Bhuvana
Well-Known Member
அவியல் :
தேவையான பொருட்கள்:
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
வாழைக்காய் - 1
முருங்கைக்காய் - 1
கத்தரிக்காய் - 1/4 கிலோ
வெள்ளை பூசணி - 1/4 கிலோ
சேனைக்கிழங்கு - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
அவரைக்காய் - 100 கிராம்
பச்சை பட்டாணி - 100 கிராம்
{எல்லா காய்கறிகளின் மேல் தோலை சீவி நறுக்கி தனியாக வைக்கவும்}
புளி - 1/2 நெல்லிக்காய் அளவு
கெட்டி தயிர் - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
வாழை இலை - 1
அரைத்து கொள்ள:
துருவிய தேங்காய் - 2 கப்
சீரகம் - 3 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 12
பூண்டு பல் - 12 {இது வாயு தொல்லை இல்லாமல் இருப்பதற்கு}
எல்லா காய்கறிகளையும் குக்கரில் போதிய அளவு தண்ணீர் சேர்த்து வெயிட் போடாமல் மூடி வைத்து வேக விடவும். காய்கறிகள் வெந்து நிறம் மாறும் போது அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து, புளிக்கரைசல் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து வரும் போது, கடைந்த தயிர், உப்பு சேர்த்து அனலை குறைத்து விடவும்.
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, கறிவேப்பில்லை சேர்த்து அவியல் மீது சூடாக ஊற்றி கலந்து பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இந்த பாத்திரத்தின் மேலே வாழை இலை கொண்டு மூடி வைக்கவும். அவியலின் மணம் மாறாமல் இருக்கும்.
குறிப்பு:
வாழைக்காய், பலாக்கொட்டை, உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, போன்ற காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் நான் கட்டாயமாக பூண்டு சேர்த்து செய்வேன். பூண்டு, வெங்காயம் சேர்க்காமல் கொஞ்சம் ஊற வைத்த பச்சரிசி சேர்த்து அரைத்தும் இந்த அவியலை தயாரிக்கலாம்.