உருளைக்கிழங்கு, பட்டாணி குருமா / Potato, Peas Kurma

Advertisement

Bhuvana

Well-Known Member
உருளைக்கிழங்கு, பட்டாணி குருமா / Potato, Peas Kurma :

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ {வேக வைத்து நறுக்கியது}
பச்சை பட்டாணி - 1 கப் {வேக வைத்தது}
வெங்காயம் - 1 {பொடியாக நறுக்கியது}
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தக்காளி ஜூஸ் - 1 கப்
முந்திரி பருப்பு, கசாகசா விழுது - 6 முந்திரி, 1 டீஸ்பூன் கசாகசா அரைத்து கொள்ளவும்.
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
கொத்தமல்லிஇலை - மேலே அலங்கரிக்க
உப்பு,எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம் போடவும், அது வெடிக்கும் பொது வெங்காயம் சேர்த்து நல்ல பொன்னிறமாக வதக்க வேண்டும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வதக்க வேண்டும். இதனுடன் தக்காளி ஜூஸ், மஞ்சள் தூள், மிளகாய் தீயில், மல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் சமைக்க வேண்டும்.

நன்கு வதங்கி, எண்ணெய் பிரிந்து வரும் போது, முந்திரி, கசாகசா விழுதை இதனுடன் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணியை சேர்த்து மசாலாவுடன் நன்கு கலந்து விடவும். ஒரு கப் பால், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, குருமா கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு அணைக்கவும்.

ஒரு ஸ்பூன் நெய், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கலக்கி பரிமாறவும்.

இந்த குருமா புல்கா, சப்பாத்தி, ரொட்டி, ஜீரா ரைஸ், ghee ரைஸ், புலாவ் ஆகியவற்றுக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

குறிப்பு:

விருப்பப்பட்டால் பாலிற்கு பதிலாக பிரெஷ் கிரீம் சேர்த்தும் சமைக்கலாம்.

Ingredients:

Potato - 1/4 kg {boiled & chopped}
Peas - 1 cup {boiled}
Onion - 1 {finely chopped}
Cumin seeds - 1 tspn.
Ginger, garlic paste - 1 tspn.
Tomato puree - 1 cup
Cashew, poppy seeds paste - grind using, 6 cashews & 1 tspn. poppy seeds
Turmeric powder - 1/2 tspn.
Chilly powder - 1 1/2 tspn.
Coriander powder- 1 tspn.
Garam masala powder - 1 tspn.
Milk - 1/2 cup
Coriander leaves - to garnish
Salt & Oil - as required.

Heat oil in a kadai, add cumin seeds, when it sizzles, add the chopped onions & saute till it turns golden brown. Add ginger, garlic paste & saute till you get a pleasant aroma. Now add the tomato puree, followed by turmeric, chilly, coriander & garam masala powders with salt & cook on medium flame.

Once the tomato oozes out oil, add the cashew paste & saute till you get a pleasant aroma. Add the boiled potato & peas to it mix well. Add milk & 1 cup of water & cook till the gravy gets thickened.

Add 1 spoon ghee, garnish with coriander leaves & serve hot.

This kurma goes well with Phulkas, chappathis, rotis, jeera rice, ghee rice & pulav.

Note:

You can substitute milk with fresh cream too.

16806664_1015553021883976_1373665504791726576_n.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top