அன்பினினியா 21 2

Advertisement

achuma

Well-Known Member
இனியாவிற்கு, அன்புவின் தடுமாற்றம் புரிந்து கொள்ள முடிந்தது.
கணவனுக்கு அவன் மனைவியின் வாய் மொழியால், அவள் தாய்மை அடைந்திருக்கும், செய்தி கூறுவது, அவள் கணவனுக்கு என்ன ஒரு உணர்வு கிடைக்கும் என்பது, வார்த்தையால் வடிவமைக்க முடியாத ஒன்று .
அன்புவும் இங்கு விதிவிளக்கல்ல. .
தனக்கும் அந்த பாக்கியம் கிடைக்காதா என்று ஒரு ஏக்கமும், மனைவி காலையில் இருந்து தன்னிடம் கூறவில்லையே, என்ற ஏமாற்றமும், அவன் மனதை போட்டு அலைக்கழித்தது.
இனியா ஒன்றும் வேண்டுமென்றே, கூறாமல் இல்லை.
அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை, அதனை இனியா அவனிடம் கூறினாலும், அவன் இப்பொழுது இருக்கும் நிலைமையில் அதனை ஏற்பானா, என்ற எண்ணம் வேறு, அவள் நடையை வேக படுத்தியது.
வீட்டினுள் வந்ததும், அவள் கண்கள் கணவனை தான் தேடியது.
அவன் அறையில் இருப்பான், என்று நினைத்து, ஏற்கனவே, இரவு உணவுக்கான நேரமும் நெருங்கவே. அவள் அதில் ஆயத்தமானாள் .
சுமதியும் இனியாவை பார்த்து கொண்டு தான் இருந்தார்.
மதியம், வீட்டு வேலைக்கு வந்த பெண்ணே, சமையல் செய்து விட்டு சென்றதால், இப்பொழுது, தன்னிடம் என்ன சமையல் செய்ய வேண்டும் என்று கேட்க வந்து தானே ஆக வேண்டும், என்று எண்ணி கொண்டு அங்கு வரவேற்பறையில் வந்து அமர்ந்து கொண்டார்.
கண்கள் ஏதோ தொலைக்காட்சியில் இருந்தாலும், எண்ணம், முழுதும் தன்னிடம் கேட்க வரட்டும் நன்றாக, கேட்க வேண்டும் தன்னிடம் சொல்லாமல், அன்னை வீட்டிற்கு சென்றது, காலையில் வினோத்திடம், விஷகாவை பற்றி கூறியது, என்று எல்லாம் சேர்ந்து, அவரின் கொதி நிலையை ஏற்றியிருந்தது.
அதற்கெல்லாம் இனியாவை நன்றாக வெளுத்த வாங்க, அவர் இருந்தார் என்றால், இனியாவோ அதற்கு நேர்மாறாக, அங்கு ஒருவர் இருப்பது போலவே கருதாமல், அவள் ஒரு முடிவில் சமயலறையில் நின்று இருந்தாள் .
அவரின் மரியாதையை அவர் கேட்டுது கொண்டார், என்று யார் அவரிடம் கூறுவது.
அவரிடம் கேட்டு அனைத்தும் செய்த பெண் தான், இப்பொழுது இப்படி மாறி உள்ளாள் , அதற்கான, முழு காரணமும் அவர் தான்.
எப்பொழுதும் மாமியார் அடக்கி மருமகள் அடங்கியே இருக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. அவருக்கும் அது புரியும் காலம் நெருங்கி விட்டது.
தினமும் வீட்டினருக்கு, அவரவருக்கு பிடித்த உணவு என்ன என்று கேட்டு ஒவ்வொவரு நாள் செய்யலாம், என்ற எண்ணத்தில், முதலில் அதிதியிடம் இருந்து ஆரம்பிப்போம், என்று நினைத்து, "அதி மா, இப்போ என்ன டின்னர் செய்யலாம்", என்று கேட்டாள் .
"அண்ணி, என்ன திடீர்ன்னு," என்று சுமதியை பார்த்து விட்டு, டைனிங் அறையில் இருந்து சம்யலறைக்குள் , சென்று அதிதி அவள் அண்ணியிடம் கேட்டாள்.
"ஆமா , தினமும் அந்த சப்புன்னு சாம்பார், செய்றேன், அதுவே தினம் சாப்பிடறியா, நீ அவ்வளவு அட்ஜஸ்ட் பண்ற பொண்ணுன்னு எனக்கு தெரியவே இல்லை," என்று அவளை கிண்டலடித்ததும், அசடு வழிந்த அதிதி, "அது, அண்ணி, நீங்க அம்மா, சொல்றது கேட்டு தான் செய்யறீங்க, அதான் உங்களுக்கு தொந்தரவு தர வேணாம்ன்னு, நான், அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன், ஏன் அண்ணா கூட, வீட்டில லேடீஸ் பிரெச்சனைக்குள்ள, அவர் வந்துட்டா இன்னும் பிரச்சனை பெருசாகும்ன்னு, தான், இந்த இத்து போன சாம்பார் அட்ஜஸ்ட் பன்றாரு," என்று அவள் சலித்து கொண்டதில், எந்த அளவிற்கு தனக்காக என்று கணவனும், நாத்தனாரும் ஒத்துழைத்திருக்கிறார்கள் என்று நெகிழ்ந்தாள் .
"சரி, அதை விடு, வீட்டுல இருக்குறது நம்ம நாலு பேரு, நமக்கு பிடிச்ச மாதிரி சாப்பிடுறதுல, என்ன வர போது, இனி ஏதாவதுன்னா, நான் பார்த்துக்கறேன், உனக்கு இன்னைக்கு என்ன வேணும்ன்னு மட்டும் சொல்லு, அதே நேரத்தில என் கூட பேசிக்கிட்டே இருந்தா நான் சீக்கிரமே போர் அடிக்காம சமயலையும் முடிச்சிடுவேன்" .
காலையில் சூடு தண்ணீர் கூட வைக்க தெரியாது என்று சுமதி சலித்து கொண்டதில் இதற்கு அவர் தானே காரணம் என்று இனியா நினைத்து கொண்டாள் .
அதே நேரத்தில், அதிதி தன்னுடன் இருந்தால், அவளும் தான் செய்வதை பார்ப்பாளே, உடன் தனுக்கு அவளை உதவி செய்ய சொன்னால், எங்கு அவளும் தவறாக நினைத்து விடுவாளோ, என்ற பயம்.
இங்கு ஒரு தோழியாக அதிதி இருப்பதால், அந்த உறவை கெடுத்த கொள்ள அவள் விரும்பவில்லை.
"உனக்கு ஏதாவது படிக்க இருக்கா, இல்லை, எனக்கு இங்க பேச்சு துணையா இருக்கியா," என்று கேட்டாள், நாத்தனாரிடம் .
"பைனல் இயர், அதுனால் அங்க ஏதாவது படிக்க இருக்க தான் செய்யும், அதான் ஊருக்கு முன்னாடி, காலேஜ் திறந்துட்டாங்க, வேற, இந்த வெயில்ல போயிட்டு வர கடுப்பா இருக்கு," என்று சலித்து கொண்டே, "எப்பவும் படிச்சிட்டே இருந்தா, தலை வெடிச்சிடும் அண்ணி, நான் இங்கேயே இருக்கேன்," என்று தனக்கு பிடித்த ரவா தோசை வேண்டும் என்று கேட்டாள் .
இருவரும் பேசி கொண்டே, செய்ய ஆரம்பித்தனர்.
அவளுக்கு உதவி செய்கிறேன் என்று நினைத்து, வெங்காயம் தோல் உரிக்க ஆரம்பித்த அதிதி, பிறகு இனியாவின் கிண்டலில், எப்படியோ, ஒரு வழியாக, அதனுடன் போராடி, வெங்காயம் நறுக்கி கொடுத்தாள் .
இதுவே நல்ல ஆரம்பம், இப்படியே தொடரட்டும் என்று நினைத்த இனியாவும், அதன் படி செய்து முடித்தாள் .
ரவா தோசையுடன், வெங்காய சட்னியும் மற்றும் தேங்காய் சட்னியும் செய்து, அதிதியின் பாராட்டை பெற்று கொண்டு, அனைத்தும் மேசையில் பரப்பி, அவள் அன்பு கணவனை அழைக்க சென்றாள் இனியா.
மதியம் இருந்த உணவையும் சூடு செய்து, வைத்திருந்தாள், சுமதி ஏதேனும் பிரச்சனை செய்வார் என்று ஏற்கனவே கணித்திருந்த காரணத்தால், அனைத்தையும் வைத்து விட்டு, அதிதியை அனுப்பி, அன்புவை அழைத்து வர செய்தாள் .
அடிக்கடி மாடி ஏற யோசித்து, அவள் செய்ததது, அனைத்தும் சுமதிக்கு தவறாக தான் தோன்றியது.
இப்பொழுது அதிதியை வேலை வாங்குவது போல் ஒரு எண்ணம், அவருக்கு .
"நல்லா பேசி பேசியே, அவளை, வேலைக்காரி போல பழக்கி வெச்சிருக்கா, இந்த லூசும், அதுக்கு செய்யுது," என்று தான் நினைத்து கொண்டார்.
அன்பு தங்கை, சென்று அழைத்ததும், அன்னையை அழைத்து கொண்டு, மேசையில் வந்து அமர்ந்ததும், தங்கை, கணவர் என்று அனைவரின் தட்டில் வைத்துவிட்டு, சுமதியின் அருகில் அவள் செய்த தோசையை, வைத்து விட்டு, அவளும் உடன் அமர்ந்தாள் .
அன்னையின் கூற்று மனதில் பதிய வைத்து, தனக்காக இல்லை, என்றாலும் குழந்தையின் வளர்ச்சிக்காகவேனும், நல்ல ஆரோக்கியமான உணவு, எடுத்துக்கொள்ள, முடிவு செய்தாள் .
இவை எல்லாம் மனதில் வைத்து தான், சுமதியிடம் கேட்காமலே அவளே உணவு செய்தாள் .
"என்ன, டிபன் செய்யணும்ன்னு கேட்க மாட்டியா," என்றதும் இனியா அவரை ஒரு பார்வை பார்த்து அவள் உணவில் கவனம் வைத்தாள் .
"அம்மா, அண்ணி, கேட்டாலும், மதியம் மிஞ்சி போனா சாம்பார் செய்ய சொல்வீங்க, நைட் தோசை செய்ய சொல்வீங்க, எத்தனை நாளுக்கு, இதையே நாங்க சாப்பிடறது, உங்களுக்கு பிடிக்கலைன்னா , மதியம் செய்ததும், சூடு செய்து வைத்திருக்காங்க அதுவே எடுத்துக்கோங்க."
அதிதி கூறி விட்டு, "செம டேஸ்ட் அண்ணி, இவ்வளவு ஈஸின்னு , நான் நினைக்கவே இல்லை.
எல்லாமே ஒரு மணி நேரத்தில முடிச்சிடீங்க," என்று மீண்டும் சுமதி கேட்க வேண்டும் என்றே பாராட்டினாள்.
அன்பு, அன்னையை ஒரு பார்வை பார்த்து, "அம்மா, சாப்பாடு எதுவும் இப்போ, உங்களுக்கு இல்லையா, இல்லை உங்களுக்கு பிடிக்கலைனா, என்கிட்டே சொல்லுங்க, உங்களுக்கு என்ன வேணுமோ வெளியே போய் வாங்கிட்டு வரேன். நல்லா இருக்குற விஷயத்துக்கு கூட, குறை கண்டுபிடிக்காதீங்க" என்று கூறி விட்டு. அவனின் உணவை முடித்து கொண்டு, வந்து வரவேற்பறையில் அமர்ந்து விட்டான்.
காலையில் இருந்து மகன், இப்படி பேசுவது வேறு எங்கு, இன்னும் தன்னை விட்டு தூர சென்று விட்டானோ, என்ற பதைப்பு, அவருக்கு ஒரு பக்கம் பயமூட்டியது.
எதுவும் பேசாமல், மதியம் இருந்த உணவையே, இனியாவை முறைத்து கொண்டு உண்டு முடித்தார்.
அவளும் எதிரொஆர்த்தது தான், அவரிடம் கேட்கவில்லை என்றால், அவர் இப்படி பிரெச்சனை செய்வார் என்று எதிர்பார்த்தது தான் போலும், அவளும் எதுவும் கண்டு கொள்ளாமல் உண்டு முடித்தாள் .
பிறகு,அதிதி, படிக்க சென்றதும் இனியா அனைத்தும் எடுத்து வைத்து , சமையலறை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
அன்பூவின் அருகில் சென்று அமர்ந்து, சுமதி,"அன்பு, நேத்தும் கடையிலேயே தங்கிட்ட, இப்போ இன்னும் வேலைக்கு கிளம்பாம இருக்கே, இந்நேரம் நீ கிளம்பி இருப்பியே, ஏன் லேட்டா போகப்போறியா,"
என்று அவர் கேட்டதும், அன்பு விரக்தியாக சிரித்துக்கொண்டான் .
அன்னை, மீது அவனுக்கு கோவம் இல்லை, அவரை இந்நிலையில் தள்ளிய விதியை நொந்து கொண்டான்.
ஆனால், ஒரு செவியை இந்த பக்கம் வைத்திருந்த இனியாவிற்க்கு பற்றி கொண்டு வந்தது.
சுமதிக்கு, அவன் தொடந்து, ஊரில் இருந்து வந்த நாட்களில் இருந்து வேளைக்கு செல்லாமல் இருக்கிறானே, வேலையை பற்றி தெரிந்துகொள்ள, மறைமுகமாக கேட்க நினைத்து இப்படி கேட்டு வைத்தார்.
இனியாவுக்கோ, பிள்ளைகள் வேலைக்கு செல்லாமல் இருந்தால், ஒன்று உடல் நலம் சரியில்லையா,அல்லது குறைந்த பட்சம் வேலையில் ஏதேனும் பிரெச்சனையா என்று ஆறுதலாக பேசும் தாயை தான் இதுவரை கேள்வி பட்டு இருக்கிறாள் .
ஆனால் இங்கு சுமதியோ,காரியத்தில் கண்ணாக, எங்கு அவன் செல்லாமல் விட்டால், அதில் இருந்து வரும் வருமானம் தட்டு படுமோ,என்ற பயம் .
"அப்படி என்ன காசோ , ச்சே, இவங்க திருந்த மாட்டாங்க," என்று நினைத்து கொண்டு, மீண்டும் அவரின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தாள் .
"அம்மா,உங்களுக்கு சொல்ல மறந்துட்டேன்,வேலையை விட்டுட்டேன், அவனின் குரலில், வேலையை விட்ட வருத்தம் துளியும் இல்லை, நிதானமாக கூறி விட்டு மீண்டும் தொலை காட்சியில் செய்திகள் பார்க்க ஆரம்பித்தான் .
"என்ன அன்பு என்ன சொல்றே, " சுமதிக்கு அதிர்ச்சி .
"நம்ம, நிலைமை இப்படி இருக்கும் போது," அவரின் பேச்சை பாதியிலயே நிறுத்தி, "நம்ம நிலைமைக்கு இப்போ என்ன மா குறைச்சல்," அவனின் வார்த்தைகள், சாதாரணமாக இருந்தாலும் அதில் இருக்கும் கேள்வி, சுமதியை அடுத்து பேச யோசிக்க வைத்தது .
"இல்லை பா, அந்த காசுல, தானே," என்று தயங்கியதும் "ஹ்ம்ம் சொல்லுங்க மா, கண்டிப்பா, நமக்குன்னு ஒரு சொந்த வீடு வாங்குவேன், உங்களுக்குன்னு, பேங்க்ல, ஒரு தொகை போட்டு இருக்கேன், அதிதி கல்யாணத்துக்கு தேவையான நகை சேர்த்தாச்சு, கண்டிப்பா, என் கூட பிறந்தவங்கள, நான் என்னைக்கும் கை விட மாட்டேன், அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கு தானே,"அவன் கேட்ட கேள்வியில் அவர் தலை தன்னால் ஆம் என்று ஆடியது,"அப்புறம் நம்ம நிலைக்கு என்ன குறைச்சல் மா, நல்லா தான் இருக்கோம், இருப்போம் தேவையான வசதி போதும் பணம்ன்னு ஓடி கடைசில எதுவும் மிஞ்ச போறதில்லை," இறுதியில் அவனின் முகம் இறுகியது, இவ்வார்த்தையில் .
"நான் வெளியே வந்தா தானே, உண்மையா அந்த பணம் யாருக்காவது தேவையா இருக்கும் அவங்களுக்கு அந்த வேலை கிடைக்கட்டும், என்னால முடியலை, எனக்குன்னு ஏதாவது முடியலைன்னா, என் பொண்டாட்டி தான் லைப்ல கஷ்டப்படுவா, " என்றதும் இனியாவின் பேச்சு வந்ததும், அவருக்கு கோவம் வந்து விட்டது.
"அவ சொல்லி தான் நீ இப்படி எல்லாம் பேசுறியா, எதுக்கு இந்த நைட் டூட்டி, போறேன்னு உனக்கு தெரியாதா, இந்த காசை ஒரு வருஷம் சேர்த்து வெச்சு, தானே நம்ம விஷாகாவுக்கு சீர் செய்வோம்"
இனியாவிற்கு திக்கென்றானது, இந்த செய்தியில், இறுதியில் அவர் ஒரு வருடம் முழுதும் உழைக்கும் உழைப்பு, விஷாகாவின் புகுந்த வீட்டிற்கு செய்யும் சீருக்கா, இலக்கியாவின் மாமியாருக்கும் இவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, மகனின் ரத்தத்தை உறிஞ்சி மகளுக்கு சீர் செய்யும் பிசாசாக தெரிந்தார்கள் இனியாவின் கண்களுக்கு.
"அம்மா, அக்கா என்ன இல்லாத இடத்திலயா, கொடுத்து இருக்கோம், இன்னும் சொல்ல போனா, அங்க அவன் இது கொடு அது வேணும்ன்னு கேட்கல, அவளுக்கு பெருசா செய்யணும்ன்னு நானும் அந்த காசை எல்லா வருஷமும் சேர்த்து வைத்து, தானே, அவளுக்கு செய்யறேன், உங்களுக்காக தான் அதுவும், ஆனா, எனக்கு திருப்பி என்ன கிடைச்சுது, என்னையும் என் பொண்டாட்டியையும் அங்க அவமான படுத்தி அனுப்புறா, உங்களுக்கும் சொல்றேன், அங்க போறதை கொஞ்சம் குறைச்சிக்கோங்க, நீங்க உங்களோட மட்டும் இல்லை, நம்ம குடும்பத்துக்கு சேர்த்து கெட்ட பெயர் வாங்கி கொடுக்குறீங்க, எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு, காலையில மாமா, உங்களை சொன்னது, அது ஏன் உங்களுக்கு புரியலை மா".
"அக்காவுக்கு, என்னைக்கும் நான் செய்வேன், அதுக்கு, நான் என் உடலை கெடுத்துகிட்டு தான் செய்யணும்ன்னு இல்லை, என்னால முடிஞ்சதை நான் கண்டிப்பா, என் கூட பிறந்தவர்களுக்கு, செய்வேன்," "ஹான், இன்னொன்னும் சொல்ல மறந்துட்டேன், நாளைக்கு, எனக்கு கொஞ்சம் புரோக்கர் கிட்ட பேசுற வேலை இருக்கு, ஏற்கனவே பாதி பணம் கொடுத்து ஒரு இடத்தை பேசி இருந்தோம் இல்லை, அங்க போய் அமௌன்ட் கேட்க போறேன்,என் தொழிலுக்கு அது தேவை, அக்கா இருக்குற ஏரியால என்னால வீடு பார்க்க முடியாது, இங்கேயே எங்கயாவது கட்டுன வீடா, பார்க்குறேன் , என்னன்னு பார்க்கலாம், இதை பற்றி இதுக்கு மேல பேசாதீங்க," என்று அவனின் குரலில் கோவம், இல்லை என்றாலும் அவனின் அழுத்தமான வார்த்தைகள், அதற்கு மேல் சுமத்தியால் ஏதும் பேச முடியாமல் போனது.
தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.
வேலை எல்லாம் முடித்து விட்டு, இனியா அறைக்குள் சென்று படுத்து விட்டாள் .
அன்பு கதவு அனைத்தும் மூடி இருக்கிறதா, என்று சரி பார்த்து விட்டு, மின் விளக்கு அனைத்து விட்டு, அன்னையையும் அழைத்து கொண்டு அவரின் அறையில் விட்டு பிறகு அவனின் அறைக்குள் சென்று இனியாவின் அருகில் படுத்தான் .
அவனுக்கு முதுகு காட்டி கட்டிலின் ஒரு பக்க ஓரத்தில் இனியா படுத்து கொண்டாள், அவளின் முதுகை ஒட்டி வயிற்றை சேர்த்து அணைத்து வாறு, அவளுடன் அன்பு படுத்து கொண்டு, "நீ சொல்லவே இல்லைல, எனக்கு இப்படி ஒரு தண்டனை கொடுப்பேன்னு நான் நினைக்கவே இல்லை இனியா," என்று குரல் கரகரப்பாக ஒலித்ததும் இனியாவின் கண்களிலும் கண்ணீர் .
கணவனை பார்க்க, அவள் தலையை மட்டும் திருப்பியதில், மனைவியின் கண்ணீரை துடைத்து, "எதுவும் நினைக்காம தூங்கு, என்று அவள் நெற்றயில் முத்தம் பதித்து, அவள் கழுத்தில் முகம் புதைத்து கண்கள் மூடி கொண்டான்.
கணவனின் கைகளை, இன்னும் அவள் வயிற்றில் அழுத்தமாக பதிய வைத்து, "மிஸ்டர் .வம்பு, நீங்க அப்பா ஆக போறீங்க," என்று கண்களில் நிறைந்த நீரும் உதட்டில் புன்னகையுடன் அவள் கூறியதும் அன்புவும் சிரித்தான் .
இருவரின் முகத்திலும் மகிழ்ச்சியும், கண்ணீரும் சேர்ந்து இருவரும் அந்நேரம் குழந்தைக்கான வரவை அனுபவித்தனர்.
"உங்களை பார்த்து சொல்லனும்ன்னு,நான் இங்கே வந்தேன், வீட்டுல சூழ்நிலை, அதுக்கு சரியா அமையலை, சொல்ல நேரமும் அதுக்கு பிறகு கிடைக்கலை, ஈவினிங் சும்மா மேல கீழேன்னு, நடக்க வேணாம்ன்னு தான்," என்று அவள் விளக்கம் வருவதை நிறுத்தி, " எனக்கு நீ சொல்றது புரியது, இனியா, காலையில இருந்து, நானும் நடக்குறதை பார்த்துட்டு தான் இருக்கேன், ஆனா, நீ சொல்லி நான் சந்தோஷ படுற பீலே வேற தானே," என்று கூறி, "இந்த மொமெண்ட் நான் இப்போ சந்தோஷமா இருக்கேன், குட்டி இனியாக்கு நான் வெயிட்டிங், "என்றான் .
"ஓஹ் அப்போ, குட்டி வம்பு வேண்டாமா," என்று அவள் கேட்டதும், அவள் ஓஹ் என்று இதழ் சுழித்த அழகில் அவள் உதட்டில் அழுந்த முத்தம் வைத்து "ஹ்ம்ம், இப்போதைக்கு நான், இதுக்கு மேல உன்னை எதுவும் செய்ய முடியால,"என்று சோகம் போல் கூறி, "அன்புவோ, இனியாவோ, எந்த குழந்தையா இருந்தாலும் எங்க அப்பா அம்மா போல, குழந்தைக்கு நடுவுல, வேற்றுமை பார்க்க மாட்டேன்" என்று வருத்ததுடன் கூறினான் .
"அவங்களுக்கு என் பெற்றவங்க கிட்ட கிடைக்காத பாசத்தையும் சேர்த்து நான் அவங்களுக்கு கொடுப்பேன்," என்று அவனின் ஏக்கம் எல்லாம் வார்த்தைகளாக, அவள் கேட்ட பிறகு, அவளும் கணவனின் வருத்தம் நினைத்து, வேதனை அடைந்தாள் .
"இனி, எதுவும் பழசை பேச வேண்டாம், இனியா, நீ ரிலாக்ஸா இரு, அம்மா, நான் உனக்கு சொல்ல வேண்டாம், பட் நான் முடிஞ்ச அளவு, சப்போர்ட்டா இருப்பேன், நீ ஏன் சமையல் கூட செய்யற," என்றதும், "இல்லை, சமையல் மட்டும் நானே செய்யறேன், எனக்கும் வீட்டுல போர் அடிக்கும் தானே, நான் ஹெல்த்தியா இனி பார்த்துக்கறேன்," என்று கூறினாள் .
"ஹம்ம் இப்படி நான் வேலைன்னு போய்ட்டேன், இங்க வந்ததும் அதிதிக்கு கவனிக்க ஆளு இல்லாம, இப்போ அவ எவ்வளவு வீக்கா இருக்கா பாரு," என்று வருந்தி, பிறகு இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு, மனம் நிறைந்து, உறங்கினர்.
இப்படியே, இரு நாட்கள் கடந்தது.
காலையில் அதிதிக்கு உணவு கட்டி கொடுத்து, மதியம் சமையல் செய்து, அன்பு டிராவெல்ஸில், வேலை பார்க்கும் அருணை அழைத்து,அவனுக்கும் சேர்த்து உணவு கொடுத்து விடுவாள்.
பிறகு, வீட்டு வேலை செய்யும் பெண்மணி, அவர் வேலைகளை முடித்து, கிளம்பும் வரை அங்கிருந்து விட்டு, மீண்டும் மாடிக்கு சென்று ஓய்வு எடுத்து, சிறு சிறு வேலைகள் ஏதேனும் செய்து கொண்டிருப்பாள் .
சுமதியை அவள் என்ன என்றும் கண்டு கொள்ளவில்லை.
அதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று நினைத்து, சுமதி இதற்கு ஒரு முடிவு எடுக்க நினைத்து, இந்திராவை அழைத்து, விஷயத்தை பெரிதாக்க நினைத்தார்.
விஷாகாவிடம் இருந்த எந்த தகவலும் இல்லை, அவருக்கும் அன்புவை மீறி அங்கு செல்ல பயம்.
சென்றாலும் வினோத்திடம் ஏதேனும் பிரெச்சனை ஏற்படுமோ, என்று ஒரு தயக்கம் .
இப்படியே, நாட்கள் கடந்து, ஒரு வாரம் கடந்த நிலையில் இலக்கியா, அன்று, செழியனிடம் மட்டும், தான் இன்று அன்னை வீட்டிற்கு செல்வதாக கூறினாள் .
செழியனுக்கு புருவம் ஏறி இறங்கி மனைவியை ஆச்சர்யமாக பார்த்தான் .
அவளின் மாற்றம் அவனுக்கும் சந்தோஷமே.
கணவன் கேள்வி கேட்காமல்,அவன் புருவம் ஏறி இறங்கிய அழகில், மயங்கிய மங்கை அவன் முகத்திற்கு முத்தம் வைத்ததும் ஆச்சர்யத்தின் எல்லைக்கே சென்றுவந்தவன், "என் இலா, டார்லிங் அம்மா வீட்டுக்கு போற சந்தோஷத்தில் எனக்கு செமையா பரிசு தராங்களே,"என்று அவளை கட்டி கொண்டான் .
அவன் வீட்டில் அன்னை சரி என்று கூறி இருப்பதாக நினைத்தான் .
அவனிடம் அவளும் ஏதும் கூறவில்லை.
தங்கை, அக்காவின் அழைப்புக்கு, பதிலளிக்காமல்,இருக்கும் வருத்தம் வேறு ஒரு பக்கம் இலக்கியாவிற்கு.
இனியா, வேண்டும் என்றே தான், இலக்கியாவின் அழைப்பை ஏற்காமல் இருந்தாள் .
அவளும் இது போல் நடக்கும் விஷயத்திற்கு முற்று புள்ளி, வைக்க எண்ணியே, அக்காவை எங்கு எப்படி பேசினால், அவள் அதற்கு ஏற்றது போல் நடப்பாள் என்று ,சரியாக ஊகித்திருந்தாள் .
தான் அவளுடன் பேசாமல் இருந்தாலாவது, தன் எண்ணம் அவளுக்கு தெரியும் என்று தான் இருந்தாள் .
இலக்கியாவுக்கும் அன்று பிறகு, தங்கை பேசிய செய்தி, அவள் மனதில் ரீங்காரமிட்டது.
செழியனும் மனையிடம் கொஞ்சம் பணம் கொடுத்து, அங்கு வீட்டினருக்கு ஏதேனும் வாங்கி தருமாறு கூறி, கிளம்பும் நேரம், அவன் மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்க்கும் வேலுவை அனுப்பி, ஆட்டோ அனுப்புமாறு கூறி விடை பெற்றான் .
பிறகு, காலி உணவு முடிந்ததும், இலக்கியா, தரணியின் மாமியாரின் எண்ணுக்கு அழைத்தார் .
"அங்கு இலக்கியாவின் மாமியார், மாமனார் மாற்று தாரணி இருந்தனர்.
பிள்ளைகள் நான்கு பேரும், வெளியே தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தனர்.
"ஹ்ம்ம் அம்மா, நான் இலக்கியா பேசுறேன், எப்படி இருக்கீங்க,"
"நான் நல்லா இருக்கேன் மா , நீ எப்படி இருக்கே," என்ன திடீர்னு எப்படி கேட்க யோசித்து, அவர் அமைதியானார்.
இது வரை தேவைக்கு மட்டுமே பதிலளித்த இலக்கியவிடம் இருந்து அழைப்பு என்றல், முக்கியமா விஷயமோ, என்று சிந்தனை .
"ஒன்னும் இல்லை மா, இன்னும் இரண்டு வாரம் தான், பசங்களுக்கு ஸ்கூல் திறந்துடும், அதான், அம்மா வீட்டுக்கு நான் போய்ட்டு வரலாம்ன்னு, நினைக்கிறேன், இங்க அண்ணியை விட்டுட்டு போறதுல, உங்களுக்கு எதுவும் சங்கோஜம் இல்லையே, அண்ணா எதுவும் தப்பா நினைக்க போறாரு," என்றதும் தாரணிக்கு திக்கென்றானது.
அங்கு தாரணியின் மாமியாருக்கு பெரும் மகிழ்ச்சி, இப்படி, மருமகள் அங்கிருப்பதால், தன்னிடமும், அனுமதி கேட்கும் பெண்ணை நினைத்து மகிழ்ந்து கொண்டார் "என்ன கண்ணு இப்படி கேட்டுட்டே, நீயும் அங்க போயிட்டு வரணும் தானே, தாரணி தான், லீவ் முடிய வரை அங்க இருப்பா,அவளுக்காக நீ பார்த்துட்டே இருந்தா ஆகாது, அது எல்லாம் உங்க அண்ணா, ஒன்னும் நினைக்க மாட்டான், தாரணி சம்மந்தியை பார்த்துப்பா, நீ கவலை படமா போயிட்டு வா மா, பசங்க பத்திரம், நான் சம்மந்தியும், உங்க அம்மா அப்பாவையும் கேட்டதா சொல்லு மா," என்று பேசி முடித்தார் .
அம்மா என்றதும் அவள் வீட்டுக்கு என்று நினைத்த, தாராணிக்கு இலக்கியா, அவள் புகுந்த வீட்டினரிடம் பேசியது, அதிலும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், அவள் நடந்து கொண்ட விதம் கண்டு, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, அவளை முறைத்தாள், என்றால் ,செழியனின் அன்னை, மருமகளின் புது அவதாரத்தில் ஏதோ பெரிதாக வர இருக்கிறது என்று என்றும் இல்லாமல், இன்று அமைதியாக மருமகளையே, பார்த்து கொன்றிருந்தார்.
 

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு உங்களின் ஆதரவுக்கு நன்றி பிரெண்ட்ஸ், அடுத்த பதிவையும் படித்து விட்டு உங்களின் நிறை குறைகளை கூறுங்கள்.
All tak care
Be safe:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top