Advertisement

ஷாஷா இன்று மிகவும்  மகிழ்ச்சியாக காணப்பட்டாள். தன் மனம் கவர்ந்த காதலன் தனக்காக அவன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். இது நாள் வரை ஆசிரமம், பள்ளி, கல்லூரி மட்டுமே தெரிந்த அவள், முதல் முறையாக ஒரு குடும்பம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள போகிறாள். அவள் சரியாகி விட்டாலும் சில நேரம் தடுமாறுகிறாள். புதிதாக யாரையாவது பார்த்தால் பயம் கொள்கிறாள். ஆயினும், இடமாற்றம் இருந்தால் அவளுக்கு நல்லது என டாக்டர் கூறியதால் தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். ஆனாலும் ஒரு வித பயம் இருந்தது அவளுக்கு.
அவனை திரும்பி திரும்பி பார்த்து கிட்டு வந்த ஷாஷாவிடம்,” என்ன அம்மு “
“உங்க வீட்டில் என்ன திட்ட மாட்டாங்களா? 
“உன்னை எதுக்கு திட்டனும் .. அவங்களுக்கு தான் உன்னை ரொம்ப பிடிக்குமே”
“அப்படியா மாமு?” 
“அப்படி தான்.. நீ சரினு சொன்ன நமக்கு கல்யாணம் கூட பண்ணி வைப்பாங்க.. என்ன உன் மாமுவை கட்டிப்பியா?”
கல்யாணம் என்றதும் தன்னை மீறி அழுகை வந்தது. அப்போ அவள் அந்த சீதா எங்கே போனாள்?” எதையும் வெளியே கேட்கவில்லை அப்படி  கேட்டிருந்தாள் அவளும் இப்படி கஷ்ட பட தேவையில்லை, அவளுடைய உயிர் தோழியையும் காத்திருக்கலாம் அவளுடைய மாமு அனைத்தும் புரிய வைத்திருப்பான்.. என்ன செய்வது ? விதி வழியது.
“அம்மு “
அவள் பதிலளிக்கவில்லை. பின்பு அமைதியாக தன் சொந்த ஊரான கோவைக்கு தன் காரை செலுத்தினான். அப்போது ஏதோ ஒரு நம்பரிலிருந்து போன் வந்தது.. முதலில் அதை எடுக்கவில்லை.. திரும்பவும்  அழைப்பு விடுக்கவும், அட்டன் செய்தான்.
“ஹலோ”
“சார் நான் சங்கர் பேசுறேன் என் நம்பரிலிருந்து  கூப்பிட கூடாது சொன்னிங்க அதான் இது என் நண்பன் போன்”
“சரி என்ன விஷயம்?”
“சார் அந்த பொண்ணு பயப்படுற  மாதிரி தெரியவில்லை சார்.. இன்றைக்கு எங்கேயோ குடும்பமா போறாங்க சார் ”
“ம்ம்ம் நாம நிச்சயம் அன்னைக்கு போட்ட ப்ளான் இன்றைக்கு செய்து விடு”
“சரிங்க சார்”
போனை வைத்தவன் கையில் கார் பறந்தது..                                 
********************************************************************************* 
காலை 8 மணி அளவில் தயாராக இருந்தனர். நிலா ப்ளூ ஜீன்ஸ் வைட் டாப்ஸ் அணிந்திருந்தாள் . மகிழ் பச்சை வண்ண சுடிதாரை அணிந்திருந்தாள். அழகு தேவதையாக இருக்கும் இரு (மரு)மகள்களும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார் தாமரை.
தாமரை “ மகேஷ் எங்கே டா  இருக்க? நாங்க ரெடி” 
“அம்மா வந்துட்டேன்  போகலாம் வாங்க”
மகேஷ் காரை எடுத்தான். தாமரை முன்னாடி ஏறி அமர்ந்தார். மகிழ் மற்றும் நிலா பின் சீட்டில் அமர கார் புறப்பட்டது. அதே நேரம் அந்த காரை பின் தொடர்ந்தது மற்றொரு கார்.
மகிழ் , “அத்தை ஆதவன் கடைக்கு வரட்டுமா  கேட்டார்”
“தாராளமா வர சொல்லுடா உனக்கு வாங்க போகிற நகை அவருக்கும் பிடிக்கனும்”
[அத்தை அவள் நேத்து நைட்டே சொல்லியாச்சு நீங்க ரொம்ப லேட்] 
“மெஸேஜ் அனுப்புகிறேன் அத்தை”
முதலில் ஹோட்டல் சென்று காலை உணவை முடித்து, பிறகு சென்னையில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலிற்கு சென்றனர்.
***********************************************************************************
ஆதவன் 8 மணி அளவில் கிளம்பினான்.
“அம்மா நான் வெளியே போகிறேன். மகி கூட ஷாப்பிங்,திரும்பி வர சாயங்காலம் ஆகலாம்”
“டேய் நானும் வரவா? போர் அடிக்குதுடா ” 
“மம்மி நீ இப்படி ரியாக்ஷன் குடுக்க கூடாது கல்யாணம் ஆகும் முன்னாடி எப்படி நீ அவ கூட ஊர் சுத்தலாம்னு சண்டை போடனும்”
“போடா போக்கிரி சீரியல் அம்மா இல்லை டா நான்.. 
ஐ அம் ஒரிஜிநல் “
“சரி சரி நான் கிளம்புறேன்”
“டேய் இரு நான் கேசரி ரெடி பண்ணிட்டேன் மகி கிட்ட குடு”
“மம்மி அது கேசரி இல்லை போஸ்டர் ஒட்டுகிற  பசை. 
போஸ்டர் ஒட்டுறவன் வந்தால் அவன் கிட்ட குடு பாவம் பசை வாங்குற காசாவது மிச்சமாகும்”
“டேய் “ அவர் எதையாவது எடுத்து அடிக்கும் முன் ஓடிவிட்டான்
வெளியே வந்து சதீஷிற்கு போன் செய்தான்.
“ஹலோ”
“மச்சி ரெடி டா என் ரூம் மெட்ஸ்க்கும் 3 (கிஷோர், குரு, ரவி) பேருக்கும் சொல்லிவிட்டேன்.  நான் உன்ன பாலோ (follow) பண்றேன். அவங்க ஏற்கனவே நீ சொன்ன மாலிற்கு போயிட்டாங்க. ”
“சரி டா.. 5 நிமிஷத்தில் நான் கிளம்பிடுவேன்.. நீயும் வா.. பை”
“பை மச்சி”
எப்படியாவது இன்னிக்கு யார்னு கண்டு பிடிக்கனும் என நினைத்துக் கொண்டு வண்டி எடுத்தான்.
ஆதவன் அங்கு வந்ததும் தன் பின் வந்தவனை தேடினான். ஒரு வழியாக அவனை கண்டு கொண்ட பின் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்து விட்டு மகிழ் வரவிற்காக காத்திருந்தான். மகி வந்ததும் மகேஷை அறிமுகம் செய்து வைத்தாள். 
அனைவரும் முதலில் நகை கடைக்கு சென்றார்கள். அங்கு மகிழும் நிலாவும் பிஸி ஆகிட தாமரை கடையில் உள்ள வேலை ஆட்களை அந்த டிசைன் காட்டு, இதை போட்டு விடு என வேலை வாங்கினார்,
மகேஷ் “ப்ரோ 3 பேரும் எவ்வளவு பிஸி பார்த்திங்களா? ரெண்டு மணி நேரம் நம்மை கண்டுக்க மாட்டாங்க .. “
“அதுக்கு அப்புறம்?”
“எது நல்லா இருக்கு சொல்லுங்கனு நம்மை 2  ரெண்டு மணி நேரம் குழப்புவாங்க”
“ஹஹஹா”
“மதியம் சாப்பிட தான் இந்த கடையை விட்டு வெளியே போக முடியும்”
“அதுக்குள்ளே முடிந்தால் சரி தான் மகேஷ்”
என்ன தான் மகேஷ் கூட பேசுவது போல் இருந்தாலும் தங்களை சுற்றி யார் இருக்கிறார்கள் என நோட்டமிட்டான். 
வெளியே சந்தேகம் படும்படி யாரும் இல்லை, தன் பின்னே வந்தவன்  மட்டும் கடைக்கு வெளியே நின்று போன் பேசி கொண்டிருந்தான்.
ஒரு வழியாக நகை தேர்ந்தெடுத்து மகேஷ் மற்றும் ஆதவனை கூப்பிட்டு காண்பித்தார்கள். நிலாவும் மகேஷ் ஆசைக்காக 5 சவரன் ஆரம் வாங்கினாள்.
“ரொம்ப நல்லாயிருக்கு எல்லாம்” என கூறி இருவரும் தப்பித்தார்கள். 
“ஆதவ் மாமா ரொம்ப டயர்டா இருக்கு பசிக்குது  “ என நிலா கூறினாள்.
“பில் போட்டுட்டு  சாப்பிட போகலாம் நிலா”
“நான் போய் பில் பே பண்ணிட்டு வருகிறேன் “ மகேஷ் நகர்ந்து விட நிலாவும் கூட சென்றாள். தாமரை பழைய நகைகளை மாற்ற அதன் எடை பார்க்க சென்றார் , 
“என் மகி குட்டிக்கு சந்தோஷமாக இருக்கிறதா?”
“ம்ம்ம் ஆனால் பயமாகவும் இருக்கு”
“பயப்படாதே மகி” 
“ம்ம்ம்ம்”
“அடுத்த வாரம் நாம் ஷாப்பிங் போகும் போது உனக்கு எதாவது வாங்குறேன் டா..”
“வேண்டாம் ஆது”
“அம்மா கூட வரேனு சொன்னாங்க நான் விட்டுட்டு வந்துட்டேன். நீ அப்புறமா அம்மா கிட்ட பேசு”
“சரி ஆது” 
பில் போட்டுவிட்டு அநைத்தயும் வாங்கி கொண்டு வெளியே வந்தனர். மகேஷ் “ஏய் குண்டாத்தி நீ என் காரில் வந்து என் கார் ஒரு பக்கம் பள்ளம் ஆயிடிச்சு மரியாதையாக உன் ஆளோட வா”
மகி “ போடா தடியா”
தாமரை “ டேய் எப்ப பாரு அவள் கிட்ட வம்பு வளர்த்து கிட்டு இருக்க.. பேச்சை குறை மாப்பிள்ளை வேறு இருக்கிறார்”
ஆது “ பரவாயில்லை மா.. நான் இருக்கிறதுனால என்ன.. என்னையும் அவங்க கூட சேர்த்து கிட்டால்  இன்னும் சந்தோஷ படுவேன்”
நிலா “மாமா நீங்க ஏற்கனவே சேர்ந்தாச்சு”
அனைவரும் அங்கிருந்து கிளம்பி சாப்பிட சென்றனர். மகி மட்டும் ஆதுவின் வண்டியில் சென்றாள்.
ஆது தன் கண்ணாடியில் பார்க்க இவனை 2 பேர் தொடர்வது  போல தோன்றியது. இவன் வேண்டுமென்றே ஒரு சந்தில் திருப்ப, ஒரு பைக்கும் காரும் இவர்களை தொடர்ந்து வந்ததை கவனித்தான்.
மகியை வேறு அழைத்து வந்திருக்கிறான் சிறிது பதட்டமாக வண்டியை ஓட்டினான்
“ஆது என்னாச்சு “
“நம்மை யாரோ பின் தொடர்வது மாதிரி இருக்கு. “
“வீட்டுக்கு போகலாமா”
“இல்லைடா அவங்க யாரு என்னனு கண்டு பிடிக்கனும். சும்மா பயந்துட்டு இருக்க முடியாது.. எதுவானாலும் பார்த்துக்கலாம். நீ கார்புல்லா (careful) இருக்கனும் தான் உண்மையை சொன்னேன்.”
“ம்ம்ம்ம்”
ஹோட்டல் வந்து சேர்ந்ததும் அரட்டை அடித்துக் கொண்டே உணவை உண்டார்கள். பைக்கில் பின் தொடர்ந்த சதீஷ் கிட்சன் பக்கத்தில் அமர்ந்திருந்தான். அவனை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு திரும்பினான் ஆது.
கடைசியாக ஜூஸ் வரவழைத்து குடிக்கும் பொழுது சதீஷ் போன் பண்ணினான் “ஹலோ”
“மச்சி அந்த ஜூஸ் குடிக்காத டா.. அதில ஏதோ கலந்திருக்கு.. “
அவன் ஏற்கனவே பாதி  குடித்திருந்தான்.
“என்னடா சொல்ற” என திரும்பி சதீஷை பார்த்தான். 
“ஆமாம் மச்சி வீடியோ எடுக்கிற நடுக்கத்தில் கால் பண்ண லேட் ஆச்சுடா” 
ஜூஸ் கிளாசை கையில் எடுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றான். முடிந்த அளவு வாந்தி எடுக்க முயர்சித்தான்.. ஆனால் முடியவில்லை. ஜூஸை வாட்டர் பாட்டிலில் ஊற்றினான்.
ஓடி வந்த சதீஷ், மச்சி என் நண்பன் கிஷோர் காரில் வெயிட் பண்றான்.. சீக்கிரம் ஏதாவது சொல்லிவிட்டு வா வெளியே ஹாஸ்பிடல் போகநும் அந்த நாய் என்ன கலந்தான் தெரியல என கூறிவிட்டு ஜூஸ் பாட்டிலை எடுத்து சென்றான்.
வெளியே வந்த ஆது.. மகேஷ் ஒரு அவசர வேலை உடனே கிளம்ப வேண்டும் சாரி இன்னொரு நாள் பார்க்கலாம் என்று கூறி விட்டு அவன் பதிலை கூட கேட்காமல்  சென்றான். மகேஷ் குழப்பத்துடன் பார்த்தான். பின்பு அனைவரயும் துணி கடைக்கு அழைத்து சென்றான். மகிழ் ஏதோ பிரச்சனை என நினைத்தாள் ஆனால் என்ன என்று தெரியாமல் தவித்தாள். 
சதீஷ் மாத்திரை கலக்க காசு வாங்கின சர்வரை பிடித்து தன் நண்பன் குருவிடம் ஒப்படைத்து விட்டு மருத்துவமனை சென்றான். குரு அவனை இழுத்துக்கொண்டு சதீஷ் ரூமிற்கு சென்று அங்கே கட்டி போட்டான். 
காரில் ஏறி அமர்ந்த ஆது மயக்கமாக வருவது போல இருப்பதாக கூறினான். கிஷோர் காரை வேகமாக ஓட்டி சென்று மருத்துவமனை அடையும் முன் ஆது மயக்கமானான்.
******************************************************************************** 
ஷாஷாவுடன் தன் வீட்டிற்கு முன் வந்து இறங்கினான் அவன். அதற்காக காத்துக்கொண்டு இருந்தது போல இந்திராவும்,லட்சுமி பாட்டியும் ஆலம் சுற்ற வர, அங்கே ஓடி வந்தாள் சீதா..
“அத்தை நானும் “ என கூறி மூன்று பேரும் சேர்ந்து ஆலம் சுற்றி வரவேற்றனர் .
இவளையும் இங்கே வைத்துக்கொண்டு என்ன எதுக்கு இங்கே கூட்டிகிட்டு வந்திருக்கான் மாமு.. அவள் கழுத்தில் தாலி இருப்பதை பார்த்தவள் குழம்பினாள். அவளை வீட்டில் உள்ளே அழைத்து சென்றதும் ஹாலிலே ஆனி அடித்தார் போல் நின்று விட்டால் அவள். எதிரில் உள்ள போட்டோவை வெரித்து பார்த்து கொண்டிருந்தாள் ஷாஷா.. 
இந்திரா “என்னமா பார்க்கிற? இது அதுரன் உன் மாமு, இது விதுரன், இருவரும் ரெட்டையர்கள்.. விதுரன் இப்போ வந்து விடுவான் , சீதா விதுரன் மனைவி ” என கூறியதும் ஷாஷாவிற்கு எதுவோ புரிவது போல் இருந்தது.. இன்று இரவே மாமுவிடம் பேச வேண்டும் என முடிவெடுத்தாள். 
[ நல்லா முடிவெடுத்த போ.. உன்னால் நாகரத்தினம் பெற்ற பிள்ளை ஹாஸ்பிடலில் படுத்து கிடக்கு ]
 .
  
  
 
  

Advertisement