அன்பின் இனியா 21 3

Advertisement

n.palaniappan

Well-Known Member
நட்புக்களே, இதனின் அடுத்த பதிவு, நாளை, காலை
சென்ற பதிவிற்கு உங்களின் கருத்துக்களுக்கு எனது நன்றி.
இந்த பதிவிற்கும் உங்களின் ஆதரவு வேண்டும் பிரெண்ட்ஸ்

All take care
Be safe:)(y)

"இலக்கியா, நீ யார் வீட்டுல இருந்துட்டு இப்படி பேசுறேன்னு தெரியுதா, யாரை கேட்டு, என் மாமியாருக்கு, போன் போட்ட, இங்க இருக்குற, என் கிட்ட தான பெர்மிஸ்ஸின் வாங்கணும், நான் வந்து இருக்கேன், என்னை கவனிக்காம, நீ உங்க வீட்டுக்கு போவியா, "
இலக்கியா தாரணியின் மாமியருடன் பேசி முடித்ததும் தாரணி அவளிடம் சண்டைக்கு நின்றாள் .
இலக்கியா, அவளின் ஆவேசத்தில் பதறவோ, இல்லை பதிலளிக்கவோ இல்லை.
என்னவெல்லாம் கத்த வேண்டுமோ, கத்தி முடிக்கட்டும் என்று பொறுமையாக, அவளின் முன் கை கட்டி நின்று அவளையே பார்த்து கொண்டிருந்தாள் .
என்றும் இல்லாமல், இன்று இலக்கியாவின் மாமியார், அமைதியாக இருப்பது, வேறு இலக்கியாவிற்கு, "இவராவது, இன்று மகளுடன் சேர்ந்து பேசாமல் இருக்கிறாரே, அதுவே போதும்" என்று தான் நினைத்து கொண்டாள் .
ஏன் செழியனின் தந்தை கூட, இலக்கியாவின், இந்த மாற்றம் கண்டு, மனதில் மகிழ்ச்சி தான்.
ஏதேனும், இதற்கும் ஒரு முடிவு பிறக்கட்டும் என்று தான் அமைதியாக இருந்தார்.
"என்ன பேசிக்கிட்டே இருக்கேன், நீங்க வேற சும்மா இருக்கீங்க மா," என்று அன்னையை வேறு துணைக்கு அழைத்தாள் .
"தன்னிடம் பேசும் போது, இருக்கும் பயம் துளியும் இல்லாமல், இப்படி நேருக்கு நேராக அவள் நிற்கும் தோரணையே, இலக்கியாவின்புது அவதாரம், அவள் இனி, அடங்கி இருப்பாள், என்ற நம்பிக்கை இல்லை, அது அவருக்கு புரிந்தது, மகளுக்கு புரியவில்லையே, என்ற பயம் அவரை சூழ்ந்துகொள்ள மகளை அடக்க முயற்சித்தார் .
"தாரணி, உனக்கு என்ன இப்போ, அவ போறான்னா, விடேன், செழியா அனுப்புறானோ, என்னவோ," என்று மகளை அடக்கினார்.
அது மேலும் தாரணியின் ஆவேசத்திற்கு, தூபம் போட்டது போல், தான் ஆனது, அவள் இது வரை நினைத்து நடத்தி கொண்டு வந்த, நாத்தனார் தர்பார், எங்கு குடை சாயுமோ, என்ற பயம் .
"என்ன மா, உனக்கு ஒன்னும் இல்லையா, நீயும் அவளை அனுப்புற, அவளுக்கு இந்த துணிச்சல் எங்க இருந்து வந்தது, அப்பறம் எல்லா வருஷமும் இப்படியே, நடந்துப்பா, எங்க அம்மா வீட்டுக்ன்னு நான் வரும் போது, எனக்கு இவ தான எல்லாம் செய்யணும், இவளுக்கு இந்த துணிச்சல் எப்படி வந்ததுன்னு எனக்கு தெரியும்." "நம்ம வேண்டாம்ன்னு சொல்லியும், இவ தைரியமா, அதுவும் என் மாமியாருக்கே, போன் போடுறான்னா, அவங்க வீட்டுல சொல்லி தான் இப்படி செய்யறா, என்ன பொண்ணை வளர்த்து இருக்காங்களோ," என்றதும், அதுவரை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த இலக்கியாவின் பொறுமை, பறந்தது.
"இதுக்கு மேல, சும்மா எங்க வீட்டை பற்றி பேசினா, பேச நாக்கு இருக்காது பார்த்துக்கோ, ஒருமையில் வந்த அவள் வார்த்தைகள், அதுவும் விரல் நீட்டி எச்சரித்தது, வேறு, அவளின் ஆவேச குரலில், வெளியே விளையாடி கொண்டிருந்த நான்கு பிள்ளைகளும் வீட்டினுள் வந்து விட்டனர்.
அங்கு அவர்கள் கண்ட காட்சி, தாரணியின் வெளிறிய முகம், தாரணியின் பிள்ளைகளுக்கு, இலக்கியா அவள் அன்னையை விரல் நீட்டி எச்சரித்து கொண்டிருப்பதை பார்த்ததும் பதின் வயதில் இருக்கும் அவர்களுக்கு, இலக்கியாயாவின் மீது கோவம் வந்தது.
"அத்தை, என்ன செய்யறீங்க, எங்க அம்மாவை, மிரட்டுறீங்க, நான் இப்போவே, எங்க வீட்டுக்கு சொல்றேன்," என்று தாரணியின் மகன் ராஜேஷ் அவளிடம் சண்டைக்கு நின்றான் .
ஒரு நிமிடம், அவளுக்கு மனம் வருந்தியது, இப்படி பிள்ளைகள் தன்னை கெட்டவளாக, நினைத்து கொண்டனரே, என்று.
ஆனால், இப்படியே, போனால், சரி வராது, என்று அவளும் தன் மனதை சமன் செய்து கொண்டு , தாரணியை விட, தாரணியின் மகனுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தாள் .
"ஓஹ், ராஜேஷ் உங்க அம்மாவ, நான் மிரட்டுறேன் இல்லை, தப்பு தான் ராஜேஷ்,உங்களுக்கு நீங்க கேட்குறது எல்லாம் செய்து தந்தா, இந்த அத்தை நல்லவ, இல்லை, எதுவும் செய்யமா, உங்க மேல தப்பு இருந்து, அது நான் கேள்வி கேட்டுடா தப்பா, பா,"
"நாங்க என்ன தப்பு பண்ணோம் அத்தை , எங்க அம்மா என்ன தப்பு பண்ணாங்க, இங்க லீவுக்கு வந்தா, நீங்க எங்க அம்மாவ மிரட்டுறீங்களா," என்று ஒன்றும் புரியாதா, இரண்டும் கெட்டான் வயதில் இருப்பவனின் கோவம் கண்டு இலக்கியாவிற்கு, அவன் மீது துளியும் வருத்தம் இல்லை, இன்னும் கூற போனால், அன்னைக்காக பேசுகிறான், வருங்காலத்தில் நியாயவாதியாக தான் இருப்பான், என்று மகிழ்ந்தாள் .
இலக்கியாவின் பதிலுக்கு அவன் காத்திருப்பது தெரிந்து, "உன்னை நினச்சா, எனக்கு பெருமையா இருக்கு "ராஜேஷ், நீ சொல்ற பாய்ண்டுக்கே, நான் வரேன், லீவு டைம் ஆச்சுன்னு, இங்கே வரேன் சொல்றீங்க தானே, அப்போ, தர்ஷனும், தர்ஷினியும் கூட லீவு நாட்கள்ல, அவங்க தாத்தா பாட்டி வீட்டுக்கு போகணும்ன்னு ஆசையா இருக்காதா, சொல்லு பா," என்றதும் அவனும் யோசிக்க ஆரம்பித்தான் .
"போனும் தானே அத்தை,"
"கரெக்ட் போகணும் இல்லையா, உன்னோட அம்மா, எங்களை போக விடாம தடுக்குறாங்க, எனக்கு எப்படி இருக்கும் நீயே சொல்லு பா , நான் எதுவும் மிரட்டல, ராஜு .நான் போறதால, இவங்குளுக்கு என்ன பிரெச்சனை".
"இவங்க பேரன்ட்ஸ் பார்க்க இவங்க வராங்க, என்னோட பேரன்ட்ஸ் பார்க்க, நான் போறேன், இவங்க உங்களுக்கு ஸ்கூல் திறக்க, ஒரு நாள் முன்ன தான் போவாங்க, அதுவரைக்கும் நானும் இங்கேயே இருக்கணும்ன்னா எப்படி பா, இங்க என் பசங்களுக்கும் ஸ்கூல் திறக்கும் தானே."
"அம்மா, அத்தை சொல்றது எல்லாம் கரெக்ட், எதுக்கு இப்படி பண்றீங்க, நான் நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நினைக்கவே இல்லை ."
மகனிடம் என்ன கூறுவது என்று இலக்கியாவை முறைத்த தாரணி, "உங்களுக்காக தான் ராஜேஷ், இங்க யாரு சமையல் செய்வா, பாட்டிக்கும் வயசாகுது, தானே "
"அம்மா, நீங்க அங்கேயும் சமையல் செய்ய மாடீங்க, இங்க அத்தை இல்லைன்னா, இங்கயாவது எங்களுக்கு சமையல் செய்து தாங்க மா, இல்லையா, நம்ம, நம்ம வீட்டுக்கு போகலாம், லீவு எப்பவும் இங்கேயே கூட்டிட்டு வரது போர் அடிக்குது, இங்க இருந்தா எங்கேயும் போகவும் முடியமா செம்ம போர்," என்று தேவியும்
(தாரணியின் மகள்) கூறினாள் .
"ஹே என்ன டீ வாய் நீளுது, நான் ஏன் டீ செய்யணும், அதான் உன் பாட்டி உனக்கு அங்க வக்கனையா செய்றாங்களே," என்று மகளை, இலக்கியா முன்பு கூறிய அவமானத்தில் திட்டினாள் .

"என்ன பசங்கள, தூண்டி விடுறியா, எனக்கு தான் இந்த வீட்டுல முதல் உரிமை, சும்மா இங்க நின்னு வெட்டியா பேசாம, போ, போய் வேலையா பாரு, சும்மா, புது புது முடிவு எல்லாம் நீயே எடுக்காத," என்றதும், ராஜேஷ் மற்றும் தேவிக்கே,அன்னை அவர்களின் அத்தையிடம் பேசியது, சரியில்லை என்று கருதி,
"ஏன் மா, இவ்வளவு ஹார்ஷா, பேசுறீங்க, எங்களுக்கு, எங்கேயும் போகாம, வீட்டுலையே, இருக்க போர் அடிக்குது, எல்லா, ஈயரும், இங்கயே, கூட்டிட்டு, வரீங்க, ப்ளீஸ், அட்லீஸ்ட், அத்தையாவது, அங்கே போகட்டும், நீங்க ஏன் அத்தைய தடுக்குறீங்க தான் எனக்கு தெரியலை."
"நாமளும் நம்ம வீட்டுக்கு போகலாம், " என்று பிள்ளைகள் கூறியதும், இலக்கியா மீண்டும் ராஜேஷிடம் பேச வேண்டிய அவசியம் உணர்ந்து, அவர்களுக்கும் தெரியட்டும் என்றே கூறினாள் .
இங்க உங்களுக்கு, என்ன இல்லை, டிவி ஏசி எல்லாம் இருக்கு தானே, என்று கேட்டாள் .
"என்ன அத்தை, இது மட்டும் போதுமா, இங்க இருந்து, ரோடு ரொம்ப தூரம், எங்கேயும் சட்டுன்னு போக முடியலை, என்றதும், அதுக்கு யார் காரணம்ன்னு தெரியுமா, என்றதும் தாரணியில் முகம் பயத்தில் வெளியது.
என்ன சொல்ல போறாளோ, என்று அங்கு இவள் காய் கால்கள் வெட வெடக்க, தவித்தாள் .
"உங்க தாத்தாக்கு அவர் பிசினஸ் லாஸ் ஆனதால், கொஞ்சம் பண கஷ்டம் வந்துச்சு .
அப்போ
உங்க மாமா , பாட்டிகிட்ட கொடுத்திருந்த, அவரோட, பணம், கேட்ட பிறகு தான் தெரிந்தது, உங்க மாமா, சம்பாரிச்ச, எல்லா காசும், உங்க பாட்டி, எல்லா மாசமும் உங்க அம்மா, அக்கோன்ட்டுக்கு, அனுப்பிடிவங்கன்னு."
"யோசி பா, உங்க வீட்டுல அப்படி என்ன கஷ்டம், உன்னோட தாத்தா பாட்டியும் சரி, உங்க அப்பாவும் நல்ல வேலையில இருக்குறாரு".
"ஏன் உன் அம்மாவுக்கும், ஒரு வீடு வாங்கி கொடுத்து, அந்த வாடகை காசும் உங்க அம்மா பேருக்கு தான் வருது".
"இது எல்லாம் இருந்தும், எந்த தைரியத்தில, உங்க மாமாவோட, உழைப்பை, உங்க அம்மா சுருட்டிக்கிட்டாங்க".
"இதோ இவங்க தான் ஏதோ பொண்ணு பாசத்துல கொடுத்தாலும், தம்பி காசு வேண்டாம் மா, அவனுக்கு ஒரு குடும்பம் இருக்குன்னு, ஏன் உன் அம்மா சொல்லலை" .
"எங்கேயும் போக முடியலைன்னு சொன்னே, எப்படியோ, ஒரு வழியா, இவரு வேலைய விட்டு, அதுல வந்த காசை வெச்சி கொஞ்சம், பணம் புரட்டி, இருக்குற கடனை அடைச்சு, மீதி காசுல, இந்த வீடு தான் எங்களால, வாங்க முடிஞ்சுது."
"இப்போவாவது கொஞ்சம் பரவாயில்லை, இங்க லைட் எல்லாம் போட்டு இருக்காங்க .
கொஞ்சம் நிறைய வீடு இப்போ கட்டிட்டு குடி வர அராம்பிச்சிட்டாங்க .
தர்ஷி குழந்தையா இருக்கும் போது, இங்க ஸ்ட்ரீட் லைட் கூட இல்லை, இரண்டு சின்ன குழந்தைங்களை வெச்சி கிட்டு , வயசானவங்கள வெச்சிக்கிட்டு, உன் மாமா வர வரைக்கும் நான் எப்படி இருந்து இருப்பேன்னு யோசி பா".
"தர்ஷி பாப்பாக்கு உடம்பு முடியாத டைம், சட்டுன்னு ஹாஸ்பிடல் போக முடியாது .
"ஏன் எதுவும் வேண்டாம், உன் மாமா வேலை செய்யற, மெக்கானிக் ஷெட்ல போய் ஒரு அஞ்சு நிமிஷம் இந்த வெயில்ல உங்க அம்மாவை, போய் இருந்துட்டு வர சொல்லு பாப்போம்".
"அவரோட, இந்த நிலைமைக்கு யார் காரணம் .
இன்னும் அவரோட ரத்தத்தை குடிச்சி என்ன செய்ய போறாங்க," என்றதும், செழியனின் அன்னைக்கும் அழுகை வந்து விட்டது..
முன்பு தெரியாத தவறெல்லாம், இப்பொழுது அவரின் கண் முன் வந்து காட்சியளித்தது,
அவரும் மகனின் அயரா உழைப்பை, பார்த்து கொண்டு தானே இருக்கிறார் .
"என்னை மன்னிச்சுடு இலக்கியா மா, இப்படி எல்லாம் ஆகும்ன்னு அப்போ எனக்கு தெரியாம போச்சு, நீ சொல்லும் போது என்னோட தப்பு எல்லாம் எனக்கு தெரிய வருது, அந்த வேலைய விட்ட பிறகு, அவன் இப்போ படுற கஷ்டம், எனக்கு கவலையா இருக்கு , அவனும் என்னோட சரியா பேசுறது இல்லை .
அந்த கோவம் தான், அதுக்கும் நீ தான் காரணம்ன்னு நான் உன் மேல முட்டாள் தனமா கோவ படுவேன் ."
"என் மனசறிஞ்சு சொல்றேன், நீ நல்ல மருமக மா "
"அவனை என்கூட பேச சொல்லு மா, "என்று அவர் கெஞ்சியதும் இலக்கியாவிற்கும் வருத்தமாகியது .
முடிந்த விஷயத்திற்கு, யார் என்ன மாற்றம் கொண்டு வர முடியும், "அத்தை உங்களை, சொல்லி காட்டணும்ன்னு நான் சொல்லலை , என்னால இதுக்கு மேலயும் பொறுத்து போக முடியலை, இனி எப்பவும் இழந்த நாட்கள் மீண்டு வராது, ஆனா, இன்னும் இவங்க பேராசைக்கு, நான் என் புருஷனோட, உழைப்பை, விட்டு கொடுக்க முடியாது,"
" உங்க மருமகளா, நான் கண்டிப்பா, என் கடமையை செய்வேன், ஆனா இவங்களை மட்டும் என்னால பொருத்துக்கவே முடியாது."
"ஹே," என்று அவளின் கூச்சலை தடுத்து நிறுத்திய, இலக்கியா , "என்னோட, அப்பா அம்மாவை சொல்றதுக்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை, நீ ஏமாத்திய அப்போவே, பொண்ணு கொடுத்து இருக்கோம், உங்க பொண்ணு இப்படி செய்யலாமான்னு வந்து எங்க வீட்டுல கேட்காம போய்ட்டாங்க பாரு, அது தான் அவங்க செய்த பெரிய தப்பு" .
"என் புருஷனுக்காக மட்டுமே, உன்னை பொறுத்து போக சொன்னாங்களே தவிர, உனக்கு பயந்து ஒன்னும் நான் அமைதியா இல்லை".
"இதுக்கு மேலயும், என்னை ஏதாவது சீண்டிட்டே, இருந்தா, அடுத்த போன், உன் வீட்டுக்காரருக்கு தான் போகும், அதுவும் என்ன சொல்லுவேன் தெரியுமா,"
"நீ ஏமாத்தி என் வீட்டுக்காரார் காசை சொரண்டுனியே, அது எல்லாம் சொல்லுவேன், அது அண்ணனுக்கு எவ்வளவு அவமானம், அது நினைப்புல வெச்சி இனி பார்த்து இருந்துக்கோ."
"வந்தியா இந்த வீட்டு மருமகளா , உனக்கு செய்யவேண்டிய, மரியாதை நாங்க செய்வோம், அதோட உன் எல்லையில நீ இருந்தா உனக்கு மரியாதை".
"மாமா, மாத்திரை எல்லாம் வாங்கி வெச்சிட்டேன், ஏதாவது அவசரத்துக்கு வேணும்னா, நம்ம பக்கத்து வீட்டுல இருக்க, அண்ணா கிட்ட கேளுங்க."
"அத்தை , மாவு அரைச்சி வெச்சிருக்கேன், கொஞ்சம் தக்காளி தொக்கு செய்து இருக்கேன், சட்னி அரைக்க முடியாத அப்போ, அது யூஸ் பண்ணுங்க."
"கொஞ்சம் தோட்டம் மட்டும் தண்ணி விட்டு பார்த்துக்கோங்க, அத்தை , " அவளின் மாமியார், சந்தோஷத்துடன், அவளை சென்று வரு மாறு கூறினார்.
"ராஜு, சும்மா, போகணும்னு குதிக்காத, சரியா, உன்னை நம்பி தானே தாத்தா, பாட்டியை விட்டு போறேன், டென் டேஸ் பார்த்துக்கோ," என்றதும், அவளின் கைகளை பிடித்து கொண்டு ,"அத்தை உங்க கிட்ட சத்தம் போட்டுட்டேன் சாரி , அம்மா இப்படி செய்வாங்கன்னு தெரியாது, நான் பெரிய பையனா, ஆனதும், நான் இந்த காசை, மாமாக்கு திருப்பி கொடுக்குறேன்," என்றதும், அவனின் தலை முடியை கோதி,
"நான் எல்லாம் செய்துட்டு சொல்லி காட்டுறேன்னு தப்பா நினைக்காத பா, உங்க வீட்டுக்கு எதுவும் தெரியாது, ஆனா உங்க அம்மாவ, ஜஸ்ட் இப்படி மிரட்டி வெச்சா தான் அவங்க அடங்குவாங்கன்னா, இப்படி தான் செய்தாகணும், நீ இப்படி, நியாயமா பேசுற பாரு, அதுவே எங்களுக்கு போதும், எதுவும் வேண்டாம்," என்று கூறி அன்னை வீட்டிற்கு செல்ல தயாரானாள் .
அங்கு மகன் மற்றும் மகளின் முறைப்பை கண்டு தலை குனிந்து, யாரையும் பார்க்க முடியாமல் முகம் கருத்து அமர்ந்து விட்டாள் தாரணி.
அவள் திருந்துவாளா, அது அவள் கையில் மட்டுமே.
இதுல்லாம் கதையில மட்டும்தான் சாத்தியம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top