்திவியவர்.வர்ஷியை கண்களால் அழைத்தார் அவளிடம்,

"அம்மா....பா...பார்த்துக்க.."மேலும் ஏதோ சொல்லமுடியாமல் கண்கள் சொருகின.வர்ஷி,

"அப்பா..."என்று அழைத்தாள்.அவளது தலையில் கைவைத்தவர்,கண்களால் திவ்யாவை தேடினார்.அதை உணர்ந்த வர்ஷி வரவில்லை என்றாள்.சுகுமார் செய்த தவறை காலம் கடந்து உணர்ந்தார்.அதே நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

திவ்யா தனது தந்தையின் இறுதி சடங்குகளை ஒருவித இறுக்கத்துடனே செய்தாள்.முதலில் வர மறுத்தவளை ராம் தான் வற்புறுத்தி அழைத்திருந்தார்.சகுந்தலாவுக்கு தம்பியின் மரணம் வேதனையளித்தாலும்,தனது சகுனி தனத்தை விடவில்லை எப்படியாவது தந்தையை கைக்குள் போட வேண்டும் என்பதற்காக அமைதிகாத்தார்.

ராம் தான் மிகவும் கலங்கி போனார்.இதில் ஊடகங்கள் வேறு தனது பங்கிற்கு அவரை கேள்விகளால் துளைத்துக்கொண்டு இருந்தது.ஒரு கட்டத்தில் திவ்யா தான் அனைத்தையும் கையில் எடுத்தாள்,அனைவருக்கும் பொறுமையாக பதில் சொல்லி அனுப்பினாள்,இருந்தும் சிலர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி சுகுமாருக்கு பைத்தியாக்கார பட்டம் கட்டினர்.திவ்யா இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுக்காமல் தனது இலக்கில் குறியாக இருந்தாள்.

ராமிற்கு பேத்தியை கண்டு சற்று கர்வம் வந்தது,அவரும் தனது கூட்டில் இருந்து வெளிவந்து பேத்தியுடன் இணைந்தார்.திவ்யா வெளிநாட்டில் இருந்து கொண்டு தாத்தா உடன் இணைந்து தொழிலில் இறங்க தொடங்கினாள்.

சகுந்தலா தனது மகனையும் தொழிலில் இணைக்குமாறு தந்தையிடம் கேட்டுக்கொண்டு இருந்தார்.ராமிற்கு அபினாஷின் மீது அத்தனை நம்பிக்கையில்லை என்றாலும்,ஏதாவது செய்யாவிட்டால் சகுந்தலா வேறு ஒரு பிரிச்சனை கிளப்புவார் என்று அறிந்து,அவனுக்கு சிறு பொறுப்பை கொடுத்து கண்கானித்தார்.

அபினாஷ் அனைத்தையும் தட்டி கழித்து ஊதாரி தனமாக இருந்தான்.ஒரு கட்டத்தில் ராம் வெறுத்து போனார்,அவர் எவ்வளவு அறிவுரை சொன்னாலும் அதை அவன் காதில் வாங்கவில்லை.அதனால் அவனிடம் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.இதனால் சகந்தலாவின் வன்மம் மேலும் வளர்ந்தது.

அனைத்தும் சற்று இயல்பிற்கு திரும்பும் நேரம் ராமின் உடல்நிலையில் குறைவு ஏற்பட்டது.இதை தனக்கு சாதகமாக சகுந்தலா பயன்படுத்தி ராமின் முன் நல்லவர் போல் நடந்துகொண்டு அவரின் நன்மதிப்பை பெற்றார்.ராமும் தனது கடைசி காலத்தில் மகளை விரட்ட மனதில்லாமல் வீட்டில் அனுமதித்தார்.தான் இறக்கும் முன் திவ்யாவிற்கு திருமணம் செய்ய நினைத்தார்,தொழிலில் தான் சொல்லும் அனைத்தையும் கேட்கும் பேத்தி இதில் கேட்க மறுத்தாள்.அவளுக்கு திருமணத்தில் ஒரு பற்று அற்ற தன்மை வந்திருந்தது சுகுமாரின் செயனினால்.

ராமிற்கு பேத்தியின் மறுப்பில் மனம் கலங்கினார்,எங்கே வாழ்க்கை முழுவதும் அவள் தனியே இருந்துவிடுவாளோ என்று அஞ்சி சில முடிவுகளை எடுத்தார்.அதன் படி உயிலை எழுதினார்.ராமின் மறைவுக்கு பின் உயிலின் சாராம்சத்தை கேட்டு திவ்யா கொதித்து போனாள்.தன்னால் இதில் இருந்து வெளிவர முடியுமா என்று யோசனையில் இருந்தாள்.ஆனால் ராமோ தனது பேத்தியை பற்றி நன்கு அறிந்தவர் அவள் இதில் இருந்து வெளிவராத மாதிரி உயில் எழுதிருந்தார்.

விடாமல் அழைத்த கைபேசியினால் கடந்த காலத்தில் இருந்து வெளிவந்த திவ்யா.கைபேசியை ஏற்றாள் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தாள்.பின் நேரம் ஆவதை உணர்ந்து காரை தனது அலுவலகத்தை நோக்கி செலுத்தினாள்.

ஆர்.ம் கார்மெண்ட்ஸ் இன்று பரபரப்பாக காணப்பட்டது.ஆனால் நம் கிருஷ்ணனோ எப்போதும் போல் தாமதமாக வந்து செல்வத்தின் இரத்தகொதிப்பை ஏற்றிக்கொண்டு இருந்தான்.

"டேய்..தம்பி..இன்னைக்கி முதலாளி வராங்க டா..கொஞ்சமாச்சும் வேலை செய்யர மாதிரி நடிடா..."என்று மன்றாடி கொண்டு இருந்தார் செல்வம்.

"சரி அங்கிள்..முயற்சி பண்றேன்.."என்று அவரை வெறுப்பேத்திக் கொண்டு இருந்தான்.

அனைவரும் வரும் முதலாளி பற்றிய அலசலில் இருந்தனர்,அப்போது வெளியில் பரபரப்பு கேட்கவும் அங்கே சென்றனர்.செல்வமோ கிருஷ்ணனை கிட்டதட்ட இழுத்துக் கொண்டு வந்தார்.

அவருடன் வெளியில் வந்தவன் காரில் இருந்து கம்பீரமாக இறங்கிய திவ்யதாரணியை கண்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான்...
 
Last edited:

umamanoj64

Well-Known Member
மயங்கிட்டானா...என்னடாது உல்டாவா இருக்கே.. டேய் நீ ஹீரோ டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top