தாரகை 5

வாவ், என்ன வாசனை? முகர்ந்த ஜோ, “நிது பாரேன் நம்ம லட்சு  உனக்காக உன்னோட ஃபேவரேட் குலோப்ஜாமுன் செஞ்சிருக்காங்க. செம்மையா வாசனை வருது” தாத்தாவிற்கு கேட்க வேண்டும் என்று சத்தமாக கூறி அவர் அறையை பார்த்தான்.

எழுந்து அமர்ந்த அமரேசன் மீண்டும் புகைப்படத்தை அணைத்தவாறு படுத்துக் கொண்டார்.

ஜோ ரிஷியை பார்த்து சினமானாலும் அவன் அங்கே இருப்பது போல காட்டிக் கொள்ளாமல் நிதுவை பார்த்தான்.

ரிஷி அங்கே இருப்பதை பார்த்து ஸ்ரீநிதி அவனை பார்க்க, அவனும் அவளை பார்த்தான்.

இளம்மஞ்சள் நிறத்தில் உடலையே மறைத்தது போல லேசான சுடிதாருடன் நெற்றில் சிறு பொட்டுடன் விபூதியும் அவளது கூந்தல் போனிட்டைல் போட்டு கைகளில் அழகான அதே மஞ்சள் நிற பிளாஸ்டிக் வளையல் அணிந்து எளிதாகவும் அதே நேரம் அழகாகவும் இருந்தாள். முகத்தில் வேதனை மட்டும் தெளிவாக தெரிந்தது.

அவளை பார்த்த ரிஷிக்கு அவளை அவளது வீட்டில் பேசியது எண்ணத்தில் வர, “நாம் எண்ணியது போல கலரில்லாமல் இல்லை. அழகா தான் இருக்கா” எண்ணம் செல்ல திகைத்து, “ நாம என்ன நினைச்சிட்டு இருக்கோம்?” எண்ணிக் கொண்டு பவிதாவை பார்த்தான்.

அவள் எப்போதும் போல நவீன யுகதியாக மாடர்ன் ஆடையில், கூந்தலை விரித்து முழு ஒப்பனையுடன் உதட்டு சாயத்துடன் அவனை முறைத்துக் கொண்டே ஸ்ரீநிதியுடன் வந்தாள்.

இருவருக்கும் எவ்வளவு வித்தியாசம்? அவன் மனம் இருவரையும் ஒப்பிட்டு பார்த்தது.

“நிதுக்குட்டி வாங்க” லட்சுமி ஓடி வந்து ஸ்ரீநிதியை அணைத்தார். அவள் ரிஷியை பார்த்துக் கொண்டே அவரை அணைத்துக் கொள்ள, இருவருக்கும் இடையே வந்தான் ஜோஜித்.

லட்சு, எனக்கு ஸ்பெசலா என்ன இருக்கு? ஜோ கண்சிமிட்டி அவரிடம் கேட்க,

ஜோவுக்கு ஸ்பெசல் ஃபுட் இல்லாமலா? ஸ்ரீநிதியை விட்டு விலகி…நிதுக்குட்டி உனக்கு பிடிச்ச ஜாமூன், பிரியாணி..

அப்புறம் நம்ம ஜோவிற்கு பால் கொழுக்கட்டை..

பவிம்மாவுக்கு கேசரி என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க,

லட்சு..பாசந்தி செய்யலையா? புகழுக்கு? அவள் கேட்க, அனைவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.

ரிஷி வேகமாக அவளை பார்த்தான்.

“லட்சு” ஸ்ரீநிதி அழைக்க, “இல்லம்மா” கண்ணீருடன் லட்சுமி திரும்பிக் கொண்டார்.

“ஏன் லட்சும்மா? அவன் போயிட்டான்னு செய்யலையா?” அவள் கேட்க, பவிதாவிற்கு கண்ணீர் வர  அதை துடைத்து,

“நிது  நாம அப்புறம் சாப்பிடலாம். நாம கேம் ப்ளே பண்ணுவோமா? ராகவ் கேரம் எடுத்து வச்சிருக்கான்” பவிதா அவளை திசை திருப்ப முயன்றாள்.

வீடியோ கேம் இல்லையா வீ? நம்ம புகழ் என்னோட அதான விளையாடுவான்?

ஜோ கண்கலங்க சமையலறைக்கு சென்று தண்ணீரை எடுத்து மடமடவென வாயில் ஊற்றிக் கொண்டிருந்தான்.

லட்சுமி அக்கா கண்ணை துடைத்து விட்டு, ரிது குட்டி, யார் சொன்னா புகழ் உன்னோட விளையாடுவான்? முதல்ல நாம ஜூஸ் குடிக்கலாம். இரு எடுத்துட்டு வாரேன்..

லட்சு, “மேங்கோ ஜீஸ்” அவள் சொல்ல, “அக்கா  புகழண்ணா இல்லை. நீ உனக்கு பிடிச்சதை சாப்பிடு” ராகவன் பொறுக்க முடியாமல் பேசினான்.

அவனில்லை. ஆனால் எனக்கு பிடிச்சது தானடா அவனுக்கும் பிடிக்கும். ஸ்ரீநிதி லட்சுமியை பார்க்க, “ம்ம்..எடுத்துட்டு வாரேன்ம்மா” உள்ளே சென்றார்.

ஜோ அவரை அணைத்து, “இப்படி தான் விழித்ததிலிருந்து புகழை பற்றியே பேசிட்டு இருக்கா. பேசவே முடியல லட்சு” அழுதான்.

ரிஷி ஸ்ரீநிதியை திகைத்து பார்த்துக் கொண்டிருந்தான். அதை கவனித்த பவிதா, “நிது  நாம அறைக்கு போகலாம்” அவளுடன் நடக்க, ஸ்ரீநிதி நின்று அமரேசன் அறையை பார்த்தாள்.

வீ..எப்போதும் புகழோடு நான் வரும் போது அவனுக்காக எப்போதும் வெளியவே அமர்ந்திருப்பார். இப்ப அவர் வரலை.

ஓ..அவன் இல்லைன்னு அவர் வரலையா? கேள்வியும் கேட்டு அவளாக பதிலும் கூறினாள். ஸ்ரீநிதி கண்ணீர் அவளை மீறியும் வந்தது.

நிது வேண்டாம்டி. ப்ளீஸ்..என்னால இதுக்கு மேல முடியாது. என்னோட அறைக்கே போகலாம்..

இல்ல நம்ம ஸ்ட்டடி ரூமுக்கு தான் போகணும்..

ஸ்ரீநிதியை நகர்த்தி அவளை பிடித்து உலுக்கி, “உனக்கு மட்டும் தான் புகழ் எல்லாமேவா? அவனை இழந்ததில்லாமல் உன்னையும் அந்த நிலையில் பார்த்து நாங்க நாங்களாகவே இல்லை” சத்தமிட்டு பவிதா அழுதாள். ஸ்ரீநிதி கண்ணீருடன் அவளை பார்த்தாள். எல்லாரும் வெளியே வந்து பார்த்தனர். அமரேசனும் வெளியே வந்தார்.

புரிஞ்சுக்கோ நிது. நீயே புரிஞ்சு நடந்துக்கலேன்னா  நாங்க என்ன செய்றது? பவிதா அழ, அவளை அணைத்துக் கொள்ள துடித்த கைகளை இறுக்கி நின்றான் ரிஷி.

ஸ்ரீநிதி அவளை அணைத்து அழுதாள். என்னால ஏத்துக்க முடியலடி. எங்க பார்த்தாலும் புகழ் தான் தெரியுறான். அவனில்லாமல் நான் இருந்ததேயில்லை. உனக்கு தெரியும்ல்ல? அவன் இல்லைன்னு தெரியுது. மனசு ஏத்துக்க மாட்டேங்கிது. இதுல அன்று நடந்த எதுவும் எனக்கு முழுதாக நினைவில் இல்லை..

வீ, உனக்கு தெரியுமா? அன்றும் புகழ் எனக்காக தான் வந்தான். அவனிடம் நானே பார்த்துக்கிறேன்னு சொன்னேன். அவன் என்னை தனியே விட மாட்டேன்னு என்னை கட்டுப்படுத்தி அவன் தான் டிரைவ் செய்தான்.

பவிதா ஸ்ரீநிதியை விட்டு நகர்ந்து, நீ டிரைவ் பண்ணலையா?

இல்ல, நாங்க ரிஷியை பாலோ செய்து தான் போனோம். ஆனால் அவங்க கார்ல்ல..என்னன்னு தெரியல..தலையை பிடித்து தரையில் அமர்ந்து கண்ணை மூடிய ஸ்ரீநிதி…”தெளிவா எதுவும் தெரிய மாட்டேங்குதுடி”

அவங்க கார் தான் எங்க காரை இடித்தது. புகழால் காரை மேனேஜ் பண்ண முடியல.அவன் என்னை காரிலிருந்து வெளியே தள்ளி விட்டான். இதுவரை மட்டும் தான் நினைவில் இருக்கு. வேறெதுவும் தெரியல. கண்ணை திறந்து ரிஷி, ரக்சித், யுகமித்ரன் எல்லாரும் பின் சீட்டில் நினைவில்லாமல் இருந்தாங்க. இது தெளிவா தெரியுது என்று ரிஷியை பார்த்துக் கொண்டே எழுந்து தலையில் கையை வைத்து அவளுக்கு கண்கள் சொருக, ஜோ தண்ணீரை அவள் மீது தெளித்தான்.

அரை மயக்கத்துடன் பவிதா மீது சாய்ந்து ரிஷியை பார்த்து, “எனக்கு நடந்தது முழுசா தெரியல” சொல்ல, மீண்டும் தண்ணீரை அவள் மீது தெளிக்க நிதானமாகி அனைவரையும் பார்த்தாள்.

அமரேசனும் அவளை கண்ணீருடன் பார்க்க, “தாத்தா” அவள் அழைக்க, அவர் கதறி அழுது விட்டார்.

“என்னை மன்னிச்சிரும்மா. ஆகாத காரணத்துக்காக உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். இப்ப எனக்கு புகழ் எதையும் விளக்கி உனக்காக பேசலை. நானாகவே புரிந்து கொண்டேன்” அவளது கையை அவர் பிடிக்க, அவரை அணைத்து அழுதாள் ஸ்ரீநிதி.

நிதுகுட்டி, “அய்யாவுக்கு உடல்நலமில்லை. நீயும் வா. உனக்கும் ஓய்வு அவசியம்” லட்சுமி அவளை அவரிடமிருந்து நகர்த்தினாள்.

ஆமாடா நிது, “புகழை நினைச்சிட்டு உன்னோட வாழ்க்கையை கெடுத்துக்காதடா” தாத்தா கூற, “எனக்காக வந்தான் தாத்தா. என்னால தான செத்துட்டான்”.

ஆன்ட்டி அங்கிள் எவ்வளவு வேதனை பட்டிருப்பாங்க. அவனில்லாமல் என்னாலவே முடியல.

அவங்கள…அவங்கள எதுக்கு தனியா விட்டடா ஜோ? தன் தமையனை பார்த்தான்.

யாரு தனியா விட்டா? நாங்க உன்னை போல அவங்களையும் தினமும் பார்த்துட்டு தான் வாரோம்.

ஆன்ட்டி ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க  நிது. அவங்களுக்கும் உன் மேல துளி கோபம் கூட இல்லை. நீ தான் உன்னால புகழ் செத்துட்டான்னு நினைக்கிற.

“அவனில்லைன்னா என்னம்மா? நீ இருக்கேல்ல….” என்ற குரலில் விழுக்கென நிமிர்ந்து பார்த்தாள் ஸ்ரீநிதி. புகழின் பெற்றோர் நின்றிருந்தனர்.

அனைவரையும் விட்டு எழுந்து அவள் அவர்களிடம் ஓட, புகழின் தந்தை தர்மேந்திரன் அவளை அணைத்து, “நீயும் எங்கள அநாதையா விட்டு போயிருவன்னு நினைச்சோம்டா செல்லம்” கண்கலங்கினார்.

“நோ அங்கிள்” தலையசைத்தாள்.

“அம்மூ” புகழ் அம்மா அழகி ஸ்ரீநிதியை அழைத்தார்.

சாரி ஆன்ட்டி, “என்னால தான் அவன் அன்று என்னோட தான் வந்தான். இப்ப இல்லாமலே போயிட்டான்” ஸ்ரீநிதி அவரை அணைத்து அழுதாள்.

அவளை நகர்த்திய அழகி, அவள் கண்ணை துடைத்து விட்டு, புகழ் நீ அழைத்தா வந்தான்?

இப்ப உனக்கு ஏதாவது ஆகி இருந்தா இப்ப அவனும் இருந்திருக்க மாட்டான். நீயும் இருந்திருக்க மாட்ட..

அவன் உன்னை காப்பாத்தியது நீயாவது உயிரோட இருக்கணும்ன்னு எங்க எல்லாருக்காகவும். அவன் இல்லை என்றாலும் இங்க எப்போதும் இருப்பான் அவள் இதயத்தை சுட்டிக் காட்டினார்.

“அத்த” கதறி விட்டாள் ஸ்ரீநிதி.

அம்மூ, “நீ அழுதா அவனும் கஷ்டப்படுவான். நீ அழுதா அவனுக்கு பிடிக்காது. தெரியும்ல்ல? ஸ்மைல் பண்ணு” அவளது இரு கன்னத்தையும் பிடித்து இழுத்தார் அழகி.

ம்ம்ம்! புகழுக்கு நாம அழுறது பிடிக்காது. நான் அழ மாட்டேன் அத்த.

உங்க மகனுக்காக நீங்க என்னை இப்ப அடிச்சிருக்கணும் இல்ல திட்டி இருக்கணும். ஆனால் இப்படி எனக்காக பேசுறது வலிக்குது அத்த..

“நீ யாரோ ஒருத்தியா அம்மூ? நீ என்னோட அம்மூ. உன்னால யாராவது கஷ்டப்பட்டாங்கன்னு சொன்னாலே நாங்க நம்ப மாட்டோம். புகழ் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கன்னு எங்களுக்கு தெரியாதாம்மூ..”

கண்கலங்க அவரை அணைத்துக் கொண்டாள் ஸ்ரீநிதி.

அமரேசன் அவர்களிடம் வந்து, “உள்ள வாங்க” அழைத்தார். தர்மேந்திரன் தன் மனைவியை பார்த்தார்.

உள்ள வரணுமா? நக்கலாக கேட்ட அழகி, “இங்க வந்தது எங்க அம்மூ கஷ்டப்படக் கூடாதுன்னு தான். எங்களால உங்க வீட்டுக்கு வர முடியாது. உங்களுக்கு உங்க ஸ்டேட்டஸ் குறைஞ்சு போயிறாது” சத்தமிட்டு “அம்மூ நீ அழவே கூடாது” பவியையும் ஜோவையும் பார்த்தார் அழகி.

அங்கிள், “உள்ள வாங்க. எனக்காக வர மாட்டீங்களா?” பவிதா கேட்க, இல்லம்மா, இந்த வீட்டுக்குள்ள நாங்க சரியா வராதும்மா..

“என்ன விசயம்ன்னாவது யாராவது சொல்லுங்க?” தாத்தாவையும் புகழின் பெற்றோரையும் பார்த்தான் ஜோஜித்.

ஜோ, “இனி எங்க செல்லம் அழவே கூடாது. நீ தான் பார்த்துக்கணும்” என்ற தர்மேந்திரன் ரிஷியையும் ஸ்ரீநிதியையும் பார்த்தார்.

“யாருப்பா நீ?” அழகி கேட்க, “எங்க வீட்டு டிரைவர் ஆன்ட்டி. எதுக்கு அவனையெல்லாம் பார்க்குறீங்க?” சினமுடன் கேட்டாள் பவிதா.

பவிம்மா, “உன்னோட தாத்தா மாதிரி யாரையும் குறைச்சு மதிப்பிடக் கூடாது” அதட்டினார் அழகி.

ஆன்ட்டி, அவனை பத்தி உங்களுக்கு தெரியாது?

“அவன் யாராக இருந்தாலும் அவங்க செய்யும் வேலைக்கு மதிப்பு கொடுக்கணும்” என்ற அழகி, “அம்மூ, இனி நீ அழவே கூடாது. அழுத இந்த உலகத்திலே நாங்க இல்லைன்னு அர்த்தம்” மிரட்டுவது போல பேசினார் அழகி.

இல்ல ஆன்ட்டி, நான் அழவே மாட்டேன். புகழ் எண்ணம் வந்தாலும் அழ மாட்டேன். அவன் பக்கத்துல்ல இருப்பது போலவே இருக்கு. அதனால அதை எண்ணியே இருந்துப்பேன். நானும் உங்களோட வரவா? மெதுவாக விழிகளை உயர்த்தி கேட்டாள்.

தர்மேந்திரன் அவள் நெற்றியில் முத்தமிட்டு, “இங்க எல்லாருடனும் இரும்மா. உனக்கு எப்ப தோணுதோ எப்போதும் போல வா. நாங்களும் உன்னை பார்க்க வந்திருவோம்” என்றார்.

“அங்கிள்” அவரது பாதத்தில் அவள் காலை வைத்து அவள் கன்னத்தை காட்டினாள். புன்னகையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டார் தர்மேந்திரன்.

“ஆன்ட்டி” அழகி கன்னத்தில் இவள் முத்தமிட்டு “லவ் யூ ஆன்ட்டி, அங்கிள்” என்றாள்.

“லவ் யூ டா செல்லம்” தர்மேந்திரன் கூற, “மீ டூ டா அம்மூ…” அம்மூ இனி நீ அழுதா..

நோ வே..ஆன்ட்டி..

நிதுக்குட்டி, ஒண்ணு அத்தைன்னு கூப்பிடுங்க இல்லை ஆன்ட்டின்னு கூப்பிடுறீங்க. இரண்டையும் கலந்து கூப்பிடுறீங்க? லட்சுமி கேட்க,

அம்மூ எங்களை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம் பெயர் சொல்லி கூட கூப்பிடுவா உனக்கென்னடி? லட்சுமியிடம் சண்டைக்கு வந்தார் அழகி.

“அதான..? லட்சு சைலண்டா அவங்கள பாசமழையில நனைய விடுங்க இல்லை ஆன்ட்டி நமக்கு குளிர்காய்ச்சல் வர வச்சிருவாங்க” ஜோ கூற, தர்மேந்திரன் ஜோவிடம் ரிஷியை கண்ணை காட்டி “என்ன?” கேட்டார்.

“ஒன்றுமில்லை” தலையசைத்து, “நான் பார்த்துக்கிறேன்” கண்ணை மூடி திறந்தான் ஜோ. ரிஷி அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சோர்வுடன் தாத்தா அமர, “சாப்பிட்டு போங்க ப்யூட்டி?” ராகவன் அழகியிடம் கேட்டான்.

டேய்..தர்மேந்திரன் சத்தமிட்டார்.

அழகி…ப்யூட்டி தான சார்? உங்களுக்கு பொண்ணு இருந்தாவாது சைட் அடிக்கலாம்? இல்லாமல் போச்சே.. ராகவன் வருந்துவது போல சொல்ல, ராகவ் சத்தமிட்டார் லட்சுமி. இருவரின் முகமும் வாடியது.

என்ன சொல்லீட்டேன்? விளையாட்டுக்கு தான சொன்னேன்மா? ராகவன் கேட்க, தாத்தா வருத்தமுடன் அழகியை பார்த்தார்.

“அம்மூ, நாங்க வாரோம். பவி பார்த்துக்கோ” அவரிடம் கூறி செல்ல, ஓடிச் சென்று அவர் கையை பற்றினாள் ஸ்ரீநிதி.

ஆன்ட்டி, அங்கிள் சாப்பிட்டு போங்க..

நாங்க உள்ள வரல அம்மூ..

உங்கள யாரும் உள்ளே வரச் சொல்லலை. எனக்காக சாப்பிடலாம்ல்ல. இங்க கார்டன்ல்ல சாப்பிட அரேஞ்ச் பண்ணலாம். நம்ம வீட்ல அதே போல சாப்பிட்டு வருசமாகுதுல்ல? ஸ்ரீநிதி எல்லாரையும் பார்த்து விட்டு லட்சுமியை பார்த்து கண்ணசைத்தாள்.

ஆமாம்மா, “சாப்பிட்டு போகலாம். இப்பவே நாங்க தயார் செய்திடுவோம்” ராகவனை அழைத்து அரேன்ச் செய்ய சொல்ல, எல்லாருமே அவனுக்கு உதவினார்கள்.

வீட்டின் வெளியே நிலவொளியில் உணவு மேசையில் பதார்த்தங்கள் அடுக்கப்பட்டு பரிமாறப்பட்டது.

“ஹே தம்பி, நீயும் வாப்பா” அழகி ரிஷியை அழைத்தார்.

எல்லாரும் அவனை பார்த்தனர். யாரும் தடுக்கவில்லை. ஆனால் பவிதா மட்டும், “அத்த இவன் வந்தால் நான் சாப்பிட மாட்டேன்” என்றாள்.

என்னடி உனக்கு பிரச்சனை?

இவன் எங்களோட தான் காலேஜ் படிச்சான். எவ்வளவு திமிரு தெரியுமா? என்னை தண்ணிக்குள்ள தள்ளி விட்டுட்டான் இடியட். புகழ் இல்லைன்னா நான் இப்ப இங்க இருந்திருக்க மாட்டேன் பவிதா கூற, “வீ” அழைத்தாள் ஸ்ரீநிதி.

ஏன்டி, சொல்லக் கூடாதா? புகழுக்கு நீச்சல் தெரியாம எனக்காக உடனே யோசிக்காம குதிச்சுட்டான். இவன் அவன் நண்பர்களோட சேர்ந்து கேலி செய்து தள்ளி விட்டான்.

பவி மேம், நான்…நானா? தடுமாறியவாறு சொற்களை மென்று விழுங்கி கேட்டான் ரிஷி.

“நீ தான்டா ராஸ்கல். என்னை மட்டுமல்ல…” அவள் பேசத் தொடங்க அவள் வாயை பொத்தி ஜோ அவள் காதில் ஏதோ கூறி அமர வைத்தான்.

அழகி ரிஷியை ஸ்கேன் செய்ய, ஸ்ரீநிதி தர்மேந்திரன் கையை அழுத்தி அவரை காட்டினாள்.

அம்மாடி, எனக்கு கொஞ்சம் ஸ்வீட் வையேன்?

“ஸ்வீட்டா? இருக்கிறத சாப்பிடுங்க. அதிகமா சாப்பிடக் கூடாது” ரிஷியை பார்த்து, “வா எங்களோட ஜாயின் பண்ணிக்கோ. பவிம்மா எல்லாரும் எப்போதும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. ராகவ் நீயும் எங்களோட சாப்பிடு” அவனையும் அமர வைத்து சாப்பிட வைத்தார்.

“ரொம்ப நாளாச்சு ஆன்ட்டி. தேங்க்ஸ்” ஜோ கூற, “ஆமா ஆன்ட்டி..இதே போல தினமும் சாப்பிட்டால் நல்லா இருக்கும்” பவிதா அந்த நிலவை பார்த்துக் கொண்டே கூற, ஜெய்யின் புன்னகைத்த முகம் வந்தது. பல்லை காட்டிக் கொண்டு அவள் நிலாவை பார்த்தாள்.

ஜோ அண்ணா, “அங்க பாருங்க” ஹஸ்கி வாய்சில் ராகவ் அழைக்க, எல்லாரும் பவிதாவை பார்த்தனர்.

வீ, “உங்க ஆயாவுக்கு சாப்பிட்டு ஊட்டி விட்டுகிட்டு இருக்கீயா? வடையா? பிரியாணியா?” ஜோ சிரிப்பை உதட்டுக்குள் அடக்கி கேட்க, ம்ம்..அவரும் ஊட்டி விடுவார்ல்ல?

என்ன அவரா? ஸ்ரீநிதி அவளை பார்த்து கேட்க, சுக்குநூறாக உடைந்தது ரிஷியின் காதல் கொண்ட இதயம்.

தர்மேந்திரனுக்கு புரை ஏற, “அங்கிள்” அவர் தலையை தட்டி தண்ணீரை கொடுத்தாள் ஸ்ரீநிதி.

“செல்லம். யாரை நனைச்சு புள்ள கனவு காணுது? லவ் வந்துருச்சோ!”

“தெரியலையே அங்கிள்!” ஸ்ரீநிதி அவளை பார்க்க, ராகவன் புல்லை பிடுங்கி அவள் காதில் விட்டான்.

பயந்து கத்திக் கொண்டே எழுந்தாள். எல்லாரும் அவளை பார்த்து சிரித்தனர்.

“எனக்கு தெரிஞ்சு யாரையும் புதுசா நீ சந்திக்கலையே! கனவு காணும் அளவு போயிருக்கு. யாரு வீ?” ஜோ கேட்க, “யாரு? என்ன?” தெரியாதது போல ராகவனை பார்த்து, ராகவ்…என்னடா பண்ண?

இல்லக்கா. உங்க லவ்வருக்கு சாப்பாடு ஊட்டுறேன்னு நிலால்ல வட சுடுற ஆயாவுக்கு ஊட்டிக்கிட்ட கனவு காணுற? அது நடந்தால் எப்படி இருக்கும்? அவன் நிலாவை பார்த்து மூச்சை இழுத்து இழுத்து விட, “என்னடா சொன்ன?”

அவள் கையை பிடித்த ஜோ அவளை அமர வைத்து, “யாருன்னு நான் கேட்டேன்?” முகத்தை உர்ரென வைத்தான்.

என்ன யாரு?

உன்னோட லவ்வர்ம்மா? அழகி கேட்க, “ஆன்ட்டி எனக்கு லவ்வெல்லாம் இல்லை. தாடி வளர்க்க எனக்கு விருப்பமில்லை” ஸ்ரீநிதியை பார்த்தாள்.

“பேச்ச மாத்துற வீ?” ஸ்ரீநிதி கேட்டாள்.

ஆக்சுவலி, அவருக்கு என்னை பிடிக்குமான்னு தெரியல. நான் கன்பார்ம் பண்ணீட்டு சொல்லவா?

“ஓ…அப்ப இருக்கு? சொன்னால் நாங்களும் எங்க ரௌடி பேபிக்காக விசாரிப்போம்ல்ல?” கேட்டார் தர்மேந்திரன்.

கண்கலங்க பவிதா எழுந்து வந்து அவரை கட்டிக் கொண்டாள்.

அங்கிள், “உங்க விருப்பமில்லாமல் நானும் நிதுவும் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டோம்”.

“யாருன்னு முதல்ல சொல்லு?” காரசாரமாக ஜோ கேட்க, பவிதாவின் பார்வை ரிஷியை தொட்டு மீண்டது.

“பொறுமையை சோதிக்காத. இப்ப எதுக்கு அவன பாக்குற? நான் கோபப்படுற மாதிரி எதுவும் செஞ்சிறாத” ஜோ சினமுடன் பவிதாவிடம் கேட்டான்.

ச்சீ..இவனா? பவிதா அருவருப்பு பார்வையை ரிஷி மீது வீசினாள்.

ஸ்ரீநிதி அவளை முறைக்க, “முறைக்காத நிது” என்ற பவிதா “குடும்பத்துல எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டங்க” என்றாள்.

என்ன குடும்பம்? யார் குடும்பம்? ஜோ சினமுடன் கேட்க, பெரியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஜோவின் சீற்றப்பார்வையில் வேகமாக எழுந்து உள்ளே ஓடினாள் பவிதா.

வீ, “சொல்லீட்டு போ” ஜோ சீற, ரிஷிக்கு நன்றாக புரிந்து விட்டது. பவிதா மனதில் ஜெய் தான் இருக்கிறான் என்று. அவனும் சாப்பாட்டை பாதியில் நிறுத்தி எழுந்தான்.

சாரி, “எனக்கு பசிக்கலை” ரிஷி நகர, தவிப்புடன் அவனை பார்த்தாள் ஸ்ரீநிதி.

“லட்சு” அழகி அழைக்க, பவிதா பின் அவர் ஓடினார்.

“இந்த பையனுக்கு என்ன ஆச்சு?” அழகி கேட்டுக் கொண்டே அவனை பார்க்க, அவன் தாத்தா அறைக்கு சென்று அவனது பொருட்களை எடுத்து வந்தான்.

“என்னப்பா? டிரைவர் வேலை பிடிக்கலையா?” அழகி வெகுளியாக கேட்க, சொல்ல முடியாமல் எல்லாரையும் பார்த்து ஸ்ரீநிதியை பார்த்தான்.

அவன் கண்கள் சிவந்து இருப்பதை பார்த்து, “கோபமா இருக்காரா? என்னாச்சு?” மனதில் எண்ணினாள் ஸ்ரீநிதி.

“நான் இனி வர மாட்டேன். உங்க தாத்தாவிடம் சொல்லீட்டேன்” ஸ்ரீநிதியை பார்த்து அவன் கூற, நம்ப முடியாமல் “என்னிடமா சொல்றீங்க?” கேட்டாள்.

நான் போறேன்..

“போயிட்டு வாரேன்னு சொல்லுப்பா. அதான் நம்ம கலாச்சாரம்” அழகி கூற, அவரை பார்த்து விட்டு வேகமாக நகர்ந்தான்.

“இவனுக்கு என்னவாம்?” ஜோ கேட்க, “ஜோ அவரு என்னிடம் பேசிட்டாருடா” என்றாள் ஸ்ரீநிதி.

“அம்மூ, என்ன அவரு?” அழகி கேட்க, “அத்த..” தயங்கினாள் ஸ்ரீநிதி. தர்மேந்திரன் ரிஷியை பற்றி ஆதி முதல் அந்தம் வரை கூறி முடித்தார்.

“இவனையா நம்ம அம்மூ காதலிச்சா?” அழகி கேட்டார்.

ம்ம்! தர்மேந்திரன் ஸ்ரீநிதியை பார்த்தார். அவள் கண்கலங்கி அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

உங்க அம்மாவை தனியா விட்டு இவ்வளவு நேரம் இங்க இருக்கடா ஜோ? தர்மேந்திரன் பேச்சை மாற்றினார்.

முறைப்புடன் இருந்த ஜோவை பார்த்த ஸ்ரீநிதி தயக்கமுடன், ஜோ அவரு தனியா போறாரு..

“அதுக்கு?” அவளை முறைத்தான் ஜோ.

டிராப் மட்டும் பண்ணீட்டு வந்துரு..

என்னை புகழ்ன்னு நினைச்சியா? சினமுடன் ஜோ கேட்க, ப்ளீஸ் டா..எனக்காக..

ஆமாடா, “புள்ள தனியா போறாரு. என்னோட செல்லத்துக்காக போயிட்டு வாடா” தர்மேந்திரன் கூற, அழகி அவரது அம்மூவின் தவிப்பில் எழுந்தவர் “இப்ப நீ போறீயா? நான் போகவா?” கோபப்படுவது போல ஜோவிடம் கேட்டார்.

“போய்த் தொலையிறேன்” எழுந்து பைக்கை எடுத்து ரிஷியை நோக்கி சென்றான்.