Advertisement

ஷாஷா அதுரன் கொடுத்த எண்ணிற்கு அழைத்தால், அது எடுக்க படாமல் போக  சூப்பர் மார்கெட் சென்றாள்.  நேற்று விதுரன் சென்னையிலிருந்து வீடு திரும்பியதால் அதுரன், விதுரன் இருவரும் தங்கள் வீட்டில் அவுட் ஹவுஸில் இருக்கும் ஜிம்மில் காலை உடல் பயிற்சியை முடித்து கொண்டு வீடு திரும்பினார்கள். 
“டேய் என்னடா போன காரியம் வெற்றியா?”
“எங்க டா அதுரா சீதாவை மலையிறக்க முடியலை என்னால்.. இதுக்கு மேல இருந்தா அப்பா கண்டு பிடிச்சுடுவார் அதுதான் ஓடி வந்துட்டேன்”
“உன் மேல தான் தப்புடா அவள் படிப்பு முடிச்சிட்டா அடுத்து கல்யாணம் பத்தி வீட்டில் பேசினால் அவ என்ன பண்ண முடியும் .. நீ தான் அவள் நிலைமையை புரிந்து அப்பா கிட்ட பேசனும். நீ பேசாமல் இருந்தா நான் உனக்காக பேச போறேன் நாளைக்கு.. உனக்கு 1 நாள் தான் டைம் பார்த்துக்க”
டைனிங் ஹாலில் அனைவரும் உணவிற்காக அமர்ந்திருந்தனர். இந்திரா பரிமாற சாப்பிட தொடங்கினார்கள். ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் தாமு (அதுரன் விதுரனின் தந்தை) மெல்ல பேச்சை ஆரம்பித்தார். முதலில் அங்கு தொடங்கும் கிளை பற்றி பேசியவர் பிறகு, ”விதுரா , அப்புறம் சீதா எப்படி இருக்காள்?”
“அப்பா…”
“சொல்லுப்பா..”
“அது.. அது வந்து…”
இவன் உளறுவதை பார்த்த அதுரனும் இந்திராவும் கண்களாலே ஹை-பை குடுத்து கொண்டார்கள். இதனை கவனித்த விதுரன் கூட்டு களவாணி தனம் பண்ணி இப்படி மாட்டி வச்சிட்டீங்களே.. இருங்க உங்கள அப்புறம் பார்த்துகிறேன் என பார்வையால் இருவரையும் எரித்தான்.
“விதுரா..”
“இல்லை பா.. காலேஜில் ஜூனயர்.. ராகிங் பண்ண போய் அப்படியே…”
“டேய் உன் கிட்ட கதை கேட்கலை நான்.. அதுக்கு நேரமில்லை.. அவள் குடும்பம் விபரம் சொல்லு.. நல்ல நாள் பார்த்து நானும் அம்மாவும் போய் பேசிட்டு வருவோம்”
“ஐஐஐ அப்பா ரொம்ப நன்றி பா….. “
“ரொம்ப வழியாத டா.. தொடைச்சுக்கோ.. அப்புறமா அம்மா கிட்ட எல்லா டீடெய்ல்ஸும் குடு.. “
“சரிப்பா”
“நான் கிளம்புறேன்.. விதுரா நீ அமுதம் போக வேண்டும் இன்னைக்கு.. அதுரா நீ ஏவீ போ..”
“சரிபா”
அவர் கிளம்பியதும், “அதுரா ரொம்பா தேங்க்ஸ் டா.. அப்பா கிட்ட பேச பயமா இருந்தது “ என கட்டி கொண்டு கன்னத்தில் முத்தம் குடுத்தான்.
“டேய் என்ன சாப்பிட விடுடா.. இதெல்லாம் நீ சீதாவிற்கு குடுக்கனும்.. எனக்கில்லை.. அம்மா இவனுக்கு முத்திடுச்சுமா சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க”
இந்திரா புன்னகையுடன் தன் இரு மகன்களையும் பார்த்தவர் ,” விதுரா சீதா வீட்டு விலாசம் போன் நம்பர் எல்லாம் குடு.. நாளைக்கு லட்சுமி பாட்டி வந்துடுவாங்க ஊரிலிருந்து.. அவங்க கிட்ட பேசிட்டு அப்புறம் பொண்ணு வீட்டில் பேசலாம் சரியா?”
 “மாமியாரை விட்டு குடுக்க மாட்டியே.. “
“ அதுரா”
“சரிமா சரிமா.. நான் கிளம்பிட்டேன்”
அதுரன் விதுரன் இருவரும் தங்களின் காரில் அவர்களது ஹோட்டலிற்கு சென்றார்கள்.
தன் அலுவலறைக்கு வந்ததும் தன் கை பேசியை எடுத்து பார்த்தவன் அதிலிருந்து வந்த மிஸ்டு கால்ஸை செக் செய்தான்.. அவன் பெரும்பாலும் வீட்டில் காலை வேளைகளில் போன் யூஸ் பண்ணுவதில்லை… அழைத்திருந்த தனது நண்பர்களிடம் பேசி முடித்தவன்.. ஷாஷாவின் எண்ணிற்கு கடைசியாக அழைத்தான்.. ஷாஷா பில் போட்டு கொண்டிருந்ததால் எடுக்கவில்லை.. ஒரு வழியாக மதிய உணவு இடைவேளையில் ஷாஷா போன் செய்ய அப்போது தான் ஹோட்டலுக்காக புதிதாக வாங்கிய ஏசி கணக்குகளை பார்த்து கொண்டிருந்த அதுரன் போனை எடுத்து பேசினான்
“ஹலோ”
“ஹலோ நான் ஷாஷா பேசுறேன்”
“அம்மு”
“ நீங்க ஏன் அப்படி பண்ணுனிங்க ?”
“நான் என்ன செய்தேன்?” 
“அந்த பாபு செய்தது தப்பு ஆனாலும் அவன் குடும்பம் பாவமில்லையா?”
“ இந்த உலகத்தில் பாதி பேரு தான் செய்கிற தப்பு குடும்பத்திற்கு தெரியாமல் செய்கிறார்கள்.. இனி பாபுவை அவன் குடும்பம் பார்த்து கொள்ளும்.. அதற்காக தான் இந்த அழைப்பா?”
“ம்ம்ம்ம்”
“அப்ப நான்  எப்படி அங்கே வந்தேன் தெரிய வேண்டாமா?” பேசிக்கொண்டே தன் அறையிலுள்ள பால்கனியில் சென்று நின்று கொண்டான்
“அதுவும் தான்.. அதுக்கு முன்னாடி உங்க பேர் தெரியனும்.. “
“என் பேர் அதுரன்.. சாப்பிட்டாச்சா?”
“ம்ம்ம் நீங்க?”
“இல்லை கொஞ்சம் வேலை இருக்கு.. அப்புறமா சாப்பிடனும் .. இந்த பிங்க் கலர் சுடி நல்லாவே இல்லை அம்மு”
பார்க்கிங் ஏரியாவில் நின்று பேசி கொண்டிருந்த ஷாஷா திரும்பி அங்கும் இங்கும் பார்த்தாள்.. அதுரன் தென்படவில்லை
“எங்க இருக்கீங்க?”
“உன்னால் பார்க்க முடியாது அம்மு.. “
“ஏன்?”
“அதை விடு சாயங்காலம் எப்ப கிளம்புவ?”
“தெரியாது.. எப்பவும் 7 மணிக்கு கிளம்புவேன்.. ஸ்டாக் கணக்கு பார்க்கிற வேலை இருந்தா லேட்டாகும்”
“சரி எப்ப ப்ரீயோ சொல்லு.. கொஞ்சம் நேரில் பார்த்து பேசனும்”
“என்ன பேசனும்?”
“நேரில் சொல்றேன்”
“சரி” போனை வைத்த ஷாஷா உள்ளே செல்லாமல் வெளியே நின்று யோசித்து கொண்டிருந்தாள்.. எதற்காக என் கிட்ட பேசனும்.. யார் இவன்.. என்ன எங்கிருந்து பார்க்கிறான் என்று பல கேள்விகள் தன்னை கேட்டு கொண்டாள்.
அவளது போன் மீண்டும் அழைத்தது.. விதுரன் தான் அழைத்திருந்தான்.
“ஹலோ”
“என்ன மேடம் இப்படி அங்கயே நிற்க போறீங்களா? “
ஷாஷா கோவமாக “ நீங்க முதலில் எங்க இருக்கீங்க.. ?”
“அப்படியே எதிரில் பாரு.. ஒரு ஸ்டார் ஹோட்டல் தெரியுதா?”
“ம்ம்ம் “
“அதில் 3ஆம் தளத்தை பாரு.. ஒரு ரூம் பால்கனி திறந்திருக்கும்” ஷாஷா அங்கே பார்த்ததும் அதுரன் கை அசைத்தான்.. 
“ஓ நீங்க அங்கே தான் வேலை பார்க்கிரீங்களா?  ஆனால் காரெல்லாம் வச்சிருக்கீங்ளே”
இங்கே வேலை பார்க்கிறேனா.. ஒரு வேலை ஹோட்டல் எங்களோடதுனு சொன்னால் பேசாமல் போய் விட்டால் என்ன செய்வது என யோசித்தவன்
“நான் இங்கே மானேஜரா வேலை பார்க்கிறேன்”
“ ஓ.. “ என சுதி இறங்கியது..
“சரி நான் வைக்கிறேன் “ என போனை வைத்து விட்டு விடு விடுவென உள்ளே சென்று விட்டாள்”
என் மனசு ஏன் இவ்வளவு கஷ்ட படுது  நான் என்ன எதிர் பார்க்கிறேன் அவன் கிட்ட இது சரியல்ல இதை வளர விடக்கூடாது இன்னைக்கே மகிழ் கிட்ட பேசனும் என முடிவெடுத்து கொண்டாள்.. 
“டேய் அதுரா ரொம்ப கஷ்டம் போலவே “ தனக்கு தானே பேசிக்கொண்டவன் தன் வேலையை பார்க்க சென்றான்.
மாலை 7 மணிக்கு கிளம்பியவள் வழக்கம் போல் பஸ் ஸ்டாப்பில் நிற்க, அங்கே அதுரன் காரும் கொஞ்சம் தொலைவில் நின்றது.. பார்த்தும் பார்காதது போல் நின்று கொண்டாள் அவள்.. அவனும் அவள் பஸ் ஏறும் வரை காத்திருந்து , அவள் ஹாஸ்டல் சென்றதும் தான் தன் வீட்டிற்கு சென்றான்.
ஹாஸ்டல் வந்த ஷாஷா முதலில் மகிழுக்கு அழைத்து இன்று நடந்ததை கூறியதும், “ஷாஷா பத்திரமாக இருந்து கொள் டி இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியாது.. அந்த பாபுவே இவன் வச்ச ஆளாயிருந்தா என்ன பண்ணுவ.. தனியா வேற இருக்க பார்த்துக்கோடி” [உன் அறிவுல தீயை வைக்க ]
“சரிடி”
இருவரும் 2 நாள் பேசிக்கொள்ளவில்லை ஆனாலும் அதுரன் அவள் ஹாஸ்டல் சேரும் வரை பின் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருந்தான். அடுத்த நாள் பஸ் ஸ்டாப் தள்ளி நிறுத்தி இருந்த அதுரனை கண்டதும்  கடுப்பானாள். அதுரன் எண்ணிற்கு அழைத்ததும் 
“அம்மு”
“எதுக்காக தினமும் என் பின்ன வரீங்க ?”
“அதை சொல்ல தான் நீ எப்ப ப்ரீநு கேட்டேன் “
“அதுக்காக இப்படி பின்னாடி வருவீங்களா .. கேட்க ஆள் இல்லைனு தானே இப்படியெல்லாம் செய்றீங்க?” 
“ஆள் இல்லையா நான் இருக்கேன் அம்மு”
“தயவு செஞ்சு என் பின்ன வராதிங்க”
“அப்படி வந்ததால தான் உன்னை காப்பாத்த முடிந்தது”
“யாருக்கு தெரியும் அந்த பாபுவே உங்க ஆளா இருக்கு..”
அவள் முடிக்கவில்லை போன் கட்டானது.. அது மட்டுமில்லாமல் தன் காரை எடுத்து கொண்டு சென்று விட்டான்.
இது தான அவளுக்கும் வேண்டும் ஆனால் அவள் சந்தோஷ படாமல் கண்கள் கரித்து கொண்டு வந்தது.. இது என்ன அவஸ்த்தை என்று யோசித்து கொண்டே ஹாஸ்டல் வந்தாள். எப்போதும் தன் ஹாஸ்டல் அருகே நிற்பவனை காணவில்லை.. கண்களால் தேடிவிட்டு அவன் வரவில்லை என்றதும் ஒரு பெரு மூச்சு விட்டபடி உள்ளே நுழைந்தாள்.
இது அனைத்தையும் தன் பைக்கில் அமர்ந்த படி புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தான் அதுரன்.
[பயபுள்ள பைக் எடுக்க தான் அவ்வளவு அவசரமா  போயிருக்கான்.. இவன் திருந்த மாட்டாங்க]
ஒரு வாரமும் இதுவே நடக்க ஷாஷா தான் அதுரனை காணாது தவித்து விட்டாள்.. எதுவாயினும் இன்று அவனிடம் பேச வேண்டும் என நினைத்து கொண்டாள். ஆனால் போன் பேசவும் பயமாக இருந்தது.. இன்று மதிய இடைவேளையில் வெளியில் வந்து நின்றாள், இன்றும் அந்த பால்கனி கதவு திறக்கவில்லை.. ஏதோ ஒன்று உந்த அதுரன் எண்ணிற்கு அழைத்து விட்டாள்.. அட்டன் செய்த அதுரன் எதுவும் பேசவில்லை..
“ஹலோ அதுரன்?”
“”
“சாரி நான் அப்பொ.. “
“சந்தேகம் தீர்ந்ததா “
“அப்படி இல்லை.. “
“பின்ன எப்படி.. “ 
“சாரி உங்க கிட்ட பேசனும்”
“என்ன சொல்லு”
அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க.. 
“சாயங்காலம் பஸ் ஸ்டாப்பில் வெயிட் பண்ணு”
“ம்ம்ம் சரி”
அவன் வைத்து விட்டான்.. 
மாலையில் அதுரனுக்காக காத்திருந்தாள் ஷாஷா.. அதுரன் ஷாஷாவிற்கு அழைத்து தான் வந்து விட்டதாக கூறினான்.
“எங்கே இருக்கிங்க?”
“ டீ ஷாப் கிட்ட”
“ஓ வண்டியில் வந்திருக்கீங்களா?”
“ஏன் வர மேடம் வண்டியில் மாட்டிங்களா?”
எதுவும் பேசாமல் சென்று அமைதியாக வண்டியில் அமர்ந்து கொண்டாள். அவன் ஒவ்வொரு முறை திருப்பும் போதும் ப்ரேக் போடும் போதும் அதுரனின்  தோளை இருக்கி பிடித்தாள்
“இப்படி பிடித்தால் நான் எப்படி வண்டி ஓட்டுவேன் அம்மு”
“சாரி நான் இதற்கு முன் வண்டியில் போனதில்லை கொஞ்சம் பயமாக இருக்கு”
“ஓஓ” அருகிலுள்ள அம்மன் ஆலையத்திற்கு அழைத்து வந்தவன். சாமி தரிசனம் முடித்து விட்டு இருவரும் பிரகாரத்தை சுற்றி வந்தார்கள். இருபவரும் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்தார்கள்.
“அம்மு உன் கிட்ட பேசனும்னு சொன்னேனே”
“சொல்லுங்க அதுரன்”
முதன் முதலில் அவளை பார்த்தலிருந்து இன்று வரை கூறி முடித்தவன் . உன்னை என் உயிராக நேசிக்கிறேன் அம்மு.. உன்னை காணும் என்றதும் தான் என் மனசு எனக்கே புரிந்தது.. எனக்கு உன் பேரை தவிற எதுவும் தெரியாது.. ஆனல் என் மனதிற்கு நீ தான் வேணும்னு புரியுது.. இப்ப சொல்லு நீ என்ன சொல்ல வந்த..?”
“அதுரன் எனக்கும் உங்களை பிடிக்குது ஆனால் இது ஒத்து வருமா என்று தெரியாததால் உங்களை மறக்க முயற்சி செய்திருக்கேன். என்னால் முடியவில்லை.. என் உயிர் தோழி மகிழிடம் கூட சரியாக பேச வில்லை உங்க நினைவாக இருந்தது .. சரி எதுவானாலும் உங்க கிட்ட சொல்லிவிடலாம் என்று தான் இன்னைக்கு உங்களுக்கு கூப்பிட்டேன்”
“ ஏன் ஒத்து வராதுனு நினைச்ச? அம்மா அப்பா பயமா?”
“அப்படி யாராவது இருந்தாதானே பயப்படனும்?”
“ அம்மு”
“ஆமாம் அதுரன்.. “ தன் பிறந்து வளர்ந்த கதை முதற்கொண்டு தற்போதைய நிலையை கூறியவள், அதனால் தான் யோசித்தேன் அதுரன்.. உங்க அம்மா அப்பாவிற்கு  என்ன பிடிக்குமா? கை நிறைய சம்பாரிக்கும் தங்கள் பிள்ளைக்கு நல்ல குடும்ப பெண் தானே பார்ப்பாங்க?”
“எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை அம்மு.. நீ ஏதோ குடும்ப கஷ்ட்டதிற்காக வேலைக்கு போறேனு நினைச்சேன்.. இவ்வளவு கஷ்ட படுபவனு தெரிஞ்சா முன்னாடியே வந்து பேசிருப்பேன் டி.. ரொம்ப சாரி அம்மு நான் வேற உன்னை படுத்திட்டேன்ல.. “
“பரவாயில்லை அதுரன்”
“ அப்புறம் எங்க அம்மா அப்பாவை பத்தி கவலை பட வேண்டாம்.. அவங்களுக்கு உன்னை கண்டிப்பாக பிடிக்கும்.. சரியா?”
“ம்ம்ம்”
“ஏய் நான் முக்கியமா ஒன்னு சொல்லவே இல்லை பாரு?”
“ என்ன அதுரன்?”
தன் பாக்கிட்டிலிருந்து ஒரு கை செயினை எடுத்தவன், அவள் கையை காட்ட சொல்லி அணிவித்து விட்டு , “ ஐ லவ் யூ அம்மு”
ஷாஷா வெட்கத்தில் தலை குநிந்து கொண்டாள்.
“பதில் சொல்ல மாட்டியா? நான் ஒரு வாரமா இந்த செயினை கையில் வச்சு கிட்டு சுத்திருக்கேன் நீ 5 நாள் லேட்டா வேற போன் பண்ணிவிட்டு இப்ப பதில் சொல்லலைனா என்ன அர்த்தம் அம்மு”
“நானும்”
“நீயும்”
“நானும் லவ் யூ மாமு” என கூறிவிட்டு அவன் வண்டி நிறுத்தி இருக்கும் இடத்திற்கு ஓடி வந்து விட்டாள்”
மாமுவா இது கூட நல்லா இருக்கே சிரிப்புடன் கிளம்பி அவளை ஹாஸ்டலில் விட சென்றான்.
  • தொடரும்

Advertisement