அன்பின் இனியா 21 4

Advertisement

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு உங்களின் ஆதரவுக்கு மிகவும் நன்றி நட்புக்களே,
அடுத்த பதிவையும் படித்து விட்டு உங்களின் நிறை குறைகளை என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் .
Take care dears

Be safe:)

இலக்கியா அவள் அன்னை வீட்டிற்கு சென்றதும், இந்திராவின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
இளங்கோ, பிள்ளைகள் இருவரையும் தூக்கி சுற்றினான் .
மோகனிடம் அவள் அழைத்து, மாலையே வேலை முடிந்து வர சொன்னாள் .


தான் இங்கு, இன்னும் குறைந்தது, பத்து நாட்களுக்காவது தங்குவதாக கூறி தந்தைக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தாள் .

செழியன் மற்றும், மாமனாருக்கு வந்து சேர்ந்த தகவல், கூறி பிறகு அந்நயை கட்டி கொண்டாள் .
உடனே, இந்திரா பிள்ளைகளுக்கு, பிடித்ததாக உணவு தயாரித்து, அனைவரும் மதிய உணவு உண்டனர்.


இப்பொழுது, கண்களுக்கு நிறைவாக அன்பான கணவன், அழகான இரு பிள்ளைகள் என்று தாய்மையின் பூரிப்போடு, வாழும் மகளை நினைத்து, எந்த அன்னைக்கு தான், மனம் குளிராது.

ஆனாலும், ஒரு பயம் பெற்ற அன்னையாக, அங்கு ஏதேனும் பிரெச்சனையோ, என்று கேட்டார் .
"அம்மா, நான் யார்கிட்ட பெர்மிஸ்ஸின் கேட்கணும், என் வீட்டுக்காரு, அப்பறம் மாமா அத்தை , எல்லாரும் சந்தோஷமா தான் அனுப்பி வெச்சாங்க, மற்றவங்க பற்றி கவலை படாதீங்க, " என்றதிலேயே, தாரணியின் அனுமதி இல்லை என்று தெரிந்து கொண்டார்.


"இல்லை மா, குட்டி மா கல்யாணத்து அப்போ, உனக்கு மாப்பிளை நகை வாங்கி கொடுத்தாருன்னு, சண்டை போட்டா, அந்த கோவம் வேர இருந்தது இப்போ நீ வரத்துக்கும் ஏதாவது பிரெச்சனையா," என்றதும்,
"அம்மா நீங்க பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்லை, நான் ஒண்ணுமே இல்லாமா இருந்தா, அவங்க எப்பவும் சந்தோஷப் பட்டுக்கிட்டு தான் இருப்பாங்க, எனக்கே தெரியாது, அவரு திடீர்ன்னு , ஒரே டைம்ல, இருபது பவுன்னுக்கு, எனக்கு நகை வாங்கி கொடுப்பாருன்னு , இந்த விஷயம் அவங்களுக்கு பொறுக்குல, விடு மா," என்று அன்னையை தேற்றி அடுத்த கதை, என்று வேறு பேச்சிற்கு தாவினர் .


அவர்களின் சந்தோஷத்தை கெடுக்க என்றே, சுமதியிடம் இருந்து அழைப்பு.
"இந்த அம்மா, போன் பண்ணாலே எந்த பிரெச்சனையோ," என்று தவிப்புடன் , அழைப்பை ஏற்றார் .
"சொல்லுங்க அண்ணி, எப்படி இருக்கீங்க,"
"உங்க பொண்ணு , இங்க இருந்தா எப்படி இருப்பேன், இது வீடா இல்லை, என்ன, வந்து இங்க நடக்குற கூத்தை பாருங்க," என்று சிடுசிடுத்தார் .


"இந்த அம்மாவ," என்று இந்திரா பல்லை கடித்தார்.
இளங்கோ, மற்றும் இலக்கியா, கேட்டதும், "என்ன பண்றது, அவளும் ஏதாவது வம்பு இழுக்கிறா, இந்த அம்மாவும், அவ மாசமா இருக்காளேன்னு அக்கறை இல்லாமா, குறை கண்டு பிடிக்குறாங்க, நான் போய் என்னன்னு பார்க்குறேன், அப்பறம் என்னை கூப்பிட்டும், வரலைன்னு ஏதாவது பிரெச்சனை ஆக போகுது," என்று அவர் கிளம்ப தயாரானதும், தங்கையை பார்க்கும் ஆவலில், இலக்கியாவும் உடன் புறப்பட்டாள் .


பிள்ளைகளை இளங்கோவிடம் விட்டு, இருவரும் சென்றனர்.
இனியாவிற்க்கோ, எதுவும் தெரியாது, அவள் அவளின் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, சமையல் அறையை சுத்தம் செய்து, அப்பொழுது ஓய்வு எடுக்க அறைக்கு சென்றாள் .


சுமதி இனியா வந்த நாட்களில் இருந்து, அவரிடம் கேட்காமலே, அனைத்தும் செய்து கொண்டிருப்பது அவரை'கொதி நிலைக்கு கொண்டு சென்றதில், அவரும் இந்திராவை வர வைத்து இதற்க்கு ஒரு முடிவு எடுக்க நினைத்தார்.
அவரின் மனம் முழுதும் ஏதோ, தான் வேண்டாதவளாக இந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வு.
இத்தனை நாள் தன்னை கேட்டே, வேலைகள் செய்த இனியா, இப்பொழுது, ஏதோ, அவளே அனைத்தும் செய்து கொண்டிருப்பதில், இந்த வீடு அவளுடையது போன்றும், தான் இங்கு அகதி போன்றும் ஒரு நினைப்பு.


அவரின் தன்மானம் இதில் அடிவாங்கியது போல், அவர் மீதே ஒரு பரிதாப எண்ணம் உருவாக, மனதில் வேதனையுடன் இருந்தார்.
இதில் மகள் வேறு, ஒரு முறை அழைத்ததற்கு, வினோத் மீதான கோவத்தை அன்னையிடம் காட்டி, அன்பு மற்றும் இனியா விஷயத்தில், தன் மீது கோவமாக இருப்பதாக மட்டும் கூறி வைத்தாள் .
அதில் மகள் அங்கு கவலையில் இருக்கிறாளே, என்ற வேதனை வேறு ஒரு பக்கம் .


அங்கு இந்திராவுடன், இலக்கியவை கண்டதும், இருவரையும் எதுவும் வரவேற்காமல், "உங்க பொண்ணு, என்ன செய்யறான்னு பாருங்க, அன்னைக்கு என்னன்னா, என் பொண்ணு வீட்டுலையே, என்னை மாமியாருன்னு கூட மதிக்காம, எடுத்தெரிந்து பேசுனா, என் கிட்ட சொல்லாமையே, உங்க வீட்டுக்கு, வந்தா, இப்போ, வந்த இத்தனை நாளுல, அவ இஷ்டத்துக்கு, எல்லாம் செய்துட்டு இருக்கா, என்னால, நிம்மதியா சாப்பிட கூட முடியல, என்ன சமையல் செய்யறா," என்றதும், எங்கு மகள் இவர் மீது உள்ள கோவத்தில் அவ்வருக்கு சரியான உணவு கொடுக்கவில்லையோ, என்ற முதலில் நினைத்து, ஆனால் மகள் அது போல் இல்லையே, என்றும் யோசித்து அவர் மகளை காண அவள் எங்கு என்று அவரிடமே கேட்டார் .

ஒரு பக்கம், இப்படி சின்ன விஷயத்திற்கெல்லாம், தன்னை அலைய வைக்கிறாரே, என்ற கடுப்பு வேறு இந்திராவுக்கு .
கீழே மாமியாரின் சத்தம் கேட்டு, இனியா வந்தாள் .
அங்கு அன்னையுடன் அக்காவை கண்டதும், ஓடி சென்று அவளை, கட்டி அணைத்தாள் .


"ஹே பாத்து, மெதுவா நடந்து வா குட்டி மா," என்று இலக்கியா அவளை அணைத்து கொண்டாள் .
"நீ, என் கல்யாணத்து அப்போ, வந்தது, இப்போ தான் உன் தங்கச்சிய பார்க்க தோணுச்சா , எப்படி, அம்மாவோட வந்து சேர்ந்து இருக்கே, நான் போன் பேசாம, இருந்தா இந்த வேலையெல்லாம் ஒர்கவுட் ஆகுதே," என்று கண் சிமிட்டி, அக்கா தங்கை இருவரும், அவர்களின் உலகில் இருந்தனர்.


"இந்த கொஞ்சல் ரொம்ப முக்கியம் இப்போ," இங்கு மகளை காண முடியா கடுப்பு சுமத்தியிடம் .
இந்திராவும் சுதாரித்து, "என்ன குட்டி மா, என்ன இங்க சண்டை, ஒழுங்கா சமையல் செய்யலையா," என்றதும் அவளுக்கும் உடனே அனைத்தும் புரிந்தது.


அவரிடம் கேட்காமல், செய்ததற்க்கா இந்த ஆர்பாட்டம், அனால் தான் செய்யும் செயலுக்கு எதற்கு இப்படி அன்னையை அலைக்கழிக்கிறார், என்று அவளும் இன்று இருக்கிறது இவருக்கு என்று நினைத்து, "அம்மா, முதல்ல வெயில்ல, வந்து இருக்கே, வா வந்து உட்காரு" .

இருவருக்கும் தண்ணீர் கொடுத்து உபசரித்து, என்ன குடிக்கீறீங்க, மணி மூன்று ஆகுது, ஏதாவத ஜூஸ் கொடுக்கட்டா , இல்லை, டீ போடவா," என்று கேட்டாள் .
"முதல் நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு மா, " இந்திரா கூறியதும்,


"அம்மா நான் இன்னைக்கு, அதிதிக்கு, அவ கேட்டான்னு, டொமேட்டோ பிரியாணியும், உருளைக்கிழங்கு வறுவலும், செய்து கொடுத்தேன்."
"இப்போ, எங்களுக்கு, சுண்டைக்காய் குழம்பும், கேரட் பொரியலும், ஆம்லேட்டும் செய்தேன், அதையே உன் மாப்பிள்ளைக்கும் கட்டி கொடுத்தேன்."


"இதோ இப்போ, அதிதியும் வர நேரமாச்சு, சாயங்காலத்துக்கு, ஏதாவது சுண்டல் செய்யணும், இன்னும் கொஞ்ச நேரத்தில, அந்த வேலை ஆரம்பிச்சிடுவேன்."
"நான் இதுல, ஏதாவது சரியா செய்யலையா, எனக்கே தெரியலை, நான் நம்ம வீட்டுல இருந்து வந்ததுல இருந்து, தினம் ஏதாவது ஒரு காயோட, சமையல் செய்யறேன், தினம் சுண்டல், பழம்ன்னு மாலை, சாப்பிடறோம், இவங்களை நான் நல்லா தான் கவனிக்குறேன்.


"உனக்கு ஆரம்பத்தில இருந்து சொன்னா தான் எல்லாம் புரியும், இவங்க சப்புன்னு, ஒரு சாம்பார் செய்ய சொல்லுவாங்க, ஒரு பொரியல் கூட தொட்டுக்க இருக்க கூடாது."
"இது எதுனாலன்னு, நானும் நினைச்சு பார்த்த அப்போ தான் தெரியுது, அவங்களுக்கு சரியா சமையல் வராது, எங்க நான் நல்லா செய்து, என் புருஷன் என்ன பாரட்டிட்டா, அதான் இப்படி."


"ஆனா, இப்படியே, எத்தனை நாளுக்கு மா, நாங்களும் சாப்பிடறது, அந்த அதிதி பொண்ணு , எப்படி இருக்கா பார்த்த தானே, நானும் இந்த மாதிரி நேரத்தில இப்படி சாப்பிட்டா, என் குழந்தைக்கு, எப்படி வளர்ச்சி இருக்கும் சொல்லு" என்றதும், இந்த விஷயமா இதுவரை இனியா கூறாதது, அன்னையாக அவருக்கு அதிர்ச்சி என்றால், மருமக கர்ப்பமாக, இருக்கும் செய்தி, தன்னிடம் கூறவில்லையே, என்ற அதிர்ச்சியும் வேதனையும் சுமதியிடம்

"குட்டி மா, பெரியவங்க, ஏதாவது ஒன்னு சொல்லிட்டு தான் இருப்பாங்கன்னு தான், நான் உன்னை பொறுத்து போக சொன்னேனே தவிர, இந்த மாதிரி சாப்பாடுக்கு கூட கட்டுப்பாடு விதிக்கிறதை எல்லாம் பொறுத்து போகணும்ன்னு அவசியம் இல்லை."

இந்திரா, மகள் உணவு விஷயத்தில் கூட, இப்படி, இவர்களிடம் தன்னை வருத்தி கொண்டிருக்கிறாள் என்று அவரின் உள்ளம் வருத்தம் கொண்டது .
யாருக்காக, பெற்றவர்கள் ஒரு வார்த்தை அவர்களுக்கு எந்த கெட்ட பெயரும் வர கூடாது என்று அவர்களின் ஆசா பாசங்கள் அனைத்தும் ஒதுக்கி வாழும் இந்த வாழ்க்கை, இறுதியில் அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது.


"சுமதியின் பக்கம் திரும்பிய, இந்திரா "இங்க பாருங்க, ஒன்னும் சாப்பாடுக்கு வக்கில்லாம எங்க பொண்ண உங்க பையனுக்கு கட்டி கொடுக்கல, இல்லை, தெரியாம தான் கேட்குறேன், வசதி, தகுதின்னு பெருமையா சொல்றீங்களே, உங்க அகராதியில் எது மா, வசதி."

"ஒரு வேலை சாப்பாடு, வாய்க்கு ருசியா சாப்பிட முடியலைன்னா, அப்பறம் அந்த வீட்டுல, எங்க இருக்கு வசதி, என்னை பொறுத்த வரைக்கும், நீங்க சாப்பாட்டுக்கே, நிலையில்லாத, ஏழையா தான் எனக்கு தெரியுது."
"அவ எதுவும் செய்யலைன்னாலும் பரவாயில்லை, நான் அவளை கண்டிப்பேன், ஆனால் எல்லாம் ஒழுங்கா செய்து உங்களை கவனிக்கிறா, அது கூடவா உங்களுக்கு குறை ."
"ஒரு பொண்ணு, அவளுக்குனு உரிமையா, அவளுக்கு தோன்றதை செய்யற ஒரு விஷயம்ன்னா அது சமையல் தான்.


அங்கேயும் அவ உரிமையை தட்டி பறிக்க நினைக்காதீங்க, அப்படியே, அந்த பொண்ணு செய்தா கூட, அவ வீட்டுல இருக்குறவங்களுக்கு ஏற்றது போல தான், அங்க இருக்குறவங்க விருப்பத்துக்கு தான் செய்வா, அவளுக்கு பிடிச்சதுன்னு செய்யறதை விட, வீட்டுல இருக்குறவங்க புருஷனுக்கு, பிள்ளைக்குனு தான் பார்த்து பார்த்து செய்வா .
உங்களுக்கு மூணு பசங்க, உங்களுக்கு தெரியாததா."


"அதுவும் இல்லாம, இப்போ மாசமா இருக்கா உங்க வீட்டு வாரிசு, வர போகுது . இந்த மாதிரி நேரத்தில கூட அவளோட நல்ல முறையில உங்களால நடந்துக்க முடியலைன்னா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு."
"இன்னொரு முறை இந்த மாதிரி உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம், என்னை தொந்தரவு கொடுத்துட்டு இருந்தீங்கன்னா, நான் அப்பறம் மாப்பிளை கிட்ட பேச வேண்டி வரும் பார்த்துக்கோங்க ," என்று அவர் மீதான, இத்தனை நாள் வருத்தம் அனைத்தும் கொட்டி முடித்தார்.
"குட்டிமா, நீ ஒழுங்கா சாப்பிடு, விளகேத்தும் போது , கொஞ்ச நேரம் சாமி புத்தகம் படி, நல்ல விஷயங்கள் மட்டும் தான் உன் சிந்தனையில் இருக்கனும், அதுனால் பார்த்துக்கோ, இந்தா, வரும் போது சத்து மாவு எடுத்துட்டு வந்தேன், வீட்டுல எல்லாருக்கும் கொடு, நீ, ஒரு நாளுக்கு இரண்டு வேலைன்னு, குடி, சரியா, பத்திரம் " என்று கிளம்பினார்.


இலக்கியாவும், கண்களால் தங்கையை சமாதானம் செய்து, அன்னையுடன் புறப்பட்டு விட்டாள் .
இனியா, அவரை ஒரு முறை பார்த்து விட்டு, அமைதியாக அறைக்குள் சென்று படுத்து விட்டாள் .


சுமதிக்கு இது தேவையா என்று தான், இனியாவிற்கு தோன்றியது.
"எதுக்கு இப்படி சின்ன பிள்ளை தனமா நடந்துக்குறாங்களோ, என்று ஒரு சலிப்புடன் அவள் நினைத்து கொண்டாள்.

சுமதி, எப்பொழுது, இனியா அவளின் குழந்தை பற்றி, கூறினாளோ, அப்பொழுததே, சிலையென உறைந்து நின்றவர், தான் அதன் பிறகு, இந்திரா கூறிய அனைத்துக்கும் தலை குனிந்து, அனைத்தும் கேட்டு கொண்டு, நின்று கொண்டிருந்தார்.

அவர் மனதில் பல விஷயங்கள், ஊர்வலம் போக, கட்டிய, கணவனின் நிராகரிப்பு, அன்புவை தவிர, விஷாகவும் சரி, அதிதியும் சரி, என்றும் சுமதியை மதித்து அவருக்கு மதிப்பளித்ததில்லை.

இப்பொழுது, தன்னிடம் நல்ல, முறையில் நடந்து கொண்ட மருமகளிடமும் தன் பெயரை கெடுத்து கொண்டதன் விளைவு, இந்த வீட்டின் வாரிசின் வரவு, மருமகள் தன்னிடம் கூறாமல் இருந்தாளே, என்று வருந்தினார் .
அவரால் ஒரு நிலையில் இருக்க முடியாமல், அவரின் கடந்த காலத்தின் வருத்தங்களை, அவரின் தற்போதைய, எண்ணம், விஷாகா எப்படி அவளின் உயிரானாள், என்று அவரின் மனம் திறக்க, இனியாவை காண, அவளின் அறைக்கு சென்றார்.

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top