Advertisement

   4 வருடங்கள் முன்பு…
மகிழ் தன் அத்தை தாமரை வீட்டில் தங்கி முதுகலை கணிதம் (M.Sc) படித்து கொண்டிருந்தாள்.. மகிழின் நெருங்கிய தோழி ஷாஷா.. இருவரும் படிப்பிலும் கெட்டி.. முதல் 2 இடத்தை இவர்கள் தக்க வைத்து கொள்வார்கள். ஷாஷா ஆசிரமத்தில் தான் பிறந்து வளர்ந்தாள்.. ஷாஷாவின் தாய் ராணி கர்பமாக இருக்கும் போது கணவன் இறந்ததும் ஆசிரமத்தில் ஆயா வேலைக்கு சேர்ந்தார்.. பிறகு பிரசவத்தில் அவர் தவறிட  அநாதை ஆணால் ஷாஷா.. இளங்கலை படிப்பு வரை ஆசிரமத்தில் இருந்தவள், பிறகு கல்வி மையத்தில் (tuition centre) 10-ஆம் வகுப்பிற்கு கணித ஆசிரியராக வேலைக்கு சேர்ந்து , அருகில் இருக்கும் பெண்கள் விடுதியில் தங்கி கொண்டாள். கல்லூரி கட்டணம் ஸ்பான்ஸர்ஸ் கட்டுவதால் அவளுக்கு பெரிதாக ஏதும் சிரமமில்லாமல் இருந்தது.. இரண்டாம் வருடம் கடைசி செமஸ்டரில் இருந்தார்கள் இருவரும்..
காலேஜ் முடிந்ததும் மகிழும் ஷாஷாவும் பேருந்து நிலயத்திற்கு  நடந்து சென்றார்கள்
“ஷாஷா காலேஜ் முடிய போகுதுடி இன்னும் 3 மாதம் தான் அடுதுத்து என்ன ப்ளான்”
“B.Ed முடிச்சிருக்கேன்ல ஏதாவது ஸ்கூலில் வேலை தேடனும் ஏற்கனவே சில இடத்தில் அப்ளிகேஷன் போட்டிருக்கேன்”
 “நான் என்ன பண்ண போறேன் தெரியலை.. அம்மா செங்கள்பட்டிற்கே வர சொல்றாங்க.. அடுத்த வருடம் ராகுல் அத்தான் கல்யாணம் இருக்கும் அதனால் நான் இங்க இருந்தால் வர போகிற பொண்ணுக்கு பிடிக்குமா பிடிக்கதா தெரியாது அதனால் இங்கே இருந்தே நீ வேலைக்கு போ சொல்றாங்க.. இப்ப கூட ராகுல் அத்தான் சென்னையில் வேலை பார்க்கிறதால தான் அம்மா இங்கே படிக்கவே விட்டாங்க”
“நீ எப்ப கல்யாணம் பண்ணிக்க போற”
“ம்ம்ம்ம் உன் கல்யாணம் முடிந்ததும்”
“ஹாஹாஹா அப்ப நீ ஔவை பாட்டி தான் ஆக போற..”
“ஏன்டி அப்படி சொல்ற… “
“நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்களுக்கே வரதட்சனை அது இது கேட்பாங்க.. என்ன யாருடி கட்டிப்பா”
“நான் உனக்கு மாப்பிள்ளை பார்ப்பேன் டி… ராஜகுமாரன்  மாதிரி… “
[நல்லா பாருங்கடி உங்க பின்ன தான் ரொம்ப நேரம் ஹாரன் (horn) அடிச்சிட்டு வருகிறான்]
அவசர வேலையாக தனது ஹோட்டலிற்கு செல்ல வேண்டும்.. அதனால் இந்த குறுக்கு சந்தில் தன் காரை விட்டான் அதுரன்.. ஆனால் இந்த ரெண்டு பொண்ணுங்களும் விட மாட்டாங்க போலவே. அவன் தொடர்ந்து ஒலி எழுப்பியும் இவர்கள் காதில் விழுந்தது போல் தெரியவில்லை.. கார் கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு,
“ஹலோ.. கொஞ்சம் ஓரமாக போக மட்டீங்களா? எவ்வளவு நேரம் உங்க பின்னாடியே வாரது..”
திடுக்கிட்டு திரும்பிய இருவரும்,
ஷாஷா , “ஸாரி சார் .. கவனிக்கவில்லை”  என கூறினாள்…
அதுரன் காதில் எதுவும் விழவில்லை… மனதிற்குள் யாரிந்த தேவதை யார் இந்த தேவதை பாடலே ஓடிக்கொண்டிருந்தது.. ஷாஷாவையே பார்த்து கொண்டிருந்தான்.. அவள் திரும்பி நடக்க ஆரம்பித்ததும் சுயத்திற்கு திரும்பியவன் வேலை நியாபகம் வர, தன் காரை எடுத்து கொண்டு சென்றான்..
அடுத்த் நாள் காலை,
“ஷாஷா.. நீ அவசியமா அந்த வேலைக்கு போய் தான் ஆகனுமா?”
“ஆமாம் டி.. பசங்களுக்கு பரிட்சை முடிய போகுது.. அப்புறம் லீவ் விடுவாங்க.. 2 மாதம் சென்டர் லீவ்.. நமக்கு காலேஜ் இன்னும் 3 மாதமிருக்கு செலவுக்கு பணம் வேணுமே”
“அடிக்க போறேன் டி உன்னை அதான் நான் தரேன் சொல்றேன்ல”
“வேண்டாம் டி.. ப்ளீஸ்”
“போன வருஷமும் இபபடி தான் பிடிவாதம் பிடிச்ச.. என்னமோ போ..”
“2 மாதம் தான் போக போறேன்.. அப்புறம் சமஸ்ட்டர் பரிட்சை வந்திடும்.. மாதம் 12000 சம்பளம் டி.. 3 மாதம் ஹாஸ்டல் பீஸ் கட்டிடுவேன்… சப்பாடு பிரச்சனை இருக்காது.. ஒரு ஸ்மார்ட் போன் வாங்கனும் மீதி காசுல “
இவள் பேசி கொண்டே போக மகிழ் பதிலளிக்க வில்லை.. ஷாஷா திரும்பி பார்க்க, அவள் அழுது கொண்டிருந்தாள்
“ஏன் டி..”
“அதுக்காக நீ 12 மணி நேரம் வேலை பார்க்க போரியாடி.. எவ்வளவு கஷ்டமாக இருக்கும் தெரியுமா.. இப்படி அடம் பிடிக்கிற..”
“பரவாயில்லை டி…”
அதற்குள் ஆசிரியர் உள்ளே வந்ததும் இவர்கள் பேச்சு தடை பட்டது.. இன்னும் ஒரு வாரம் மட்டும் காலேஜ் இருக்கும்.. அதற்கு அப்புறம் ஸ்டடி ஹாலிடே .. ஆனால் இந்த ஒரு வாரமும் காலேஜ் வர மாட்டேன் என ஷாஷா கூறினள்..  1ஆம் தேதி வேலையில் சேர வேண்டும். அடிக்கடி போன் பேசுவதாக கூறி சமாதானம் செய்து விட்டு போனாள் ஷாஷா.
“நிகல்யா சூப்பர் மார்கெட்” பெயர் பலகை கொண்ட 5 மாடி கட்டிடத்தில் நுழைந்தாள் ஷாஷா.. இங்கே தான் காஷியராக வேலை செய்ய போகிறாள்.. 2 மாதம் சிறப்பு சலுகை அதிகம் தருவதால் கூட்டம் அலை மோதும், அதற்காக தற்காலிகமாக 2 மாததிற்கு  வேலைக்கு ஆள் எடுத்தார்கள்.. 
இந்த சூப்பர் மார்கெட் எதிரில் அதுரனின் ஏ.வீ 3 ஸ்டார் ஹோட்டல் இருந்தது..
ஒரு வாரம் சென்றது.. அன்று வேலை மிகுதியால் இரவு 10 மணிக்கு தான் கிளம்ப நேர்ந்தது.. பஸ் ஸ்டாபில் இவள் நின்று கொண்டிருந்தாள்.. வெகு சிலரே அங்கு இருந்தார்கள்.. அப்பொழுது அவளை கடந்து சென்ற கார் ஒரு ஓரமாக நின்றது.. அதுரன் “இவள் இங்கே என்ன பண்றாள்” என யோசித்து கொண்டு கார் உள்ளேயே அமர்ந்திருந்தான். ஒரு வாரம் முன்னாடி தான் இவளை பார்த்தோம்.. அடிக்கடி இவள் முகமே  என் கண் முன் வருது ஏன் இப்படி?? ஒருவேளை காதலா? இல்லை….. தெரியவில்லை… 
அவள் பஸ் ஏறி தன் விடுதியை சேரும் வரை பின் தொடர்ந்தவன் பிறகே தன் வீட்டிற்கு சென்றான். இதுவே இரண்டு நாள் தொடர்ந்தது.. ஒரு வழியாக அவள் சூப்பர் மார்கெட்டில் வேலை செய்வதை கண்டு கொண்டான். அவளை காலேஜ் ரோட்டில் பார்த்தோம் இங்கு வேலை செய்கிறாளா? ஏன்.. தனக்குள்ளே கேட்டு கொண்டான் அவளிடம் பேச முயற்ச்சி செய்யவில்லை.. தனக்கே என்ன என்று புரியாமல் இருப்பவன் அவளிடம் என்ன பேசுவான்.
இரவு வெகு நேரம் தூங்காததால் காலை லேட்டாக எழுந்து வந்த மகனை பார்த்த இந்திரா, “ஏன் டா 4 நாளா லேட்டாக எழுந்து வர… ஜிம் கூட போறதில்ல போல.. அப்பாவை கேட்டால் அவனாதான் வேலை பார்க்கிறான் நான் சொல்லலை சொல்றாரு.. “
“விதுரன் வேற சென்னக்கு போயிருக்கான் 10 நாள் ஆகுமாம்.. புதுசா ஆரம்பித்த பிராஞ்சில் ஏதோ பிரச்சனை சொன்னான்”
“அம்மா.. அப்பா உன்னை பார்த்து பயப்படுவார் மா.. அதான் பொய் சொல்லிட்டார் .. ரொம்ப கலைப்பாக இருக்கு மா” [பின்ன தினமும் ஒரு பொண்ண ஹாஸ்டல் வரை விட்டுட்டு வர வேலை பார்க்கிறான்ல] அவள் மடியில் படுத்து கொண்டான்.. [ அவ்வளவு தான் அம்மா ப்ளாட்] ஒரு நாள் அவள் பேருந்துக்காக காத்திருந்தாள் வழக்கம் போல் இவனும் காரில் அமர்ந்து கொண்டிருந்தான்.. இன்று ஏதோ சரியாக படவில்லை அவனுக்கு.. அவள் வேலை பார்க்கும் சூப்பர் மார்கெட் சூப்பர்வைஸர் பாபுவிற்கு இவள் மேல் ஒரு கண்.. இன்று அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. வேண்டுமென்றே இவளை லேட்டாக அனுப்பினான்.. அவனும் அவள் ஏறிய பஸ்ஸில் ஏறிக்கொண்டான். ஷாஷா ஏன் பஸ்ல வரீங்க? உங்க வீடு இந்த பக்கமா? உங்கள் வண்டி எங்கே? “என கேள்வி கேட்டதும் “வண்டி ரிப்பேருமா.. என் வீடும் இந்த பக்கம் தான் ? என் கூசாமல் புழுகினான். அவள் இறங்கி நடக்க ஆரம்பித்ததும், பாபுவும் இறங்கி நடக்க ஷாஷாவிற்கு சந்தேகம் வந்தது.. அதுரன் ஷாஷா விடுதியின் முன் சிறிது தூரம் தள்ளி தன் காரை நிறுத்தியிருந்தான்.. அவள் இறங்கும் போது பார்த்திவிட்டு தான் வந்தான். 5 நிமிடம் பார்த்தும் அவள் வரவில்லை உடனே காரை கிளப்பினான்.. பஸ் ஸ்டாப்பில் அவளை காணவில்லை.. இருக்கும் எல்லா தெருக்களிலும் தன் காரை விட்டவன் தூரத்தில் ஒரு பழைய ஆளில்லா பில்டிங் கண்ணாடியில் டார்ச் லைட் இங்கும் அங்கும் அடிப்பது போல தெரிந்தது.. தன் காரை விட்டு இறங்கி அந்த பில்டிங் பக்கம் ஓடும் போது ஷாஷாவின் துப்பட்டா கீழே கிடந்ததை பார்த்துவிட்டு அம்மு என் கத்தி கொண்டே ஓடினான்.
அந்த இருட்டு பங்களாவில் பயத்துடன் பதுங்கியிருந்தாள் ஷாஷா.. பாபு கையை பிடித்து இழுக்கவும் அவனை கீழே தள்ளி விட்டு ஓட ஆரம்பித்தாள்.. பயத்தில ஹாஸ்டல் பக்கம் ஓடாமல் பக்கத்து தெருவிற்கு ஓடியவள், அந்த பழைய பங்களாவில் ஒளிந்து கொண்டாள்.. அந்த பாபுவிற்கு இதுவே வசதியாக போனது.. தன் போனில் உள்ள டார்ச் வெளிச்ச்த்தில் இவளை தேடியவன், கண்டபடி அசிங்கமாக திட்ட வேறு தொடங்கியிருந்தான். இவள் மாடிக்கு போகும் வழியில் உள்ள சந்தில் அமர்ந்து கொண்டாள்.. பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது அவளுக்கு.. 
அப்போது “அம்மா “ என்ற பாபுவின் அலறல் சத்தம் கேட்டது பிறகு “ ஆ அம்மா யாரது யாரது “ என பாபு கத்தி கொண்டு இருந்தான். பிறகு அதுவும் கேட்கவில்லை.. மொபைல் வெளிச்சம் தன்னை நோக்கி வருவதை கண்டவள், கத்த போக, “அம்மு நான் தான் கத்தாத என்ற மந்திர குறலுக்கு கட்டு பட்டவள் போல் அமைதியாக இருந்தாள்.. வா உங்க ஹாஸ்டலில் விடறேன்.. பயப்படாதே” 
“நான் அம்மு இல்ல ஷாஷா”
“ஷாஷா பேரும் நல்லா தான் இருக்கு எனக்கு நீ அம்மு தான் ”
அந்த இடத்தை விட்டு வெளியே வந்ததும் தெரு விளக்கு ஒளியில் அதுரனை பார்த்தவள் கண்ணீர் மல்க “ரொம்ப நன்றி சார்”
“நன்றி எல்லாம் அப்புறம் சொல்லலாம்.. அதுக்கு முன்னாடி ஒரு உதவி செய்யனும்”
“என்ன சார்?”
அந்த பில்டிங் அருகே இருந்த மர பலகையை எடுத்தவன், “என் காரில் மார்க்கர் இருக்கும் அதை வச்சி இந்த பலகையில் “நான் ஒரு பொம்பளை பொறுக்கி , ஒரு நல்ல பெண்ணிடம் தப்பாக நடந்து கொள்ள முயர்சித்ததால் இந்த நிலை” அப்படினு எழுதி தருவியா.. நானே எழுதுவேன்.. எனக்கு வர ஆத்திரத்திற்கு கெட்ட வார்த்தை தான் வாயில் வருது அதான்”
“எதுக்கு?”
“நீ எழுது நாளைக்கு தெரியும் எதுக்குனு”
அவன் கேட்டதை செய்து விட்டு அவனுடன் ஹாஸ்டல் வரை காரில் சென்றாள். “ரொம்ப நன்றி சார்.. நீங்க எப்படி சார் அங்க வந்தீங்க? நான் உங்களை பார்ததே இல்லை ஆனால் அம்முனு கூப்பிடுறீங்க? ”
“ஒரு பேப்பரில் தன் போன் நம்பரை எழுதி குடுத்துவிட்டு, உன் எல்லா கேள்விக்கும் நீ ப்ரீயாக இருக்கும் போது எனக்கு போன் பண்ணு அப்ப சொல்றேன் இப்ப கிளம்பு.. அவள் இறங்க போகும் முன்பு “அம்மு சாப்பிட்டாயா”
“இல்லை சார் ஹாஸ்டலில் இருக்கும் நான் பார்த்துகிறேன்”
தன் அறைக்கு வந்ததும் மகிழுக்கு அழைத்து எல்லாவற்றையும் கூறினாள்
“அவர் பேரு என்னடி”
“ஐயோ கேட்கலடி அவர் நம்பர் இருக்கு நாளைக்கு பேசுறேன்”
“சரிடி தூங்கு.. இனி லேட்டா வர மாதிரி இருந்தால் நீ வேலையை வடற . இது என் மேல சத்தியம் நீ ஹாஸ்டல் வர வரைக்கும் பயந்து கிட்டே இருக்க முடியாது என்னால”
“சரி டி சரி டி தூங்கு பை “
அடுத்த நாள் காலை இவள் பஸ் ஸ்டாபிற்கு சென்றாள். ஒரே கூட்டமாக இருந்தது.. இவள் எட்டி பார்த்தால், பாபுவை யாரோ கம்பத்தில் கட்டி வைத்திருந்தார்கள் கழுத்தில் இவள் எழுதிய பலகையோடு. அவன் முகமெங்கும் ரத்த காயமாக இருந்தது.. வலியில் முனகி கொண்டிருந்தான் .. ஷாஷாவிற்கு புரிந்தது இது யார் வேலை என.. உடனே அவன் எண்ணிற்கு அழைத்தாள் ஷாஷா..
  • தொடரும்
       

Advertisement