muthu pandi
Well-Known Member
Nice
எல்லாம் அப்பா சொத்து என்ற ஆணவம்தான். அண்ணனும் இல்ல இன்னும் என்ன எல்லாம் ஆடப் போறாளோ இந்த சாம்பவி. அப்படியும் பேசி இப்படியும் பேசி இன்னொரு கல்யாணம் பண்ண பிளான் பண்ணுது மூதேவி. பிரணவ் என்ன செய்ய போறான் பார்க்கலாம்.அருமையான பதிவு மிலா.சாம்பவியோட பசங்களுக்கே கல்யாணம் ஆகிடுச்சு, வெற்றிக்கு குழந்தையும் இருக்கலாம்,பேரன்,பேத்தி எடுத்தாச்சு இன்னமும் எங்கம்மா வீட்டுல எனக்கில்லாத உரிமையா என அதிகாரம் பண்ணுதே.இதெல்லாம் என்ன ஜென்மமோ.
பிரணவ் மகனாகவோ,பேரனாகவோ முடிவெடுப்பது போல என்ன உண்மை தெரிய வரும்.
கட்டிய மனைவி கூட பேச முடியாமல் என்ன வாழ்க்கைனு நினைக்கிறவன்,அம்மாவ தூண்டிவிட்டு, கௌசிய விட்டுட்டு காதலியோட சுத்தறப்போ இந்த நெனப்பு வரலையா.
மகனுக்கு கல்யாணம் பண்ணதும் பிரிச்சுட்டு,பொங்கி போடவும்,பரிமாறவும் நான்தான் வரனும்னு சலிச்சுக்குது.ஊட்டி விடவும்,கழுவி விடவும் கண்டவ எல்லாம் வரமாட்டாளா.மகனை பொண்டாட்டியோட அண்ட விடாம பண்றவ பேசற பேச்சா இது.
அடப்பாவி...சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டறது இதானா.பரிமாற கூட நேரம் இல்லையானு கௌசிய திட்டறதை போல, பரிமாற வைக்கிறதோடு,ஊட்டியும் விட்டு சாம்பவி பிபி யை ஏத்தியும் விட்டு கலக்கறான்.குச்சி ஐசா இந்த கொழுப்பு மட்டும் குறையலையே சக்தி.
உன் அண்ணன் இருந்தா அவர் பேசுவார்,இல்லாததால நான் பேசறேன் என சந்திரா இப்பவாச்சும் பேசுதே..உறவை முறிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டா மொத்தமா முறிச்சிடலாம்னு சந்திரா சரியான பதிலடி கொடுத்தாங்க.
இவனுக்கு சமைக்க,துவைக்க கௌசி வேணுமா,வேலைக்காரி வச்சுக்க சொல்லி பிரணவ் சரியா சொன்னான்.வெற்றி,சந்தியா இருக்கும் இடம் தெரியவருமா, பிரணவ் அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுவானா.
ஷக்தி அதிரடி ஆட்டம் தான்.மிகவும் அருமையான பதிவு மிலா சிஸ்.
சந்திரா உறவை நிரந்தரமாக முறிச்சிக்கலாம்ன்னு சொல்லியும் சாம்பவி திருந்தவே இல்லயே.
இந்த வயசுலயும் அம்மா வீட்டுல அவதான் நாட்டாமை பண்ணணும்னு நிக்குது இது ஒரு கொரானா வரக்கூடாதா??.
சக்தி சந்துல சிந்து பாடுற உன் காட்ல அடை மழைதான் ராசா??.
சூப்பர் டியர்.
நன்றி டியர்Very nice epi sis
நன்றி டியர்Nice update sis
நன்றி டியர்Nice