Advertisement

EPISODE 2
மாலை 5 மணி பள்ளி முடிந்து வீடு திரும்பினாள் மகிழ். அவளது தந்தை அவளுடைய ரோஜா செடிக்கு தண்ணீர் ஊத்தி கொண்டிருந்தார். 
மகிழ் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம், அம்மா இறந்ததும் இப்படி ஆயிட்டார் அப்பா.. அவரோட  மருத்துவ பணியிலிருந்து தாமாக ரிடையர்மென்ட் வாங்கி விட்டார். இரண்டு வருஷமாக நம் வீடே தலைகீழாக மாறியது போன்று உண்ர்ந்தாள்.
“அப்பா நான்  வந்துட்டேன் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க.. “
“பரவாலமா.. எனக்கும் பொழுது போகும்ல.. “
“நிலா இன்னைக்கு வராலாமா”
“இல்லப்பா.. எதோ அஸைன்மென்ட் இருக்காம்.. நாளைக்கு வருவா.. “
நிலா சென்னையிலுள்ள  கல்லூரியில் படித்தாலும், வார இறுதி மட்டுமே வீட்டிற்கு  வருவாள். அங்குள்ள விடுதியில் தங்கி கொள்வாள்.
“சதாகிட்ட பேசிடட்டுமாடா”
“சரிப்பா”
“உனக்கு சரிதானமா?”
“அப்பா நீங்க பார்த்து பண்ணுறது எப்போதும் தப்பாகாது.. நீங்க சதா அங்கிள் கிட்ட பேசுங்க”
“சரி மா”
சதாவிற்கு அழைத்து சம்மதத்தை தெரிவிக்க.. அவர் மாப்பிள்ளை வீட்டில் பேசி அடுத்த திங்களன்று   அருகிலுள்ள சிவன் கோயிலில் சந்திப்பதாக முடிவானது..   
கல்லூரி முடிந்து ஹாஸ்டல் சென்று கொண்டிருந்தாள் நிலா , அப்பொழுது அவளது தொல்லை பேசி ஒலித்தது..  அதை அட்டன் செய்தவள் காதில் இனிமையாக கேட்டது அவனின் குறல்.
“அத்தான்”
மகேஷ் “சொல்லுடி எங்க இருக்க? வீட்டுக்கு எப்ப கிளம்புற?”
“ நாளைக்கு தான் போறேன்.. இன்னைக்கு நீங்க ப்ரீனு சொன்னீங்க அதான் “
“தேங்க்ஸ் டீ பட்டுக்குட்டி, 11 மணிக்கு நான் போன் பன்றேன்.. தூங்கிடாத”
மகேஷ் , ராமின் சகோதரி செந்தாமரையின் மகன்                                                                                                                                                                                                                                                                                                 கோவையிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிகிறான். இருவரது காதல் வீட்டில் தெரிந்ததும், கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.
இரவு 11 மணி.. 
மகேஷ் நிலாவுடன் கதைத்து கொண்டிருந்தான்..
“சாப்பிட்டியா குட்டி”
“ம்ம்ம்… “
“என்ன குண்டாத்திக்கு மாப்பிள்ளை செட் ஆகிருக்காமே
அம்மா சொன்னாங்க”
“ அக்காவை வம்பு வளர்க்காமல் தூக்கம் வராதே உங்களுக்கு”
“என் மாமா பொண்ண நான் வம்பு வளர்க்காம?”
“ஓஹோ!!!”
“சீக்கிரம் சட்டு புட்டுனு அவ கல்யாணத்தை முடிங்க.. அப்ப தான் நம்ம ரூட் க்ளியர் ஆகும்.”
“ம்ம்ம்ம்ம்ம் ரொம்ப பேசாதிங்க… நீங்க திங்கள் கிழமை வரீங்களா?”
“இல்லடி அம்மா மட்டும் வருவாங்க.. அதுவும் புதன்கிழமை மாப்பிள்ளை வீடு பார்க்கிற மாதிரி சூழ்நிலை வந்தா.. மகிழ் ஓகே சொன்னா..”
அவள் பதில் பேசவில்லை
“அடியேய்.. கோவமா.. லீவ் கிடைக்காது பட்டு .. ப்ளீஸ்.. ?”  
“ம்ம்ம்ம்ம்”
“முடிஞ்சா நான் வீக்கென்டு வரேன்.. அம்மாவ வந்து கூட்டிட்டு போற மாதிரி, சரியா?
“சரித்தான்”
“முடிஞ்சா தான்… வரலனா டேமை ஓபன் பண்ணிடாத”
“ம்ம்ம்ம்ம்”
“சரி சரி கொடுக்க வேண்டியதை குடு.. நான் தூங்க போவேன்..”
“முடியாது அத்தான்.. ஆரம்பிச்சா நீங்க நிறுத்த மாட்டீங்க.. எனக்கு நிஜமாவே தூக்கம் வருது… “
“இதுக்குதான் நீ வீட்டுக்கு போகாமல் இங்கேயே இருந்தயா? போடி”
“அத்தான்”
பதிலில்லை…..
“சரி.. ம்ம்ம்ம்”
அவர்களின் ரொமான்ஸ் நல்லிரவையும் தாண்டி சென்றது..
திங்கள் காலை 8 மணி..
“மகிழ், நிலா கிள்மபிட்டாளா?”
“நீங்க எழுந்து வாக்கிங் போன போதே கிள்மபிட்டா”
“சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வா மா.. பையன் வீட்டில் பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு வாரதா  சொல்லியிருக்காங்க”
“நிலாவையும் கூப்பிட்டுக்கிறேன் பா.. அத்தையும் நல்ல படியா முடிஞ்சா பையன் வீடு பார்க்க தான் வருவாங்கலாம், தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கும்”
“சரிடா”
“டிபன் செஞ்சுட்டேன், லஞ்ச் தயிர் சாதம் தான் செஞ்சேன்…”
“நான் பார்த்துக்குறேன் மா.. ஆன கல்யாணம் ஆயிட்டா மாப்பிள்ளை பாவம் அப்பப்ப மெனுவ மாத்திடு டா ஹி ஹி ஹி”
“போங்கப்பா..”
மகிழ் ஸ்கூலுக்கு கிளம்பிவிட்டாள்.. வாங்க நம்ம ஆதவ பார்ப்போம்..
“டேய் ஆதவா எழுந்தயா  இல்லையா?”
“கத்தாதே மம்மி வரேன்”
“சாயங்காலம் சீக்கிரம் வந்துடு.. 5 மணிக்கு போகனும்” 
“சரி மா நான் நேராக வந்துடுறேன்.  நீங்க அப்பாவோட வாங்க”
“டேய் சொதப்பிடாதே”
“அடடா மம்மி போ போய் அப்பளத்தை(தோசை) எடுத்து வை.. சும்மா சொன்னதை சொல்லிக்கிட்டு”
“ரொம்ப சமையலை குறை சொல்லாதடா.. “
“மம்மி என் டார்லிங் சமைக்கலைனா நான் செஞ்சுட்டு போறேன்.. நீ உன் ஆத்துக்காரர  கூப்பிட வேண்டியதுதானே”
“போடா போக்கிரி”
 ********************************************************************************************
பெண் பார்க்கும் படலம்…
ஆதவன் 5 மணிக்கு சற்று முன்பு வந்தவன், சைட் அடித்துக கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு பெண் பூ வாங்கிக்கொண்டு தன் தோழியுடன் செல்வதை பார்த்தவன் ப்ரீஸ் ஆகி நின்றான். (பொண்ணு  பார்க்க வந்துட்டு என்ன வேலை டா பார்க்குற)
“என்ன அழகுடா அந்த பொண்ணு ஹன்ஸிகா மாதிரி கும்முனு இருக்காளே..”
அவனது மொபைல் ஒலித்தது.. அம்மா தான் அழைத்திருந்தார். 
“ஹலோ”
“எங்கடா இருக்க.. நந்தி பக்கத்துல வா.. இங்க தான் அவர்களை வர சொல்லியிருக்கேன்.”
“வந்துட்டேன்”
தனது தாயுடன் அரட்டையடித்து கொண்டிருந்தான். அப்பொழுது, மகிழ், நிலா ,ராம் இவர்களை நோக்கி வந்ததும்,
ஆதவின் அப்பா, “வாங்க.. வாங்க..  வணக்கம்”
“வணக்கம், எங்க பொண்ணுங்க, இவள் பெரியவள் மகிழினி,
இவள் சின்னவள் நிலாலினி”
தேவி “ரெண்டு தேவதைகள் மாதிரி இருக்காங்க”  
ராம், “நன்றிமா”
ஆதவன் மனதிற்குள் (ஐஐஐ.. நம்ம பச்சகிளி.. ஹன்ஸு குட்டி… ஆதவா நீ ரொம்ப லக்கி டா)
நிலா ஆதவனை பார்த்ததும் புரிந்தது “மாமாக்கு ஓகே போலவே.. இந்த அக்கா நிமிர்ந்து பார்க்காமல் பூமி குள்ள  என்ன தேடுறா”
திடீரென நிலா “அப்பா மகிழ் அவருகிட்ட தனியா பேசனுமாம்”
தலையை நிமிர்ந்து அவள் பார்த்த பார்வையில் அவனுக்கு புரிந்தது அவள் அப்படி சொல்லவில்லையென்று.. ஆனாலும்  வாய்ப்பை தவற விடவில்லை.. 
“வாங்க அப்படியே பேசிகிட்டே நடக்கலாம்”
(நீ நல்லா நடத்துடா”)
சிறிது தூரம் சென்றதும் “மகி உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கா, எதுனாலும் ஓபனா சொல்லிடுங்க ப்ளீஸ்”
“எங்க அப்பாக்கு பிடிச்சிருக்கு, அது.. அது… “
அவளது கண்கள் அலைபாய தொடங்கின..
“கூல்.. உன்னை எதுவும் கேட்கல… என்ன பார்த்தால் பயமாகவா இருக்கு ?”
“அப்படி இல்ல நான் பொதுவாக பேசி பழக டைம் எடுத்துப்பேன்” 
“ம்ம்ம்.. எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு.. நான் உன் போட்டோவை பார்க்கல, எதுவானாலும் அந்த பொண்ணுக்கு முதலில் பிடிக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்னு விட்டுட்டேன். நீ கோவில் உள்ள வரும்போதே பார்த்துட்டேன். அப்பவே நான் மயங்கியாச்சு.. இந்த பச்சைக்கிளி மயக்கிடுச்சு..  இனி நீ தான் முடிவெடுக்கனும்” 
“எனக்கும் பிடிச்சிருக்கு ஆனால்…”
“ஆனால்?”
“அப்பாவ நினைச்சு வருத்தமா இருக்கு.. கல்யாணம் முடிஞ்சு அவர தனியா இருப்பார்”
“ப்ப்ப்ப்ப்ப்ப்பூ இவ்வளவு தானே கொஞ்ச நேரத்திலே பயமுறுத்திட்ட போ…”
நிலா கல்யாணமும் முடியட்டும், கண்டிப்பாக நம்ப கூடவே அப்பாவ வச்சிக்கலாம்.. அதுக்கு நான் கியாரண்டி”
“தேங்க்ஸ்”
“இப்போ ஓகே வா??”
“டபுள் ஓகே”
“நேரமாச்சு அவங்க தேடி வரதுக்குள்ள நாமே போகலாம் வா…”
“ம்ம்ம்ம்ம்ம்”
இருவரும் புன்னகையுடன் வருவதை பார்த்தவர்கள் திருப்தி அடைந்தனர்.
தேவி” அப்போ புதன்கிழமை பொண்ணு வீடு , பையன் வீடு பார்க்கிற சடங்கு வச்சிக்கலாமா அண்ணா?”
ராம் ”கண்டிப்பாமா”
எல்லாம் நல்லபடியாக முடியனும்  மனதிற்குள் வேண்டிக்கொண்டார்.
இவர்கள் பொதுவான குடும்ப விஷயம் பேசிக்கொண்டிருக்க, ஆது மெல்ல மகி போன் நம்பரை வாங்கிக்கொண்டான்.
சிறிது நேரம் கழித்து அனைவரும் விடைபெற,  ஆது போன் பண்ணுவேன் சைகை காட்டி விட்டு விடை பெற்றான்.
இவை அனைத்தும் குரோதத்துடன் இரு விழிகள் பார்த்துக் கொண்டிருப்பதை  எவரும் அறியவில்லை..
இரவு உணவை முடித்துக்கொண்டு தனது அறைக்கு வந்த மகிழை நிலா அழைத்தாள்.
“அக்கா”
“என்னடி.. ஏன் ஒரு மாதிரி இருக்க?”
“அக்கா தனியா  பேசனும்..”
“சொல்லு வா.. என் ரூமிற்க்கு போகலாம்”
“உனக்கு நிஜமாகவே இந்த கல்யாணம் பிடிச்சிருக்கு தானே .. அப்பாவுக்காக சொல்லலையே… “
“முதல்ல தயக்கமா இருந்தது, அவர் கிட்ட பேசினதும் சரியாகிட்டேன் டீ.. ஆமா உனக்கு ஏன் திடீர் சந்தேகம்?”
“அப்படி இல்லைக்கா.. அம்மா இருந்தால் நம்ம கிட்ட தனியா கண்டிப்பா கேட்டிருப்பாங்க.. அதான்..”
“நீ எப்படி பெரிய மனுஷியான ??  வீணாக கவலைப்படாதே.. எனக்கு பிடிச்சு தான்  ஒத்துக்கொண்டேன்.”
“சரிக்கா..  நான் தூங்க போறேன்.. குட் நைட்”
“குட் நைட் நிலா”
தன் அறைக்கு வந்த மகிழை ஆதவன் போன் அழைப்பு பிடித்துக்கொண்டது 
“ஹலோ”
“என் பச்சை கிளி என்ன பண்ணுது?”
“ம்ம்ம் பச்சை கிளி சொல்லாதிங்க “
“முடியாதுடி”
“போங்க.. அப்போ”
“சாப்பிட்டயா?”
“ம்ம்ம் நீங்க.. ?”
“ம்ம்ம் ஆச்சு… “
“உன்னை பத்தி சொல்லேன்.. கேட்போம்…”
[அவுங்க க்ரௌன்ட்நட் (கடலை) போட ஆரம்பிச்சாச்சு.. ஸ்டாப் பண்ண மாட்டாங்க…  வாங்க நாம ஓடிறலாம்]
நிலாவோ அத்தான் அழைப்பிற்க்காக  காத்திருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். 
மறுநாள் காலை எழுந்து காலை உணவை சமைத்தாள், நிலா 2 நாள் காலேஜுக்கு லீவ் போட்டதால், மதிய உணவு, அவள் சமைப்பதாக சொல்லியிருந்தாள். (அப்பா எஸ்கேப் தயிர் சாதத்திலேயிருந்து)
நீல நிற புடவை கட்டி பள்ளிக்கு செல்ல வீட்டிற்கு வெளியே வந்தாள். அப்பொழுது அவள் போன் அடித்தது, ஆது தான் அழைத்திருந்தான்.
“சொல்லுங்க ஆது.. “
“ஸ்கூல் கிளம்பியாச்சா?”
“ம்ம்ம் என் வண்டியை எடுக்க போறேன்”
“அப்படியே வெளியில் வந்து பாரு..”
தெரு முனையில் நின்று கொண்டிருந்தான்… இவளை பார்த்ததும் கை அசைத்தான்.
“இங்கே என்ன பண்ணுறீங்க? “
“என் பொண்டாட்டியை  ஸ்கூல்ல ட்ராப் செய்ய வந்தேன்”
“விளையாடாதிங்க, நான் வர மாட்டேன் ”
“ஏன் டீ.. நான் 7 மணிக்கெல்லாம் என் வாழ்க்கையில் எழுந்தது கிடையாது.. உனக்காக கிளம்பி வந்தா இப்படி சொல்லு.. நீ வர வரைக்கும் நான் இங்கே தான் நிற்பேன்.. அப்புறம் உன் இஷ்டம்”
“ஆது அப்பா கிட்ட என்ன சொல்லுறது”
“ஹிஹிஹி.. அதுதான் பிரச்சனையா? வண்டியில் காத்த பிடிங்கி விட்டு வா.. வண்டி பஞ்சர் கதை சொல்லிடு சீக்கிரம் மாமா வாக்கிங் முடிச்சு வரப் போறார் “
“ப்ராடு..”
“நீ வா நான் வைக்கிறேன்”
அவன் சொன்னபடியே செய்தவள், பைக்கில் ஏறி அமர்ந்தாள்..
“இருந்தாலும் இவ்வளவு பிடிவாதம் ஆகாது,,, காலைலயே டென்ஷன் ஆக்கிட்டீங்க”
“கூல் பேபி.. சாப்பிட்டாயா?”
“ம்ம்ம்ம்ம்.. நீங்க?”
“இல்லை எனக்கு லேட்டாகும்.. எத்தனை மணிக்கு ஸ்கூல்?”
“8.45”
“இன்னும் 10 நிமிஷம் தான் இருக்குது.. சரி அடுத்த  வாட்டி கூப்பிட்டு போகிறேன்” 
“எங்கே ?”
“அது சஸ்பென்ஸ்”
“மகி நாளைக்கு காலைல வருவேன், பொண்ணு வீடு பார்க்க. எனக்கு ஸ்பெஷலா  ஒரு கிப்ட் வேணும் “
“என்னங்க”
“நாளைக்கு கேட்டுக்கிறேன் பட் நோ மட்டும் சொல்லிடாத”
“சரி ஆது”
“சாயங்காலம் நான் வந்து கூட்டிட்டு போகவா எப்ப ஸ்கூல் முடியும்?” 
“வேண்டாம்.. நித்தி கூட வீட்டுக்கு போய்க்கிறேன்.. ஆபிஸ்ல திட்ட மாட்டாங்களா? “
“நான் பார்த்துக்கிறேன் டீ.. பத்திரமா போய்டுவியா?”
“ம்ம்ம்..”
“பார்த்து 2 நாள் தான் ஆகுது ஆனால் ரொம்ப நாள் கூட வாழ்ந்த மாதிரி இருக்கு எனக்கு”
“ம்ம்ம்ம்”
பள்ளி அருகே வண்டியை நிறுத்தினான்,
“சரி.. நாளைக்கு பார்ப்போம் பை டீ மகி குட்டி”
“பை ஆது”
மகிழ் மிகவும் சந்தோஷமாக பள்ளிக்கு நடந்து சென்றாள்.
சந்தோஷம் நிலைக்குமா??
  • தொடரும்.

Advertisement