என் மன்னவன் நீ தானே டா...18

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



என் மன்னவன் நீ தானே டா...18

வரதராஜனின் அலுவலகத்தில் இருந்தனர் திவ்யாவும்,கிருஷ்ணாவும்.அவர் தந்த கோப்புகளை எல்லாம் படித்துக்கொண்டு இருந்தாள் திவ்யா.வரதராஜனோ திவ்யா அறியா வண்ணம் கிருஷ்ணனிடம் அவன் தயார் செய்ய சொல்லிருந்த பத்திரங்களை காட்ட வேண்டுமா என்று வினவிக்கொண்டிருந்தார்.அவனோ சற்று பொறுமையாக இருக்கும்படி கண்களால் கூறினான்.அவருக்கு கிருஷ்ணனின் வாதம் புரிந்தாலும் திவ்யா இதை எப்படி எடுத்துகொள்வாள் என்று தெரியவில்லை அதனால் சற்று கலக்கமாக இருந்தது.அவர்களது மௌன பாஷையை திவ்யாவின் குரல் கலைத்தது.

"அங்கிள் எல்லாம் சரியா இருக்கு..."என்று கூறியவள் கிருஷ்ணனிடம் திரும்பி,

"நீங்களும் ஒரு தடவ படிச்சுடுங்க..."என்று கூறி அவனிடம் நீட்டினாள்.அவள் கூறியபடி அனைத்தையும் படித்தவன் எல்லாம் சரியா இருக்கு என்று கூறிவிட்டு அவளிடம் கொடுத்தான்.ராம் மோகனின் உயில்படி கார்மெண்ட்ஸின் பங்குகளை இருவருக்கும் சமமாக பிரித்து எழுதி இருந்தார்.அந்த பத்திரங்களில் இருவரும் கையொப்பம் இட்டு முடிக்கவும்,வரதராஜன் கிருஷ்ணன் கூறிய படி எழுதிய பத்திரதை திவ்யாவிடம் கொடுத்தார்.

"என்ன பத்திரம் அங்கிள் இது..."என்று கேட்டுக்கொண்டே வாங்கியவள் அதை படிக்கத்தொடங்கினாள்.அந்த பத்திரத்தில் தனது பங்கை அவன் திவ்யாவின் பெயரில் மாற்றி எழுதியிருந்தான்.அவள் படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அவளது முகம் இறுக தொடங்கியது.அதை கவனித்த வரதராஜன் தனக்கு ஒரு வேலை இருப்பதாக கூறிவிட்டு இருவருக்கும் தனிமைக்கொடுத்து சென்றார்.அவர் போகும் வரை அமைதியாக இருந்த திவ்யா,

"கிருஷ்ணா...என்ன இதெல்லாம்...ஏன் இப்படி செஞ்சீங்க..."என்று கேள்விகளால் துளைக்க ஆரம்பித்தாள்.இவ கிட்ட பொறுமையா சொன்னா கண்டிப்பா ஒத்துக்கமாட்டா என்று உணர்ந்த கிருஷ்ணன் சற்று கடிமையான முகபாவத்துடன்,

"இங்க பாரு தாரணி இது உன்னோட சொத்து இதில எனக்கு எந்த உரிமையும் கிடையாது.உன் தாத்தா நீ கல்யாணம் செஞ்சுக்கனும் தான இது மாதிரி எழுதியிருந்தார் அது தான் நீ நினைச்ச மாதிரி கல்யாணம் முடிஞ்சு போச்சே.. இதுக்காக தான நீ கல்யாணமே பண்ண..” என்று வார்த்தைகளால் அவளை காயப்படுத்தினான்.அவனுக்கு தெரியவில்லை தான் பேசும் வார்த்தைகள் திவ்யாவை எந்தளவுக்கு காயப்படுத்தும் என்று.அதற்கு மேல் முடியாமல்,

"போதும் கிருஷ்ணா...இப்ப இதுல சைன் பண்ணனு அவ்வளவு தான.."என்று கூறிவிட்டு அந்த பத்திரங்களில் கையொப்பம் இட்டாள்.

கிருஷ்ணனுக்கு திவ்யா கையொப்பம் இட்டவுடன் தான் உயிரே வந்தது.இத்தனை நாள் மனதில் இருந்த உறுத்தல் நீங்கியது போன்ற உணர்வு. சில சமயங்களில் நாம் பேசும் சாதாரண வார்த்தைகள் கூட மற்றவர்களை காயப்படுத்தும்.அந்த வகையில் இருந்தது கிருஷ்ணனின் பேச்சு அவனுக்கு எப்படியாவது அவள் பத்திரங்களில் கையெழுத்து இட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததே தவிர தான் என்ன பேசுகிறோம் என்று அவன் உணரவில்லை.

அனைத்தம் முடிந்து அவர்கள் காரில் ஏறியவுடன்,

"தேங்க்ஸ் தாரணி..."என்றான்.அவளோ எந்தவித பிரதிலிப்பும் இல்லாமல் அமர்ந்து இருந்தாள்.அவள் தன் மேல் கோபமாக உள்ளாள் என்று உணர்ந்தவன்,

"நீ என் மேல கோபமா இருக்கனு தெரியும்,ப்ளீஸ் தாரணி என்னோட நிலையிலிருந்து யோசிச்சு பாரு..."என்றான் தன்னை விளக்கும் பொருட்டு.ஆனால் அவளிடம் எந்தவித பதிலும் வராமல் போகவே,

"தாரணி..."என்று அவளது கைகளை பற்றினான்.முதல் முறை அவனாக அவளை தொட்டு பேசுவது. அவளது சொத்துகளை அவளிடம் ஒப்படைத்தவுடன் அவனுக்கு மனது சற்று அமைதியடைந்து இருந்தது அவள் மேல் ஒருவித உரிமை உணர்வும் வந்திருந்தது.ஆனால் அதை உணரும் மனநிலையில் தான் அவள் இல்லை.

"டைம் ஆச்சு கிருஷ்ணா...கிளம்பலாம்..."என்றாள் ஒருவித சோர்வோடு.அவளுக்கு கார்மெண்ட்ஸை காப்பாற்ற தான் நீ என்ன கல்யாணம் பண்ண என்ற கிருஷ்ணனின் வார்தைகள் மனதை மிகவும் காயப்படுத்தியிருந்தது.முதலில் அவளும் கார்மெண்ட்ஸை காப்பாற்றும் பொருட்டு தான் கல்யாணம் என்ற ஒன்று நினைத்தாள் ஆனால் என்று கிருஷ்ணனிடம் கல்யாணம் பற்றி பேசினாளோ அன்றே அவள் மனதில் கிருஷ்ணுடனான தன் வாழ்க்கை பற்றிய கனவு காண தொடங்கியிருந்தாள் அதன் பொருட்டே அவனை சீண்டிக்கொண்டே இருப்பது.

"தாரணி...தாரணி..."என்று கிருஷ்ணன் இருமுறை அழைக்கவும் தன் நினைவுகளில் இருந்து திரும்பியவள்.

"ஆங்...என்ன கிருஷ்ணா..."என்றாள்.

"என்ன ஆச்சு தாரணி...ஆர் யூ ஓகே..."என்றான் கனிவாக.பேசறதெல்லாம் பேசிட்டு இப்ப எப்படி குழையுரான் என்று நினைத்தவள்.

"ஐ ம் ஓகே..."என்றாள்.

"பார்த்தா அப்படி தெரியலையே..."என்றான் ஒருவித நமுட்டு சிரிப்போடு.அவனது சிரிப்பைக் கண்டு எரிச்சலானவள்.

"என்ன தெரியலை.."என்றாள் காரமாக.

"மை தாரணி ஸ் பேக்...உனக்கு இந்த அமைதி சூட் ஆகல..."என்றான்.அவனது பதிலில் மேலும் கடுப்பானவள் அவனை அடிக்க ஆரம்பித்தாள்.அவளது அடிகளை பொறுமையாக ஏற்றவன்.

"இப்ப கோபம் போய்டுச்சா..."என்றான்.

"இல்ல இன்னும் அதிகமாகுது..."என்று கூறிக்கொண்டே அடித்தாள்.

"ஏய் போதும் போதும் கார்மெண்ட்ஸ் வர போகுது..."

"வந்தா என்ன பத்திரத்துல சைன் வாங்க என்னவேன பேசுவியா...."என்று கூறிக்கொண்டே அடித்தாள்.அவளது கண்கள் கலங்கி இருப்பதை உணர்ந்தவன். தான் கூறிய வார்த்தை அவளைக் காயபடுத்திருக்கிறது என்று நினைத்து வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு,

"சாரி தாரணி...நான் உன்ன காயபடுத்தனும் நினைக்கல..."

"போ டா...பேசாத..."என்று அவன் தோள்களில் சாய்ந்து அழுதாள்.சிறிது நேரம் அழவிட்டவன் பின்,

"ரொம்ப அழுதா உன்னோட மேக்கப் கலைஞ்சிடும் தாரணி..."என்றான் அவளை இயல்பாக்கும் பொருட்டு.

"போ டா.."என்று அதற்கும் அடித்தவள் பின் தான் இருக்கும் நிலை உணர்ந்து அவனது தோள்களில் இருந்து எழுந்தாள்.அவளது வெட்கத்தை ரசித்தவன்.

"ரொம்ப அழகா வெட்கபடுற.."என்று கூறி அவளது கண்களை துடைத்தான்.அப்பொழுது தான் அவனது தொடுகையை உணர்ந்தவள் அவனை ஆச்சிரியமாக பார்த்தாள்.அவளது பார்வை உணர்ந்த அவனும் கண்சிமிட்டி சிரித்தான் அதில் எப்பொழுதும் போல் மயங்கியவள் அவனிடம் இருந்து பார்வையை திருப்பினாள்.

இருவரும் திருமணம் முடிந்து முதல் முறை கார்மெண்ட்ஸ் வருகிறார்கள்.அதனால் அனைவரும் அவர்களை வரவேற்று வாழ்துக்கள் கூறினர்.சிலர் அவர்களை மனமார்ந்து வாழ்தினார்கள் என்றால் சிலர் இவனுக்கு வந்த வாழ்வை பாரேன் என்று கிருஷெணனை ஏளனமாக மனதில் கருவிக்கொண்டு வாழ்தினர்.அனைவரும் வாழ்த்தி முடிக்கவும் அவள் அலுவலக அறைக்கு சென்றாள்.கிருஷ்ணன் அவனது செக்ஷனுக்கு சென்றான்.ஆம் திருமணம் முடியவும் கிருஷ்ணன் நான் எப்போதும் போல தனது வேலையை தான் செய்வன் என்று கூறியிருந்தான்.அவனுக்கு அதில் விருப்பம் என்பதால் திவ்யாவும் மறுக்கவில்லை.

தனது அலுவலக அறைக்கு வந்தவுடன் தனது வேலையில் ஆழ்ந்துவிட்டாள்.தன் வேலையில் மூழ்கி இருந்தவளை அவளது கைபேசி களைத்தது.அதை ஆன் செய்து காதில் வைத்தாள் அவர்களின் தொழில் சங்க உறுப்பினர் தான் அழைத்திருந்தார்.

"ஹலோ அங்கிள் எப்படி இருக்கீங்க..."

"நான நல்ல இருக்கேன் மா...நீ எப்படி இருக்க..."

"நல்ல இருக்கேன் அங்கிள் சொல்லுங்க..."

"இன்னக்கி ஈவினிங் நம்ம சங்கத்துல உங்களுக்கு ஒரு சின்ன பார்ட்டி நீங்க இரண்டு பேரும் கண்டிப்பா வரனும்.."

"ஓகே அங்கிள் கண்டிப்பா வரோம்..."என்று கூறிவிட்டு வைத்துவிட்டாள்.அவளுக்கு இன்று காரில் கிருஷ்ணனின் சிரித்த முகம் நியபகம் வந்தது அவனுடன் சிறிது நேரம் செலவிட நினைத்தவளுக்கு இப்பொழுது பார்டிக்கான அழைப்பு வரவும் சந்தோஷமாக சம்மதித்துவிட்டாள்.ஆனால் அந்த பார்டி அவளது வாழ்க்கையில் பல திருப்பங்களை கொண்டுவரும் என்று தெரிந்து இருந்தால் சென்றிக்க மாட்டாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

சொத்துக்களை கிருஷ்ணன் திருப்பிக் கொடுத்துடுவான்னு தெரியும்
பார்ட்டியில் என்ன நடந்தது?
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

சொத்துக்களை கிருஷ்ணன் திருப்பிக் கொடுத்துடுவான்னு தெரியும்
பார்ட்டியில் என்ன நடந்தது?
நன்றி தோழி...பிரச்சனைகளின் ஆரம்பம் என்று கூறலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top