என் மன்னவன் நீ தானே டா...23

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



என் மன்னவன் நீ தானே டா...23

சமையல் அறைக்கு தண்ணீர் எடுக்க சென்ற கிருஷ்ணன் அங்கு கண்ட காட்சியில் சம்பித்து நின்றுவிட்டான்.அங்கு வர்ஷி கையில் கத்தியை வைத்துக் கொண்டு அவளது கையை வெட்ட முயன்றுக் கொண்டு இருந்தாள்.அவன் உறைந்து நின்றது சில நிமிடமே தன்னை சுதாரித்தவன் வேகமாக வர்ஷியிடம் சென்று கத்தியை பிடுங்கியவன் அவளை அறைந்திருந்தான்.

கிருஷ்ணன் திடீர் என்று வந்ததில் பயந்தவள் அவன் அறையவும் சற்று தடுமாறி தான் போனாள். அவளது கைபிடித்ததவன் தரதரவென வெளியில் உள்ள தோட்டத்தில் மறைவாக இருக்கும் சிறு கல் பெஞ்சில் அமரசெய்தான் அவள் முன் கைகட்டி நின்றான்.அவனது கண்களில் தெரிந்த ரௌத்திரத்தில் வர்ஷிக்கு உள்ளுக்குள் குளிர் எடுத்தது.அவனது பார்வையை சந்திக்காமல் தலைகுனிந்து கொண்டாள் வர்ஷி அவளுக்கு தான் செய்விருந்த காரியத்தின் வீரியம் தற்பொழுது புரிந்தது.அவளாக பேச போவது இல்லை என்பதை உணர்ந்தவன் உள்ளே செல்ல முற்பட்டான் அவனது தோரணையே கூறியது இதை அவன் எல்லாரிடமும் கூறப்போகிறான் என்று அவனது செயலில் நடுங்கியவள்,

"போகாதீங்க மாமா...யார் கிட்டேயும் சொல்லிடாதிங்க மாமா...ப்ளீஸ்..."என்றாள் இறஞ்சுதலாக.

"ஏன் சொல்லக்கூடாது..."என்றான் அவன்.

"மாமா...அது.."என்று தயங்கினாள் வர்ஷி.

"இனி அப்படி கூப்பிடாத...என்ன உன்னோட அண்ணனா நினைச்சிருந்தா இப்படி செய்ய தோணிருக்குமா..."என்றான் குற்றம்சாட்டும் விதமாக.அதில் மேலும் அவளது அழுகை அதிகமானது.அவளது அழுகையைக் கண்டு சற்று தளர்ந்தவன்.

"என்ன டா சின்னகுட்டி உனக்கு பிரச்சனை...என் கிட்ட சொல்ல உனக்கு என்ன தயக்கம் சொல்லுமா...இவ்வளவு பெரிய முடிவு எடுக்க எது உன்ன தூண்டிச்சு சொல்லு..."

"மாமா அது நான் டூர்..."என்று தடுமாறியவளை ஆதரவாக தலைகோதியவன்,

"பயப்படாம சொல்லுடா..."என்று ஊக்கினான்.வர்ஷியும் நடந்தவற்றை கூறதொடங்கினாள்,

வர்ஷி சுற்றுலா சென்று இரு நாட்கள் உற்சாகமாக தான் சென்றது.நண்பர்கள் உடன் உற்சாகமாக ஊர் சுற்றினாள்.கடைசியாக அவர்கள் பெங்களூர் வந்து அங்கு உள்ள இடங்களை சுற்றிவிட்டு இரவு ஊர் திரும்புவதாக இருந்தது.பெங்களூர் சென்றதில் இருந்து யாரோ தன்னை பின் தொடர்வதாக தோன்றியது வர்ஷிக்கு முதலில் பயந்து சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தாள் பின்"ச்ச..நாம தான் நினைக்கிறோம் போல..."என்று நினைத்தவள் அந்த சிந்தனையை ஒதுக்கி வைத்துவிட்டு நண்பர்கள் உடன் கலந்து சுற்ற தொடங்கினாள்.

சகுந்தலா அஞ்சலியின் உதவியுடன் வர்ஷியை சிக்கலில் சிக்க வைக்க அவளது புகைபடத்தை அனுப்பியிருந்தார் ரமேஷ் என்பவனுக்கு அவன் அஞ்சலியின் அண்ணன்.அவனொ வர்ஷியின் அழகில் அவளை அடைய திட்டமிட்டான் அதனால் அவளை தன்னிடம் சிக்கவைக்க தக்க சந்தர்பப்த்தை எதிர்பார்த்துக் கொண்டு அவளை பின் தொடர்ந்தான்.அவன் எதிர் பார்த்தது போல் வர்ஷியே அதை ஏற்படுத்திக்கொடுத்திருந்தாள்.

வர்ஷியும் அவளது நண்பர்களும் இடங்களை சுற்றி விட்டு தாங்கள் தங்கி இருந்த அறைக்கு வந்தார்கள்.அவர்களில் ஒருவள்,

"என்னப்பா சீக்கிரமா வந்துட்டோம் மிட்நைட் தான் கிளம்புறோம் இன்னும் டையம் இருக்கு...இங்க ஒரே போர்..."என்றாள்.அதற்கு மற்றொருவள்,

"ஏய் ஒரு ஐடியா இங்க பக்கத்தில ஒரு பப்பு இருக்கு அங்க போகலாமா..."என்றாள்.

"பப்பா...நான் வரல டி..."என்றாள் வர்ஷி.

"இவ ஒருத்தி எதுக்கெடுத்தாலும் பயந்துகிட்டு...நீ வாடி நம்ம போகலாம்..."அதற்கு மற்றொருவளோ,

"இல்ல அங்கெல்லாம் குடிப்பாங்க டி அதான் யோசனையா இருக்கு..."என்றாள்.

"ஏய் நம்ம என்ன குடிக்கவா போறோம்...சும்மா பார்க்கதான் போறோம்...வாடி..."என்று அழைத்தாள் அவளுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசையாக இருந்தது அதனால் அவளும் சரி என்று கூறினாள்.வர்ஷியை பார்த்த இருவரும்,

"என்னடி வரியா...இல்ல இங்கேயே இருக்க போறியா...பயந்தாங்குலி எதற்கெடுத்தாலும் பயந்துகிட்டு..."என்றனர்.அவர்களின் கிண்டலில் கடுப்பானவள்,

"நான் ஒண்ணும் பயப்படுல...நானும் வரேன்..."என்று வீராப்பாக கூறி கிளம்பினாள்.

மாணவர்கள் கடைசி வருடம் என்பதால் அவர்களை சுதந்திரமாக சுற்ற விட்டிருந்தனர் கல்லூரி பேராசிரியர்கள் எவ்வளவு வெளியில் சுற்றினாலும் இரவு ஒன்பது மணிக்குள் அறைக்குள் இருக்க வேண்டும் அதுவே அவர்கள் கூறியிருந்த கட்டுபாடு.அதன்படி அவர்கள் சிறு குழுக்களாக மாணவர்களை பிரித்து ஒவ்வொரு பிரிவிற்க்கும் ஒரு ஆசிரியர் கூட இருப்பார்.அதன் படி இவர்களின் ஆசிரியர் உடல்நலக் குறைவால் சற்று சீக்கிரம் ரூம் அழைத்துவந்திருந்தார்.அதனால் பக்கத்தில் உள்ள இடங்களுக்கு செல்ல நினைத்தால் அவர்கள் தங்கள் கைபேசி எண்ணை தன்னிடம் கொடுத்து செல்லுமாறு பணிந்திருந்தார்.அதன்படி வர்ஷியும் அவளது தோழிகளும் அவரிடம் பக்கத்தில் உள்ள கடைக்கு செல்லவதாக கூறிவிட்டு பப்புக்கு வந்தனர்.

வர்ஷிக்கு பப்புக்குள் நுழைந்தவுடன் நெஞ்சில் ஒரு இனம்புரியாத பயம் சூழ்ந்துக்கொண்டது.தான் செய்வது சரியா என்று தன்னையே கேட்டுக்கொண்டவள் சும்மா பார்க்கதான வந்திருக்கோம் பார்த்துட்டு போய்டலாம் என்று தனக்கு தானே சமாதனம் செய்து கொண்டு உள்ளே சென்றாள்.அவளை பின்தொடர்ந்த ரமேஷும் உள்ளே சென்றான்.அங்கு ஒரு மறைவான இடத்தில் அமர்ந்தவன் வர்ஷி தெரிகிற மாதிரி அமர்ந்தான் அவளை எதில் சிக்க வைப்பது என்று யோசித்தவனுக்கு இது அருமையான வாய்பாக அமைந்தது.ஒரு வெய்டரிடம் பணத்தைக்கொடுத்து வர்ஷியை காண்பித்து அவளது பாணத்தில் இதைக் கலக்குமாறு ஒரு மாத்திரையை திணித்தான்.அவனும் பணத்திற்காக அவன் சொன்னதை செய்ய ஒத்துக்கொண்டு அவர்களிடம் சென்றான்.

அன்று ஞாயிறு என்பதால் கூட்டமாக இருந்தது.வர்ஷியும் தோழிகளும் தைரியமாக வந்தாளும் உள்ளுகுள் அவர்களுக்கும் ஒரு நடுக்கம் இருக்கதான் செய்தது அதனால் அவர்கள் மூவரும் ஓரமாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தனர் அப்பொழுது அங்கு வந்த வெய்டர்,

"மேம் வூ ட் யூ கவ் சம்திங்..."என்றான்.அவர்கள் வேண்டாம் என மறுக்கவும் என்ன செய்வது என்று யோசித்தவன்,

"மேம் இங்க பைன் ஆப்பிள் ஜூஸ் நல்லா இருக்கும் குடிச்சு பாருங்க..."என்றான்.அவர்களில் வர்ஷியை தவிர மற்ற இருவரும் சரி என்று கூறினர்.அவன் எடுத்துவர சென்றவன் திரும்பி வரும் நேரம் அந்த இடம் காலியாக இருந்தது.யோசனையாக தன்னிடம் பணம் கொடுததவனை பார்த்தான் அவனும் அவர்களை தான் தேடிக்கொண்டிருந்தான் அவன் பணத்தை திருப்பிக்கேட்பானோ என்று நினைத்தவன் அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றுவிட்டான்.அந்த கூட்டத்தில் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தேட முயன்று தோற்றான் ரமேஷ்.

"ச்ச சோதப்பிடுச்சே...அவ தங்கிருக்கிர ஹோட்டல நுழையரதும் கஷ்டம்..."என்று நினைத்தவன் அவளின் புகைபடங்களை பார்த்தான்.அவள் பெங்களூர் வந்ததிலிருந்து விதவிதமாக அவளை புகைபடம் எடுத்திருந்தான் அவள் பப்க்கு வந்தது முதல் அவனிடம் புகைபடம் இருந்தது.சரி அதான் போட்டோஸ் இருக்குல அதவச்சு அவளை பிடிச்சிடுலாம் என்று திட்டமிட்டான்.

வர்ஷி தன் தோழிகளின் கையை தங்கள் ரூம் வந்து தான் விட்டாள் கிட்டதட்ட இழுத்து வந்திருந்தாள் அவர்களை.வெய்டர் அவர்களிடம் வரவுமே அவளுக்கு நடுக்கம் வந்தது அதில் அவன் பைன் ஆப்பிள் ஜூஸ் குடிங்க என்று வற்புறுத்தவும் வேண்டாம் என்று கூற நினைத்தவள் அதற்கு முன் அவளது தோழிகள் சரி என்று கூறவும் கடுப்பானவள் அவன் சென்றவுடன் அவர்கள் இருவர் கையை பிடித்துஅவர்கள் எவ்வளவோ தடுத்தும் இழுத்து வந்திருந்தாள்.

"ஏன் டி இப்படி இழுத்துட்டு வந்த..."என்றவர்களை முறைத்தவள்.

"ஏன் அங்க போய் எதுவும் குடிக்க மாட்டேனு சொன்னீங்க இப்ப அவன் ஜூஸ்னு சொன்னா உடனே ஓகே சொல்லுடிங்கிவிளா...அவன் எத எடுத்துட்டு வந்து கொடுப்பானு நமக்கு தெரியுமா...லூசுகளா..."என்று வாய்க்கு வந்தபடி திட்டியவள்.

"இனி எங்கேயும் கிடையாது போய் ஊருக்கு பேக் பண்ணுங்க...இல்ல மேம் கிட்ட சொல்லிடுவேன்..."என்று மிரட்டிவிட்டு குளிக்க சென்றாள்.அவளது நடவடிக்கைக் கண்டு அவளது தோழிகள் தான் இவளுக்கு திடீர்னு என்ன ஆச்சு நினைத்தவர்கள் உண்மையில் அவள் தங்கள் ஆசிரியிடம் கூறிவிடுவாளோ என்று பயந்து ஊருக்கு கிளம்ப தயாரானார்கள்.

குளியறையில் நுழைந்த வர்ஷி தன் பதட்டம் தீரும் வரை ஷவரை திறந்து நின்றாள்.அவளுக்கு அங்கு சென்றதிலிருந்து எப்படி இங்கு இருந்து கிளம்புவது என்ற எண்ணம் எங்கும் குடி அதன் உடன் ஆட்டம் என்று அங்கு இருந்தவர்களை பார்த்தாலே அவளுக்கு பயமாக இருந்தது.அதலிம் அவன் ஜூஸ் என்று வந்து நிக்கவும் நடுங்கிவிட்டாள் தோழிகளிடம் சொன்னா கேட்க மாட்டார்கள் என்று அவர்களை இழுத்து வந்திருந்தாள்.பின் ஊருக்கு கிளம்பும் வரை எந்தவித பிரச்சனையும் இல்லை.அவர்கள் பஸ்ஸில் ஏறியவுடன் வர்ஷிக்கு ஒரு அழைப்பு வந்தது அது தெரியாத நம்பர் என்பதால் அவள் அதை எடுக்கவில்லை.பின்அந்த நம்பரில் இருந்து ஹாய் என்ற குறுஞ் செய்தியும் அதனுடன் அவளது ஒரு புகைபடமும் வந்தது அதைக் கண்டு பயந்தவள்.

யார் என்று புரியாமல் தடுமாறியவள் தன் மோபைலை அனைத்து வைத்தாள்.பின் வீடு வந்து ஆன் செய்தவள் அதில் மேலும் சில படங்களுடன் ஹாய் ஹனி என்றும் வந்திருந்தை பார்த்தவளுக்கு மேலும் பயம் தொற்றிக் கொண்டது அதில் இருந்து ரமேஷின் குறுஞ்செயதிகள் வந்தபடி இருக்கவும் வர்ஷிக்கு தான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டியுள்ளோம் என்று உணர்ந்தாள்.அனைத்தையும் கூறி முடித்தவள் கிருஷ்ணனின் முகம் பார்த்தாள்.அவனோ அவளை தீர்க்கமாக பார்த்தவன்,

"உன்னோட மோபைல குடு.."என்றவன்.அவளிடம்,

"என் கிட்ட சொல்லிட்டல...இனி இதபத்தி நீ யோசிக் கூடாது...புரியுதா..."என்றவன்.அவள் சரி என்று தலையாட்டவும்.

"இத பத்தி யார் கிட்டேயும் மூச்சுவிடக் கூடாது...நான் எல்லாம் பார்த்துப்பேன்...நீ எப்போதும் போல இரு புரியுதா..."என்று சில அறிவுறைகள் வழங்கி அவளை அனுப்பினான்.பின் அவளை பற்றிய யோசனையிலேயே வீட்டின் உள்ளே வந்தவன் வாயிற் கதவு வழியாக வெளிச்சம் தெரியவும் அத்தை கதவ பூட்ட மறந்துட்டாங்களா என்று யோசித்தவாறே அதன் அருகே செல்ல முனையும் நேரம் சகுந்தலா பூனை போல் உள்ளே நுழைந்தார் கையில் மோபைல் உடன் யாரிடமோ பேசிவிட்டு வருகிறார் என்று ஊகித்தவன்.இந்த நேரத்துல யார் கிட்ட பேசிட்டு வருது இந்த குண்டு என்ற யோசனையுடன் அவர் தனது அறைசெல்லும் வரை பார்த்தவன் இந்த குண்டு ஏதோ வேலை செய்யுது என்னனு கவனிக்கனும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அதான் பப்பில் எதுவும் குடிக்காமல் வந்து விட்டாளே
அப்புறம் ஏன் வர்ஷினி பயப்படுறாள்?
ப்ரெண்ட்ஸ்ஸையும் வர்ஷி காப்பாற்றி விட்டாள்ன்னு அதுகளுக்கு தெரியுமா?
வெறும் போட்டோஸ்தானே
அதை கிருஷ்ணன் பார்த்துப்பான்
அஞ்சலியின் நொண்ணன் ரமேஷுக்கு பூசை உண்டா?
சகுந்தலாவின் சதிகளை கிருஷ்ணன் கண்டுபிடித்து விடுவானா?
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அதான் பப்பில் எதுவும் குடிக்காமல் வந்து விட்டாளே
அப்புறம் ஏன் வர்ஷினி பயப்படுறாள்?
ப்ரெண்ட்ஸ்ஸையும் வர்ஷி காப்பாற்றி விட்டாள்ன்னு அதுகளுக்கு தெரியுமா?
வெறும் போட்டோஸ்தானே
அதை கிருஷ்ணன் பார்த்துப்பான்
அஞ்சலியின் நொண்ணன் ரமேஷுக்கு பூசை உண்டா?
சகுந்தலாவின் சதிகளை கிருஷ்ணன் கண்டுபிடித்து விடுவானா?
நன்றி தோழி...சகுந்தலாவின் நிலை மோசமாக போகிறது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top