அன்பின் இனியா 21 1

Advertisement

achuma

Well-Known Member
Hai friends
thanks for all your support
here is the next episode
take care

அன்புவிற்காக, கணவன் தன்னை அடித்ததை, இப்பொழுது, வரை, அவள் மனது ஏற்க மறுத்து, இவ்விஷயத்தை பெற்ற அன்னையிடமும் கூற, அவள் தன்மானம், தடுத்தது.
"இராஜ் டெக்ஸ்டைல்ஸ் ஓனர், இப்படி கணவனிடம் அடி வாங்குவதா ."என்ற சிந்தனை .
விஷாகா யாரு, மண்ணை தின்னாலும் மறைவா, தின்னணும்ன்னு , நினைக்கும் ரகம் அல்லவா .

இனியா, அவள் அறையில் சென்று முடங்கி கொண்டவள், வெளியே வரவேயில்லை.
மோகனும் மகளின் வரவுக்கு காத்திருந்து, பிறகு, இந்திரா அவரை மகள், சிறிது நேரம் ஓய்வெடுக்கட்டும், என்று கூறி, வேலை முடிந்து வந்து பிறகு, ஆசை மகளை, சீராடலாம் என்று அவரை கிண்டலடித்து, மோகனை வேலைக்கு வழியனுப்பி வைத்தார் .
அரை மனதாக, அவரும் வேலைக்கு புறப்பட்டு சென்றார் .
இளங்கோவுக்கும் அதுவே, இது வரை வீட்டினில் இனியா இருந்தால் , அவளுடன் தான் அவனின் பொழுது போக்கே, ஆனால் , அவன் அக்காவின் அமைதி, அவனையும் பாதித்தது.
அன்னை கூறிய பின்பு இனியாவிற்கு தனிமை, கொடுத்து, இளங்கோ அவன் நண்பர்களை காண சென்றான் .
காலை, உணவு இந்திரா வற்புறுத்தி கொடுத்த பின்பே உணவுண்டாள்.
அன்னை சென்றதும், மீண்டும் சோர்ந்து படுக்காமல், இளங்கோ அவன் புத்தகம் வைத்திருக்கும் அலமாரியை பார்த்து, அவனை திட்டி கொண்டே, ஒழுங்க படுத்த ஆரம்பித்தாள் .
காலை வேலைகள் முடித்து விட்டு, மகள் அறைக்கு வந்த இந்திரா, அவள் புத்தகம் அடுக்கி கொண்டிருப்பதை, கண்டதும், அவள் கையினில் இருந்து பறித்து," இங்க வந்தியா, இது எல்லாம் செய்துட்டு இருக்காதே, அங்க தான் எல்லா வேலையும் செய்யிறே, அம்மா வீட்டுக்கு வந்தா ரெஸ்ட் எடு குட்டிமா, அவன் இப்படி தான் வெச்சி இருப்பான், நீ கிளீன் பண்ணாலும் திருப்பி இரண்டு நாளுல, கலைச்சிடுவான் ."
தன் அன்னையா இது என்ற கேள்வி மனதில் எழுந்ததும் அதை கேட்கவும் செய்தாள் .
"ஏன் மா, என்னையும் அக்காவையும், கொஞ்ச நேரம் கூட சும்மா இருக்க விடமாட்டே, இப்போ, இப்படி சொல்றே,"
"அது, நீங்க போற இடத்தில, எந்த வேலையும் தெரியாம முழிக்க கூடாதுன்னு, சொல்றது, ஆனா அதே பொண்ணு கல்யாணத்துக்கு பிறகு, அம்மா வீட்டுக்கு வந்தா, எந்த தாயும், அவளை உள்ளங்கையில், வைத்து தாங்காத குறையா தாங்குவா."
"இது எல்லாம் நாங்க சொல்லும் போது, பசங்களுக்கு சலிப்பா இருக்கும், ஆனா, அவங்க நல்லதுக்குனு, அப்போ தெரியாது."
"ஆமா என்ன வேலை தெரிந்து என்ன பிரயோஜனம், போ மா, எது செய்தாலும் குறை தான் சொல்றாங்க ."
இப்பொழுதே, வாழ்க்கையில் சலிப்பு வந்தால் எப்படி, என்று தாயுள்ளம் பதறியது.
மகளின் அருகில் சென்று அமர்ந்து, அவளின் எங்கோ செலுத்தும் வெறித்த பார்வையை, கண்டு மனம் துணுக்குற்று, அவளை தேற்ற, முயற்சித்தார்.
அன்னை தன் அருகில் அமர்ந்ததும், இனியா, அவர் மடியில் தலை வைத்து படுத்து கொண்டாள் .
அவர் கை தானாக மகளின் சிகையை கோத, "குட்டிமா, நீ நேத்து துருவி துருவி, உன் மாமியார் எனக்கு போன் போட்டாங்களான்னு , கேட்கும் போதே, நீ இப்படி ஏதாவது செய்வேன்னு, நினைச்சேன் . எதுக்கு உனக்கு இவ்வளவு கோவம்."
"யார் மேல தப்புன்னாலும், அதை உடனே தட்டி கேட்கணும் நினைக்கிற உன் எண்ணம் எல்லாம் குடும்பத்துக்கு சரி வராது மா, மாப்பிள்ளையோட சண்டை போட்டு இருக்கே. நான் முன்னமே சொல்லி இருக்கேனா, இல்லையா, உங்க வாழ்க்கைக்கு நடுவுல, எந்த ஒரு பிரெச்சனையும் மைய படுத்தி பேசாதீங்க, எந்த விஷயத்தையும் உங்க இரண்டு பேருக்கு நடுவுல கொண்டு வாராதேன்னு ."
"நேத்தே, பொறுமையா இருன்னு ஏன் சொன்னேன், அந்த விஷாகா பொண்ணு, அவங்க அம்மாவை தூண்டி விடுறா, அது உங்க குடும்பத்துக்குள்ள, பிரச்சனையை இழுத்து விடும்ன்னு தான் உன்னை, பொறுமையா இருக்க சொன்னேன்.
ஒரு இடத்தில, வாக்கு வாதம்ன்னா, யாரவது ஒருத்தர், அந்த இடத்தில அமைதியா போன்னா, அந்த பிரெச்சனை அப்போவே முடிஞ்சிடும்."
"இது நீ வேலை பார்த்த கம்பெனி இல்லை, உன் கண் முன்ன நடக்குற தப்பை இங்கே கேள்வி கேட்க, அப்படி வீட்டிலும் செய்யணும் நினைச்சா, குடும்பத்தில அமைதி இல்லாம போய்டும்."
இந்திரா, மகளுக்கு அறிவுரை என்ற ஆரம்பித்து, அவளை ஒரு வழியாக்கி விட்டார் .
"அம்மா, மொத்தத்தில், நீ என்ன சொல்றே, பொம்மை போல இருக்கனும், ஒரு பொண்ணுக்கு, அவ சுயமரியாதையோடு, இருக்க கூடாது, அதானே " மகள் சுள்ளென்று விழுந்ததில், இந்திரா இப்போதைக்கு இது போதும், என்று அமைதியானார்.

"அம்மா, அக்கா எப்படி இருக்கா, நான் பேசி ஒரு வாரத்துக்கும் மேல ஆகுது, ரொம்ப பிசி போல, அவ. மாமா கிட்ட கேட்டு, இங்கே வர சொல்லேன், நானும் வந்து இருக்கேன்ல," என்றதும்.
இந்திரா, உடனே, மனதினில் மட்டுமே இலக்கியாவின் மாமியாரை திட்டி கொண்டார் .
"அவ நாத்தனார் வந்து இருக்காங்க, அதுனால், அவளுக்கு வேலையா இருக்கும் குட்டிமா, அவளே பேசுவா," என்றதும்.
"ஹ்ம்ம், நேத்து அந்த ரேஷ்மி பொண்ணு, வயிறு, வலியில துடிக்கும் போது, எனக்கு அக்கா நினைப்பு தான் மா வந்துச்சு, இங்க அக்காவுக்கு, அப்படி வந்துதுன்னா, அப்படியே துடிச்சிடுவா, நீ தான் அவளுக்கு அப்பப்போ, ஏதாவது கொடுத்து கவனிச்சிப்பே."
"ஆனா, கல்யாணத்துக்கு அப்பறம், அக்காவுக்கு அங்க யார் பார்த்துப்பா, இது எல்லாம் எனக்கு கல்யாணம் ஆனா, பிறகு தான் மா தோணுது," என்று பேசி கொண்டே வந்தவள், திடீர் என்று, அவள் வயிற்றினில், கைகள் கொண்டு அழுத்தி, ஒரு வித பரவசம் அவள் முகத்தினில் .
இந்திராவும் மகளின் செயல் என்ன என்று விளங்கா, பார்வை பார்த்து, "என்ன குட்டிமா," என்று பதற்றதுடன் கேட்டதும், "அம்மா, அக்காவை, கூட்டிட்டு போய் பார்த்தியே, மீனாட்சி டாக்டர், அங்கே போகலாமா," என்றதும், இந்திராவுக்கும் உள்ளம் பூரித்து, முகம் பிரகாசம் அடைந்து, மகளை உச்சி முகர்ந்து, "என் தங்கம், " என்று மகளை கொஞ்சினார் .
"எப்படி மறந்தேன்னு தெரியலை மா, நாள் தள்ளி போய் இருக்கு. எப்படி கவனிக்காம விட்டேன் "
என்றதும், அன்னையும் மகளும், மகப்பேறு மருத்துவமனை சென்று, இனியாவின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, மருத்துவர், கொடுத்த, சத்து மாத்திரைகளை வாங்கி கொண்டு, வீட்டிற்கு வந்தனர்.
"இந்திராவிற்கு அளவில்லா மகிழ்ச்சி.
இனியாவிற்கும் அதுவே, அவளுக்கு இப்பொழுதே, கணவனை காணும் ஆவல், அவனின் கூர் பார்வை, சீராக செதுக்கிய முகம், சிவந்த தடித்த உதடுகள், என்று அவனை போலவே, ஒரு குழந்தயை கற்பனை செய்து மேனி சிலிர்த்தாள் பாவை .
அவனின் கட்டுக்குள் அடங்கா கேசத்தை கலைத்து , அவன் தந்தையாகிய செய்தி கூற ஆசை.
அதே நேரத்தில் மனம் விம்ம, அழுதாள் , வயிற்றினில் கைகள் கொண்டு சென்று "சாரி, செல்லம், நேத்து ஒரு நாள் முழுதும் எதுவும் சாப்பிடாம, உன்னை பட்டினியா, போட்டுட்டேன், அந்த வீட்டுல அவ்வளவு வேலை செய்தும், உனக்காக என் ரோஷத்தை எல்லாம் விட்டு, சாப்பிட்டு இருக்கனுமோ, எனக்கு அப்போ நீ வயித்துல, இருப்பேன்னு தெரியாது கண்ணா," என்று இன்னும் முகம் தெரியா அவள் உயிருடன் பேசி கொண்டிருந்தாள்.
இதனை கேட்டு கொண்டே வந்த இந்திரா, மகள் குழந்தைக்காக, அவள் கோவத்தை விடுவாள், என்று அறிந்து கொண்டார்.
இந்த விஷயத்தை, இனியா தான் அவள் புகுந்த வீட்டினரிடமும் கணவரிடமும் கூற வேண்டும், இப்பொழுது, கணவனின் அருகினில் இருப்பது தான் அவளுக்கு உசிதம், என்று கருதி, அன்னை வீட்டிற்கு வந்த மகளை, மனதை கல்லாக்கி கொண்டு, அடுத்த நாளே, அவள் புகுந்த வீட்டிற்கு அனுப்ப முடிவெடுத்தார்.
இந்த குழந்தை கணவன் மனைவிக்கு,இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு, அவர்களை இணைக்கும் பாலம், அல்லவா .
அவருக்கும் மசக்கையில் இருக்கும் மகளை சீராட்ட ஆசை தான்.
ஆனால், இப்பொழுது, தன்னை விட அவள் கணவன் அவள் அருகினில் இருப்பது தான் முக்கியம் என்று கருதி,
" நாளைக்கு, அங்கே உன்னை, அழைச்சிட்டு போய் விடுறோம் குட்டிமா, மாப்பிளைக்கு சொல்லணும் இல்லையா," என்றதும்.
அவளுக்கும், இப்பொழுதே, அன்புவை காணும் பரவசம் தான், ஆனால் அவன் மீதான கோவமும் மனதில் இருந்து மறைய மாட்டேன் என்பதில், இரு வேறு மன நிலையில் தத்தளித்தாள் .
"அம்மா முதல்ல அப்பாவுக்கு சொல்லு ," என்று பேச்சை மாற்றினாள்.
நற்செய்தி, உடனே, மோகனுக்கும், இளங்கோவிற்கும் சென்றதில் அவர் விடுப்பு எடுத்து கொண்டு, கை நிறைய, மகளுக்கு பிடித்த உணவு வகைகள் பழங்கள், இனிப்பு, என்று அள்ளி கொண்டு வந்தார்.
மகளும் தந்தையை கட்டி கொண்டு, அவளின் மகிழ்ச்சியை, தெரிய படுத்தினாள் .
"எனக்கு நீயே, இன்னும் குழ்நதையா தெரியரே, குட்டிமா," என்று அவருக்கு ஆனந்த கண்ணீர் .
இளங்கோ, "காக்கா, சின்ன காக்காவிற்கு வெயிட்டிங்," என்று அவளை சீண்டி, அவள் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டான் .
பிறகு அன்று, இரவு, அவளிற்கு பிடித்த, உணவு வகைகள், இந்திரா தயாரித்து, மோகன் கையால், இனியா உணவு வாங்கி கொண்டாள் .
தந்தை உணவு ஊட்ட, அவள் உணவுண்டாள் .
அந்நேரம் மீண்டும் இந்திரா பேச்சை எடுக்கவே, "இப்போ தானே வந்தா, இங்கேயே இருக்கட்டும் நம்ம, டெலிவெரி பார்த்துக்கலாம், எப்படியோ, இங்கே தானே செய்யணும், அப்பறம் என்ன," என்று அவர் பேசியதில், இந்திராவுக்கு திக்கென்று இருந்தது.
இவரை என்னனு சொல்றது, இவளும் சும்மா இருக்கா, என்று நினைத்து.
"அது எல்லாம் முறை படி அழைச்சிட்டு வரலாம்."
"இப்போ மாப்பிளை வீட்டிற்கு சொல்லணும், இனியும் அவளை எதுக்கும் கோவ படாமா, அங்கே பொறுத்து போக சொல்லி அவளுக்கு எடுத்து சொல்லுங்க, அது விட்டுட்டு, பிரெச்சனையை பெருசாக்காதீங்க." என்று கணவரிடம் எரிந்து விழுந்தார்.
"ஹ்ம்ம் ஆமா, மா அப்பா அம்மா, நல்லா வளர்த்து இருக்காங்கன்னு, அங்க பேரு வாங்க, நாங்க, எங்க மனசை சாகடிச்சிட்டு, வாழனும் அதானே, என்றதும், மோகனுக்கு மனசு கேட்கவில்லை.
மனைவியை ஒரு முறை முறைத்து, "ஏன் குட்டிமா, அவ தான் சாப்பிடும் போது என்ன பேசணும்ன்னு தெரியாம பேசுறா, நீ அதுக்கு பதில் சொல்வியா, உனக்கு போக பிடிக்கலைன்னா, விடு டா, மாப்பிள்ளை ஏதாவது கேட்டா , நான் பதில் சொல்றேன்,"
"அப்பா, அங்க அவர் எனக்கு எதுவும் பிரச்சனையும் இல்லை, அவங்க, அம்மாவும் அக்காவும் ரொம்ப டென்ஷன் பன்றாங்க பா, என்று மகள் அழுததும் தந்தைக்கு மன பதறியது ."
"இங்க பாருங்க, இப்போ சொன்னீங்களே, மாப்பிள்ளை கிட்ட சொல்லிக்கலாம்ன்னு, அது எல்லா விஷயத்துக்கும் பொருந்தாது, நம்ம பொண்ணை இங்க வரணும்ன்னு கேட்ட உடனையே, வந்து விட்டு போய் இருக்காரு, எதுனால, அவருக்கு, உங்க பொண்ணு மேல இருக்கும் பாசத்திலயும், நம்ம மீது இருக்குற மரியாதையினால் தான், அந்த மரியாதை காப்பாத்திக்கங்க ."
"இப்போ, உங்க பொண்ணு, அவர் கூட இருக்குறது தான் நல்லது, அவங்க வீட்டு வாரிசு வர போகுது, இந்த விஷயம் அவ அங்கே போகாம, இங்கு இருந்தே சொல்வாளா, அது நல்லவா இருக்கு," என்று இந்திரா எடுத்து கூறியதில், மோகனும் யோசிக்க ஆரம்பித்தார்.
அனால் அதே நேரத்தில் மகளை சீண்டுவரிடம், அவரின் குட்டிமா, எதற்கு பொறுத்து போக வேண்டும் என்ற தந்தை பாசத்தில், மகளுக்கு யோசனை கூற ஆரம்பித்தார் .
இப்படி பொறுத்து போய் தான் இலக்கியா, இங்கு வர முடியா நிலை உருவானது, இலக்கியாவிடமும் நாம் இதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்தார்.
"குட்டி மா, நம்ம எப்பவும் டென்ஷன் ஆகா கூடாது டா, நம்ம பதற்றம் பயம் எல்லாம், எதிர்ல இருக்குறவங்களுக்கு சாதகமா போய்டும்."
"நம்மள டென்ஷன் பண்றவங்கள, நம்ம டென்ஷன் செய்யணும், கொஞ்ச நாளுல, அவங்களே நம்ம பேச்சிற்கு வந்தா, அவங்களுக்கு பிரெச்சனைன்னு , ஒதுங்கி போய்டுவாங்க."
காலையில் இருந்து மூச்சு முட்ட அவளுக்கு நல்லது எடுத்து கூறினால், கணவன் இப்படி மகளுக்கு, அவர்களிடம் எதிர்த்து நிற்க கூறுகிறாரே, என்று இந்திராவிரிக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், "அவ ஒன்னும் குழந்தை இல்லை, அவளுக்கு ஒரு குழந்தை வேற பிறக்க போகுது, நாளைக்கு காலையில, அங்க கொண்டு போய் நீங்களே முறையா மகளை விட்டு வர பாருங்க, " என்று அந்த விஷயத்திற்கு முற்று புள்ளி வைத்தார்.
அங்கு டிராவெல்ஸில், சரணின் இன்ஸ்டன்ட் தங்கை இனியாவை, அன்பு அடித்ததற்கும், சண்டை பிடித்ததற்கும், அன்பு சரணிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டான் .
அவனுக்கும் அதை நினைத்து மேலும் குற்ற உணர்ச்சி ஆகியது .
சரணுக்கு, நண்பனின் நிலை கண்டு அதில் வருத்தம் எழ, "டேய் உங்க விஷயத்தில யாரையும் இன்வோல்வ் செய்யாத டா, அது உங்க லைப்க்கு பிரெச்சனை."
"ஊருல என்ன தான் டா நடந்துச்சு, நீ சரியே இல்லை, உன் மேனேஜரும் வாயே திறக்க மாட்டேன்னு இருக்காரு, ஏதோ தப்பா நடந்து இருக்குன்னு மட்டும் தெரியுது, சொல்லவும் மாட்டேனா எப்படி டா , என்றதும், உயிர் தோழனிடம் மட்டும் அங்கு நடந்த நிகழ்வை கூறினான் .
அதில் சரணுக்கும் அதிர்ச்சியே.
அவன் நிச்சயம் இது போன்று என்று எதிர்பார்க்கவில்லை.
அன்புவை எப்படி தேற்றுவது என்றும் தெரியாமல், நண்பனின் பாரம் இப்பொழுது, அவனின் மனமும் சுமந்து கொண்டது.
பிறகு இருவரும் ஒன்றும் பேசாமல், அமைதி காத்தனர்.
நேரம் இரவை நெருங்க, சந்திரா, மகனுக்கு அழைத்ததும் தான், வீட்டிற்கு போகும் நினைவே இருவருக்கும் வந்தது.
சரணும் அடுத்த இரு தினங்களில், மீண்டும் அமெரிக்கா, செல்வது பற்றி, அன்புவிடம் கூறி, விடை பெற்று சென்றான் .
அன்புவுக்கும் இனியா இல்லாத வீட்டிற்கு செல்லவே பிடிக்கவில்லை, ஆனால், அவன், இந்த ஒரு மாத காலத்தில், தொழிலில் ஏற்பட்ட, சரிவு, அங்கு வட நாட்டில், அவன் இழந்த பணம், எல்லாம் சேர்ந்து, அவன் முடிக்க வேண்டிய வேலை, நிறைய இருக்கவே, சில முடிவுகள் எடுத்தான்.
கோடி கணக்கில் செலவு செய்து இடம் வாங்கி வீடு கட்டுவதற்கு, தங்குவதற்கு ஏற்ப, தேவையான அளவில் ஒரு வீடு இருந்தால், போதும் என்ற நிலை .
சுமதி இதற்க்கு ஒத்து கொள்ள மாட்டார் தான்.
அவருக்கு பங்களா போன்று தான் வீடு வேண்டும், அது தான் அவர் தகுதிக்கு, ஏற்றது என்று நினைப்பார்.
இப்பொழுது, அந்த பணம் அவன் இழந்த, நட்டத்திற்கு தேவையாக இருந்தது .
ஏனெனில், ஏற்கனவே அவன் பாதி விலை கொடுத்து, ஒரு இடத்தை வீட்டிற்கு என்று தேர்வு செய்து இருந்தான் .இப்பொழுது அந்த பணம் அவனிற்கு தேவையாக இருந்தது.
அந்த பணத்தில், தாராளமாக, கட்டிய வீடே வாங்கலாம், என்று நினைத்து, அதற்கான வேலையில் இறங்கினான் .
அன்று இரவு வீட்டிற்கு செல்ல பிடிக்காமல், அதிதிக்கு அழைத்து, தகவல் கூறினான் .
அதிதியும் அண்ணிக்காக, அண்ணனிடம் சரியாக பேசுவதில்லை.
தங்கையின் "ம் "என்ற வார்த்தியில் ஒரு பெரு மூச்சு விட்டு கொண்டு, அங்கேயே தங்கி விட்டான் .
இனியா, எந்த வேகத்தில் அங்கு கிளம்பி சென்றாளோ, அதேவேகத்தில் இந்திரா மகளை துரத்தி விட்டார்.
விஷயம் தெரிந்தும் இன்னும் இனியாவை அங்கேயே, எப்படி நிறுத்தி கொள்ளலாம், என்று எங்கு சுமதி தங்கள் மீது கேள்வி எழுப்புவாரோ, என்று பயம் ஒரு பக்கம் என்றால், மகளை, மேலும் ஏதேனும் கூறிவிடுவாரோ, என்றும் நினைத்தார்.
ஆனால், இந்திராவின் நினைப்புக்கும், அப்பாற்பட்டவள், இனியா என்று தெரியாது போனது.
எப்பொழுது, சுமதி இனியாவின் இடத்திற்கு ரேஷ்மி வர வேண்டும் என்று, இனியாவை, கூறினாரோ, அப்பொழுதே, அவள் சுமதிக்கு, மரியாதை என்ன, அவரை, ஒரு பொருட்டாகவும் நினைக்க விரும்பவில்லை.
ஆகையால், அவள் சுமதிக்கு மதிப்பளித்து, அவளின் குழந்தை பற்றி கூறவும் நினைக்கவில்லை.
அன்பு, அவன் வீட்டிற்க்கு வருவதற்கும், இனியா, அவள் தந்தையுடன் அங்கு வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது.
அன்புவுக்கு, மனைவியின் திடீர் வருகை, அவன் கண்களில் மின்னலடிக்க, அவர்களின் அருகினில் சென்று வரவேற்றான் .
ஒரு நாளிலே, அவனின் களையிழந்த முகம் அவளை கண்டதும் பளிச்சிட்டது.
அதை இனியாவும் தெரிந்து கொண்டாள் , "இடுக்கு தானே டா, நான் பொறுத்து போக வேண்டி இருக்கு,"என்று மனதில் நினைத்து, தந்தையை வீட்டிற்கு அழைத்தாள் .
"இருக்கட்டும் குட்டி மா, மாப்பிளை, நான் வேலைக்கு சீக்கிரம் கிளம்பனும், நான் இப்படியே, புறப்படுறேன், இன்னொரு நாள் வரேன்," என்று அங்கு வீட்டினுள் செல்ல பிடிக்காமல், அப்டியே, கிளம்ப பார்த்தார்.
அன்புவும் புரிந்து கொண்டான் தான், என்ன செய்ய, அனைத்திற்கும் சில மாற்றங்கள் தேவை, அது வரை பொறுக்க தான் வேண்டும் என்று நினைத்து, மனைவியை மட்டும், கண்களால் , நிரப்பி கொண்டே, வீட்டினுள் அழைத்து சென்றான் .

வட நாட்டு ரகசியம் என்ன என்று கதையின் இறுதியில் அன்பு கூறி விடுவான் நட்புக்களே.



 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top