Advertisement

சதீஷ் பதற்றத்துடன் மருத்துவமனை அறை வாசலில் நின்று கொண்டிருந்தான். கிஷோரும் கூட இருந்தான். டாக்டர் வெளியே வந்ததும், “ டாக்டர் அவனுக்கு என்ன ஆச்சு?”
“அந்த ஜூஸில் யாரோ தூக்க மாத்திரை நிறைய கலந்திருக்காங்க.. நத்திங் சீரியஸ்.. 4-5 மணி நேரத்தில் முழிச்சிடுவார்.. நீங்க கூட்டிட்டு போகலாம். ஒரு வேளை ஜூஸ் முழுதும் குடிச்சிருந்தால் ரிஸ்க் ஆகிருக்கலாம்.. இப்ப ஹி இஸ் பைன் “
“தேங்க்ஸ் டாக்டர்”
கிஷோர் , “மச்சி ஒரு கார் மகிழ் பின்னாடி வந்ததுல, அந்த நம்பர் நோட் பண்ணி வச்சிருக்கேன் நீ இவனை பத்திரமாக கூட்டிட்டு வா.. நான் அது யாரோட கார் என்ன பார்க்கிறேன்.. சிவா போன் பண்ணினான் .. அந்த சர்வர் நாய் 5000 ரூபாய் காசை வாங்கி கிட்டு அப்படி பண்ணியிருக்கான்.. காசு குடுத்தவன் பேரு குட தெரியலை அவனுக்கு..  “
மகேஷ் “ சரி டா”
மகிழ் 100வது முறையாக ஆதுவிற்கு அழைத்தாள்… போன் சைலண்டில் இருக்க ரிங் போய் கொண்டிருந்தது.. பயத்துடன் அமர்ந்திருந்தவளை கண்ட மகேஷ் ,” குண்டாத்தி என்ன எதாவது பிரச்சனையா?” 
“மகேஷ்… “ ஓ வென்று அழ ஆரம்பித்தாள்.
“என்ன ஆச்சு மகிழ்”
அவளுக்கு வந்த அனைத்து மெஸேஜயும் காண்பித்தாள்.. நடந்த அனைத்தும் கூறினாள் “பயமாக இருக்கு டா”
“முன்னாடியே சொல்லியிருக்கலாமே என் கிட்ட.. சரி விடு.. உன் ஆதுவிற்கு ஒன்றும் ஆகாது.. நான் இன்னைக்கு நைட் ஊருக்கு போகிறதா இருந்தது.. 2 நாள் நான் லீவ் போடுறேன்.. உன் பிரச்சனை எல்லாம் முடித்து விட்டு தான் நான் கிளம்புவேன்.. எதுக்கும் கவலை பட வேண்டாம்.. அம்மா அப்பா கிளம்பு வாங்க அவங்களுக்கு டிரைவர்  பார்த்து விட்டு, ஆதுவையும் விசாரிச்சிட்டு வரேன்.. நீ பயப்படாமல் இரு ஓகே ?”
“ம்ம்ம் சரி” 
முகம் தெளியாமல் இருப்பவளை பார்த்தவனுக்கு பரிதாபமாக இருந்தது.. நிலாவை அழைத்து விஷயத்தை கூறியவன், “நீயும் அழுது அவளை பயப்படுத்தாதே.. அவள் கூடவே இரு”
“ம்ம் சரி அத்தான்”
தாமரையிடம் 2 நாள் கழித்து கோவை வருவதாக கூறியவன், வெளியே சென்றான்.
*************************************************** 
5 மணி நேரம் நல்ல தூக்கத்திற்கு பின் மாலை 6 மணிக்கு கண் விழித்ததும் அருகே வந்த சதீஷ், “முழிச்சிட்டியா டா அப்பாடி”
ஆது “ எனக்கு என்ன ஆச்சு டா?”
“தூக்க மாத்திரை கலந்திருக்காங்க  ஜூஸில் .. மகிழ் நிறைய தடவை கால் பண்ணிட்டே இருந்தாங்க.. முதல அவங்க கிட்ட பேசு.. மத்ததை நான்  பொறுமையா சொல்றேன். 
ஆது மகியை அழைத்தான். 
“மகி”
“ஆதூதூ… எங்க இருக்கீங்க.. நான் ரொம்ப பயந்துட்டேன்”
அவளிடம் நடந்ததை கூறியவன்.. “ நீ பயப்படாதே யாருநு சீக்கிரம் கண்டு பிடிக்கலாம் நான் இப்போ வீட்டிற்கு கிளம்புறேன்.. அப்புறமா  நான் போன் பண்ணுறேன் சரியா”
“சரி ஆதூ”
“ஏய் பச்சைகிளி இப்ப அழுமூஞ்சி கிளியா மாறி போச்சா?”
“போங்க ஆது.. கிளி சொல்லாதிங்க”
சிறிது நேரம் பேசி அவளை சமாதானம் செய்தவன் சதீஷிடம், “ இப்ப சொல்லு மச்சி என்ன நடந்தது”
“ நம்ம கிஷோரும் சிவாவும் அந்த காரை வாட்ச் பண்ணிட்டு இருந்தாங்க.. அப்போ சிவா எனக்கு போன் பண்ணி, “டேய் அந்த கார் உள்ள இருந்த ஒருத்தன் ஹோட்டல் உள்ள வாரான்.. ஊதா சட்டை “
நான் திரும்பி பார்த்தால் 3 பேரு அதே கலரில் 3 பேரு “ அடையாளம் சொல்லுடா.. “
“சுருட்ட முடி குண்டு உருவம் “
“நான் அவனை தேடினால், அவன் சர்வரை பின் பக்கமா கூட்டிட்டு போய் பணம், ஒரு கவர் குடுத்திட்டு இருந்தான், அந்த சர்வர் என்ன பண்றானு பார்த்தால், ஒதுங்கி போய் ஜூஸ் எடுத்துட்டு வந்த மற்றொரு சர்வர் கிட்ட இருந்து இவன் வாங்கி யாருக்கும் தெரியாமல் அந்த கவரில் இருந்த மாத்திரையை கலந்தான். அதை வீடியோ எடுத்து திரும்பும் போது அந்த ஹோட்டல் மனேஜர் கிட்ட மாட்டி கிட்டேன். அந்த ஆள் கிட்ட வீடியோ காட்டினேன், அப்புறம்   தான் என்ன விட்டான். அது மட்டுமில்ல, அவனை வேலையை விட்டும் தூக்கிட்டான். அதனால் தான் மச்சி உனக்கு போன் பண்ண லேட் ஆச்சு.. சாரி டா”
“விடுடா.. நாம வீட்டிற்கு போகலாமா?”
“போலாம் டா.. “
“என் வண்டி ஹோட்டல் கிட்டயே இருக்கும்..”
“கிஷோர் என் ரூமில் வச்சிருப்பான் டா “ 
“அந்த சர்வர் எங்க இப்ப?”
“அவனை சிவா நம்ம ரூமிற்கு கூட்டிட்டு போனான்.. ஆனால் யூஸ் இல்லைடா.. 5000ரூபாய் தரேன் சொன்னதும் ஒத்துகிட்டான். அதுமட்டுமில்ல அது தூக்க மருந்து வேறு ஏதுமில்லைனு சொன்னதும் தான் செய்தேன் அப்படினு சொன்னானாம்.. சிவா நல்லா காட்டு காட்டி வெளியே துறத்திட்டான். பாலோ பண்ண காரை பத்தி விசாரிக்க கிஷோர்  போனான்.. இன்னும் கால் பண்ணலை.. “
“சரி மச்சி.. ரொம்ப நன்றி டா”
“நன்றியை தூக்கி குப்பையில் போடு.. மரியாதையா சரக்கு வாங்கி குடு”
[அதானே பார்த்தேன்]
“அடுத்த வீக்கெண்டு கண்டிப்பா வைக்கிறேன் மச்சி”
“நண்பன் டா”
மகேஷ் ரூம் சென்று தன் வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு போனான்.
வீட்டிற்கு வந்தவனை ஆராய்ச்சியுடன் பார்த்தார் தேவி.
என்ன மம்மி இப்படி பார்க்குது.. ஏதாவது தெரிஞ்சிருக்குமோ??
“அம்மா என்ன இப்படி பார்க்கிற?”
“இல்லைடா லிப்ஸ்டிக் கரை காணுமேனு பார்க்கிறேன்”
“மம்மிமிமி……. இதெல்லாம் டூ மச்.. ரொம்ப பசிக்குது.. ஏதாவது சாப்பிட குடு”
“ம்ம்ம்ம்ம்ம்ம் காலையில் செய்த போஸ்ட்டர் பசை இருக்கு சாப்பிடு  ”
“அம்மா தாயே தெரியாமல் சொல்லிட்டேன் ஏதாவது சூடா குடு தாயே”
“குளிச்சிட்டு வாடா.. அடை செய்றேன்”
“தேங்க்ஸ் மம்மி..”
சாப்பிட்டு முடித்து, சிறிது நேரம் தன் அம்மா அப்பாவிடம் நகை கடையில் நடந்த சிலவற்றை கூறிவிட்டு தூங்க போனான் ஆது..
அறைக்கு சென்று மகிக்கு கால் செய்தான்..
“மகி”
“மகி இல்லை மகேஷ்”
“ஹை மகேஷ்.. சாரி அவசர வேலை அதான் கிளம்பிட்டேன்…”
“உங்க அவசர வேலையை மகி சொல்லி விட்டாள்.. ஏன் ப்ரோ என் கிட்ட சொல்லியிருந்தால் நானும் அலர்ட்டா இருந்திருப்பேனே”
“இல்லை மகேஷ் யாரையும் பயப்படுத்த வேண்டாம்னு”
“சரி விடுங்க.. நாளைக்கு மீட் பண்ணலாம்.. மகிழ் சொன்னாள் ஏதோ வீடியோ இருக்குதுனு.. அதை பார்த்தால் ஒரு ஐடியா வரும்.. “
“எங்க எப்படி நான் சொல்றேன் ப்ரோ”
“சரி.. உங்க கிளி கிட்ட குடுக்கிறேன்.. பை”
“பை”
“ஆது”
“மகி குட்டி என்ன பண்றீங்க?”
“சும்மாதான்…”
[இவங்க கடலை போட ஆரம்பிச்சாச்சு வாங்க ஷாஷா என்ன பண்றாள் பார்ப்போம்]
**************************************************************** 
ஷாஷாவிற்கு அந்த வீடு ரொம்ப பிடித்தது.. இந்திரா (அதுரன் அம்மா) மற்றும் லட்சுமி (பாட்டி) அன்பாக பழகினர்கள். விதுரன் ஆடிட்டிங் விஷயமாக சென்னை சென்றிருக்கிறான்.. இன்னும் வீட்டிற்கு வரவில்லை.. சீதா பக்கத்தில் இருக்கும் தன் அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறாள்.. ஷாஷாவிற்கு அதுரன்  அறைக்கு பக்கத்து அறை குடுத்திருந்தார்கள். அதுரன் அறை வாசலில் நின்றவள், மெல்ல கதவை தட்டினாள்.
“வா அம்மு..”
“இங்க எல்லாம் பிடிச்சிருக்கா?”
“ம்ம்ம் ரொம்ப”
அவள் பதிலில் புன்னகை புரிந்தவன் “ என் பாப்பாவிற்கு ஏதோ என் கிட்ட கேட்கனும் போல இருக்கே”
 “ஆமாம் மாமு.. ஆனால் என்ன திட்ட கூடாது.. ரொம்ப நாளாக நான் குழம்பிட்டே இருக்கேன்.. கேட்க பயமா இருந்தது.. இன்னைக்கு எப்படியாவது பேசனும்னு வந்தேன்”
“என்னை பார்த்து உனக்கு பயமா?”
“மாமுவை பார்த்து இல்லை.. மாமு சொல்ல போகிற பதிலை பார்த்து”
“சரி என்ன கேட்கனும் சொல்லு”
“மகிழ் எப்படி இருக்கா? அவ இருக்காளா?” அழ ஆரம்பித்துவிட்டாள், அதுரன் கோபத்தை பற்றி நன்றாக தெரிந்தவள் அல்லவா..
அந்த பேரை கேட்டதும் முகம் இறுகியது.. ஆயினும் தன்  அம்முவிற்க்காக பதில் கூறினன். 
“அவள் இருக்கா.. அவளை பத்தி சொல்லனும்னா நீ செஞ்ச முட்டாள் தனத்தை பத்தி சொல்லனும்.. எதுக்கு எங்க ஹோட்டல் வந்து சண்டை போட்ட .. நான் பதில் கூட சொல்ல விடாமல் வேகமாக போய் 6வது மாடியிலிருந்து குதிச்ச?  
“அது வந்து மாமு ..”
*********************************************************************** 
ஆதவன் தனது ஆபிஸுக்கு வந்ததும் மகேஷிற்கு அழைத்தான். 
“சொல்லுங்க ப்ரோ”
“மகேஷ் சாயங்காலம் 6 மணிக்கு மேல் நிலா மகி நீங்க 3 பேரும் நான் சொல்ற இடத்துக்கு வாங்க.. யாருக்கும் தெரியாமல் வரனும்.. உங்க காரில் வர வேண்டாம் யாராவது பின் தொடரலாம்..”
“ஓகே ப்ரோ”
ஆது கூறியபடி நிலா, மகிழ், மகேஷ் மூவரும் ராமிடம் படத்திற்கு போவதாக கூறிவிட்டு பின் வாசல் வழியாக அடுத்த தெரு வரை நடந்து சென்று கார் புக் செய்து ஆது சொன்ன இடத்திற்கு வந்தார்கள். அந்த இடம் ஆதுவின் புது வீடு தான். அங்கு சதீஷ் , சிவா, கிஷோர், ஆதவன் ஏற்கனவே  வந்திருந்தார்கள். ஆதவன் அனைவருக்கும் அனைவரையும் அறிமுகபடுத்தியவன்.. அவன் லாப்டாப்பை (laptop) திறந்து சதீஷ் அனுப்பின வீடியோவை ப்ளே செய்தான்.. 
அதில் சங்கர் சர்வரிடம் பணம் குடுத்த காட்சியிருந்தது.. அப்போது வீடியோவை பாஸ் செய்த சிவா, “இவன் தான் காரை தொடர்ந்து வந்தான்.. அந்த வண்டி நம்பர் RTO (ஆர் டீ ஓ) ஆபிசில்  செக் பண்ணினேன்.. அப்படி ஒரு கார் நம்பரே இல்லை.. அது திருட்டு கார் மச்சி.. அதுக்கு மேல எப்படி ட்ராக் பண்றது தெரியலை.. “ 
எல்லோரும் யோசித்துக்கொண்டு இருக்க.. மகி மட்டும் லாப்டாப்பை வெரித்து கொண்டிருந்தாள்.. அதில் அதுரன் (உண்மையில் விதுரன் ) மாடியிலிருந்து இறங்கி கொண்டிருந்தான்.. மகியை கண்ட ஆது.. “மகி…” அவள் பதில் அளிக்கவில்லை…
“மகேஷ்.. இது யாரு”
திரையை பார்த்தவன் “இவரா.. நாம் போன அமுது ஹோட்டல் ஓனர் ப்ரோ.. கோவையில் ஏ.வீ 3 ஸ்டார் ஹோட்டல் கூட இருக்கு.. அவரோட ப்ராஞ்சிற்கு வந்திருக்கிறார் போல..”
மகியின் தோளை தொட்டு திருப்பினான் ஆது.. “என்ன மகி?” 
“ஷாஷா..” என்று கண் கலங்கியபடி கூறினாள்..
“ஷ்ஷ்ஷ்…” கண்களால் சமாதானம் செய்தவன் அடுத்து என்ன செய்ய வேண்டுமென கூறிவிட்டு அனைவரையும் கிளப்பினான்.. கார் புக் செய்து மகியை அனுப்பிவிட்டு தன் வீட்டிற்கு வேறொரு  காரில் சென்றான். அவனது வண்டி ஆபீஸில் உள்ளது.. 
“அம்மா.. “
“ஏன் டா லேட்.. ?”
“வேலை மா..” [அடப்பாவி]
நாகரத்தினம் “ சரிப்பா குளிச்சிட்டு வா.. சாப்பிடலாம்.. தேவி ஆதுவிற்கு அப்பளம் இல்ல இல்ல தோசை வார்த்து எடுத்துட்டு வா..”
தேவி முறைத்து கொண்டே சென்றார்.. 
“ஹஹஹா.. அப்பா இன்னைக்கு நீங்க பட்டினி தான்”
“அது என்னமோ மகனே.. நீ சொன்னா சிரிக்கிறா.. நான் சொன்னா முறைக்கிறா பா.. “
மகி நார்மலாக இருப்பது போல் காட்டி கொண்டாலும்.. ஆழ்மனதில் பதிந்த ஷாஷாவின் நினைவு வந்து கொண்டே இருந்தது..
அந்த நேரம் சரியாக போன் பண்ணினான் ஆதவன்.. 
“ஹலோ…”
“மகி.. என் கிட்ட ஏதாவது மறைக்கிறியா?”
“ஆதூ… “
“ம்ம்ம் சொல்லு….”
  • தொடரும்..

Advertisement