Advertisement

ஒரு வாரம் மட்டுமே நேரம் இருந்தாலும் அதுரனின் குடும்பத்தார் அனைவரும் மிக பிரமாண்டமாக கல்யாணத்தை செய்ய முடிவு செய்தனர். ஷாஷாவிற்கு நகை புடவை வாங்க 2 நாட்கள் ஆனது.. இவற்றை இந்திராவும் சீதாவும் பார்த்து கொண்டார்கள். பத்திரிக்கை ஒரே நாளில் அச்சிட பட்டு வந்து விட, முக்கியமான சொந்தங்களை தவிர மற்ற அனைவருக்கும் விதுரனும் அவன் தந்தையும் சென்று பத்திரிக்கை வைத்து விட்டு வந்தார்கள். 
ஷாஷாவும் மகிழும் போனில் பேச ஆரம்பித்திருந்தார்கள். புடவையை கூட மகிழிடம் காட்டி விட்டு தான் முடிவெடுத்தாள் ஷாஷா. திருமணம் என்றதும் பெண்களுக்கே உரிய இனிய பட படப்பு வந்து ஒட்டி கொண்டது ஷாஷாவிடம். 
அதுரன் வேலைகள் அனைத்தும் கவனித்தாலும்  ஒரு வித இருக்கத்துடன் இருந்தான். ஷாஷா கேட்டாலும் சொல்லுவது கிடையாது..
நாட்கள் வேகமாக நகர்ந்து இன்று அவர்கள் திருமண நாளும் வந்தது.   
அழகிய குங்கும நிற பட்டில் மிதமான அலங்காரத்துடன் நடந்து வந்த ஷாஷாவை பார்க்க பார்க்க திகட்டவில்லை அதுரனுக்கு.. 
சீதா, “அத்தான் ரொம்ப வழியாதிங்க.. உங்க ஷாஷா தான்” 
ஒரு புன்னகையுடன் தலையை வேறு பக்கம் திரும்பினான். அவன் அருகே வந்த அமர்ந்த ஷாஷா தன் பல நாள் கனவு இன்று நிஜமானதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தாள். அனைவர் மத்தியிலும் ஷாஷாவை தன் சரி பாதியாக ஏற்று கொண்டான் அதுரன்.
அன்றிரவு சடங்கிற்காக சிறு ஒப்பனையுடன் அதுரனின் அறைக்கு அனுப்பி வைக்க பட்டாள் ஷாஷா. உள்ளே வந்தவளை ஒரு புன்னகையுடன் வரவேற்த்த அதுரன்,
“அம்மு ரொம்ப அழகா இருக்க டி”
“போங்க மாமு”
“சந்தோஷமா இருக்கியா அம்மு”
“ம்ம்ம்ம் “
“ஒரு விஷயம் சொல்லனும் டா.. நீ தப்பா நினைக்க கூடாது.. “
“மாமு நான் எதுவும் நினைக்க மாட்டேன் மாமு நீங்க சொல்லுங்க”
“நமக்குள்ள இது இன்றைக்கு வேண்டாமே..”
ஒரு முத்ததிற்காக  தன்னை பாடாய் படுத்தும் தன் மாமு இன்று தள்ளி இருக்க சொல்கிறான் என்றால் ஏதோ பெரிய பிரச்சனை என நினைத்தாள் ஷாஷா
“ஏன் டா அமைதியா இருக்க.. சாரி கஷ்டமா இருக்கா?”
“இல்லை மாமு.. ஏதாவது பிரச்சனையா?”
“நம்ம வாழ்க்கையை ஒரு தெளிவோடு ஆரம்பிக்க நினைக்கிறேன் அம்மு”
“புரியுது மாமு.. உனக்காக எப்பவும் காத்திருப்பேன்”
“தேங்க்ஸ் டி அம்மு “ என்று இறுக்கி கட்டி கொண்டான்.
அடுத்த நாள் இருவரும் சென்னை கிளம்பினார்கள். ஷாஷா மட்டுமே தன் மாமனாரிடம் சொல்லி விட்டு சென்றாள், அதுரன் சரியாக தன் தந்தையிடம் பேசுவதில்லை. அது பிறருக்கு தெரியாதவாறு பார்த்து கொண்டான்.
***************************************************************** 
இங்கு ஆதவநின் நிச்சய விழாவும் இனிதே நடந்துது. பிறர் அறியாமல் தீண்டி கொண்டே இருந்தான் ஆதவன். அவனை சமாளிக்க பெரும் பாடு பட்டாள் மகிழ்.
பிறகு தனியாக போனில் மாட்டிக் கொண்டு நன்றாக வாங்கி கட்டி கொண்டான் ஆதவன்.
எப்பொழுதும் போல் மொட்ட மாடியில் தன் காதலை வளர்த்தார்கள் இவர்கள் [வேறு யாருங்க நம்ம மகேஷும் நில்லாவும் தான்]
“அத்தான் ஏன் லேட்”
“இல்லைடி தங்க குட்டி எல்லாரும் தூங்க வேண்டாமா கோவிக்காத பட்டு”
“இப்படி கொஞ்சியே ஏமாத்துங்க”
“பேச்சை குறை டி.. “ என நெருங்கியவன் அவள் பேசாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை தொடங்கி விட்டான்
************************************************************************ 
ஷாஷா சென்ன வந்ததும் அடுத்த நாளே மகிழை வந்து பார்த்தாள். அதுரன் கொண்டு வந்து விட்டு திரும்ப அழைத்து சென்றான். மகிழ் உள்ளே வருமாறு அழைத்தும் இவன் செல்லவில்லை. 
நாட்கள் அதன் போக்கில் செல்ல ஷாஷாவின் வாழ்க்கை தாமரை மேல் நீர் துளி போல அதுரனிடம் ஒட்டியும் ஒட்டாமல் இருந்தது. அதுரன் என்றுமே எல்லை மீறியதில்லை. அவளை கட்டி கொண்டு தூங்குபவன் காலையில் ஒரு இதழனைப்போடு வேலைக்கு சென்றுவிடுவான். 
ஒரு நாள் காலை வேளையில் உடல் பயிற்சி செய்து கொண்டிருந்தான் அதுரன். அப்போது அவன் போன் ஒலிக்க, அதை அட்டன் செய்தவன் 
“ஹலோ “
“ஹலோ பாஸ் என்ன பிஸியா?”
“அப்படி எல்லாம் இல்லை ஆதவன்”
“பாஸ் நீங்க எப்ப ப்ரீயோ சொல்லுங்க.. பத்திரிக்கை வைக்க நான் வரேன்”
“எப்பனாலும் வாங்க ஆதவ் 9 மணிக்கு முன் வந்தால் நானும் வீட்டில் இருப்பேன்” 
“ஓகே பாஸ் நாளைக்கு வருகிறேன்.”
அடுத்த நாள் ஆதவனும் மகிழும் பத்திரிக்கை வைக்க அடுத்த நாள் வந்தார்கள். மகிழுக்கு தயக்கமாக இருந்தாலும் ஷாஷாவிற்காக வந்தாள். 
ஷாஷா “வாங்க வாங்க.. “
“மாமு யார் வந்திருக்காங்க பாரு “ என்று உள்ளே குரல் குடுத்தாள். இருவருக்கும் ஜூஸ் குடுத்து உபசரித்தவள், ஆதவன் அதுரனிடம் பேசி கொண்டிருக்க ஷாஷா தன் தோழியை அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றாள்.
ஆதவன் “பாஸ் கல்யாணத்திற்கு கண்டிப்பா வரனும் “
“ஓகே ஆதவ்”
அதுரன் கொஞ்சம் ஓரிரு வார்த்தைகளே பேசினான். ஆதவன் அவனுக்கும் சேர்த்து பேசினான்.
அவர்கள் கிளம்பியதும் அதுரனிடம் வந்த ஷாஷா, “மாமு நாம கண்டிப்பா போகனும் அவங்க கல்யாணத்திற்கு.. “
“சரி அம்மு போகலாம்”
*********************************************************** 
நாளை காலை  திருமணம் மாலை வரவேற்பு நடக்க இருப்பதால், பெண் அழைப்பு இன்று மாலை நடக்க இருந்தது. ஆதவன் தன் அம்மாவை படுத்தி கொண்டிருந்தான்.
“அம்மா நானும் வருவேன்”
“அடி வாங்குவ ஆதவா கல்யாணத்துக்கு முன் நீ பார்க்க கூடாது”
“ப்ளீஸ் மம்மி”
“முடியாது டா.. ஏன் டா இப்படி அலையுற நம்ம வீட்டுக்கு தானே வர போறா” என திட்டிவிட்டு சென்றார்.  
ஒரு வழியாக பெண் அழைப்பு மாப்பிள்ளை அழைப்பு எல்லாம் முடிந்து இரவு உணவு மண்டபத்தில் முடித்ததும் அவரவர் அறைக்கு அனுப்பி வைத்தார் தேவி.
மணப்பெண் அறையில் நிலாவும் மகிழும் இருந்தார்கள். மகிழுக்கு தூக்கம் வர வில்லை. இருவரும் ஏதோ கதை பேசிக் கொண்டு இருந்தார்கள். கதவு தட்டும் சத்தம் கேட்ட நிலா,
“அக்கா மாமா தான் நினைக்கிறேன்” என கூறி விட்டு சென்றாள். கதவை திறந்தால் அங்கு மகேஷ் நின்று கொண்டு இருந்தான்.
“அத்தான் இங்க என்ன பண்ணுற?”
“கொஞ்சம் பேசனும் வாடி”
“இப்ப என்ன பேசனும்?”
“பேச போறது நான் இல்லை உன் மாமா” என கூறிவிட்டு அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு மறைவான இடத்திற்கு சென்றான்.
ஆதவன் திடீரென நுழைந்து கதவை சாற்றியதும் பதற்றம் அடைந்த மகி,
”ஆது இங்க எதுக்கு வந்தீங்க? யாராவது பார்த்தா அவ்வளோ தான்”
“சும்மா இரு டி நாளையிலேருந்து என் மனைவி ஆகிடுவ, இன்றைக்கு மட்டும் தான் என் காதலி..”
“அதுக்கு ?”
“ம்ம்ம்ம் சும்மா கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கலாம்னு..”
“நீங்க என்ன பேசுவீங்கனு எனக்கு தெரியும் போங்க முதலில்”
“ப்ளீஸ் டி.. பேசிட்டு மட்டும் தான் இருப்பேன்”
“ புரிஞ்சுக்கோங்க ஆது..”
“சரி தான் போடி.. நாளைக்கு என்ன பண்ணுவ? அப்ப பார்த்துக்குறேன் உன்னை “ என முறைத்து கொண்டே தன் அறைக்கு சென்று விட்டான். 
அடுத்த நாள் காலை அனைவருக்கும் இனிதாய் விடிந்தது. 
மணமேடையில் ஆதவன் அமர்ந்திருக்க அழகிய சிவப்பு நிற பட்டில் தங்க தேவதையாய் நடந்து வந்தாள் மகிழ்.
ஷாஷாவும் அதுரனும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். ஷாஷாவை  பார்த்து வரவேற்ப்பாய் ஒரு புன்னகை புரிந்து விட்டு தன் ஆதுவின் அருகே அமர்ந்தாள். 
ஐயர் “கெட்டி மேலம் கெட்டி மேலம்” என கூறியதும்,  மஞ்சள் தாலியை கட்டி தன் சரி பாதியாய் ஏற்று கொண்டான்.
பிறகு அனைத்து சடங்குகளையும் இன் முகத்துடன் செய்து முடித்தார்கள். ஆதவன் புது வீட்டிற்கு அழைத்து சென்று விளக்கேற்ற வைத்தார் தேவி. இந்த வீட்டில் தான் முதலிரவு சடங்கு நடக்க வேண்டும் என் தேவி முன்பே கூறிவிட்டார். 
ஆதவன் எதிர் பார்த்த இனிமையான தனிமை நேரம் இருவருக்கும் கிட்டியது.
முதலில் உள்ளே வந்த ஆதவன் மகிக்காக காத்து கொண்டிருந்தான். அவள் உள்ளே வந்ததும் கதவை அடைத்த ஆதவன் அவளை அப்படியே கையில் ஏந்தினான்.
“ஆது”
“ம்ம்ம்ம் சும்மா கும்முனு இருக்கியே கிளி”
“போங்க ஆது”
“நேற்று மாதிரி என்ன ஏமாத்தலாம்னு பார்க்கதடி… மாமா ஏற்கனவே காஞ்சு போய் இருக்கேன் “
“ஹஹஹா “
“சிரிக்கிரியா? உன்ன… “
அவளை கட்டிலில் கிடத்தியவன் அவள் மீது படர்ந்தான்.
********************************************************* 
ஷாஷாவும் அதுரனும் ரிஸப்ஷன் முடிந்து வீட்டிற்கு வந்ததும் தங்கள் அறைக்கு செல்லவிருந்த ஷாஷாவை தடுத்த அதுரன். 
“சர்ப்ரைஸ் அம்மு” என அவள் கண்களை பின்னால் இருந்து மூடி கொண்டான். 
“என்ன மாமு ? “ என கூறி கொண்டே நடந்து வந்தாள்.  
அறையின் உள்ளே நுழைந்தவள் அதிர்ந்தாள். அறை முழுவதும் மலர்களால் அலங்கரித்து இருந்தது. திரும்பி தன் மாமுவை கட்டி கொண்டாள்.
இத்தனை நாள் இருந்த அழுத்தம் ஏதோ குறைந்தது போல் இருந்தது “இன்னிக்கு தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு அம்மு”
“ எனக்கு புரியுது மாமு.. “
தன் அம்முவுடன் வாழ தொடங்கினான் அதுரன்.
இரு ஜோடிகளும் வாழ்க்கையில் வளமும் நலமும் பெற நாமும் வாழ்த்துவோம்.
  • முற்றும்.
 

Advertisement