என்னில் நிறைந்தவளே - 12

Advertisement

laksh14

Well-Known Member
என்னில் – 12

நாட்கள் அதன் போக்கில் செல்ல தருண் வேளையில் சேர்ந்து ஒரு மாதம் முடிவடைந்தது இன்று வரையிலும் தருணின் பார்வை தேவியை தொடர்ந்து கொண்டிருக்கின்றது ஆனால் தேவியிடம் ஒரு பிரதிபளிப்பும் இல்லை அவள் அவனை தனுடைய PA என்ற அளவில்தான் அவனிடம் பேசுவது வேலை சொல்வது போன்றவை இருந்தது இருந்தும் தருணின் பார்வை அவளின் மீதே இருந்தது.

தருணுக்கு தேவி தன்னை கண்டுகொள்ளதது கூட ஒருவகையில் அவனை ஈர்த்தது என்றே ௯றலாம்.அவனை பொறுத்தவரை அவனின் அத்தை பெண்கள் அவனின் மீது விழுந்து பழகுவர் அதனாலே தேவியின் இந்த கண்டுகொள்ளாத நிலை அவனை கவர்ந்த்தது.

அனிதாவும் தருணின் பார்வை தேவியை ரசனையுடன் நோக்குவதை பலமுறை பார்த்துவிட்டாள் தருணிடம் அதை பற்றி பேச வேண்டும் என்று எண்ணினாள்.

அன்று அலுவலகம் சென்றதும் தேவி,தருண் இருவரும் வேலை நடக்கும் சைட்டை பார்க்க சென்றனர் அங்கே வேலைகள் நடப்பதை பார்த்து கொண்டிருக்கும்போது மேலே கற்களை அடுக்கி கொண்டிருந்த பெண்ணின் கால் தடுக்கி கற்கள் கீழே விழ அதன் அடியில் தேவி நின்று இன்ஜினியரிடம் பேசிக்கொண்டிருந்தாள்

அவள் தலையில் கற்கள் விழ இருப்பதை கவனித்த தருண் வானதி என கூப்பிட்டு கொண்ட அவளை நெருங்கி பிடித்து இழுத்தான் அவன் இழுத்ததில் அவன் மீதே மோதி நின்றாள்.

அவளை இழுத்து விட்டானே தவிர அவள் அவனின் மீது மோதியதில் அவனுள் பல மாற்றங்கள் நிகழ்ந்தது அவனின் முளை அவளை விட்டு விலகு என்று அறிவுறித்தியது ஆனால் அவனின் கைகளோ அவளை அணைந்திருந்தது.

என்ன நடந்தது என்பதை உணர்ந்த தேவி அவனின் பிடியில் இருந்து நழுவி தன்னை நிதான படுத்தி கொண்டு தருணை பார்த்து நன்றி கூறிவிட்டு சென்றாள்

தேவி நன்றி ௯றவும் தருணுக்கு அவளின் மீது கோவம் வந்தது அதை அவளிடம் கட்ட வழியின்றி அருகில் இருந்த சுவற்றின் மீது கைகளை குத்தினான்.

தேவி இரவு வீட்டின் தோட்டத்தில் அமர்ந்து இன்று நடந்ததை நினைத்தாள் அவள் தனது மனதில் அவன் என்னை வானதி என்று கூப்பிட்டனே அதோடு மிகவும் படபடப்புடன் காணப்பட்டான். ஏன் அவ்வாறு இருந்தான் என சிந்தித்து கொண்டிருந்தாள்

தேவியை பொறுத்த வரையில் இந்த ஒரு மாதத்தில் தருணின் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டிருந்தது. அனைவரிடமும் மிகவும் தன்மையாக பழகுவான் வேலைகளை திறம்பட செய்வான். ஆனால் அவனின் பார்வை தன்மீது படிவதை இரண்டொரு தருணங்களில் அவளும் உணர்ந்திருந்தாள் அதை அப்போது பெரிதாக அவள் எடுத்து கொள்ளவில்லை. இன்று அதை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தாள்.

இதை அனைத்தும் நினைத்து கொண்டே வெகுநேரம் தோட்டத்தில் அமர்ந்திருந்தாள்.

இங்கே தருணோ தன்னை குறித்தே ஆராய்ந்து கொண்டிருந்தான் இன்று சைட்டில் கற்கள் அவள் மீது விழுவதை கண்டவன் அவளை காப்பாற்றினான் இருந்தும் அந்த நிமிடம் அவனுள் எழும் படபடப்பு அவளுக்கு ஏதேனும் ஆகியிருந்தால் அந்த நினைப்பே அவனை கொள்ளாமல் கொன்றது

இந்த ஒரு மாதமும் அவன் மனம் அவளை ரசிக்கும் போதெல்லாம் தான் திருமணம் செய்ய நினைப்பதால் அவளை ரசிக்கிறேன் என்று எண்ணிருந்தான். ஆனால் இன்று நடந்த நிகழ்வில் அவனுக்கு புரிந்தது தான் எந்த அளவுக்கு அவளை விருப்புகிறோம் என்று.

அவளை விருப்புவதால்தான் அவளை உரிமையுடன் ரசித்து கொண்டிருந்தோம் என்பதையும் உணர்ந்தான். இதை உணர்ந்த உடன் அவனின் மனம் சிறகில்லாமல் பறப்பது போல் எண்ணினான். இப்பொழுதே அவளை பார்த்து தான் உணர்ந்ததை சொல்லவேண்டும் என அவன் மனம் துடித்தது. ஒரு புதுவித உணர்வு அவனை ஆட்கொண்டது. அந்த உணர்வு தந்த சுகத்திலே உறங்கினான்

மறுநாள் காலை எழும்போதே தருண் மிகவும் உற்சாகமாக காணப்பட்டான் ஏனெனில் அவனுடைய காதலை உணர்ந்து தேவியை பார்க்கும் முதல்நாள்.

ரமேஷ் கூட என்ன தருண் இன்னைக்கு உன்முகத்தில் ஒளிவட்டம் தெரிகிறது

தருணும் ரமேஷும் இந்த ஒரு மாதத்தில் நெருங்கிய நண்பர்கள் ஆகியிருந்தனர். ரமேஷ் கேட்டதிற்கு சிரிப்பை பதிலாக கொடுத்தான் இருந்தும் ரமேஷ் விடாமல் என்ன பாஸ் தேவி மேம் ஓகே சொல்லிட்டாங்களா என்றான்.


அவன் கூறியதை கேட்ட தருண் அதிர்ச்சி அடைந்தான் ஏன் என்றால் அவனே இப்பொழுதுதான் தனது காதலை உணர்ந்துள்ளான் அதற்குள் ரமேஷ் கேட்கவும் இந்த அதிர்ச்சி பின் தன்னை சுதாரித்து கொண்டு உனக்கு எப்படி தெரியும் என்றான்

ரமேஷ் “நிஜமாவே மேடம் ஓகே சொல்லிட்டாங்களா என்றான். சூப்பர் போங்க, டீரிட் இல்லையா”

தருண் “அது இல்லை நான் வானதியை காதலிப்பது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டான்”

ரமேஷ் “உன் கண்தான் அவங்க எங்க இருந்தாலும் அவங்களிடமே உள்ளதே. அவங்களை பார்க்கும் கூட யார் இருந்தாலும் உங்க கண்ணுக்கு தெரியறது இல்லை. எனக்கு என்ன நம்ம கம்பனிக்கே தெரியும் நீங்க தேவி மேமை சைட் அடிப்பது”

தருண் “அவ்வளவு வெளிப்படையாகவா தெரியுது என்று தனக்குள்ளே கூறி கொண்டான்”
ரமேஷ் “விடாமல் சொல்லு தருண் என்று கேட்டான்”

தருண் “நேற்று தன் காதலை உணர்ந்தது பற்றி கூறினான்”

அதற்கு ரமேஷ் சுத்தம் நீங்களே இப்பதான் உங்க காதலை உணர்ந்தீங்களா. இதில் நீ எப்ப மேம் கிட்ட காதலை சொல்லி அவங்க எஸ் சொல்லி நான் எப்ப உன்கிட்ட டீரிட் வாங்கறது

தருண் “அதலாம் பார்த்து கொள்ளலாம் சீக்கிரம் ஆபிஸ் போலாம் வா”

அலுவலகத்தில் என்றும் விட இன்று தருணின் பார்வைக்கு தேவி மிகவும் அழகாக தெரிந்தால் தருணின் பார்வையும் அவள் மீதே இருந்தது. அவனால் அவனின் பார்வையை தேவியை விட்டு எடுக்க முடியவில்லை.

இன்று தேவியும் அதை நன்கு உணர்ந்தாள் ஆனால் அதை வெளிகாட்டி கொள்ளவில்லை எதற்கு இப்படி பார்க்கிறான் என்ற யோசனை மட்டுமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது

அவன் பார்வை அதிக நேரமாக தன்னை தொடர்வது அவளிடம் தானாகவே ஒருவித தடுமாற்றத்தை உண்டாக்கியது அதை தாங்க முடியாமல் mr.விஜய் என்று சத்தமாக அழைத்தாள் அவன் சிறிதும் அலட்டி கொள்ளாமல் எஸ் மேம் என்றான்

அவனிடம் சில விவரங்களை சேகரிக்க சொல்லிவிட்டு தனது வேலையை தொடர்ந்தாள். மனதில் இப்படி வச்ச கண் வாங்காம்மா பார்த்து விட்டு கூப்பிட்ட உடன் எஸ் மேம் என்று ரொம்ப ௯லகா கேட்கிறான் என அவனை திட்டிகொண்டிருந்தாள்

அன்று சண்டே என்பதால் தருணும், ரமேஷ்வும் வெளியில் சென்றனர் மதிய உணவிற்காக ஒரு ரெஸ்டாரன்ட் சென்ற போது அங்கு அனிதா தனது குடுப்பத்துடன் வந்திருந்தாள்

அனிதா இவர்களை கண்டதும் தனது குடுபத்தாரிடம் அறிமுகபடுத்தினாள். அனிதாவுக்கு இதுதான் நல்ல தருணம் தேவியை பற்றி பேச என தோன்றியது எனவே தருணிடம் சென்று தருண் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள்

தருணும் பேசலாம் அனிதா என்ன பேசணும்

அனிதா “இங்க வேண்டாம் பக்கத்தில் பார்க் இருக்கு அங்க பேசலாம் நீங்க சாப்பிட்டு அரைமணி நேரத்தில் அங்கே வாங்க என்றாள்”
தருண் வந்தவுடன் அனிதா நேரடியாக தருணிடம் நீங்க தேவியை விரும்புறிங்களா என்றாள்

தருணும் சிறிதும் தயக்கம் இன்றி விருப்புவதாக ஒப்பு கொண்டான்
அனிதா “உங்கள பத்தி எதுவும் தெரியாது இந்த ஒரு மாதத்தில் உங்கள பார்க்கிறது பழகறது எல்லாம் நல்லவிதமாக இருக்கு இருந்தாலும் நீங்க உங்க குடும்பம் பத்தி சொல்லுங்க. நீங்க நினைக்கலாம் இதுயெல்லாம் கேட்க இவ யாரு என்று”

தருண் “நான் அப்படி நினைக்கவில்லை எனக்கு உங்களையும் வானதியையும் பார்க்கும்போது பொறாமையா இருக்கு இப்படி ஒரு நட்பு எனக்கு இல்லையேனு”

நீங்க என்னை பற்றி தெரிந்துகொள்ளணும் அவ்வளவுதான என்று தன்னை பற்றி முழுவிவரத்தையும் கூறினான்.
அனிதா அவன் கூறியதை கேட்டு வாயடைத்து நின்றாள்.


நிறைவாள்................

Hai friends next epi போட்டுடேன் படித்து எப்படி இருக்கு என்று சொல்லுங்க paa.
lovelyyy
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top