அன்பின் இனியா 22 1

Advertisement

achuma

Well-Known Member
இலக்கியா அவள் வீட்டினில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள் என்று கூறலாம், அவளின் மகள் பிறந்த பிறகு, செழியனின் வீட்டினில் நடந்த பிரெச்சனைக்கு பிறகு, இப்பொழுது தான் இங்கு வந்து அவள் தங்கும் சூழல் கிடைத்தது.
அன்னை வீட்டினில் திருமணத்திற்கு பிறகு வந்து தங்கி விட்டு செல்வது எல்லாம் ஒரு இனியமான வரம். அந்த வரம் கிடைத்த மகிழ்ச்சி அவளிடம் .
மோகன் அவரின் விருப்பப்படி, தர்ஷினியை ஒரு கையினில் தூக்கி கொண்டும், தர்ஷனை மற்றொரு கையினில் பிடித்துக்கொண்டு, கடை வீதிகளில் சுற்றி வந்தார்.
பேரன் பேத்தி கடையில் கை காட்டிய பொருட்களை வாங்கி குவித்தார்.
அவரின் நீண்ட நாள் கனவு அது என்றே கூறலாம்.
வயதானவர்களுக்கு வேறு எதில் மகிழ்ச்சி இருக்கிறது.
அவர்களின் இது போன்ற சிறு சிறு ஆசைகளை, இந்த காலத்தில் சிலர் நிறைவேற்றி வைப்பதில்லை, காரணம் அவசர உலகம், அதற்கு ஏற்ற இளைஞர்களின் ஓட்டம், சில குடும்பத்தில் நடக்கும் குழப்பங்கள், இவை எல்லாம் இலக்கியா நினைத்து கொண்டிருந்தாள் .
வீட்டினில் அவளுக்கு பிடித்த உணவு வகைகள், அன்னையின் கையால் உண்டு , அவளும், தம்பி அன்னை தந்தைக்கு, என்று சமையல் செய்து, மகிழ்ந்தாள் .
இளங்கோவிரற்கு பன்னிரெண்டாம் வகுப்பு, தேர்வு முடிவுகள் வெளிவந்தது.
தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து குடும்பத்திற்கு பெருமை சேர்த்தான் .
மோகனுக்கு கண்கள் கலங்கியது.
அவர் பட்ட கஷ்டம் எல்லாம் இதற்க்கு தானே, பிள்ளைகள், நல்ல முறையில் படித்து வாழ்வில் சிறந்தால், அவர்கள் சுயமாக யார் தயவும் எதிர்பார்க்காமல் இந்த உலகத்தை எதிர்கொள்ளலாம்.
எனினும், மகனிடம் அவரின் பாசம் வெளிப்படுத்தாமல், மனிதர் உள்ளுக்குள்ள பெருமை பட்டு கொண்டார்.
அவரை பொறுத்த வரை, ஆன் பிள்ளைகளை, கண்டித்து வளர்த்தால் தான் அவர்கள் முன்னேறுவர் என்று ஒரு எண்ணம்.
பெண் பிள்ளைகளிடமும் கண்டிப்புடன் தான் இருந்தார்.
எனினும், மகள்களை ஒரு காலத்திற்கு மேல், அடுத்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும், அதுவரை இங்கு நிம்மதியாக இருக்கட்டும் என்று அவரின் கண்டிப்பில் ஒரு மான் மகள்களுக்கு இடையில் அளவு வைத்திருந்தார்.
செழியன் கொடுத்த பணத்தில் இளங்கோவிற்கு இனி கல்லூரிக்கு தேவை என்று, ஐந்து செட் சட்டை மற்றும் பேண்ட் வாங்கி கொடுத்தாள் .
பள்ளி திறப்பதற்கு நான்கு நாட்கள் முன்பே அவளின் புகுந்த வீட்டிற்கு சென்றாள் .
இனி நேரம் கிடைக்கும் போது எல்லாம், பிள்ளைகளுடன் வருவதாக கூறி விட்டே சென்றாள் .
நாட்கள் அதன்போக்கில் பறந்தது.
அன்பு அவன் தொழிலுக்கு தேவையான பணம் போக, புரோக்கர் கையில் கொடுத்திருந்த பணத்தை எடுத்து, அவன் நண்பனுக்கு தெரிந்த ஒரு இடத்தில், நான்கு படுக்கை அறை கொண்ட ஒரு கட்டிய வீட்டையே வாங்கி விட்டான்.
அவன் குழந்தை பிறக்கும் நேரம் அவனின் வாரிசு சொந்த வீட்டினில் இருக்க வேண்டும் என்னும் ஆசை.
அழகாக, பெரிய வரவேற்பறை, சமயலறை, அதனை ஒட்டி சாப்பாட்டு அறை, கீழ் தலத்தில் இரண்டு படுக்கையறை, அதன் பக்கத்தில் சிறிய பூஜை அறை, மேல் தலத்தில் இரண்டு படுக்கை அறை, வீட்டை சுற்றி தோட்டத்திற்கு என்று இடம் விட்டு வீடும் பார்க்க அழகாக இருந்தது.
சொந்த பந்தம் என்று அனைவரையும் அழைத்தான்.
சுமதி இல்லம், என்று வீட்டின் வெளியே பெயர் பலகை பார்த்து உறவினர்கள் மகிழ்ந்தனர் என்றால், பெற்ற மகளான விஷாகா தான் அதற்கும் பொறாமை பட்டாள் .
இதுவரை, பிறந்த வீட்டில் அனைத்தும் அவளுக்கு பிறகு தான் என்ற நிலை இப்பொழுது, தகர்ந்ததாக ஒரு வலி அவள் மனதில் .
ஏன் என்று கேட்க முடியாதே, அனைத்தும் அன்புவின் உழைப்பு, அவனின் தொழிலுக்கு கூட, தந்தையிடம் பணம் கொடுக்க கூடாது, என்று என்ன எல்லாம் செய்தாள்.
தான் மட்டும் உயர்ந்து நிற்க வேண்டும் தன்னிடம் தம்பி தங்கை அனைத்திற்கும் அனுமதி கேட்க வேண்டும் என்று என்ன எல்லாம் நினைத்தாள் .
ஆனால் அதையும் மீறி அவன் இப்படி சமுதாயத்தில் நிமிர்ந்து நின்று விட்டானே, என்று பொறாமை தான்.
இந்த நேரத்தில் இனியா பூஜையில் அமர கூடாது என்றதால், சுமதி மற்றும் இனியாவின் பெற்றோரை, வைத்தே, பூஜையை முடித்து கொண்டான்.
சுமதி தயங்கியதற்கும், அவரை தேற்றி, பூஜையில் அமர செய்தான் .
அவரின் மனதில் மகன் மீதான, இருந்த சிறு சந்தேகமும் இன்று முற்றிலும் மறைந்தது.
உறவினர்களை பெருமையாக பார்த்தார் சுமதி.
இந்த முறை, சம்மந்தி வீட்டினரையும் நல்ல முறையில் வரவேற்றார்.
இளங்கோவிற்கு இனியா மற்றும் அன்பு, அவனுக்கு விலையுர்ந்த, கை கடிகாரம் பரிசளித்தனர்.
அவனை, இன்னும் கல்லூரி படிப்பிலும் நல்ல மதிப்பெண் எடுக்குமாறு வாழ்த்தினர்.
இலக்கியா, நூற்றி ஒரு கொழுக்கட்டை, வேண்டுதலாக, செய்து, விநாயகருக்கு வைத்தாள் .
அதில் செழியன் முழித்தது, அது வேற கதை.
வீட்டிற்கு வந்த சுமதியின் உறவினர்களை,கண்டதும் இனியாவின் மனதில் தோன்றிய எண்ணத்தை செயல் படுத்த முடிவெடுத்தாள் .
கணவனிடம் சென்று அவன் மடியில் அமர்ந்து, சுமதியின் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று கெஞ்சினாள்.
ஐந்தாம் மாதம் மேடிட்ட வயிறுடன் அழகு தேவதையாக மிளிரும் மனைவியின் அழகில் சொக்கி தான் போனான் .
அவள் எது கேட்டாலும் செய்து தருபவன், அவளின் கெஞ்சலில், இது போன்ற நேரத்தில் அவளின் விருப்பத்திற்கு சம்மதித்து, அவர்களுடனே அனுப்பி வைத்தான்.
ஒரு வாரம் அன்னை, அதிதியுடன் அங்கு இருக்க அனுமதி கொடுத்தான்.
வார இறுதியில் இரண்டு நாட்கள் போன்று விடுமுறை எடுத்து கொண்டு, அவன் வந்து அழைத்து வருவதாக கூறி சுமதி, இனியா மற்றும் அதிதியை, அவன் பெரியன்னை குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தான்.
கிட்ட தட்ட, சுமதி எப்பொழுது இறுதியாக அவரின் கிராமத்திற்கு சென்றார் என்று அவருக்கே ஞாபகம் இல்லை.
அங்கு சென்றதும் அந்த வயதிலும், அவரை அவரின் பெரியன்னை குடும்பத்தினர், சீராட்டினர்.
சுமதி மீது தவறு இருக்கும் போது கண்டித்த, அதே அக்கா, இப்பொழுது, அவரின் ஆசை தங்கை, பல வருடம் கழித்து வந்த சந்தோஷத்தில் சுமதியை தாங்கினார்.
சுமதியின் அண்ணி, சின்ன நாத்தனார் வந்திருக்கும் மகிழ்ச்சியில், அவருக்கு விருப்பமான உணவு வகைகள் செய்து, சுமதியை திக்குமுக்காட செய்தார்.
படுக்கையில் இருக்கும் பெரியன்னை, கண்டு சுமதிக்கு அழுகையே வந்து விட்டது.
அவரை எப்பொழுதும் ஒரு இடத்தில தேங்கி இருக்க மாட்டார், இப்பொழுது வயதின் மூப்பு, அவரை ஒரு அறைக்குள் தேக்கி விட்டது.
"இனியா, இங்க வருவேன்னா, நான் நினைக்கவேயில்லை மா, விடுமுறைக்கு கூட, எங்கேயாவது, வெளியூருக்கு தான் விஷாகாவை அழைச்சிட்டு போக சொல்லுவாரு. தேவகி குடும்பத்தோட, போயிட்டு, வருவேன், இங்க இப்போ என்னோட பெரியம்மா, ஐயா எல்லாரையும் பார்ப்பானான்னு கூட எனக்கு தெரியலை."
"இதோ இவர்களுக்கும் வயசாயிடுச்சு, பழைய காலம் எல்லாம் திரும்பி வருமா, நான் இழந்த நாட்கள் எல்லாம் என் கைக்கு கிடைத்தா, இவங்கள நல்லா பார்த்துக்கணும்ன்னு மனசு துடிக்குது."
"ஆனா அவங்க கடைசி காலத்துக்குள்ள பார்த்துட்டேன் எனக்கு அது போதும், என்னை தூக்கி வளர்த்தவங்க, இவங்க கிட்ட இல்லாத வசதியா, ஏதோ பணத்துக்கு வந்தவங்க மாதிரி, அவர் அப்படி பேசி வெளிய அனுப்பிடுவாரு, பொண்ணு கொடுத்த இடம்ன்னு பெரியம்மா,ஐயாவும் பொறுத்து போவாங்க."
"என்ன உலகமோ," என்று வருந்தினார்.
"அத்தை, நான் உங்களுக்காக தான் இங்க வந்தேன், ஆனா எனக்கு இங்க ரொம்ப பிடிச்சி இருக்கு, நீங்க ஏன் எல்லாத்துக்கும் தயங்குறீங்கன்னு, எனக்கு தெரியலை, அதிதி இங்க எல்லா லீவுக்கும் வருவாளாமே , அப்போ கூட நீங்க அவ கூட வந்து இருக்கலாம்."
"இல்லை மா விஷாகா, வேண்டாம்ன்னு சொல்லிடுவா, அவ தினமும் என்னை பார்க்காம இருக்க மாட்டா, அவளுக்காகவாது, நான் எங்கேயும் போகாம இருந்துட்டேன், இப்போ, மாப்பிளை, அவளை அதிகம் அனுப்புறதில்லையே, அதான், வந்து இருக்கேன்"
"இங்கே சரியா போன் கிடைக்க மாடீங்குது, எனக்கு போன் போட்டு குடு மா, நான் அவ கிட்ட வந்த விஷயம் சொல்றேன், வந்து நாலு நாள் ஆகுது."
"இவ கண்ட்ரோல்ல வெச்சி இருக்கா, அது தெரியுதா பாரு இவங்களுக்கு," என்று மனதில் நினைத்து,
"இந்தாங்க அத்தை, இங்க தான் சரியான சிக்னல் கிடைக்குது, இங்கேயே இருங்க, அந்த வாசல் பக்கம் வந்தா சரியா கேட்காது" என்று கூறி விட்டு, வீட்டிற்குள் சென்று விட்டாள் .
அவரும் விஷாகாவிற்கு அழைத்து ஒரு வழியாக, சிக்னல் கிடைத்து, அவளுடன் மகிழ்சியாக பேச வாய் திறந்தால், விஷாகாவோ, அவரை பேசவே விடாமல், வறுத்தெடுத்தாள் .
"என்ன, இன்னைக்கு தான் என் நினைப்பு வந்துச்சா, ஏற்கனவே வீட்டுல அந்த இரண்டு இம்சைங்களுக்கும் என்னை பாடம் எடுக்க சொல்லி, நான் உன்னை தினம் பார்க்க வர நேரத்துக்கும் ஆப்பு வெச்சிட்டாரு உன் மாப்பிளை, இப்போ நீ ஊருல போய் உட்காந்துட்டு, ஒரு போன் கூட பண்ணாம, இருக்கே, அங்க ரொம்ப சிறப்பான கவனிப்போ," வார்த்தையில் அப்படி ஒரு எள்ளல் .
எப்பபோழுதும் அவள் ஏதேனும் கூறினால், அமைதியாக செல்லும் சுமதி, இன்று தான் அதற்கு பதில் கொடுத்தார்.
"அம்மா வீட்டுக்கு வந்தா எல்லா பொண்ணுக்கும் கவனிப்பு தானே மா, சிக்னல் கிடைக்கல, இப்போ தான் இனியா, இங்க கிடைக்குதுன்னு, சொல்லிட்டு, போன் போட்டு கொடுத்தா, அங்கே மாப்பிள்ளை, பசங்க எப்படி இருக்காங்க,"
"எல்லாரும், கோவில் வரை போய் இருக்காங்க, அந்த அதிதி குட்டிய பிடிக்க முடியலை, அக்கா பொண்ணும் வந்து இருக்கா, அவ பசங்களோட ஒரே ஆட்டம்,"
"ரொம்ப இருட்டாகிடுச்சா, இந்த நேரம் இனியாவை எங்கேயும் அழைச்சிட்டு போக வேண்டாம்ன்னு அக்கா, அவளை வீட்டுலயே இருக்க சொல்லிட்டாங்க, அதான் நானும் கூடயே இருக்கேன்னு சொல்லிட்டேன்."
"இன்னும் இரண்டு நாள்ல,அன்பு வந்து அழைச்சிட்டு போவான்."
"ஊரே ரொம்ப மாறி இருக்கு மா, அடுத்த தெருவுல இருக்க ஏன் தோழிய கூட பார்த்தேன் விஷா மா ."
"பகல் எல்லாம் இங்க நம்ம ரைஸ் மில்லு, வயலுன்னு போயிட்டு வந்தது எனக்கும் அலுப்பா இருக்கு,"
இத்தனை நாளில் அன்னை குரலில் அப்படி ஒரு துள்ளல், அது விஷாகாவிற்கு மகிழ்ச்சியை கொடுக்காமல், கோவத்தையே தந்தது.
அதிலும் அதிதியை குட்டி என்று அழைத்தது வேறு, இறுதியில் வீட்டினில் கடைசியாக பிறப்பவருக்கு இருக்கும் சலுகை தான் இங்கு அதிதிக்கு என்று பொறாமை கொண்டாள் .
உண்மையில் அதிதி இழந்தது, விஷாகாவால், ஈடுகட்ட முடியுமா, அதனை அவளிடம் யார் எடுத்து கூறுவது.
இங்கு அவள் வினோத்திடம் சிக்கி தவிப்பதென்ன, இந்த வயதில் சுமதி அவள் பிறந்த வீட்டில் துள்ளுவதென்ன, என்று கோவத்தில், "போதும் மா இங்க ஒருத்தி இருக்காளேன்னு நினைப்பு இல்லாமா, அங்கே ரொம்ப சந்தோஷமா இருக்க, ஒழுங்கா வந்து சேர்ற வழிய பாரு, என்ன தான் எல்லாம் பார்த்து பார்த்து செய்தாலும், உன் புத்தி ஆடு மாடுன்னு தானே போகும் " என்று திட்டி விட்டு அழைப்பை துண்டித்தாள் .
ஏனெனில் அவளின் நாட்கள் மிகவும் மோசமாக பயணிப்பதாக அவளுக்கு ஒரு எண்ணம்.
விஷாகாவிற்கு, தினமும் ஒரு தொல்லை என்ற கதை தான் அவள் வீட்டினில்.
அவளின் கோவத்திற்கு எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்காமல், குடும்பத்திற்கு ஏற்ற , மருமகளாக, குழந்தைக்கு நல்ல தாயாக இருக்க முடிந்தால் மட்டும் இந்த வீட்டினில் அவளுக்கான இடம் என்று வினோத்து தெள்ள தெளிவாக கூறிவிட்டான்.
அடிக்கடி, அவனிடம் அவள் ஏதேனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அவளை வீட்டை விட்டு போகுமாறு, அவன் மனம் வலிக்க கூறுவான், காரணம், ரேஷ்மியை அங்கு தங்க விடாமல் செய்த செயலுக்கு அவளுக்கு இந்த வலி தேவை தான் என்று தன்னை தேற்றி கொள்ளவான் .
முன்பே அவளிடம் சில விஷயங்களின் அவளின் தவறி எடுத்து கூறி இருந்தால், குடும்பம் அமைதியாக இருந்து இருக்கும் என்று நினைக்காத நாள் இல்லை.
அவளால் முடியாத பட்சத்தில் தாரளமாக, வீட்டை விட்டு கிளம்புமாறு கூறிவிட்டான் .
ஒவ்வொவரு முறையும் அவள் எதற்கென்னும் வீம்பு பிடித்தால், அவனின் ஒரே ஆயுதம் "இருந்தா இரு இல்லையா போயிட்டே இரு " வார்த்தை அம்பாக அவள் மேல் பாயும்.
அந்த ஒரு மந்திரம் அவளை அடக்கும் .
தனக்காக, அவள் உயிருக்கு உயிரான, அப்பா, உருவாக்கி கொடுத்த, ராஜ் டெக்ஸ்டைல்ஸ் இருக்கு, அவ தங்க அரண்மனை போன்ற வீடும் இருக்கு, யாரும் வேண்டாம் என்று உதறி தள்ள அவள் தயார் தான்.
ஆனால் , பணம், பேர், புகழ் என்று இருந்தாலும் கனவுனுடன் வாழாமல், சொந்தங்களிடம் இருந்தும் சமுதாயத்தில் இருந்தும் வரும் பேச்சுக்களுக்கு பயந்தே, வேறு வழியில்லாமல் மாமியார் வீட்டில் இருக்கும் நிலை .
வினோத்தை முழுதாக வெறுக்க மனமில்லாமல், மனதளவில் தவித்தாள் .
ஒரு பெண்ணிற்கு கட்டிய கணவனின் ஆதரவு இன்றி குடும்பத்தில் வாழ்வது சுலபமில்லை, என்று தெரிந்து கொண்டாள் .
சுமதியின் நிலையில் இப்பொழுது அவள் இருக்கிறாள், என்று தான் இன்னும் உணரவில்லை.
இத்தனை நாள், தான் இந்த வீட்டை ஆண்டு கொண்டிருக்கிறோம் என்ற மாய பிம்பத்தை உடைத்தெறிந்து இருக்கிறான் அவளின் காதல் கணவன்.
காலையில், வேலை செய்பவர்களுடன் சேர்ந்து அவளும் சிறு சிறு வேலைகள் செய்ய வேண்டும்.
தொழிலில் கம்பீரமாக வளம் வரும் விஷாகா, வீட்டு வேலையில் ஒன்றும் தெரியாமல், தத்தளித்தாள். எதிலோ வசமாக மாட்டிய உணர்வு அவளுக்கு .
இத்தனை நாள் தேவகி, வேலை செய்வோரிடம் என்ன செய்ய வேண்டும் என்று கூறி, அவரும் காய் நறுக்குவது, என்று உதவி செய்வார் .
இப்பொழுது, வினோத், தேவகியை, நாதனுடன், வாக்கிங் சென்று வருமாறு கூறி விட்டான்.
உண்மையில் விஷாகா, அந்த வேளைகளில் தான் என்ன செய்வது என்று முழி பிதுங்கி நின்றாள், என்றால், அங்கு சமையல் வேலையில் இருப்போர், இவளின் வருகையில், பயத்தில் கை கால்கள் வெட வெடக்க, நின்று கொண்டிருந்தனர்.
அங்கு வந்த ரேஷ்மி இக்காட்சியை கண்டு சிரித்து விட்டாள்.
"ஏன் எல்லாரும் புலி, சிங்கம் பார்த்தா மாதிரி பயபடுறீங்க, அவங்க இந்த வீட்டு மருமக, இந்த வீட்டு மருமகளா, அவங்க கடமையை அவங்க செய்ய வராங்க, இங்க நீங்க, அவங்களுக்கு பயந்தா, அவங்க எப்படி, உங்களோட சகஜமா, வேலை செய்ய முடியும்." என்று விஷாகாவிற்கு ஆதரவாக பேசுவது போல், அவளின் கடமையை நினைவூட்டி, வேலை செய்பவர்களின் பயத்தையும் போக்கினாள் .
"ஆமா , என்ன செய்யனும்ம்னு எல்லாமே சொல்றா, எதுக்கு என்ன ஒப்புக்கு இங்க நிற்க சொல்றா என்று மனதினில் ரேஷ்மியை கருவி கொண்டே, நின்று இருந்தாள் .
ஆனால், சமையலில், என்ன செய்ய வேண்டும் என்பதில் இருந்து, அங்கு பூஜைக்கு அலங்காரத்திற்கு என்ன பூக்கள் அலங்கரிப்பது, முதற் கொண்டு, இரவு வரை வீட்டினிலிருக்கும் அனைத்தும் ரேஷ்மியின் கண்ணசைவில் தான் இயங்கியது.
தேவகி இப்பொழுது எல்லாம், காலையில் நாதனுடன் சிறிது நேரம் நடந்து வருவது, மாலையில் கோவில் சென்று வருவது, முக்கியமாக அவரின் தங்கை சந்திராவை காண செல்வது, இருவரும் மும்முரமாக சரணுக்கு வரன் பார்ப்பது, இரவில் பேர குழந்தைகளுடன் நேரம் கழிப்பது, என்று அவரின் நாட்கள் அழகாக சென்றது.
வீட்டினில் இருக்கும் வேலைகளை கவனிப்பதிலும், குழந்தைகளை பார்த்துக்கொள்வதிலும், விஷாகா அவளின் சுயமரியாதை பறிபோவது போல், நினைத்தாள் .
ரேஷ்மி, அவள் வந்த பிறகு வீட்டின் சூழ்நிலையே மாறிய உணர்வு, குடும்பத்தில் உள்ள அனைவரும் உணர்ந்தனர்.
அவள் இறுதி வருட படிப்பை, இங்கு இருந்து படித்து விடுவதாக கூறியதில் நாதன், மகளுக்கு திருமண வயதும் நெருங்கியதால், இன்னும் சில காலங்கள் மட்டும், மகள் தன்னுடன் இருப்பாள் என்று, வீட்டினில் இருந்தே, கல்லூரிக்கு செல்ல அனுமதி கொடுத்தார்.
அவருக்கும் மகள் தன்னுடன் இருப்பதில் அலாதி சந்தோஷம் .
தேவகி கேட்கவே வேண்டாம், முன்பே கணவர் கூறிய காரணத்திற்காக மட்டுமே அரை மனதாக ரேஷ்மியை விடுதியில் படிக்க அனுமதித்து இருந்தார்.
இப்பொழுது ஆசை மகளை அருகினில் வைத்து சீராட்டலாம் , என்று மகிழ்ந்தார்.
இவ்வாறு, வீட்டினில் வேலை செய்வோரில் இருந்து, பிள்ளைகள் வரை, ரேஷ்மி இங்கு வந்ததில் இருந்து, சந்தோஷத்திலேயே இருந்தனர்.
வீடு உயிர்ப்போடு இருந்தது போல், வீட்டினில் தினமும் அவளின் கலாட்டா, அவள் கூறும் சமையல், தான் அன்று, அவள் இடும் வேலைகள் தான் அனைவரும் செய்தனர்.
ரேஷ்மி அனைவரையும் மதிக்க கூடிய அன்பான பெண், அவளிடம் சிறிதும் அதிகாரம் என்பது இருக்காது, எங்கு கண்டிப்போடு இருக்க வேண்டுமோ, அங்கு அவளின் ஆளுமை வெளிப்படும்.
அவளின் இனம் இது என்று, அவள் விஷாகாவை உணர வைத்தாள் , எந்த அளவிற்கு, விஷாகா அவள் பிறந்த வீட்டினில் செல்லமாக இருந்தாலோ, இங்கு ரேஷ்மி, அப்படி இருப்பது போல், விஷகாவை உணர வைத்தாள் .
ரேஷ்மியும், நீ எதற்கு பயந்தாயோ, அதுவே உனக்கு நடந்து கொண்டிருக்கிறது, என்று சொல்லாமலே அவளிடம் உணர்த்தினாள் .
முதலில், ரேஷ்மியும் வினோத்தும் அவளுக்கு கொடுத்த முதல் அதிர்ச்சி, ரேஷ்மி கல்லூரி சேர்ந்ததும், தனக்கு என்று கார் வேண்டாம் என்று கூறிவிட்டாள் .
தனது தோழிகளுடன், அங்கு விடுதியில் எப்படி அனைவருடனும் சென்று வந்தாளோ , இங்கும் அவ்வாறே செல்வதாக கூறி, பேருந்தில் சென்று வந்தாள் .
அவளின் வசதி, தோழமைக்குள் வர கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் .
நாதன் இப்பொழுது எவ்வளவோ மாறி இருக்கிறார் தானே, ஆகையால் மகளுக்கு பேருந்தில் அவள் தோழிகளுடன் சென்று வர அனுமதியளித்தார்.
வினோத்தும் அதையே, பிள்ளைகளிடம் கொண்டு வந்தான்.
எதுவும் ரேஷ்மி நேரடியாக செயலற்றாமல், வினோத் வழியாக விஷாகாவை தாக்கினாள் என்றே கூறலாம்.
பள்ளி பேருந்தில் மற்ற பிள்ளைகளுடன், சென்று வருமாறு, குழந்தைகளிடம் கூறினான்.
அவர்களுக்கு, இன்னும் அதிக நேரம் அவர்களின் நண்பர்களுடன் நேரம் கிடைக்கும் சந்தோஷத்தில், பள்ளி பேருந்திலேயே சென்று வந்தனர்.
குடும்பத்தினர் அனைவரும் உணவருந்தும் நேரம் வினோத், இப்படி கூறவே, விஷகா முதல் ஆளாக மறுப்பு தெரிவித்தாள் .
"என் பிள்ளைங்க, ஏழை பணக்காரன் பாகுபாடு இல்லாம எல்லாரோடும் நல்ல முறையில் பழகனும்ன்னு நான் நினைக்கிறேன், இதுல உனக்கு எங்க இருந்து, அவமானம் ஏற்படுது , இப்போவே பணம் வசதின்னு பார்த்து வளர்ந்தாங்கன்னா, அடுத்தவங்க கஷ்டம் என்னன்னே உணரமா போய்டுவாங்க."
"அதுவும் இல்லாம, வாழ்க்கையில் எப்பவுமே சுகமா இருக்கனும்ன்னு நினைக்க கூடாது, இப்படி மத்த பிள்ளைங்களோட ஸ்கூல் பஸ்ல போய்ட்டு வரதுல, ஒன்னும் உன் பகுமானம் இறங்காது", என்று குடும்பத்தினர் அனைவர் முன்பும், அவளை கத்தி விட்டான்.
அதில் முகம் சுருங்க அவள் ஒன்றும் செய்யமுடியாமல் மனதில் அவனை அர்ச்சித்தாள் .


























 

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு உங்களின் ஆதரவுக்கு நன்றி பிரெண்ட்ஸ்.
Keep supporting
All take care dears:love:(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top