Advertisement

 மகிழிடம் பேசி முடித்ததும் மகேஷிற்கு அழைத்த ஆதவன் சுருக்கமாக நடந்ததை கூறியவன் கோவை செல்ல வேண்டிய அவசியத்தையும் சொல்லியதும் இருவரும் உடனே கிளம்பினார்கள். 
ஆதவன் மகேஷுடன் கோவையை அதிகாலை 5 மணி அளவில் அடைந்தான். மகேஷின் வீட்டிற்கு சென்றதும் தாமரை அவர்களுக்கு காபி கொடுத்து சிறிது நேரம் உறங்க சொன்னார். தாமரையிடமும் தன் தாயிடமும் ஆக்ஸிடன்ட் ஆன தன் நண்பனை பார்க்க கோவை போவதாக கூறியிருந்தான். 
“ப்ரோ நீங்க ரெஸ்ட் எடுங்க காலை 10 மணிக்கு  நாம ஏ.வி ஹோட்டலுக்கு போய் அதுரனை பார்க்கலாம்”
“சரி மகேஷ்”
**************************************************************************
ஷாஷா சொன்ன அனைத்தும் கேட்ட அதுரன் நேராக மிகுந்த கோபத்துடன் தன் தந்தை அறைக்கு செல்ல முயன்றான். அவனை தடுத்த ஷாஷா,
“மாமு மணி நைட் 12.45 இப்ப ஏன் தொல்லை பண்ண போரீங்க?”
கொஞ்சம் யோசித்தவன் காலையில் பேசலாம் என நினைத்து “அம்மு நீ போய் தூங்கு”
“நீ தூங்க வை மாமு”
“எனக்கு யோசிக்கனும் அம்மு.. என்னால எதுவும் பண்ண முடியாது நீ போய் தூங்கு”
“ சரி மாமு” 
அவள் சரி என்றதும் தன் அறையின் பால்கனியில் நின்று கொண்டு அடுத்து என்ன வேண்டும் என வெகு நேரம் யோசித்தான். முதலில் சங்கருக்கு போன் செய்து “ப்ளான் கான்ஸல்” என தெரிவித்தான். நேரம் கழித்து தன் அறைக்குள் நுழைந்தவன் கண்டது ஷாஷா தன் கட்டிலில் உறங்குவதை தான். தன் சட்டையை மேலே போட்டு கொண்டு நன்றாக உறங்கி கொண்டிருந்தாள். ஒரு பெருமூச்சுடன் அங்குள்ள ஷோபாவில் படுத்தான் ஆனால் உறக்கம் தான் வரவில்லை. விடியற்காலை பொழுது தான் கண் அயர்ந்தான் அதுரன்
வெகு நேரம் கழித்தே காலையில் விழித்தான் அதுரன்.  எழுந்ததும் தன்  தந்தை அறைக்கு சென்றான்.
 “வாப்பா அதுரா”
“ஏன் பா அப்படி  பண்ணின”
“நான் என்ன பண்ணினேன்”
“ஷாஷா கிட்ட ஏன் அப்படி நடந்து கிட்டீங்க.. அது தெரியாமல் நான் எவ்வளவு பெரிய முட்டாள் தனம் பண்ண இருந்தேன்.. ஏற்கனவே பெரிய பாவம் பண்ணிட்டேன்”
“அன்னைக்கு இருந்த சூழ்நிலையில் அப்படி பண்ணிட்டேன் பா. அந்த பொண்ணு அப்படி உடனே தப்பான முடிவு எடுக்கும்னு தெரியலை எனக்கு.. “
“என் கிட்ட ஏன் மறைச்சிங்க?”
“மன்னிச்சிடு அதுரா.. நீ அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்திட்டு அவேசமாக கத்துனியே நியாபகம் இருக்கா? இதற்கு காரணமானவர்களை கொன்று விட்டு தான் வேறு வேலைனு கத்திகிட்டு இருந்த.. என் உயிரை நினைச்சு பயப்படுல ஆனால் என்ன விட்டுட்டு போய்டுவியோனு பயத்தில் அப்படி சொல்லாமல் விட்டுடேன் சாரி “
“இப்ப மட்டும் என்ன பா.. தப்பு செஞ்சா யாராக இருந்தாலும் தண்டனை உண்டு”
“மாமு” என்ற சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன்.
“என்ன மன்னச்சிடு அம்மு, நான் பண்ணின தப்பிற்கு எனக்கே நானே தண்டிச்சிக்க போறேன்.”
“மாமு அப்படிலாம் சொல்லாதிங்க உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா? அப்படி தண்டனை அனுபவிச்சு தான் ஆகனும்னா எனக்கும் சேர்த்து குடுங்க..” 
“இல்லை அம்மு… “ 
அப்போது உள்ளே நுழைந்த இந்திரா “எல்லாரும் இங்க என்ன பண்றீங்க. டேய் அதுரா எப்ப எழுந்த நீ இன்னும் சாப்பிட கூட இல்லை.. விதுரன் சென்னையிலிருந்து இப்போ தான் கிளம்பியிருக்கான். சீதா நைட் தான் வருவாள். எல்லாரும் வந்ததும் உங்கள் கல்யாணம் பத்தி பேசனும்”
அதுரன் மறுக்கும் முன் ஷாஷா “ அத்தை எனக்கு கம்ப்ளீட் செக் பண்ணிட்டு டாக்டர் கிட்ட பேசிட்டு அப்புறம் கல்யாணம் பத்தி பேசலாமா?”
“நீ சும்மா இருமா டாக்டர் என்ன சொன்னாலும் நீ தான் இந்த வீட்டு மருமகள்.. டேய் சாப்பிட வாயேன் டா.. ஷாஷா நீயும் வா.. இவனை கூட்டிட்டு வானா நீயும் இங்க அரட்டை அடிச்சு கிட்டு நிக்குற” என கூறி விட்டு சென்றுவிட்டார். 
அதுரன் ஷாஷாவுடன் சென்று பெயருக்கு உண்டவன் தன் ஹோட்டலிற்கு சென்றான். அங்கிருந்து சென்னை செல்ல வேண்டும் என நினைத்து உள்ளே சென்றதும் “ சார் உங்களை பார்க்க 2 பேர் வந்திருக்காங்க சார். ஏதோ அவசரம்னு சொன்னங்க விசிட்டர்ஸ் ரூமில் இருக்காங்க” என பணியாள் சொன்னார்.
“சரி நான் பார்க்கிறேன்”
அங்கு ஆதவனும் மகேஷும் அமர்ந்திருந்தார்கள். இதனை ஓர் அளவிற்கு எதிர் பார்த்த அதுரன் அமைதியாக
“ஹலோ”
“ஹை அதுரன் நான் “
“நீங்க மகேஷ் , ஆதவன் தெரியும்”
“உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியும் அதுரன்”
“ஹ்ம்ம்ம்.. நானே சென்னைக்கு வருவதாயிருந்தேன் உங்களை பார்க்க. எனக்கு நேத்து தான் சில உண்மைகள் தெரிய வந்தது மகேஷ், அது தெரிந்ததிலிருந்து என் குற்ற உணர்ச்சி என்ன மெல்ல கொல்லுது   “
ஆதவனும் மகேஷும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
“ எஸ் ஆதவன். நிறைய தப்பான புரிதல் என் முன் கோவம் அதனால் பல தவறுகள் செய்துட்டேன்.” குற்ற உணர்வால்  தலையை குனிந்து கொண்டான்.
“ எனக்கும் நேற்றிரவு தான் தெரிய வந்தது உங்களை பற்றி அதான் உடனே உங்களை பார்த்து சில விஷயங்கள் தெளிவு படுத்தலாம்னு வந்தேன்.”
“அவசியமில்லை ஆதவன். மகிழ் மேல் எந்த தவறும் இல்லை.. கொஞ்சம் அவசர பட்டுடாங்க அவ்வளவு தான்.. “ ஷாஷா மற்றும் அவன் தந்தை கூறிய விஷயங்களை இருவரிடமும் கூறினான்.
“ஹப்பா ஒரு வழியா எல்லாம் தெளிவு ஆகிடுச்சு.. பாஸ்.. என் வேலையை ஈஸியாக முடித்து விட்டாங்க ஷாஷா”
“அவளை ஹாஸ்பிட்டலிருந்து நேராக சென்னை கொண்டு போயிட்டோம்.. 2 வருடம் கோமாவில் இருந்தாள். அவள் பிழைக்க வாய்ப்பு மிகவும் குறைவு என டாக்டர் கூட சொன்னார்கள். எப்போதோ நான் செய்த புண்ணியம் அவள் எனக்கு திரும்ப கிடைத்திருக்கிறாள்.  ஒருவேளை இங்கு இருந்திருந்தால் முன்னமே எனக்கு எல்லாம் உண்மையும் தெரிந்திருக்கும். எப்படியிருந்தாலும், மகேஷ் உங்களிடமும் மகிழிடமும் நான் கட்டாயமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அது பத்தாது…”
“அதுரன் அதான் ஒன்னும் நடக்கலையே அப்புறம் என்ன?”
“இல்லை ஆதவன் உங்களுக்கு சில விஷயம்.. “
மகேஷ் குழப்பத்துடன் அதுரனை பார்த்து கொண்டு இருந்தான். 
அப்போது மகிழ் ஆதவனிற்கு அழைக்க, “ மகேஷ் மகிழ் காலையிலிருந்து எனக்கு கூப்பிட்டு கிட்டே இருக்கா நீங்க கொஞ்சம் பேசிட்டு வரீங்களா. நான் நைட் பேசுறேன் சொல்லிடுங்க.. “
“ஓகே ப்ரோ”
அவன் வெளியே சென்றதும்  , “ அதுரன் ராகுல் ஆக்ஸிடன்ட் ஆன காரணம் நீங்க தான் எனக்கு தெரியும் ஆனால் அதை பத்தி பேசி ஒரு யூசும் இல்ல… முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்.. இப்ப அதை பற்றி பேசி இன்னம் பிரச்சனையை பெருசாக்க வேண்டாமே ப்ளீஸ்”
“அதற்காக நான் செய்த தப்பிற்கு தண்டனை வேண்டாமா? 2 உயிர் ஆதவன்”
“பாஸ் கொஞ்சமாவது வில்லன் மாதிரி பேசுங்க.. என்ன தூக்கவே எவ்வளவு ஸ்கெட்ச் போட்டிருப்பீங்க “
முறுவளித்தவன்  “அப்ப எனக்கு உண்மை தெரியாதே”
“ம்ம்ம் அதான் சொல்றேன்.. தெரியாமல் செய்த தவறு.. அதை இப்ப பேசி பயனில்லை அதுரன். அவங்க நிம்மதி இன்னும் தான் கெடும்.. இதை இத்தோடு விடுங்க.. “
மகேஷ் மீண்டும் உள்ளே நுழைந்தான், இவர்கள் பேச்சு தடை பட்டது.
“ என்ன ப்ரோ பேசிட்டீங்களா.. அதுரன் ப்ரோ எல்லாம் க்ளியர் தானே.. “
“பேசியாச்சு மகேஷ்.. அடுத்த வாரம் நிச்சயதார்த்த விழாவிற்கு கண்டிப்பாக ஷாஷாவை கூட்டிட்டு வரனும் அதுரன் பாஸ்”
அதுரன் எதுவும் பேசாமல் இருந்தான் அவனுக்கு குற்ற உணர்ச்சி அதிகமாக இருந்தது. சிறிது நேரம் வேறு விஷயங்கள் பேசி விட்டு இருவரும் கிளம்பினார்கள். 
ஆதவனை பார்க்க தான் சென்னை செல்வதாய் இருந்தான். மனம் குழப்பத்தில் இருந்ததால் மாலை வரை அந்த அறைக்குள்ளே இருந்தவன்,  பின் வீட்டிற்கு சென்றான்.
விதுரனும் சீதாவும் வந்திருந்ததால் வீடே கல கலப்பாக இருந்தது.. அதுரன் வீடு வந்ததும் விதுரனிடமும் சீதாவிடமும்  நலம் விசாரித்தவன்,
“நான் கொஞ்சம் ரெப்ரஷ் ஆகிட்டு வரேன்” என தன் அறைக்கு சென்றான்.  அவன் பின்  ஷாஷாவும் சென்றாள்.
“மாமு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க”
“சொல்றேன் அம்மு.. நாம அடுத்த வாரமே சென்னை போக போறோம்.. அதுக்கு முன்னாடி நம்ம கல்யாணம் நடக்கனும்”
“ஏன் இவ்வளவு அவசரம்”
“அவசியமா தான்.. இன்னைக்கு ஆதவனை பார்த்தேன்”
“யார் அது?”
“மகிழை கட்டிக்க போகிறவர்”
“மகிழுக்கு கல்யாணமா.. சூப்பர் .. எனக்கு அவ கிட்ட பேசனும் பார்க்கனும் போல இருக்கு”
“ம்ம்ம் அதுக்கு தான் நாம அங்க தான் செட்டில் ஆக போறோம். கூடிய சீக்கிரம் இங்கிருந்து போகனும்”
“மாமா மேல கோவமா?”
“ம்ம் என் மேலையும் கோவம் தான் ஆளால் அடிப்படை அப்பா செய்த தப்பு தான் என்ன அப்படி செய்ய வச்சிருக்கு.. ஏற்கனவே நான் ரொம்ப குழப்பத்தில் இருக்கேன். இங்க இருந்தா எங்க அப்பாவை பார்க்கும் போதெல்லாம் அவர் செய்ததும் கூடவே நான் செஞ்ச பாவமும் தான் நியாபகம் வரும். அது எல்லாருக்கும் தொல்லையா அமையும் அதற்கு நாம தனியா போகிறது பெட்டர்”
“அப்படி என்ன பாவம் தான் நீங்க செய்தீங்க? சொன்ன மனசு ஆருமில்ல?”
“இல்லை ஷாஷா.. இந்த பேச்சை இதோட விடு.. ஒன்னு மட்டும் வேண்டிக்க  என் மாமு செய்த பாவதிற்கு அவருக்கு மட்டும் தண்டனை குடு கூட இருக்கிறவங்களை ஏதும் பண்ணிடாதேனு”
“மாமு இப்படி எல்லாம் பேசாதிங்க”
“சரி நீ போ.. நான் வரேன்.. நைட் எல்லார் கிட்டையும் பேசனும்”
“சரி மாமு”
ஷாஷா கீழே வந்ததும், 
“ என்ன ஷாஷா மேடம் அதுரன் அத்தான் வந்ததும் முகம் அப்படியே பிரகாசிக்குதே.. அவ்வளவு லவ்ஸா?”
“உன்ன விட கம்மி தான் டி “ என் இந்திரா அவள் காலை வாரினார்.
“அத்தை… “
“சரி சரி வாங்க டின்னர் ரெடி பண்ணுற வேலையை பார்க்கலாம். ரொம்ப நாள் கழிச்சு வீட்டில் எல்லாரும் இருப்பது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்குது”
இவர்கள் இங்கே பேசி சிரித்து கொண்டு சமையலை கவனிக்க அங்கு அதுரன் விதுரனிடம் நடந்த சிலவற்றை மட்டும் கூறிவிட்டு அவன் சென்னையில் உள்ள கிளைகளை பார்த்து கொள்ள அவன் விருப்பத்தை கேட்டான்.
“டேய் அதுரா நமக்குள் என்னடா.. அடிக்கடி யாரவது அங்கு போய் பார்த்து கொள்வது சிரமமாக தான் இருக்கும். நீ வேற இத்தனை நாளா ஹாஸ்பிட்டலே கதினு இருந்தியா வேலை பளு தாங்கள டா.. நீ அங்க போறதுக்கு எனக்கு ஒரே ஒரு கண்டிஷன் தான் இருக்கு..”
“என்ன சொல்லுடா?”
“15 நாள் ஒரு தடவை நீ ஷாஷாவுடன் இங்க வந்து 2 நாள் இருக்கனும்.. அவ்வளவு தான் “
“சரி டா விதுரா.. அப்ப எல்லார் கிட்டயும் நான் பேசுறேன்”
இருவரும் புன்னகை முகத்துடன் வெளியே வந்ததும் இந்திரா, 
“என்ன டா விஷயம் 2 பேரும் இழிச்சுகிட்டு வரீங்க?”
“மா அதுரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனுமாம்.. அதுவும் அடுத்த வாரமே”
“என்ன டா அவ்வளவு அவசரம்.. நாங்க பர்சேஸ் பண்ணவே நாள் பத்தாதே”
“அம்மா ப்ளீஸ்.. இவ்வளவு நாள் கஷ்ட பட்டுடாங்க.. அவன் இஷ்டதுக்கே பண்ணுங்க.. இப்போதைக்கு நெருங்கிய சொந்தம் பந்ததிற்கு மட்டும் சொல்லலாம் பிறகு ஒரு மாதம் கழித்து ரிசப்ஷன் மாதிரி வைத்து எல்லாருக்கும் அழைக்கலாம்”
“அப்பா கிட்ட கேட்கனும் டா.. “
“அம்மா கல்யாணம் முடிந்ததும் நான் சென்னையிலுள்ள கிளைகளை பார்த்துக்கிறேன். நானும் ஷாஷாவும் அங்க தங்கிக்குவோம்”
“என்னமோ இத்தனை நாள் எங்க கூடவே இருந்த மாதிரி பேச்சை பாரு.. போடா எல்லாம் எங்களுக்கு தெரியும்.. அப்பா கிட்ட பேசிட்டு முடிவெடுக்கலாம்.. இப்ப சாப்பிட வாங்க”
அனைவரும் சேர்ந்து அடுத்த முகூர்த்ததில் கல்யாணம் செய்வதாய் முடிவு செய்தார்கள். அதே தினத்தில் தான் ஆதவனிற்கும் மகிழிற்கும் நிச்சயம் நடக்க உள்ளது.
****************************************************************** 
 ஆதவன் அன்றே கிளம்பி சென்னைக்கு வந்து விட்டான். மகிழிடம் நடந்ததை வரும் வழியிலே கூறியிருந்ததால் அவளும் மகிழ்ச்சியுடன் காணபட்டாள். நாளை நிச்சய புடவை எடுப்பதாக முடிவு செய்ய பட்டிருந்தது.
இரவு உணவை முடித்து கொண்டு தன் அறைக்கு வந்ததும் மகிழிற்கு அழைத்தான்.
“ஆது”
“பச்சை கிளி என்ன பண்ணுது?”
“சும்மா தான்… ஷாஷாவை பார்க்கனும் போல் இருக்கு”
“ம்ம்ம் பார்க்கலாம் மேடம் கூடிய சீக்கிரம்”
“ம்ம்ம் ரொம்ப தேங்க்ஸ் ஆது.. நீங்க கிடைச்சதுக்கு நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கனும்”
“அதை விடு மகி நாளைக்கு சாரி வாங்க வரும் போது லிப்ஸ்டிக் எல்லாம் போட்டுட்டு வராத சரியா  ?”
“போங்க ஆது”
“பேபி ஐ அம் சீரியஸ்”
“சரி.. “
“ம்ம்ம்ம்ம்ம்ம்”
“நான் ஆபிஸ் போயிட்டு தான் வருவேன்.. நீ முன்னடியே நல்ல கலரில் பார்த்து எடு சரியா?”
“ம்ம்ம் முடிஞ்சா சீக்கிரம் வாங்க ஆது”
“சரி கிளி”
“நாளைக்கு பார்க்கலாம் ஆது.. குட் நைட்”
“குட் பேபி … பை”
  • தொடரும்

Advertisement