Advertisement

ஷாஷா பலமுறை அழைத்தும் மகிழ் பேசவில்லை. அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதே நேரம் அதுரன் மெஸேஜிற்கும் ஷாஷா பதில் அனுப்பாமல் இருந்தாள். 2 நாட்களில் பரிட்சை வேறு இருவராலும் படிக்க முடியவில்லை. ஷாஷா அன்று தூங்க வெகு நேரம் ஆகியதால் காலை 10 மணி ஆகியும் இன்னும் விழிக்கவில்லை. அவள் போன் சினுங்கியதில் எழுந்தவள் அழைத்தவன் பேரை பார்த்ததும் வைத்து விட்டாள். அதுரன் விடுவதாயில்லை மீண்டும் மீண்டும் அழைத்து கொண்டே இருந்தான். 
கடைசியில் போனை எடுத்தவள்,” என்ன வேண்டும் உங்களுக்கு?”
“அம்மு வெரி சாரிடி நேத்து நான் நடந்து கிட்டது தப்பு தான்”
“அது மட்டும் தான் தப்பா?”
“ சரி சரி ப்ளீஸ் கொஞ்சம் கீழே வாயேன் “
“முடியாது “
“ப்ளீஸ் டி 10 நிமிஷம்”
“உங்களால் மகிழ் என் கிட்ட பேச மாட்டேங்கிறாள்”
“சந்தோஷம்”
“என்னது ?”
“ஒன்னுமில்லமா.. நான் சமாதானம் செய்கிறேன் முதலில் கீழே வா”
காரில் அமர்ந்த படியே பேசியதால் அதை கேட்டு கொண்டிருந்த இந்திரா “என்னடா சொல்றா ஷாஷா ?”
“வரா மா”
“உனக்கு ஏன் மகிழை பிடிக்கவில்லை? “
“எப்ப பாரு எங்க நடுவில் வரா மா.. வெளியே போனால் சீக்கிரம் வரனுமாம் என்னிடம் எதுவும் வாங்க கூடாதாம் அது இதுனு ஏக பட்ட கண்டிஷன் போட்டு வைக்கிறாள், இவளும் அவள் சொல்லுவதை தான் கேட்கிறாள்.. அதான் அவ பேரை கேட்டாலே கோவம் வருது”
“சரி டா விடு”
அதுரன் தான் என்று முகம் கழுவிட்டு இரவு உடையில் கீழே வந்து விட்டாள் ஷாஷா.. அதுரன் கார் அருகே வந்ததும் அவனது அன்னையும் வந்தது தெரிய, கூச்சமாக உணர்ந்தாள்.. காரை விட்டு இறங்கிய இருவரும்  ஷாஷாவின் அருகே வந்தார்கள்.
இந்திரா “ஷாஷா என்ன கோவம் வந்தாலும் நாலு அடி போடு இவனை இல்லை கோவை சரளா மாதிரி பறந்து பறந்து கூட அடி நான் எதுவும் கேட்க மாட்டேன்.. ஆனால் பேசாமல் மட்டும் இருந்திடாத மா.. என்ன தூங்க கூட விடலை இவன் ஒரே தொல்லை பண்ணிட்டான்”
“சாரி அத்தை”
“உன் மேல எதுவும் தப்பில்ல மா.. நான் வளர்த்து வச்சிருக்க ரெண்டும் அப்படி தான்.. “
“டேய் ஏதாவது பேசேன் டா.. என்னமோ உனக்கு இதுல சம்பந்தம் இல்லாத மாதிரி நிற்கிற.. “
“அம்மு ரொம்ப சாரி ப்ளீஸ் பேசாமல் இருக்காதே”
என்ன பதில் கூறுவது என தெரியாத ஷாஷா “ம்ம்ம் “ என கூறினாள்.
இந்திரா , “ சரிமா உடம்பை பார்த்துக்க.. நல்லா எக்ஸாம் எழுது.. நான் அப்புறம் ஒரு நாள் வந்து தனியா பார்க்கிறேன் இந்த தடியன் தொல்லை இல்லாமல்.. டேய் சீக்கிரம் பேசிட்டு வந்து சேர் டா.. நான் போய் காரில் உட்கார்ந்திருக்கேன்”
அவர் சென்றதும் “ சாரி டி அம்மு.. மகிழை உன் கூட நான் பேச வைக்கிறேன்.. உன் நல்லதிற்காக தான் அவள் சொல்றானு புரியுது பட் என் கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியலை “
“அதுக்காக ஏன் அத்தையை தொல்லை பண்றீங்க?”
“பின்ன உன்னை எப்படி மலை இறக்கிறது “
“ம்ம்ம்ம்ம்” கோபமாக முறைத்தாள்.
“சரி சரி ரொம்ப பாசமா பார்க்காத நான் கிளம்புறேன்..  நீ சாப்பிட்டு நல்லா படி.. நீ எக்ஸாம் முடிச்சு வெளியே வரும் போது நான் வெயிட் பண்ணுவேன்.. “
“ம்ம்ம்ம் “
“என்ன ம்ம்ம் கோவம் போச்சா இல்லையா?”
“ம்ம்ம் போகலை “ 
“சரி அப்ப நாளைக்கு என் பாட்டியை கூட்டிட்டு வரேன் சமாதானம் படுத்த”
“ஐயோ வேண்டாம்.. கோபம் எல்லாம் போச்சு”
“ம்ம்ம் அது.. பாய் அம்மு .. எதையும் மனதில் போட்டு குழப்பிக்காத நான் சரி பண்றேன் சரியா?”
“ம்ம்ம் சரி மாமு”
இவள் மாமு என அழைத்ததும் கொஞ்சம் நிம்மதி அடைந்தான் அதுரன்.. அவள் ஹாஸ்டல் சென்றதும் தன் அன்னையுடன் வீடு வந்து சேர்ந்தான்.
******************************************************************* 
அடுத்த எக்ஸாம் வரும் வரையிலும் மகிழும் ஷாஷாவுடன் பேசவில்லை. காலை மகிழிற்காக ஷாஷா காத்திருந்தாள் ஆனால் மகிழோ கண்டு கொள்ளாமல் தேர்வறை உள்ளே நுழைந்தாள். சரி தேர்வு முடிந்ததும் பார்த்து கொள்ளலாம் என நினைத்து இவளும் உள்ளே சென்றாள். தேர்வு முடிந்ததும் வெளியே வந்த மகிழ் ஷாஷா தன்னை அழைப்பது தெரிந்தும் காதில் விழாதது போல் சென்றுவிட்டாள். அவள் பின்ன ஷாஷாவும் போனாள்.. கல்லூரியின் வெளியே வந்த மகிழ் , தனக்காக காத்து கொண்டிருந்த ராகுலின் வண்டியில் ஏறி சென்று விட்டாள். 
அதுரன் அப்போது தான் வந்தான்.. ஷாஷா  அருகே வந்ததும், “அம்மு என்ன சீக்கிரம் வெளியே வந்துட்ட ? “
“மகிழ் கிளம்பியதால் நானும் சீக்கிரம் வந்தேன் ஆனால் அவ என்ன பார்க்காமலே போயிட்டா “ கண்களில் கண்ணீர் குலம் கட்டி நின்றது.
“அம்மு வா காரில் ஏறு அப்புறம் பேசலாம்” என கூறினான்.
“நான் ஏன் வரனும்.. எல்லாம் உங்களால் தான்.. அவள் என் கிட்ட பேசாமல் போயிட்டா.. இந்த 2 வருஷமா என்ன பத்திரமா பார்த்துகிட்ட அவளை நீங்க 2 மாதத்தில் பிரிச்சிட்டீங்க.. நான் உங்க கூட வர மாட்டேன்.. “ அழுது கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.
“அம்மு நான் அவள் கிட்ட பேசுறேன். ப்ளீஸ் இப்ப வா என் கூட..” அவள் மறுக்கும் முன் அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு தன் காரில் ஏற்றினான்.
“அம்மு.. இந்த எக்ஸாம் எல்லாம் முடியட்டும் நானே ரெண்டு பேரையும் பேச வைக்கிறேன். நீ முதலில் படி”
ஷாஷா வாய் திறந்து பேசவில்லை.. தனது விடுதி வந்ததும் எதுவும் சொல்லாது விடு விடுவென உள்ளே சென்று விட்டாள்.. 
ஒரு பெருமூச்சுடன் தன் காரை எடுத்து கொண்டு கிளம்பினான் அதுரன். மகிழும் ஷாஷாவிடம் பேசவில்லை அதனால் ஷாஷா அதுரனிடம் பேசவில்லை. இன்று கடைசி தேர்வு நாள் இதன் பிறகு பார்த்து கொள்ள முடியுமா தெரியவில்லை. எப்படியாவது இன்று மகிழிடம் பேச வேண்டும் என்ற முடிவுடன் காத்திருந்தாள் ஷாஷா.
மகிழ் வந்ததும் ஷாஷா, “ மகிழ் நில்லுடி.. உண்மையில் என்ன தோழியா நினைக்கிறனா பேசு இல்லாட்டி நீ போ..”
மகிழ் அமைதியாக நின்றாள். ஷாஷா அதுரன் சொன்ன அனைத்தையும் கூறினாள். “நான் அவரிடம் சரியா பேசவது கிடையாது ஆனால் எல்லா எக்ஸாமும் அவர் தான் கொண்டு வந்து விடுறார் கூட்டிட்டு போறார். நீ பழகினால் அவரை பத்தி இப்படி சொல்ல மாட்ட”
“உன் கண்ணுக்கு சரியா படுறது என் கண்ணுக்கு தப்பா படுது டி .. உன் மேல கோவம் எல்லாம்  இல்லை.. ரொம்ப வருத்தம்.. உன் வாழ்க்கையை பத்தி நினைத்தால் எனக்கு பயமா இருக்கு டி”
“என்ன டி சொல்லுற? “
“நான் அதுரன வேறு ஒரு பொண்ணோட பார்த்தேன் டி.. 2 வாரமாக அதுவும் அவர்கள் நண்பர்கள் போல் தெரியவில்லை“
“என்னடி சொல்லுற நீ வேற யாரையாவது பார்த்திருப்ப.”
“நீ அப்படி சொல்லுவனு தெரியும் டி.. இந்த போட்டாவை பாரு” 
அதில் விதுரனும் சீதாவும் கட்டி கொண்டு இருந்தார்கள். ஆனால் இவர்களுக்கு அதுரனை மட்டும் தானே தெரியும்.
 இதெல்லாம் உன் கிட்ட சொல்ல பயமா இருந்தது.. இதையெல்லாம் தாங்கிக்க உனக்கு ஷக்தி இருக்கானு தெரியலை” 
“என் மாமு அப்படிலாம் இருக்க மாட்டாங்க டி.. இதில் ஏதோ குழப்பம் இருக்கு”
“எனக்கு தெரியும் டி நீ நம்ப மாட்டேனு அதான் உன் கிட்ட சொல்லவும் முடியலை சொல்லாமல் இருக்கவும் முடியலை.. உனக்கு உண்மை தெரியும் போது எனக்கு போன் பண்ணு.” மகிழ் அவளை குழப்பி விட்டு சென்று விட்டாள்.
ஷாஷா வெகு நேரம் காத்திருந்தும் அதுரன் அழைக்க வரவில்லை.. அது வேறு பயமாக இருந்தது.. ஒரு வேளை மகிழ் சொல்லுவது உண்மையாக இருக்குமோ.. அதனால் வரவில்லையோ .. 
******************************************************************* 
இங்கு அதுரனோ தன் தந்தையிடம் மாட்டி கொண்டு முழித்தான்.. இன்னும் 5 நாட்களில் விதுரனின் நிச்சயம் இருக்க இன்று தன் காதலை பற்றி தந்தையிடம் கூறி விட்டான்.
“யார் என்னனு தெரியாத பொண்ணு என் வீட்டு மருமகளா? இது நடக்காது அதுரா.. “
“எனக்கு அவளை தான் பிடிச்சிருக்கு பா”
“எனக்கு பிடிக்கலை.. அவள் பிறப்பு.. ”
“அப்பா அவளை பத்து ஒரு வார்த்தை தப்பா பேசாதிங்க”
“ஓஓ என்னடா பண்ணுவ?”
இவர்கள் ஹோட்டலில் வாக்கு வாதம் பண்ணிகொண்டிருக்க , புயலென உள்ளே நுழைந்தாள் ஷாஷா..
“மாமு இதற்கு என்ன அர்த்தம் மாமு யார் இந்த பொண்ணு”
விதுரன் மற்றும் சீதாவின் போட்டோவை காட்டி கத்தி கொண்டிருந்தாள். எங்கள் இருவரையும் ஒரே நேரத்தில் காட்டி அவளை ஆச்சரிய பட வைக்க வேண்டும் என நினைத்து அவன் விதரனை பத்தி சொல்லாமல் விட்டது அவனுக்கே பெரிய ஆப்பாக இருந்தது.. 
“அம்மு இதை பத்தி விளக்கமா நான் அப்புறமா சொல்றேன்.. இப்ப போ ஒரு முக்கியமான விஷயம் பேசி கிட்டு இருக்கேன்” அவன் தந்தை ஷாஷாவை காய படுத்தி விடுவாறோ என்ற எண்ணத்தில் தான் இப்படி சொன்னான்.
“ஓ என்ன விட முக்கியமானது வேற இருக்கா?”
“ஷாஷா இப்ப நீ போறியா இல்லையா?”
அவள் அழுது கொண்டே செல்வதை பார்த்த அதுரனின் தந்தை இந்த சந்தர்பத்தை உபையோகிக்க நினைத்தார்.
“அதுரா இதெல்லாம் நடக்கும் என கனவு கூட காணாதே” என கூறி விட்டு வெளியே சென்றார். வெளியே வந்து ஷாஷாவை அழைத்தார்.
“உன்னுடன் கொஞ்சம் பேசனும் வா மா”
ஷாஷாவின் குழப்பத்தை பார்த்தவர் “ நான் அதுரனின் தந்தை”
அவளை அழைத்து கொண்டு மேலே 6ஆம் மாடிக்கு தன் அறைக்கு சென்றார். 
“இங்க பாருமா உனக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லு நான் குடுத்துடுறேன்.. என் பையனை விட்டு போய் விடு என் குடும்பம் கவுரவம் அந்தஸ்து ரொம்ப முக்கியம்.. பணக்காரன் வீட்டு பையனை புடிச்சு செட்டில் ஆகுற கேவலமான எண்ணம் எல்லாம் என் கிட்ட பலிக்காது.. சீதா மாதிரி நல்ல குடும்பத்து பெண் மட்டுமே என் வீட்டிற்கு மருமகளாக வர முடியும் நீ என்ன பிறவியோ, எப்படி பிறந்தாயோ யாருக்கு தெரியும்.. “ இன்னும் என்ன விஷ வார்த்தைகளை கக்கியிருப்பாரோ… ஷாஷா இவற்றை எல்லாம் கேட்டு கை எடுத்து கும்பிட்டவள், 
“எனக்கு எதுவும் வேண்டாம் நான் போகிறேன்” என அழுது கொண்டே வெளியில் வந்தாள்.
வாழ்க்கை இருட்டானது போல் உணர்ந்தாள் ஷாஷா. இவ்வளவு கேவலமாக பேசும் அவர் தன்னை ஏற்று கொள்ளவில்லை அதனால் அதுரனும் தந்தை பேச்சை கேட்டு அந்த பெண்ணை கல்யாணம் செய்ய ஒத்து கொண்டு விட்டான் என நினைத்த ஷாஷா துவண்டு விட்டாள். அதுரன் அவள் தேர்வின் காரணமாக சரியா பேசாமல் இருக்க, இவள் தன்னை தவிர்க்க அவ்வாறு நடந்திருக்கிறான் என முடிவு செய்தாள். அதுரன் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியவில்லை அவளால். செத்து விடலாம் என தோன்றியது அவளுக்கு..   வராண்டா  மாதிரி சிறிய இடம் இருந்தது அதன் அருகே கீழே செல்லும் படிகட்டுகள் இருந்தன. ஷாஷா அங்கு செல்லும் முன் பைத்தியக்கார எண்ணம் தோன்றியது.. அந்த வராண்டா சுவரில் ஏறியவள், கீழே குதித்து விட்டாள்.
அதுரன் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான். 10 நிமிஷம் அமர்ந்திருந்தான் சரி ஷாஷாவை சமாதானம் செய்யலாம் என கீழே தன் வண்டியை எடுக்க சென்றான். அப்போது ஆறாவது மாடியிலிருந்து ஷாஷா கீழே பார்க் செய்திருந்த காரில் விழுந்து பிறகு கீழே விழுந்ததால் தலையில் பலத்த அடி பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தாள்.
அதுரன் “அம்மு……..” என அலறியபடி அவள் அருகே ஓடினான்.
****************************************************************** 
“என்ன அப்பா தான் அழைத்து சென்றாரா?” அதிர்ச்சியாக கேட்டான் அதுரன். 
“ம்ம் ஆமாம்” 
“ஐயோ நான் நிறைய தப்பு பண்ணிட்டேன் ஷாஷா.. மன்னிக்க முடியாத தப்பு.. மகிழ் தான் உன்னை குழப்பி இப்படி முடிவு எடுக்க காரணம் என்று தப்பா நினைத்து விட்டேன் உன் போனை என் ரூமில் வச்சிட்டு போயிட்ட.. அடுத்த நாள் அதில் மகிழ் அனுப்பிய போட்டோ மெஸேஜெல்லாம்  பார்த்திட்டு அவள் மேல என் மொத்த கோவத்தையும் காட்டிருக்கேன்” என புலம்பிவிட்டு தன் தந்தையை காண சென்றான்.
****************************************************************** 
அனைத்தும் ஆதவிடம் கூறிய மகிழ், “ கடைசி தேர்வு நாள் பிறகு நான் ஷாஷாவை பார்க்கவில்லை ஆது.. 2 நாள் மெஸேஜிற்கு பதில இல்லை.. கால் செய்தாலும் அட்டன் செய்யவில்லை அவள் ஹாஸ்டல் போய் பார்த்தேன் அவள் 2 நாளாக ஹாஸ்டல் வரவில்லை என சொன்னார்கள்.. அதுரன் மீது எனக்கு பயங்கர ஆத்திரம் வந்தது, அவன் ஹோட்டலுக்கு சென்று விசாரித்தால் அவருக்கு வேண்டியவர் யாரோ அடிபட்டு விட்டதால் 2 நாளாக அவர் மருத்துவமனையில் இருப்பதாக கேள்வி பட்டி ஒரு வேளை ஷாஷாவாக இருக்குமோ என நினைத்து ஓடினேன்.
அங்கு சென்ற என்னை ஷாஷாவை பார்க்க விட வில்லை அவன்.. 
“எங்க வந்த இன்னும் கொஞ்ச நஞ்ச உயிர் இருப்பதையும் எடுக்க வந்தாயா? எதையுமே யோசிக்கிர அறிவு இல்லையா உனக்கு.. உன் ப்ரண்டுக்கு நான் துரோகம் பண்ணுற மாதிரி தெரிந்தால் பார்த்த அப்பவே வந்து என் சட்டையை பிடித்து கேட்டிருந்தால் உனக்கு உண்மை தெரிந்திருக்கும்.. நீ பார்த்தது என் கூட பிறந்தவன் நான் இல்லை.. அவன் நிச்சய விழாவிற்கு அழைத்து சென்று ஷாஷாவை எல்லாருக்கும் அறிமுக படுத்த நினைத்தேன். எல்லாத்தையும் உன் முந்திரி கொட்டை தனத்தால் கெடுத்து விட்டாய்.. உன்னை ஏதாவது செய்யும் முன் இங்கிருந்து ஓடிவிடு..” 
மகிழை பேச விட வில்லை அவன் அதனால் இவள் வேறு வழியில்லாமல் திரும்பி சென்றாள்.
ஆதவன் “அதன் பிறகு நீ அவளை பார்க்கவில்லையா?”
“இல்லை, அடுத்த நாளே என் அம்மாவும் ராகுலும் விபத்தில் தவறிட்டாங்க.. நான் கோவை அதன் பிறகு செல்லவில்லை, ஷாஷாவின் எண் எடுக்கவில்லை.. “
“ம்ம்ம்ம்ம்”
“ஆது என் மேல் கோவமா? நான்..”
“ஷ்ஷ்ஷ் மகி சில சமயம் நாம் நல்லது என நினைத்து செய்வது கூட தப்பாக ஆகிவிடும். கோவம் எல்லாம் இல்லை.. சரி விடு நீ ரெஸ்ட் எடு நான் பார்துக்கிறேன். “
“சரி ஆது”
“பை கிளி”
அதுரனை காண கோவை செல்ல வேண்டும் என முடிவெடுத்தான் ஆதவன்.
  • தொடரும்..

Advertisement