உளுந்தம் பருப்பு சாதம்

Advertisement

Bhuvana

Well-Known Member
உளுந்தம் பருப்பு சாதம் :

இது நெல்லை மாவட்டத்தின் பிரபலமான உணவு. பெண்களுக்கு உடல் பலம் தரும் உளுந்தம் பருப்பு. பூப்பெய்திய பெண்களுக்கு கொடுக்கப்படும் உணவுகளில் இது முதன்மை வாய்ந்தது.
இதில், வைட்டமின், போலிக் ஆசிட், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மற்றும் புரத சத்தும் உள்ள நிறைவான முழு உணவு.

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்
தொலிஉளுந்தம் பருப்பு உடைத்தது - 1/2 கப்
பூண்டு பல் - 10
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

அரிசி மற்றும் பருப்பை ஒரு முறை நன்றாக கழுவி விட்டு குக்கரில் போட்டு, தேங்காய் துருவல், பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு நீங்கள் வழக்கமாக சாதம் சமைப்பது போல் சமைக்கவும்.

பிரஷர் இறங்கியவுடன் சூடான உளுந்தம் சாதத்துடன் ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு எள்ளு துவையலுடன் சாப்பிட்டால் அருமையான சுவையுடன் இருக்கும்.

16508350_1005826742856604_1257438143070032024_n.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top