உன்னை நினைத்து 18

சரவணன் காலையில் நேரம் கழித்து எழுந்தவன், தான் மாமியார் வீட்டில் இருப்பதை அறிந்தவன் குளித்து முடித்து விட்டு அங்கு அமர்ந்து இருந்த ஜானவியை கண்டும் காணாமல் வெளியே செல்ல போக!

என்ன நினைச்சுட்டு இருக்க சரவணா பேச கூட மாட்டியா ஆதான் என்ன அடிக்க கூட செஞ்சுட்டியே இதுக்கு மேல என்ன?,உனக்கு என் மேலே கோபம்?

பளிச் …… உன்கூட பேச எனக்கு விருப்பம் இல்லை ஜானவி , எனக்கு இன்னிக்கு வேலை நிறைய இருக்கு உன் கூட வெட்டியா பேச  எனக்கு நேரமில்லை என்றவன் வெளியேறி செல்ல!

ஓ……நீ அடிச்சதையும் பொருத்துட்டு,இப்போ நான் உன்னிடம் பேசி கொண்டு இருந்தால் நீ என்ன வென்றால் பேசுறதுக்கு நேரமில்லை  என்று சொல்லுறியா! , நீ என்னடா சொல்லுறது நான் உன்னிடம் பேசலை நீ எப்படி இருந்தா எனக்கு என்ன என்று ஜானவி இங்கே கத்தி கொண்டு இருக்க!

கீழே இவளுடைய சத்தம்  கேட்டு தன் மாப்பிள்ளையை பாவமாக பார்த்த தான்யலஷ்மி , எதுவும் சொல்லாமல் மாப்பிள்ளையை சாப்பிட அழைக்க!

வேண்டாம் அத்தை என்றவன் வெளியேறி செல்ல போக!

அதே நேரம் அப்பா என்று நவிலன் ததாக்கா பிதாக்கள் வென்று தந்தையை கண்டதும் ஆவளாக நடந்து வர!

மகனை  தூக்கி முத்தமிட்டவன் இப்போது சாப்பிடலாம் என்று அழைத்த நவிலனுடன் டைனிங் டேபிளில் அமர்ந்தவன், மகனுக்கு ஊட்டி விட்டபடியே தானும் உண்றவன், மனைவி வருவதை  கண்டதும் மகனை அத்தையிடம் கொடுத்து விட்டு வேகமாக வெளியேறி சரவணன் செல்ல!

அதனை கண்டு ஜானவிக்கு தொண்டை அடைத்தது!

நாட்கள் வேகமாக செல்ல சரவணன் அவனுடைய வீட்டிற்கு சென்றே இரண்டு வாரம் ஆகி இருக்க, அந்த இரண்டு வாரமும் மகனை பார்த்து செல்லம் கொஞ்சிவிட்டு மாமனார் வீட்டில் இருந்து செல்பவன் தவறியும் மனைவி இடத்தில் ஒரு வார்த்தை பேசினான் இல்லை!

இதில் இவன் பேசாமல் இருந்ததில் கவலையில் இருந்தது என்னவோ ஜானவி தான்,தினமும் கணவனுக்கு போனில் தொடர்பு கொள்பவள், அவன் எடுக்காமல் இருக்க , லோலிட்டாவிடம் புலம்பி தள்ளுபவள், மீதி நேரம் கணவனின் புகைபடத்தையே பார்த்து கொண்டே இருப்பாள், இதில் மசக்கை வேறு படுத்தி எடுக்க, குழந்தை நவிலனை கூட பார்த்து கொள்ள முடியவில்லை ஜானவியால்!

 இவள் புலம்பலை தாங்க முடியாத லோலிட்டா  ஈகோவை விடுத்து போய் உன் கணவனிடம் பேசு என்று கூறியவள் சிட்டாக அங்கிருந்து அவள் பறந்து செல்ல!

தோழி கூறியதை செயல் படுத்த எண்ணிய ஜானவி இந்த இரண்டு வாரத்தில் அவன் வீட்டுக்கே போகாமல் கம்பெனி குடோனில் தங்கியிருப்பதாக செய்தி வர!

நேரே பாடிகார்ட்ஸ் படை சூழ அகரத்தில்  இருக்கும் குடோனிற்கு  நவிலனுடன் ஜானவி வந்தவள்,அங்கு வேலை செய்பவர்களிடம் சரவணன் எங்கே என்று கேட்க!

அதற்கு அவர்களோ இடது திசையை காட்ட!

அங்கு யாருடனோ ஏன் லோட் போகவில்லை என்று கோபமாக அந்த பக்கம் நின்று இருந்தவர்களை பார்த்து கத்தி கொண்டு சரவணன் இருக்க!

அப்போது சார்  என்று சரவணன் அசிஸ்டன்ட் ரகு ,சார், மேம் உங்களை பார்க்க உள்ளே வருகிறார்கள் என்று கூற!

இப்போ இவ எதுக்கு இங்கே வரா என்று தன்னை தானே கோபமாக கேட்ட  சரவணன்,தன் ஆறு மாத  மேடிட்ட வயிற்றுடன் ஒரு கைகளில் நவிலனுடன்  பிடித்த படி ஜானவி வர!

தன் அருகில் இருந்த வேலையாட்களை அங்கிருந்து போக சொன்னவன்,

தன் எதிரே வந்து நின்ற மனைவியை  சரவணன்

 முறைக்க ஆரம்பித்து இருந்தான்!

ஏய்….. எதுக்கு இங்கே வந்தே!,”சரவணன்”.

அவள் கலங்கிய கண்களை துடைத்தபடி நான் உன்னை பார்க்க வரக்கூடாதா சரவணா!

கூடாது என்றவன் போ நான் வரேன் என்க!

மாட்டேன் நீ என்னுடன் வந்தால் போவேன்!

ஏய் சொன்ன பேச்சைக் கேளு,இங்கே ஒரே தூசியா இருக்கு, இங்கே நீயே வரக்கூடாது சொல்லுறேன் இதுல பிள்ளையை வேற கூட்டி வந்து இருக்க என்று சரவணன் கடிய!

உனக்கு என் மேலே அக்கறை இல்லைல, நீயே என்கிட்ட பேசாம இருந்தும் உன்னை பார்த்து பேச வந்தேன்ல  என்னை சொல்லனும் என்றவள், இப்போது கண்களை மறைத்த நீரை துடைத்தபடி  தடுமாற்றத்துடன் அவள் செல்ல!

ச்ச….. ஏற்கனவே இருக்குற டென்ஷன் பத்தாதுனு இவ வேற அழுது மனுஷனை இம்சை பண்ணுறா  என்றவன் மனைவி பின்னயே வேகமாக  போனவன் அவள் தோல்களை பிடித்தவன்  கீழேயிருந்து மேலே தன்னை அண்ணாந்து பார்த்த மகனை, வா என்று அழைத்தவன் கைகளில் தூக்கி கொள்ள, பக்கத்திலோ மனைவி தன்னை முறைக்க அதனை காணாமல், தன்னுடைய அசிஸ்டன்ட் ரகுவிடம் அந்த லோட் இன்னிக்கு இவினிங் குள்ள போகவில்லையென்றால்   காண்ட்ராக்ட்  கேன்சல் பண்ணிவிடு என்றவன் செல்ல!

வண்டியை ஓட்டியபடியே  செக்கப்  எத்தனை மணிக்கு சொல்லி இருக்காங்க என்று சரவணன் கேட்க!

12 மணிக்கு!”ஜானவி”

இப்போவே 11.30 இதுக்கு மேல நவிய வீட்டுல விட்டுட்டு ஹாஸ்பிட்டல் போறது கஷ்டம் அவனையும் அழைச்சிட்டு போலாம்!”சரவணன்”.

ம்……..”ஜானவி”

அத்தையை அழைச்சிட்டு போய் இருக்கலாமே!” சரவணன்”

எங்க அம்மா ஒன்னும் என் வயிற்றில் வளருற பிள்ளைக்கு அப்பா இல்லையே!”ஜானவி”

கரெக்ட் !”சரவணன்”

இப்போது ஜானவி சீனம் கொண்டு முறைக்க!

அடேய் நவிலா இவ்வளவு ஏசியை ஹைல போட்டும் கார் ரோம்ப உஷ்ணமா இருக்குல என்று மகனை கேட்க!

தந்தையுடன் டிரைவர் சீட்டில் அமர்ந்து இருந்த நவிலனும் ஆமாம் என்று தலையாட்ட!

சரவணன் இதழில் சிறுபுண்ணகையுடன் ஹாஸ்பிட்டலில் நிறுத்தியவன் கார் பார்க்கிங் செய்து மகனை தூக்கி கொண்டு மனைவியுடன் மகப்பேறு மருத்துவரிடம் செக்கப் மேற் கொள்ள!

டேஸ்ட் முடிவில்  டாக்டர் ஏன் உங்க மனைவிக்கு பிபி ரோம்ப ஹையா இருக்கு, பிளட் ரோம்ப லோவா இருக்கு , பாருங்க சரவணன் அவங்க பிபி ரேயிஸ் ஆகாம பார்த்துக்கோங்க  நான் டேப்ளட் எழுதி தாரேன் போடுங்க ஜானவி  என்றவர் இன்னும் கணவன் மனைவிக்கு  சிறு அறிவுரை  டாக்டர் வழங்கியதை கேட்டவர்கள், சரவணன் மனைவியை அழைத்து கொண்டு தன் வீட்டிற்கு செல்ல!

கேள்வியாக நோக்கிய மனைவியிடம்  உங்க அம்மா வீட்டுக்கு போய் நீ உடம்பை எப்படி ஆக்கி வெச்சு இருக்குறத பார்த்த பிறகும் நீ அங்கே இருக்குறது சரிபட்டு வராது, உனக்கு எங்க அம்மா தான் கரெக்ட்!

எங்க அம்மா ஓழுங்கா பார்க்கலை சொல்லுறியா என்று இவள் சண்டை ஆரம்பிக்க!

ம்…கும்…… எங்க அத்தையால உன்ன மேய்க முடியலயாம் நேத்தே  போன் பண்ணி புலம்புனாங்க!

ஓ……….. என்றவள் அமைதியாகிட!

வீட்டிற்கு வந்தவர்கள், சரவணன் அன்னை பார்வதியிடம் ஜானவியின் உடல் நலன்களை பற்றி கூறியவன் மகனை அன்னையிடம் விட்டு விட்டு, மனைவியை அழைத்து கொண்டு அறைக்கு சரவணன் வர!

ஜானவி சரவணனை கட்டி கொண்டு ஓவென்று அழ!

ஏய் அழாதே டி! புஜ்ஜும்மா

இப்போ தான் நான் புஜ்ஜும்மாவா இரண்டு வாரமாக எவ்வளவு சாரி, மெஸேஜ், கால், பண்ணி இருப்பேன் பேசுனியாடா கல்நெஞ்ச காரா!

ஏய் அழகி உன் மேலே கொஞ்சம் கோபம், அதுவும் எப்பயோ சரி ஆகிடிச்சு இரண்டு வாரமாக ரோம்ப வேலை,அதை விட்டு விட்டு என்னால இங்கே வரமுடியாத சூழல்!

இப்போது மூக்கை  உறிஞ்சியபடியே  உன்னை நான் அப்போ அப்போ அடிக்கிறேன் சொல்லி அதனாலே தான் என்ன அடிச்சியா என்று ஜானவி பாப்பவை போல் கேட்க!

ஹேய் இல்லைடி  நான் பேசலைனா இந்த குட்டி மண்டைல இது மாதிரி எல்லாம் நினைத்து வைத்து இருப்பியா!

நான் நினைத்து வைக்கல நீ தான் குடிச்சிட்டு என்ட சொன்னேன்!

அச்சோ அது எல்லாம் உல்லுலாயிக்கு டி!

உன்மையாவா!”ஜானவி”

உன்மையாதான்,நிஜமாத்தான்!”சரவணன்”

சரி உனக்கு ஒரு சர்ப்ரைஸ் என்றவள் சரவணன் கையினை எடுத்து வயிற்றில் வைக்க!

அங்கே வயிற்றில் இருக்கும் சரவணனின் சின்ன குட்டி தந்தை கைவைத்தவுடன் எட்டி உதைக்க!

ஹே அம்மு  அப்பாவ கண்டுபிடிச்சிட்டியாடி

தங்க பிள்ளை என்று வயிற்றில் முத்தம் வைக்க!

இங்கே வயிற்றில் மறுபடியும் அம்மு துள்ள சரவணன் சிரித்தபடி ஜானவியிடம் கூற ,நவியும் சரவணனுடன் சேர்ந்து  வயிற்றில் இருக்கும் அம்முவுடன் பேச ஆரம்பித்து இருந்தனர்!