என் மன்னவன் நீ தானே டா....17

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



என் மன்னவன் நீ தானே டா...17

கிருஷ்ணன் திவ்யா திருமணம் முடிந்து இரண்டு வாரம் கடந்து இருந்தது.என்னதான் திவ்யாவுடன் சகஜமாக கிருஷ்ணன் பேசினாலும் அவனால் முழுமையாக அவளிடம் ஒன்றமுடியவில்லை ஒரு சிறு இடைவேளி இருவரிடமும் அதை அவளும் கடக்க முயலவில்லை அவனும் முயலவில்லை.ஆனால் அவ்வபோது அவனை சீண்டிக்கொண்டு தான் இருப்பாள் அவனோ சிறு புன்னகையோடு கடந்துவிடுவான்.

கிருஷ்ணன் திவ்யாவைவிட கலைவாணியிடமும்,வர்ஷியிடமும் நன்கு ஒன்றியிருந்தான்.மாமா மாமா என்று தன்னைக் கண்டால சிறு குழந்தை போல ஓடிவரும் வர்ஷியைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவனுக்கு தனக்கு ஒரு சிறு தங்கை இருந்தால் இவளை போல் தான் இருப்பாள் என்ற எண்ணம்.கலைவாணியை பார்க்கும் பொழுதெல்லாம் தனது தாய் தனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது போன்ற ஒரு உணர்வு.

கலைவாணிக்கும் கிருஷ்ணனை மிகவும் பிடித்திருந்தது அவனது கல்லம்கபடம் மற்ற பேச்சும் அதில் தெரியும் அக்கறையும் அவருக்கு தனது மகளின் வாழ்க்கை நல்ல முறையில் அமைந்ததில் ஏக மகிழ்ச்சி.அதனால் தன் மருமகனை பார்த்து பார்த்து கவனிப்பார்.கிருஷ்ணன்,வர்ஷி,கலைவாணி முவரும் கூடிவிட்டால் கலாட்டாக்கு பஞ்சம் இருக்காது இதில் திவ்யாவுக்கு தான் சில சமயம் மண்டை காயும்.

இன்றும் அதேபோல் டைனிங் ஹாலில் கிருஷ்ணன் ஏதோ கூறிக்கொண்டிருக்க அதுக்கு கலைவாணியும்,வர்ஷியும் சிரித்துக்கொண்டிருந்தனர்.படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்த திவ்யா இதைக் கண்டு"என் கிட்ட பேச மட்டும் இவனுக்கு நேரம் இருக்காது"என்று மனது சுனங்கினாலும் தன் தாய் மற்றும் தங்கையின் முகத்தில் இருந்த மலர்ச்சியைக் கண்டு அவளது முகமும் மலர்ந்தது.

"என்ன எல்லாரும் ஒரே ஹாப்பியா இருக்கீங்க..என்ன விஷயம்..."

கிருஷ்ணனோ திவ்யா வந்தவுடன் தனது சாப்பாட்டில் இருந்து தலையை நிமிர்த்தவில்லை.

"அதுவா அக்கா...உன்ன பத்திதான் மாமா சொல்லிட்டு இருந்தாரு..."என்றாள் வர்ஷி.

கிருஷ்ணனோ அய்யோ இந்த சின்னகுட்டி போட்டு கொடுத்துட்டாளே என்று நினைத்தான்.ஆம் என்று வர்ஷியை பார்த்தானோ அன்றே இந்த பெயரை வைத்துவிட்டான் அவனுக்கு தனக்கு ஒரு தங்கை இருந்தால் அவளுக்கு இந்த பெயர் தான் வைக்கவேண்டும் என்ற எண்ணம்.

"என்ன பத்தியா என்ன சொன்னாரு உங்க மாமா..."என்றாள் ஆர்வமாக.அவளுக்கு தெரியும் ஏதோ ஏடகூடமாக இவளிடம் கூறியிருக்கிறான் என்று.

"அது வாக்கா..."என்று அவள் ஆரம்பிக்கும் நேரம்,

"வர்ஷிமா அத்தை முறுகலா உனக்கு தோசை ஊத்தியிருக்காங்க இந்தா சூடா இருக்கு சாப்பிடு..."என்று கூறிக்கொண்டே அவளிடம் சொல்லாதே என்று செய்கை செய்தான்.அந்தோ பரிதாபம் அவளோ தன் தமக்கையுடன் பேசும் ஆர்வத்தில் இவனை கவனிக்கவில்லை.ஆனால் திவ்யா கவனித்துவிட்டாள் அதனால் அவளுக்கு மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பிறந்தது அதனால்,

"சொல்லு டி என்ன சொன்னார்..."என்று கூறுமாறு வர்ஷியை ஊக்கினாள் திவ்யா.

"அதுவாக்கா...நீ மாமா வச்சிருந்த அலரத்தை கேட்டு பயந்துட்டியாமே... அந்த கதை தான் மாமா சொல்லிகிட்டு இருந்தாரு..."என்று போட்டு உடைத்தாள் வர்ஷி.இதைக் கேட்ட திவ்யாவோ கிருஷ்ணனை முறைத்தாள் கிருஷ்ணனோதன்னைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்களா என்று வேண்டிக்கொண்டிருந்தான்.அவனது வேண்டுதல் கடவுளை எட்டியதோ இல்லையோ கலைவாணியை எட்டிவிட்டது போலும்.

"சாப்பிடும் போது பேசாதனு உனக்கு எத்தனவாட்டி சொல்லிருக்கேன்..."என்று வர்ஷியின் தலையில் செல்லமாக தட்டியவர் கிருஷ்ணனிடம் திரும்பி

"தம்பி நீங்க சாப்பிடுங்க ஆறிட போகுது..."என்றார்.

கிருஷ்ணனோ தப்பித்தால் போதும் என உண்ண ஆரம்பித்தான்.திவ்யாவோ இவனை என்ன செய்தால் தகும் என்ற எண்ணத்தோடு அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.அதைக் கண்ட கலைவாணியோ,

"என்ன டி இப்படியே உக்கார்ந்து இருக்க...சீக்கிரம் சாப்பிடு..."என்று கூறி சென்றார்.

"ம்ம்.."என்று கூறி சாப்பிட ஆரம்பித்தாள்.

அனைவரும் உண்டு முடிக்கவும் வர்ஷி கல்லூரி கிளம்பிவிட்டாள்.கிருஷ்ணனோ திவ்யாவிடம் எவ்வாறு தப்பிப்பது என்று யோசனையில் இருந்தான்.அவனது எண்ணம் உணர்ந்த திவ்யா,

"ரொம்ப யோசிக்காதீங்க வாங்க சீக்கரம் இன்னக்கி வக்கீல் அங்கிளை பார்க்கபோகனும்...நான் கார்ல வெயிட் பண்றேன்..."என்று சொல்லி சென்றுவிட்டாள். இதற்கே இவ்வளவு கோபபடுகிறாளே வக்கீல் கிட்ட நாம பேசினது தெரிஞ்சா என்னவாகபோகுதோ என்று எண்ணியவாரே சாப்பிட ஆரம்பித்தான்.

திவ்யாவோ கிருஷ்ணனை முறைப்பது போல பவலா காட்டிவிட்டு அன்றைய நாளை நினைத்துப் பார்த்தவள் முகமும் தன்னால் மலர்ந்தது.

முதல்நாள் முழுவதும் அவனிடம் சண்டையிட்டே ஓய்ந்து போய் உறங்கி இருந்தாள் திவ்யா.காலை ஏழு மணி போல கண்விழித்தவள் பக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் கணவனை பார்த்தாள்.அவனோ தலையனையை கட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தான்.எல்லாரும் கல்யாணம் ஆன பொண்டாட்டியை கட்டிக்கிட்டு தூங்குவாங்க ஆனா இவன் என்று நினைத்தவள் எழுந்து குளிக்க சென்றாள்.

திவ்யா குளித்து முடித்து வெளிவரும்போதும் அவன் எழவில்லை.என் இவன் இன்னும் தூங்குறான் என்று நினைத்தவள் அவனை எழுப்ப அவன் பக்கம் சென்று அவன் தோள் தொடும் நேரம்,

"எரும..."

"எரும... என்ன பண்ற..."என்று குரல் கேட்கவும் திடுக்கிட்டு அவனை பார்த்தாள் அவனோ நல்ல உறக்கத்தில் இருந்தான்.மீண்டும் அதே குரல் வரவும் சுற்றிமுற்றும் பார்த்தவள் கண்களில் அவனது கைபேசி ஒளிரவும் அதை எடுத்தாள் அதில் அவனது அலாரத்தைக் கண்டவள் பல்லைக் கடித்துவிட்டு.

"கிருஷ்ணா...கிருஷ்ணா..."என்று அழைத்தாள்.அவனோ அசைந்தபாடில்லை.இவன இப்படி எழுபுனா சரிவராது என்று நினைத்தவள் அவனது கைபேசியில் இருக்கும் அலாரத்தை ஆன் செய்து அவனது காதுகளில் வைத்தாள்.அவனோ அவளது கைகளை தட்டிவிட்டு,

"பத்தூ...இன்னும் கொஞ்ச நேரம்..."என்று கூறிவிட்டு தூக்கத்தை தொடர்ந்தான்.அவன் தூங்குவதைக் கண்டு கடுப்பானவள் அவனை உலுக்க ஆரம்பித்தாள்.

"கிருஷ்ணா....கிருஷ்ணா..."

அவளது உலுக்களில் லேசாக கண்விழித்தவன் தன்முன் தலை விரி கோலமாக நின்ற திவ்யாவைக் கண்டு பயந்து,

"அய்யோ...பேய்...யாரவது காப்பாத்துங்க.."என்று அலறினான்.அவனது அலறலில் மேலும் கடுப்பானவள் பக்கத்தில் இருந்த தலையனை எடுத்து எறிந்தாள்.அதில் தன்னிலை பெற்றவன் என்ன புது இடமா இருக்கு என்று நினைத்து சுற்றி பார்த்தான்.பிறகு தான் தனக்கு கல்யாணம் ஆனது நியபகம் வர திவ்யாவைக் கண்டான் அவளோ இவனை வெட்டவா குத்தவா என்ற நிலையில் இருந்தாள்.இப்ப என்ன செஞ்சேனு தெரியலையே என்று நினைத்தவன்,

"என்ன ஆச்சு தாரணி..."என்றான்.

"ம்ம்..ஒண்ணுமில்ல...குளிக்க போங்க..நம்ம இரண்டு பேரும் தான் சேர்ந்து கீழ போகனும்..." அவனோ சரி என்று தலையாட்டிவிட்டு சென்றான்.

"சாரி கொஞ்சம் லெட் ஆகிடுச்சு..."என்று கூறிவிட்டு காரில் ஏறவும் தனது நினைவில் இருந்து வெளி வந்தாள் திவ்யா.

"இட்ஸ் ஓகே..."என்று புன்கையுடன் கூறி காரை கிளப்பினாள்.அவளது புன்னகை இன்னும் சிறிது நேரத்தில் மறையும் என்றும் அதேபோல் கிருஷ்ணனின் வார்த்தைகள் அவளது மனதை உடைக்கும் என்றும் அவள் அறியாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top