அன்பின் இனியா 22

Advertisement

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி.
இந்த பதிவையும் படித்து விட்டு, உங்களின் நிறை குறைகளை கூறுங்கள் பிரெண்ட்ஸ்

நடந்த நிகழ்வு இனியாவை,
சோர்வுற்றதில், உறக்கம் அவளிடம், இருந்து எங்கோ பறந்து சென்றது .
மனம் முழுதும், இப்படி தினம் ஒரு பிரெச்சனையா, என்று சலிப்பு.
உறக்கமும் இல்லாமல், அமைதியாக படுத்து கிடந்தாள் .
சுமதி, அங்கு நேராக, அவளின் அறைக்குள் சென்று, "எதுக்கு, நீ கர்ப்பமா இருக்குற விஷயம் எனக்கு சொல்லவே இல்லை ."


அவர் இனியாவின் அறைக்குள், வந்தது, நேரடியாக இப்படி ஒரு கேள்வியை கேட்பார், என்று இனியா யோசித்ததில்லை .
முதலில், அவளின் சிந்தனை, அவரின் வார்த்தைகளை, உள்வாங்கி கொண்டு, அதன் பிறகு, அவளும் அவரின் கேள்வியை புரிந்து கொள்ளவே சிறிது நேரம் கடந்தது.
புரிந்த பின்போ, அவளுக்கு அவர் மீது கோவம் தான் வந்தது.
" ஏன் சொல்லலைன்னு சொல்றீங்க, எதுக்கு சொல்லணும், நான் உங்களுக்கு விருப்பமில்லாத மருமகள் ஆச்சே , ச்சே ச்சே மருமக கூட இல்லை. உங்க பையனுக்கு பொண்டாட்டி, அவ்வளவு தான் ."
"நானே வேண்டாதவளா, இருக்கும் போது , என் குழந்தை மட்டும் நீங்க மனசார ஏத்துப்பீங்களா ."
"இப்போ, எவ்வளவு டென்ஷன் கிளப்பி விட்டுட்டு, இப்போ நான் சொல்லாதஒன்னு தான் உங்களுக்கு குறையா போச்சா ."
"நான் தான் உங்களை கேட்கனும் , நான் ஏன் உங்க கிட்ட, எல்லா விஷயத்துக்கும் பெர்மிஸ்ஸின் , வாங்கணும், நீங்க சொல்ற ஏதாவது ஒன்னு உருபடியா இருக்கா, சாப்பாடு விஷயம் சாதாரண ஒன்னு, அதுக்கு போய் , எங்க அம்மாவ, இந்த வெயில்ல வர வெச்சி இருக்கீங்க ."
"ஏன், இப்படி, எல்லாமே, உங்க கண்ணுக்கு, குறையா, தெரியுது, எனக்கு கடுப்பா இருக்கு , இன்னும் என்ன எல்லாம் பொருத்துக்கணும் ."
"என்னால முடியலை, குழந்தை வர நேரமாவது, வீட்டுலஅமைதி இருக்கனும்ன்னு நினைக்கிறேன், அது தப்பா, உங்க கிட்ட பிரெச்சனை வேண்டாம்ன்னு ஒதுங்கி போனா,கூட, ஏதாவது குறை கண்டுபிடித்து, என்னை டென்ஷன் பண்றீங்க ."
"நீங்க விஷாகா அண்ணியை இப்படி வளர்த்து இருக்கீங்களா, இல்லை, அவங்க உங்களை இப்படி பேச வைக்கிறாங்களான்னு எனக்கு புரியவே இல்லை "
"இந்த வீட்டுல, அதிதிக்கும், உங்க பையனுக்கும் ஒன்னும் நிம்மதி இல்லை, உங்களுக்கு தெரியலையா, ஒரு அம்மாவ , இந்த வீட்டை சேர்ந்தவங்கள, எவ்வளவு நல்லா பார்த்துக்கலாம்ன்னு ."


"நீங்க எல்லாம் என்ன குடும்பத்தை பார்த்துக்கிட்டிங்களோ," என்று வாய் விட்டதில், அத்தனை நேரம் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த சுமதி, மருமகளின் இந்த வார்த்தை, அவரின் மனதை தைக்க , "போதும் இனியா, நான் எப்படின்னு, தெரியாம, நீ பேசாத, என்னை பற்றி உனக்கு என்ன தெரியும்," என்று கத்தி விட்டார்.
இதுவரை சுமதியை இப்படி ஒரு ஆவேசத்தில் பார்க்காததால், மிரண்ட இனியா, ஏதோ இவர் மனதில் இருக்கிறது, என்று நினைத்து, முதலில் தன்னை நிலைப்படுத்தி கொண்டு , "சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன் " என்று அமைதியாக அதேநேரத்தில் அழுத்தமாக கூறினாள் .


"எப்படி திண்ணக்கமா நிக்கிறா பாரு," என்று சுமதி அப்பொழுதும் நினைத்தார் .
"நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு, ரொம்ப செல்லம், இப்போ விஷாகா எல்லாம் ஒண்ணுமே இல்லை, எங்க அப்பாவோட, தொழில் விவசாயம் ."
"எனக்கும் விவசாயத்துல அப்படி ஒரு விருப்பம், என் பள்ளிக்கூட படிப்பு முடிஞ்சதும், நான் அக்ரி படிக்க ஆசை பட்டேன்."
"உன் கல்யாணத்துல பார்த்து இருப்பியே, அவங்க என்னோட, பெரியம்மா, பொண்ணு, கிராமத்தில எங்க வீட்டுப்பக்கத்தில தான் இருக்காங்க."


"என்னோட அம்மாவும், எங்க பெரியம்மாவும், அக்கா தங்கை."
"ஏன் எங்க பெரியம்மா வீட்டில கூட, என்னோட அக்கா அண்ணனை விட நான் தான் அங்க எல்லாருக்கும் செல்லம். "
"இப்படி, ஆடு, மாடு, விவசாயம், பூந்தோட்டம் , இயற்கைன்னு என் வாழ்க்கை ரொம்பவே இனிமையா இருந்த காலம் அது, எல்லாம் ."
"அதிலும் எங்க அப்பா எனக்கு உயிரு . நான் எது சொன்னாலும் செய்வாரு, எது கேட்டாலும் யோசிக்காம வாங்கி கொடுப்பாரு, இப்படி எந்த வருத்தம் இல்லாம, பட்டாம்பூச்சியா வாழ்ந்தவ தான் நான் ."
"என்னை தாங்குற உறவுகள், என் தோழிகள்ன்னு, எங்க ஊரு, கோவில் திருவிழான்னு, என் வாழக்கை ரொம்ப நல்லா இருந்துச்சு, விஷாவோட, அப்பா, என் வாழ்க்கையில வர வரைக்கும் ."


"என் அப்பாவும், என் புருஷனோட, அப்பாவும், தோழர்கள், தொழிலுக்காக என் மாமனார் இங்க சென்னை வந்தாலும், அவரோட, பூர்வீகம் அங்க தான்."
"காலங்கள் மாறினாலும், அவங்க இரண்டு பேருக்குமிடையில நல்ல தோழமை இருந்தது ".
"அவங்க தோழமைக்கு பலி ஆனது என்னோட வாழ்க்கை தான்" .


"என் கல்லூரி முதல் வருஷம், அப்போ, எங்க அப்பா கிட்ட அவர் நண்பர், அவங்க பையன், ராஜசேகருக்கு, என்னை கேட்டு வந்தாங்க ."
"எதுலயும் என்னை கேட்டு செய்யும் எங்க அப்பா, என் திருமண விஷயத்தில மட்டும், என் முடிவு கேட்காமையே திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தாரு ."
"அவர் நண்பன் குடும்பத்துக்கு போனா, நான் நல்லா வாழுவேன்னு, என்னை கல்யாணம் செய்து வைத்தாங்க".


"அங்கே தான் என் அப்பா ஏமாந்துட்டாரு, விஷாவோட அப்பாவுக்கு, தனியா தொழில் செய்யணும்ன்னு ஆசை, எங்கு அப்படி குடும்ப தொழில் பண்ணாம, தனியா போனா, ஒரேடியா, குடும்பத்தோட, ஒட்டமா போய்டுவாரோன்னு பயத்தில, கல்யாணம் செய்துகிட்டா, தொழிலுக்கு பணம் தரேன்னு, என் மாமனார் சொல்லி இருக்காரு .
விஷாவோட அப்பாவும், ஏதோ வேண்டா வெறுப்பா, என்னை கல்யாணம் செய்துட்டு, என்னோட விருப்பமே இல்லாம குடும்பத்தை நடத்தினார் .


"அந்த வாழ்க்கை எவ்வளவு கொடுமைன்னு, ஒரு பொண்ணா, எனக்கு எவ்வளவு ஒரு அவமானம் தெரியுமா இனியா", அவர் கூறும்போதே, அழுது விட்டார்.
அவருக்கு வெறும் சுகத்தை தரும் ஒரு கருவியா தான் நான் தெரிஞ்சி இருக்கேன் .
அப்படியே, எனக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருஷமும் ஓடிடுச்சு.
எனக்கு வயித்துல, கருவே தங்கலன்னு, என்னை டிவோர்ஸ் பண்ண சொன்னாரு, வேற கல்யாணம் செய்துட்டு, வாழறன்னு வீட்டுல அப்படி ஆடுனாரு, ஒவ்வொரு முறையும் அவர் அப்படி பிரெச்சனை பண்ணும் போதும், என் மாமனார் தான் அவரை அடக்குவாரு.
இப்படி என் வறண்ட வாழ்க்கைக்கு, விஷாகா, என் வயித்துல ஒரு பொக்கிஷமா, வந்து சேர்ந்தா, அப்போ இருந்து, எனக்கு உலகமே விஷாகா தான்.
வாரிசு உருவானதும், என் மாமனார், அவர் பையனுக்கு பணம் கொடுத்ததும், அவர் தொழில் செய்யறேன்னு, இங்கேயும், மும்பைன்னு, இரண்டு இடத்திலேயும் தொழில்ல ரொம்ப பிஸியா இருந்தாரு.
வீட்டில பேச ஆளில்லாம, என் சொந்தகாரங்க கூட இங்க அதிகமா வரமாட்டாங்க, எனக்கு அப்டியே பைத்தியம் பிடித்த மாதிரி தான் ஆச்சு."
"குழந்தை பிறந்ததும், அவளை, நான் அப்படி கையில வெச்சே வளர்த்தேன், இவரும் இங்க வரும் போதே எல்லாம், விஷாகாவை, அவரோட அம்மாவ நினைச்சு, அப்டியே, தாங்குவார், எங்க இரண்டு பேருக்கும் இடையில விஷாகாவை, வெச்சி தான் பேச்சு வார்த்தை கூட."
"அவ வந்ததும் எனக்கு தனிமை எல்லாம் பெருசா தெரியலை, இப்படியே, கொஞ்ச வருஷம் போனதும், அன்பு, பிறந்தான் ."
"அவன் பிறக்க கூடாது, ஒண்ணே போதும் அப்டின்னு சண்டை போட்டாரு, ஆனா, ஒரு குழைந்து பிறக்குறதுக்குள்ள, இந்த ஊர் உலகம் என்னை எவ்வளவு பேச்சு, பேசினாங்க, ஆனா குழந்தை பிறக்கிறது, எல்லாம் வரம், அதுனால், நான் அவர் வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவிச்சேன்.
அப்போ இருந்து, அவர் என்னை ரொம்ப கேவலமா,நடத்த ஆரம்பிச்சாரு."
" இங்க வரும் போது எல்லாம், என்னை திட்டுறதும், என் சமையல குறை சொல்றதும், விஷாகாவையே, அவர் இருக்கும் போது என்னோட நெருங்க விட மாட்டாரு".
"நாளடைவில், யாருக்காக, இந்த சமையல், இந்த லங்காரம் அப்படின்னு, எனக்கு ஒரு விரக்தி, விஷாகா கேட்குறது எல்லாம் இந்த வீட்டுக்கு வரும் அவ கேட்கும் சமயல் இந்த வீட்டுல செய்ய ஆளுங்க இருக்காங்க, அப்பறம், எனக்கு இங்க என்ன வேலை, நான் விஷாகாவை மாட்டும் நேர நேரத்துக்கு கவனிச்சப்பேன்"
"அவளும் அவங்க அப்பாவை பார்த்துட்டா, என்ன கண்டுக்க மாட்டா ."
"அன்பு பிறந்ததும், விஷாகாவுக்கு, ரொம்ப ஏக்கம் வந்துடுச்சு ,பொண்ணுக்காக,அவன் என்னோட இருக்க விடாம செய்யணும் நினைத்தார்.சரி அவன் எங்க அம்மாவோட இருந்தா நல்லா வளருவான்னு, அங்க போய் விட்டேன், எங்க அப்பா, அம்மாவுக்கு, அவங்க தனிமையை போக்க, அவன் வரவை சந்தோஷமா, ஏத்துக்கிட்டு, நல்லாவே வளர்த்தாங்க ."
"என்னை பிடிக்காது, ஆனா, நைட் மட்டும் அவருக்கு நான் பொண்டாட்டியா, வழனும், எனக்கு அந்த காலம் எல்லாம் கொடுமை, ரொம்ப வருஷம் கழிச்சி அதிதி பிறந்தா, எனக்கும் அப்போ, விஷாகா பெரிய பொண்ணா ஆனதால் , இவளை சரியாய் கவனிக்க முடியாம, அன்பு கூடையே, இவளையும் வளர்க்க சொல்லி விட்டுட்டு, வந்துட்டேன்."
"என் மாமனார் இறந்ததும், இவருக்கும் இங்க கேள்வி கேட்க ஆள் இல்லை, என் சொந்தகாரங்க யாரையும் வர விட மாட்டார், ஏன் அவர் சொந்தத்திலேயே, தேவகி மட்டும் தான் இங்க வர அனுமதிப்பார், சந்திராவுக்கு, சுமாரான இடம் மதிக்க மாட்டாரு, "
"இப்படி, எல்லாம் அவர் மட்டம் தட்டி, ஒரு நாள், விஷாகவும் வினோத்தை விரும்புறதா, வந்து அவங்க, அப்பா கிட்ட மட்டும் சொன்னா , ஒரு அம்மாவ , எனக்கு அங்க என்ன உரிமை இருக்கு, சொல்லு "
"என்னை அப்பாவும் பொண்ணும், கேட்கவேயில்லை.இவர் மேல இருக்கும் கோவம் தான், நான் இவர் தங்கச்சிங்களோட கூட சரியா பேசமாட்டேன்" .
"தேவகி அவளே வந்து பேசுவா, ஆனா, சந்திரா அவளுக்கு யார் என்ன மதிப்பு கொடுக்குறாங்களோ, திருப்பி அதேயே அவங்களுக்கு கொடுகுணனும்ம்னு நினைக்கிற டைப் .அவளும் என்னோட சரியா பேசமாட்டா ."
"என்னோட பெத்தவங்களும்,போய் சேர்ந்த பிறகு, அன்புவையும் அதிதியும் இங்க அழைச்சிட்டு வந்தேன், என்ன, அதிதி குழந்தை அவளுக்கு சரியான கவனிப்பு கொடுக்க முடியாம, என்னை விஷகா அழுது ஆர்பாட்டம் பண்ணி தடுத்து விடுவா, அன்பு தான் அவளை பார்த்துக்கிட்டான், வீடு எல்லாம் வேலைகாரங்க இருந்தும் அதிதிக்கு சரியான கவனிப்பு இருக்காது."
"அவளுக்கு அம்மாவ, அப்பாவ இருந்து பார்த்துக்கிட்டது எல்லாம் அன்பு மட்டுமே"
"ஒரு நாள், டூர் போன புருஷன், அங்க ஆக்சிடென்ட்ல , இருந்துட்டதா சொன்னாங்க, அவர் உடல் கூட கிடைக்கலை, இங்க எல்லா சடங்கும் செய்தாங்க, என் பொட்டும் தாலி, எடுக்க வரும்போது, என் பையன் சிங்கம் மாதிரி, யாரவது கிட்ட வந்தா, அவங்களுக்கு அவ்ளவுதான்னு, யாரையும் என்னை நெருங்க விடாமா பார்த்துக்கிட்டான். "
"எனக்கு என்னை பார்க்க பையன் இருக்கான்னு சந்தோஷ பட்டேன் அந்த நேரம் ."
"எல்லா சொந்தகாரங்க, அவரோட தங்கச்சி, விஷாகா, ஏன் இந்த வீட்டுல, அவர் கிட்ட திட்டு வாங்கிக்கிட்டே வேலை செய்த வேலைகாரங்க கூட, அவர் இறந்த அப்போ, அழுதாங்க, எனக்கு அழுகையே வரல,"
"ஏதோ எதில இருந்தோ விடுபட்ட உணர்வு,."
"நான் இனிமே தான் வாழவே போறேன், எனக்கு இனிமே தான் ஒரு விடுதலையான வாழ்க்கையே இருக்குன்னு, நான் உணர்ந்த தருணம் அது."
இனியாவாள், அவரை உணர முடிந்தது, கொண்டவன் துணை இருந்தால், ஒரு பெண்ணுக்கு, வாழ்க்கையில் எல்லாமே வெற்றி தான், அதே அங்கு சறுக்கினால், வாழ்க்கையே, கேள்வி குறி தான் .
"நான் என்ன மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்ந்து இருக்கேன்னு உனக்கு புரியுதா, எனக்கு யாரு இருக்கான்னு நான் நினைக்கும் நேரத்தில தான் என்னை அம்மான்னு அழைத்து, என்னோட உயிரும், உணர்வுமா கலந்தவ அவ,"
"அவ செய்யற எல்லாமே, அடாவடி தனம் தான், ஆனா அவளை கண்டிக்கும் தைரியம் எனக்கு இல்லை, எங்க நான் அவளை கண்டிச்சி, அவ என்னை வெறுப்பாளோன்னு பயம், அதான் விஷாகா இப்படி இருக்க காரணம்.."
"அப்பறம் அன்பு, அவன் ரொம்ப நல்ல பையன், என்னோட இறுதி காலம் வரை அவன் தான்னு, நான் நினச்சேன், அந்த காரணம் தான் அவனுக்காவது நான் பொண்ணு பார்க்கணும்ன்னு நினச்சேன், ஆனா அதே நேரத்தில, ரேஷ்மியை பற்றி விஷா சொல்லும்போது எனக்கு பெருசா மறுக்க தோணல, நம்ம கைக்குள்ள அடங்கி இருப்பான்னு நினைக்க, அதான் சரின்னு சொன்னேன்.


எப்போ, அன்பு உன்னை கல்யாணம் செய்துப்பேன்னு வந்து சொன்னானோ, என் நம்பிக்கை எல்லாம் கோவமா மாறுச்சு, அந்த கோவம் தான் உன்னை நான் குறை சொல்லவும் காரணம், எங்க அவன் விருப்பட்டு கல்யாணம் செய்துகிட்ட பொண்ணு, எங்க இரண்டு பேரையும் பிரிச்சிடுவாளோனு ஒரு பயம் அதான் உன்னை அடக்கி வைக்க எனக்கு தோணுச்சு."

"அந்த எண்ணம் தான், உன் மேல கோபமாகவும் வர காரணம். "
"மற்றபடி அப்போ நான் சொன்னது எதுவும் உன்னை மனசார சொல்லல, நீயும் ஒரு வித ஆளுமையோட தான் இருக்கே, எங்க எல்லாருக்கும் கட்டுப்பட்டே வாழ்ந்த என் நிலைமை, இப்போ மருமக சொல்லுக்கும் கட்டுப்பட்டு வாழும் நிலைமை வந்துடுமோன், அப்டிங்குற பயம் தான் என்னை இப்படி மாத்தி இருக்கு, ஆனா எனக்கு அன்புவை வளர்க்காத நாட்கள் எல்லாம், அவனுக்கு பொறக்கும் பிள்ளையை வளர்த்து என் காலத்தை போக்கணும்ன்னு, ஒரு பேராசை, அந்த விஷயத்தை நீ மறைச்சிட்டியேன்னு கோவம் தான் எனக்கு" என்று அவரின் வருத்தம் அனைத்தும் கூறி, இனியாவை பார்த்தார்,
விஷாகாவிடமும் அவர் இது போல் பேசியதில்லை, இன்று, மனதில் இருந்த பாரம், இனியாவிடம் கூறியதில், ஏதோ மனம் அமைதியாக இருப்பது போல் உணர்ந்தார்.


"உங்க மேல ஒரு வருத்தம், அதுவும் இல்லாம, இங்க வந்த நாளுல இருந்து, அந்த அளவுக்கு நம்ம இரண்டுபேருக்கும் சுமுகமா ஒரு உறவு இல்லை, அதான் சொல்லணும் தோணலை, அதிதிக்கு சொல்லலாம்னா, என்னதான் அவளோட பிரெண்டா, பழகுனாலும், என் கண்ணுக்கு அவ குழந்தையா தான் தெரியுறா, அதான் அவகிட்டயும் சொல்லலை," என்று சுமதியின் மறுபக்கம் தெரிந்த பிறகு, அவரிடம் சாதாரணமாக பேசினாள் இனியா.

"அதிதி, அப்படி தான், அவ குழந்தை மாதிரி தான் இருக்கா, அவ வீட்டில அதிகம் பேசுறது கூட அவ அண்ணா கிட்ட தான், நான் அவளை சரியா கவனிக்காம விட்டுட்டேன்னு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு," என்று கூறினார்.

"நீங்க இப்போ அவளோட நல்லா பேசலாம் தானே,"
"எங்க, முன்ன அவ என் கிட்ட வந்தாலும் விஷாகாகாக, அவளை ஒதுக்குவேன், இப்போ அவ என்னை ஒதுக்குறா," என்று சுமதி வருந்தினார்.
"கவல படாதீங்க, இன்னும் காலம் இருக்கு, அவளுக்கு நீங்க தானே கல்யாணம் எல்லாம் பார்க்கணும் " என்று இனியா அவரை தேற்றினாள் .
"இனியா கல்யாணம் சொன்னதும் எனக்கு ஒன்னு சொல்லணும், அதிதி பற்றி தெரியலை, ஆனா சரண் அதிதியை விரும்புறான்னு நினைக்குறேன், கொஞ்ச வருஷம் முன்ன, தொடர்ந்து ஒரு வாரம் போல, சரண் தான் அதிதியை ஸ்கூல்ல ஒருந்து வண்டில கூட்டிட்டு வந்தான், அப்போ அவன் முகத்துல ஒரு மலர்ச்சி, எப்பவும் கடுகடுன்னு பார்த்துட்டு, அவனை அதிதி கூட சந்தோஷமான முகத்தோட பார்க்கும் போது, எனக்கு அப்படி தோணுச்சு, அவன் வீடு வரை வரமாட்டான், வாசல்ல அப்டி ஒரு நாள் அதிதியை விட்டுட்டு அவன் போகும் பொது, என் புருஷன் கண்ணுல, பட்டுட்டான்.


அன்னைக்கு, அவர் என்ன பேசினாரா, இவனும் அவர் கூட சண்டை, போட்டுட்டு, போனவன் தான் இந்த பக்கமே வரலை. அதோட வெளிநாட்டுக்கு போய்ட்டான் ."
சுமதிக்கு தெரிந்து ஒரு நல்லது செய்தார் என்றால் இந்த விஷயம் தான் .
இனியாவிற்கு, இது எல்லாம் அதிர்ச்சி, ஒருவாறு, அனைத்தும் சரி செய்ய நினைத்தாள் .


முதலில், சுமதியை இனியாவது அவரை மகிழிச்சியுடன் பார்த்துக்கொள்ள முடிவெடுத்தாள் .
அவரின் மீதான கோவம் எல்லாம், இப்பொழுது, ஐயோ பாவம் என்று தான் நினைக்க தோன்றியது.
"எல்லாம் இனி, பார்த்துக்கலாம் விடுங்க, என்று அவரை தேற்றினாள் .
"இன்னும் நீ இப்படியே சொல்றியே , என்னை யாரோ மாதிரி கூப்பிடுறே, அத்தைன்னு கூப்பிடு, அவரும் யாசகமாக கேட்டதும்.


"அது அன்னைக்கு, என்னை மருமகளா ஏத்துக்க கஷ்டமா இருக்குனு மாதிரியே பேசுனீங்களா, அதான் எனக்கும் அப்போ உங்களை அப்படி அழைக்க தோணலை."
சுமதிக்கு முகம் சுருங்கவே, "சரி சரி அத்தை , சில விஷயம் எல்லாம் மாறாது, ஆனா உங்க பொண்ணை, நீங்க கண்டிக்க வேண்டாம் சில விஷயத்தில இருந்து ஒதுங்கி இருங்க, அவங்களே மாறுவாங்க ," என்று கூறி அவரை அனுப்பி வைத்தாள் .


அதிதியின் விஷயம் மட்டும் அவளுக்கு குழப்பமாகவே இருந்தது, இங்கு சரணும் திருமணத்திற்கு சம்மதம் கூறாமல், நாட்கள் கடத்துவதில், அப்படியும் இருக்குமோ, என்று கேள்வி.
சரி எதுவாக இருந்தாலும், அதிதியின் படிப்பு முடிந்த பிறகு, இதை பற்றி, பேச வேண்டும் என்று நினைத்து கொண்டாள் .
இங்கு விஷாகாவின் வீட்டில் அவளுக்கு நாளும் ஒரு பிரெச்சனையாக இருந்தது.



 

achuma

Well-Known Member
சுமதிக்கு
மனசுல இருந்தத சொல்ல
அருமையான சந்தர்ப்பம்
இனி இனியா எல்லாம்
மாத்தனும்
நல்லா இருக்கு பதிவு
Thanks sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top