Advertisement

காலை (நமக்கு விடியற்காலை) 6 மணி  அளவில் போன் ஒலித்தது, பாதி தூக்கத்தில்  அட்டன் செய்தாள் மகி..
“ஹலோ…”
“குண்டாத்தி நல்லா தூங்கி கிட்டு இருக்கியா?”
“டேய் மங்கி.. சனிக்கிழமை லீவு நாள் கூட தூங்க விட மாட்டியா .. நீ போன் பண்ண வேண்டிய ஆளு கும்பகர்ணன் பேத்தி மாதிரி தூங்குகிறாள்.. அவளை விட்டுட்டு என் தூக்கத்தை கெடுக்கிறாய்”
“மகிழ் இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை கிளம்பி வருகிறேன்.. எதாவது வேண்டுமா இங்கிருந்து”
“ஆமாம்”
“என்ன வேண்டும்”
“ம்ம்ம்ம்… என் பாசக்கார அத்தை பையன், என் உயிர் தோழன், மகேஷ்”
“குண்டாத்தி உனக்கு எப்பவும் விளையாட்டு தான்”
“எனக்கு எதுவும் வேண்டாம் டா”
“சரி நீ தூங்கு.. பை”
“பை மங்கி”
சிறிது நேரம் தூங்கினாள்.. மறுபடியும் போன் ஒலித்தது எரிச்சலுடன் அட்டன் செய்தாள் மகிழ்
“ஹலோ..”
“மகி என்ன காலைலயே சூடா இருக்க.. “
“ஆது நீங்களா நம்பர் வேறாக இருக்கு.. ”
“புது நம்பர் மகி.. இது நமக்கானது .. யாருக்கும் தர வேண்டாம்.. சில சமயம் பழைய நம்பர் ஆப் பண்ணி வச்சியிருப்பேன்”
“சரி ஆது”
“நான் அப்புறம் கூப்பிடுறேன்.. பை டி”
“பை ஆது”  அவள் தூக்கம் கலைந்து கீழே வந்தாள். 
தாமரை காபி கலந்து கொண்டிருந்தார்..
“அத்தை நான் போடுறேன் நீங்க உட்காருங்க”
“ஆச்சு மா நீ குடி, நான் வேற போட்டுக்கிறேன்”
“அப்பாவும் மாமாவும் எங்கே?”
“ரெண்டு பேரும் வாக்கிங் போயிருக்காங்க”
“சாயங்காலம் மகேஷ் வந்து விடுவான், நாம் எல்லாரும் நாளைக்கு காலையில் போய் நகை வாங்கலாம், கொஞ்சம் புடவை கூட வாங்கனும் உனக்கு ”
“இல்லை அத்தை.. இருக்கிறது போதும்”
“நீ சும்மா இரு, இது நான் வாங்குகிறது நீ எதும் சொல்லாதே.. பார்த்து பார்த்து செய்ய அம்மா இல்லையே  அப்படி நீ நினைக்க கூடாது.. நான் இருப்பேன் உனக்கு. நீ எப்பொழுதும் ரொம்ப சந்தோஷமாக இருக்க வேண்டும்”
“தேங்க்ஸ் அத்தை” அவரை கட்டிக் கொண்டு இருந்தாள் சிறிது நேரம்.. பிறகு இருவரும் சமைக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது கீழே  வந்த நிலா, தூக்கம் கூட கலையாமல், “அக்கா காபி குடு” என கூறிவிட்டு சோபாவில் அமர்ந்த நிலையில் தூங்கினாள். அவளை பார்த்த மகிழ் மனம் வாடியது.. நான் இல்லாமல் எப்படி இருப்பாளோ ம்ம்ம் 
“நிலா இந்தா காபி”. காபியை குடித்து முடித்து விட்டு “காபி (மட்டும்) சூப்பர் கா”
தாமரை “நிலா இனி நீ தான் கொஞ்ச நாள் எல்லாம் பார்த்துக்கனும் மா.. அக்கா கல்யாணம் ஆன பின்னே தனியா இருக்க கஷ்டமா தான் இருக்கும்”
“நான் பார்த்துக்கிறேன் அத்தை .. நீங்க வருத்தபடாதிங்க”
நிலா அவள் அறைக்கு சென்றாள். அவள் போனிற்கு மகேஷ் நிறைய தடவை அழைத்திருந்தான். இவள் மறுபடி அழைத்தாள்.
“அத்தான்”
“தூங்க மூஞ்சி.. எவ்வளவு நேரம் தூங்குவ”
“லீவு தானே அத்தான்”
“சரி சரி நான் கிளம்பிட்டேன். சாயங்காலம் அங்கே வந்து விடுவேன்”
“ம்ம்ம் சரி”
“நாளைக்கு வெளில போவோம் அம்மா சொன்னார்களா?”
“ம்ம்ம்.. உனக்கு பிடித்த நகை எதாவது எடுக்கிற நாளைக்கு”
“அக்காவிற்கு வாங்கலாம் முதல்ல.. “
“உனக்கு அக்கா ஆனால் எனக்கு உயிர் தோழி.. அவளுக்கு நான் நிறைய வாங்க தான் போகிறேன்.. இது என் காதலிக்காக  வாங்க நினைக்கிறேன்.. அங்க வந்து எல்லாரும் முன்னாடி கெஞ்ச முடியாது.. அதனால் முன்னாடியே சொல்லுகிறேன் (கெஞ்சுறேன்). எதாவது சொதப்பின திரும்பி பேசவே மாட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்”
“சரி புடிச்சதா எடுத்துக்கிறேன்”
“ம்ம்ம் “ சொல்லிவிட்டு வைத்தி விட்டான்.
வர வர இந்த அத்தான் ரொம்ப தான் கோபப்படுறாங்க.. வரட்டும் இங்கே மனதில் கருவினாள்.
**********************************************************************************
ஆதவன் “அம்மா டிபன் ரெடியா? நான் கொஞ்சம் வெளியே போகனும்”
“10 நிமிஷம் டா.. ரொம்ப ஊர் சுத்தாத 2 வாரத்தில் நிச்சயம் வச்சுகிட்டு”
“சரி மம்மி என்ன டிபன்?”
“பொங்கல் டா”
“ஸ்லீப்பிங் டோஸ்னு சொல்லு மம்மி”
“அடிங்க.. “ தட்டு பறந்து வந்து அவன் காலில் விழுந்தது.. அவனது தந்தை, “மகனே உனக்கு நேரம் சரியில்லை வாயை மூடிகிட்டு  இரு”
“சரிப்பா என்ன ஆச்சு உங்க டார்லிங்கிற்கு“
“உன் நிச்சயதார்த்தம் பற்றி அவள் அண்ணன் ரகுவிற்கு அழைத்து சொன்னாள் .. அவன் பெண்ணை கட்டி கொள்ளவில்லை என்ற கோபத்தில் என்ன சொன்னான் தெரியவில்லை மகனே காலையிலேயிருந்து திட்டு வாங்கிட்டு இருக்கேன்” 
உஷாரான ஆது  அமைதியாக சாப்பிட்டு கிளம்பினான் … 
கீழே விழுந்த அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான் ஆதவன்
சதீஷ் “டேய் இங்கு வந்து தினமும் ஏன் நிற்கிற”
“இல்லை டா இடிச்ச வண்டி நம்பர் பாதி தான் பார்த்தேன், மீதி பார்க்க முடியலே.. இது மெயின் ஏரியா.. ஒரு வேளை தெரியாமல் இடித்திருந்தால் இங்கே திரும்பி வர வாய்ப்பு இருக்கு… “
“ம்ம்ம்ம்ம் மகி கிட்ட இது பத்தி பேசின?”
“இல்லை டா.. அவளை ஏன் பயமுறுத்தனும் எனக்கே என்னனு புரியவில்லை “
அப்பொழுது அவன் போன் ஒலித்தது மகி அழைத்தாள் “ஹலோ”
“ஆது எங்கே இருக்கீங்க உடனே நான் பார்க்கனும் உங்களை “
“ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்க ?”
“நேரில் பார்க்கும் போது சொல்வேன் நீங்க இப்பவே வாங்க ப்ளீஸ்”
“சரி சரி பயப்படாதே.. நான் வரேன்”
“வீட்டிற்கு வேண்டாம்.. பக்கத்தில் இருக்கும்  பூங்காவிற்கு வாங்க”
“சரிமா 20 நிமிஷம் நான் அங்க இருப்பேன்.. நீ பயப்படாமல் வா”
மச்சி மகி கூப்பிடுறாள்.. ஏதோ பிரச்சனை போல தெரியுது நான் போய் பார்க்கிறேன்.. நாளைக்கு மீட் பண்ணலாம்.. பை டா.. 
பை மச்சி..
******************************************************************************************************
சென்னையில் பிரபல மருத்துவமனை ஒன்றில் ஷாஷாவோடு இறங்கினான் அவன். அவளை பார்த்துக் கொள்ளும் பச்சையம்மாவும் கூட வந்திருந்தாள்.
மருத்துவர் துர்கா அவர்களை அன்புடன் வரவேற்றார்..
“ஷாஷா எப்படி இருக்கீங்க”
அவள் பதில் பேசவில்லை.. அவநையே பார்த்து கொண்டிருந்தாள். அவன் பேசுமாறு கண் அசைத்தப்பின் 
“நல்லா இருக்கேன் டாக்டர்”
“குட்”
பிறகு தனியாக அவளை அழைத்து சில டெஸ்டுகளை எடுத்தவர்,
2 மணி நேரத்திற்கு பிறகு, ரிசல்ட்டை சொல்ல அழைத்தார். அதற்குள் ஷாஷாவை வீட்டில் விட்டு வந்தான் அவன்.
துர்கா  “ஷாஷாவோட காயங்கள் சரியாகிவிட்டது.. உடல் வாரியா நார்மலாக இருக்காங்க.. பட்..”
“என்ன டாக்டர்”
“தலையில் அடி பட்டதால் மூலையில் சில அதிர்வுகள், வீக்கம் இருக்கு.. சில சமயம் நல்லா இருப்பாள் சில சமயம் கோவம் அதிகமாக வரும்.. சரியாக இன்னும் நாள் ஆகலாம்”
“அவள் கீழே விழுந்து 3 வருடம் மேலே ஆகுதே டாக்டர்”
“அவள் 2 வருஷமாக கோமாவில் இருந்ததை மறந்துட்டீங்களா இந்த அளவுக்கு அவள் தேறி வந்தது பெரிய விஷயம்.. இப்பவும் பிரச்சனை ஏதும் இல்லை சரியாக நாளாகலாம்.. மாத்திரை மட்டும் தொடர்ந்து குடுங்க .. அடுத்த மாதம் திரும்பி கூப்பிட்டு வாங்க ”
“சரிங்க டாக்டர்.. நன்றி நான் வரேன்” 
“வீட்டிலேயே இருக்காமல் வெளியே கூட்டி போங்க.. மன மாற்றம், இட மாற்றம் இருந்தா மனசுக்கு இதமா பீல் பண்ணுவாங்க”
“ஓகே டாக்டர்” 
மருத்துவமனையிலிருந்து வீடு வந்தவன் நேராக ஷாஷாவிடம் சென்றான்.
“மாமு நீ எங்கே போன நான் உன்னை தேடினேன்”
ரொம்ப நாள் கழித்து மாமு என அழைத்ததும் மனது லேசானது.. இத்தனை நாள் பேசா மடந்தையாக இருந்தாள்.. 1 மாத காலமாக  தன் தேவைக்கு ஓரிரு வார்த்தை பேசுகிறாள்.. இதுவே முன்னேற்றம் என தோன்றியது.
“நான் கேட்கிறேன் பதில் சொல்லலே?”
“மாமு வேலை பார்க்க வேண்டாமா? அதனால் தான் பாப்பாவை விட்டுட்டு போனேன்”
“நான் உங்க பாப்பாவா? அம்மு இல்லையா?”
“ரெண்டும் நீ தான் டீ” அவளை தன் மடி மீது அமர்த்தி கொண்டு பேசினான்.
“பொய் சொல்லுற”
“இல்லை அம்மு உனக்கு புரியிதா இல்லையா தெரியலை எனக்கு எல்லாமும் நீ தான் டீ”
“இல்லை.. மகி கூட சொன்னாள்.. ”
அந்த பெயரை கேட்டதும் அவன் பொறுமை பறந்தது…
“ஏய்” ஒரு கத்து கத்தினான்
அவள் பயத்தில் அழ ஆரம்பித்தாள். எவ்வளவு சமாதானம் செய்தாலும் அழுகை நிற்கவில்லை.. சிறிது நேரம் தேம்பியவள்.. அவன் மடியில் படுத்து உறங்கிவிட்டாள்.
அவன் போன் ஒலித்தது.. அம்மாவின் எண்ணை பார்த்ததும் அட்டன் செய்தான்
“அம்மா”
“எப்படிப்பா இருக்கே.. அம்மு எப்படி இருக்காள்.. ஹாஸ்பிடல்ல என்ன சொன்னங்க”
“நல்லாயிருக்கோம் அம்மா.. “
ஹாஸ்பிடலில் நடந்ததை கூறியதும்
“அப்போ இங்க கூட்டிட்டு வாயேன் டா.. ஏன் தனியா கஷ்டபடுற
நான் நல்லா பார்த்துக்க மாட்டேன் அப்படி நினைக்கிறாயா ? ”
“2 மாதம் போகட்டுமா நான் கூட்டிட்டு  வருகிறேன். நீங்களே வச்சிக்கோங்க உங்க அம்முவை”
“சரிப்பா உடம்பை பார்த்துக்கோங்க”
ஷாஷாவை கட்டிலில் தூங்க வைத்துவிட்டு தன் அலுவலறைக்கு சென்றான்.
**********************************************************************************************************
பூங்கா உள்ளே வந்து மகியை பார்த்து கை அசைத்தவன் அருகே சென்று அமர்ந்தான்..
மகியின் முகம் சரியில்லாததை கண்டவன்  “ஏய் பொண்டாட்டி என்ன ஆச்சு”
“இந்த கல்யாணத்தை நிறுத்தி.. “ அவள் முடிக்கும் முன் ஓங்கி அறைந்திருந்தான்.
“என்ன விளையாடுறையா.. திரும்பி எதாவது இது மாதிரி பேசின அடிச்சு பல்லை பேத்துடுவேன்.. என் மனசிலே நீ தான் பொண்டாட்டினு பிக்ஸ் பண்ணிட்டேன்.. என்னால் மாத்த முடியாது..”
“ஒரு வேளை உனக்கு பிடிக்கலையோ..”
“ஐயோ  அப்படி இல்லை ஆது”
“பின்ன எப்படி? எனக்கு வர கோவத்துக்கு … “ மீன்டும் கை ஓங்கும் போது தான் அவள் கன்னம் பார்த்தான்.. நன்றாக சிவந்திருந்தது.. பிறகே தான் செய்த காரியம் தவறென புரிய.. சாரிடி வெரி சாரி.. ரொம்ப வலிக்குதா.. சாரி..”
“பரவாயில்லை ஆது..” அவள் அழுது கொண்டே கூறினாள்”
“என்ன இப்பயாவது சொல்லு”
ஆதுவிடம் ஒரு வீடியோவை காட்டினாள்..
“என்னால் உங்களுக்கு எதுவும் ஆகிட கூடாது.. எந்த இழப்பையும் தாங்குகிற சக்தி இல்லை.. ஏற்கனவே அம்மாவை இழந்துட்டேன்“ என அழுதாள்.
“ஷட் அப் மகிழ்..”
  • தொடரும் 

Advertisement