என் மன்னவன் நீ தானே டா...21

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



என் மன்னவன் நீ தானே டா...21

கலைவாணி தன் இளைய மகளின் பின்னே சுற்றிக் கொண்டிருந்தார்.அவருக்கு மனதில் ஒருவித பயம் இதுவரை வர்ஷி தனியே எங்கேயும் சென்றதில்லை.திவ்யா முழுக்க ராம் மோகன் வளர்ப்பு அதனால் அவள் அதிகம் தாயை தேடியது இல்லை.ஆனால் வர்ஷிக்கு அனைத்தும் கலைவாணி தான் செய்வார்.சிறுகுழந்தை போல அனைத்திற்கும் தாயிடம் தான் வருவாள்,சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பயப்படும் வர்ஷியை நினைத்து பலநாள் தூங்காமல் இருந்திருக்கிறார் கலைவாணி.ஆனால் இன்று பிடிவாதமாக டூர் செல்வேன் என்று நிற்கும் மகளைக் கண்டு சற்று கலங்கி போனார்.

"ம்மா...ப்ளீஸ் காத வலிக்குது விடுங்க..."என்றாள் வர்ஷி இருகாதுகளையும் தன் கைகளால் பொத்திக்கொண்டு.

"என்ன டி காது வலிக்குது...நல்லது சொன்னா உனக்கு கேட்க கஷ்டமா இருக்கா..."

"ம்மா...ஒரு தடவ சொன்னா கேட்கலாம் இதோட நூறாவது தடவ சொல்லிட்டீங்க...பின்ன வலிக்காதா...அக்கா எது கேட்டாளும் தலைய ஆட்டுரிங்க நான கேட்டா மட்டும் ஒரே அறிவுரை சொல்லியே கொல்ரீங்க...வெரி பெட் மம்மி..."

"அவள மாதிரி நீ இருந்தா நான் ஏன் பயப்பட போறேன்.நீ எதுக்கு எடுத்தாலும் பயபடுர பின்ன நான என்ன தான் செய்யட்டும்...."என்றார் கரகரத்த குரலில்.

"ம்மா...ப்ளீஸ் மா...இது என்னோட கடைசி வருஷம்...என்னோட பிரண்ட்ஸ் எல்லாரும் போறாங்க நான் மட்டும் வரலனு சொன்னா வருத்தபடுவாங்க அதனால தான்...இதுக்கு அப்புறம் எங்கயும் போக மாட்டேன் உங்க கூடதான்...இந்த ஒரு வாட்டி மட்டும் ஒத்துக்கோ ம்மா...ப்ளீஸ்..."என்று ஒருவாரு கலைவாணியை பேசியே கரைத்திருந்தாள் வர்ஷி.

கலைவாணியும் மகள் இவ்வளவு தூரம் கெஞ்சவும் அறை மனதாக சரி என்று கூறினார்.

"ப்பா...தேங்க்யூ மம்மி..."என்று இரு கன்னங்களிலும் முத்தமிட்டவள் உற்சாகமாக உறங்க சென்றாள்.மகளின் சிரித்த முகத்தை பார்த்தவாரே கலைவாணியும் உறங்க சென்றார்.இனி மகளின் இந்த சிரித்த முகத்தை அவர் பார்க்கபோவது இல்லை என்று அவர் அறிந்திருந்தாள் எப்படியவது அவளை போகவிடாமல் தடுத்திருப்பார்

கிருஷ்ணனுக்கு வேலை இழுத்துக் கொண்டே இருந்தது.இன்று இரவுக்குள் மீதியுள்ள வேலைகளை முடிக்க வேண்டும் அதனால் நம்பக தன்மையுள்ள சிலரை வர சொல்லியிருந்தான்.அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் விபரம் சொன்னவன் இன்று இரவு முடிந்தவரை முடிக்க முடியுமா என்று அவர்களிடம் கேட்டவன் அவர்கள் முடியும் என்றவுடன் அனுப்பியவன் இந்த விஷயம் யாரிடமும் தெரிய வேண்டாம் என்று சொல்லியிருந்தான்.அவர்கள் அனைவரும் ராம் மோகனின் விசுவாசிகள் அவர்கள் நிச்சயம் உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் அவர்களிடம் பணியை ஒப்படைத்தது.

தனது அலுவலக அறையில் இருந்து வந்த திவ்யா எப்பொழுதும் போல அனைத்து செக்ஷன்களையும் பார்த்துவிட்டு சென்றாள்.கிருஷ்ணன் கூறியிருந்தான் நடந்த விஷயம் வெளியில் தெரியவேண்டாம் என்று அவன் கூறுவது சரி என்று ஊகித்தத் திவ்யாவும் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.வீட்டிற்கு செல்கிறேன் என்று கிருஷ்ணனுக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு காரில் அமரும் நேரம் வந்தார் ராமசாமி.அந்த கார்மெண்ட்ஸின் கார் ஓட்டி தனது தாத்தாக்கு அவர் தான் கார் ஓட்டுவார் ராம் மோகன் மீது மிகுந்த பற்றுள்ளவர்.ராம் மோகன் இறந்த பின்பு கார்மெண்ட்ஸ் சில முக்கிய வேலைகளுக்கு இவரை தான் கூப்பிடுவாள் திவ்யா.அவர் வரவும் காரில் இருந்து இறங்கிய திவ்யா,

"என்ன ஆச்சு ராமு தாத்தா...ஏன் இப்படி ஓடி வரீங்க.."

"தம்பி தான் அனுப்புச்சு பாப்பா...உங்கள வீட்ல விட்டு வர சொன்னுச்சு..."என்றார்.ஏன் கேட்க வாய் வரை வார்த்தை வந்த போதும் கிருஷ்ணன் ஏதோ காரணத்திற்காக கூறியிருக்கிறான் என்று ஊகித்தவள் சரி என்று கூறி பின் சீட்டில் ஏறினாள்.அவளுக்கும் இன்று கார் ஓட்ட அவ்வளவு விருப்பமில்லை அதனால் பின் சீட்டில் அமர்ந்து கண்களை மூடினாள்.

கண்கள் மூடிய சிறிது நேரத்தில் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது சாதாரணமாக பார்த்தவள் கிருஷ்ணனிடம் இருந்து வந்துள்ளது என்று காண்பிக்கவும் வேகமாக திறந்தவள் முகம் மலர்ந்தது.அதில்,

"ஒகே...வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு..எத பத்தியும் யோசிக்காத..."என்று ஆங்கிலத்தில் எழுதி முடிவில் ஹார்டின் போட்டு முடித்திருந்தான். அவனிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியில் மனது நிம்மதி அடைந்தாலும் எப்படி இவ்வளவு பெரிய தவறு நடந்தது என்ற சிந்தனையில் தான் வீடு போய் சேர்ந்தாள்.

கிருஷ்ணன் அலுவலக நேரம் முடிந்து அனைவரும் சென்றவுடன் தன் நம்பகமான ஆட்களை வைத்து பணியை தொடங்கினான்.அவனுக்கு தெரியும் இன்று இரவு முழுவதும் உழைத்தால் தான் இதை முடிக்க முடியும் என்று.அதன்படி வேலை செய்பவர்கள் சோர்வடையாமல் இருக்க அனைவருக்கும் டீ,காபி மற்றும் சில நொறுக்கு தீனிகளை ஆடர் செய்து கொடுத்தான்.அவர்களும் உற்சாகமாக வேலையை தொடங்கினார்கள்.

வீட்டிற்கு வந்த திவ்யாவுக்கு உடலும் மனமும் சோர்வடைந்து இருந்தது.அதனால் சோபாவில் விழுந்தவள் முகம் எங்கும் சிந்தனைக் கோடுகள்.கலைவாணி மகளின் ஓய்ந்த தோற்றம் கண்டு அவளிடம் வந்தவர்,

"திவிமா என்ன டா நீ மட்டும் வந்திருக்க மாப்பிள்ளை எங்க..."

"அவருக்கு கொஞ்சம் வேலை இருக்குமா...அதனால வரல..."

"சரி நீ ஏன் டா டல்லா இருக்க..."

"ஒண்ணுமில்ல ம்மா...கார்மெண்ட்ஸ் ல கொஞ்சம் பிரச்சனை..."

"என்ன மா...என்ன பிரச்சனை..."என்று கலைவாணி கேட்டுக் கொண்டு இருக்கும் நேரம் தனது ரூமில் இருந்து வருவது போல் வந்து டைனிங் டேபிலில் உட்கார்ந்து இவர்களின் உரையாடலை கவனிக்க தொடங்கினார் சகுந்தலா.

திவ்யா கம்பெனியில் நடந்தவற்றை கூறிக்கொண்டிருந்தாள் பின் கிருஷ்ணன் பேசியவற்றையும் கூறியவள்.

"எப்படி தவறு நடந்துச்சுனே புரியல ம்மா..."என்று சோர்வாக கூறினாள்.

"அதான் மாப்பிள்ள பாத்துக்குறேனு சொல்லி இருக்காருல...எல்லாம் நல்லபடியா முடியும் நீ கவவலைபடமா இரு..."என்று தைரியம் கூறினார்.

"சரி ம்மா..."என்று சோர்வாக கூறியவள்.வர்ஷியை பற்றி விசாரித்தாள்.

"வர்ஷி போன் செஞ்சாலா..."

"பண்ணா...மைசூர் போய்டாளாம்...நல்ல இருக்கேனு சொன்னா..."என்றார்.

"ம்ம் எப்ப வருவா.."

"இன்னும் இரண்டு நாள் ஆகும்..."

"சரி மா நான் ரூம்முக்கு போறேன்..."என்று கூறிவிட்டு சோர்வாக செல்லும் மகளை கண்டவர் மனது கனத்தது.பூஜை அறைக்கு சென்றவர் விளக்கேற்றி வேண்டிக்கொண்டார்.

அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு விடியற் காலை போல வந்தான் கிருஷ்ணன்.அறையில் கணினி முன் அமர்ந்து இருக்கும் மனைவியைக் கண்டவன் வேகமாக சென்று,

"ஏய் உன்ன தூங்க தான சொன்னேன்...நீ என்ன பண்ணிகிட்டு இருக்க..."

"இல்ல கிருஷ்ணா எப்படி இவ்வளவு பெரிய தப்பு நடந்துச்சு அதான் சிசிடிவி வூட்டேஜ் எல்லாம் போட்டு பார்த்தேன்..."

"எதாவது கிடைச்சுதா...."என்றான்.இல்லை என்னும் விதமாக தலையாட்டினாள்.பின் அவளை ஆதரவாக அணைத்தவன்,

"நானும் சிலர கவனிக்க சொல்லிருக்கேன்...நீ இத பத்தி யோசிக்காம அடுத்து வர போற டெண்டர் பத்தி யோசி...நமக்கு போட்டி இதுல ஜாஸ்தி..."

"ம்ம் ஆமா கிருஷ்ணா..."கூறியவள் எதோ யோசனையில் இருக்க இவள இப்படியே விட்டா யோசிட்டே இருப்பா என்று நினைத்தவன் அவளது யோசனையைக் கலைத்தான்,

"ஓகே மேடம் கொஞ்ச நேரம் தூங்கலாமா..."என்று கூறியவன் அவளது பதிலை எதிர்பாராமல் அள்ளி கட்டிலில் கிடத்தி அவளை அணைத்துக்கொண்டு உறங்கினான்.கணவனின் அணைப்பில் திவ்யாவும் மனசஞ்சலங்களை ஒதுக்கி உறங்கினாள்.

ஆனால் இவர்களின் நிம்மதியை எவ்வாறு கெடுப்பது என்று யோசனையில் இருந்தாள் அஞ்சலி.என் காதல நிராகரிச்சுட்டு நீ மட்டும் நிம்மதியா இருப்பியா இரு அந்த திவ்யாவ வச்சே உன்ன எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்துறேன் என்று கிருஷ்ணனின் படத்தை பார்த்து வன்மாக கூறினாள்.
 

MEGALAVEERA

Well-Known Member
Nice epi
yaruma intha anjali yerkanave sakunthala irukka ithula nee vera yentha villis oh no
pavam krishna , divya and varshu kutty
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top