Advertisement

அதுரனும் ஷாஷாவும் தன் காதல் பயிரை நன்றாக வளர்த்தனர். இன்று விடுமுறை நாள்.. தன் முதல் சம்பளத்தை நேற்று வாங்கியிருந்தாள் ஷாஷா புதிய போன் வாங்குவதற்காக அதுரனிடம் வெளியே செல்ல வேண்டும் என கூறியிருந்தாள். காலை 10 மணிக்கு அவன் வருகைக்காக காத்திருந்தாள். விடுதி வெளியிலிருந்து அதுரன் போன் செய்தான்.
“அம்மு நான் வந்துட்டேன் ” 
“வரேன் மாமு”
கீழே வந்த ஷாஷா, “ஐயோ வண்டியா”
“அம்மு நீ வண்டியில் வர பழகனும் அதற்காக தான் அடிக்கடி எடுத்து வரேன்.. ரொம்ப பயமா இருந்தா என்ன இருக்கி கட்டிக்கோ பயம் போயிடும்”
“ஐ கல்யாணதுக்கு முன்னாடி நோ டச்சிங் டச்சிங் மகிழ் சொல்லியிருக்கா “
“போடி எப்ப பாரு மகிழ் அதை சொன்னா இதை சொன்னானு அவள் புராணமே பாடுற”
“அவளும் இதையே தான் சொல்லுறாள் எப்ப பாரு மாமு மாமுனு பேசுறேனம்.”
“சரி ஏறு”
கடை வந்ததும் அவள் பத்தாயிரம் ரூபாய் விலையில் ஒரு மொபைல் வாங்கியவர்கள் அருகிலுள்ள தியட்டருக்கு படம் பார்க்க சென்றார்கள்.
“அம்மு படம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கு.. ஏதாவது சாப்பிடலாமா?”
“ம்ம்ம்ம் ஐஸ்க்ரீம் சப்பிடலாமா மாமு ப்ளீஸ்”
“அதுக்கு முன்னடி ஒரு செல்பி “ என்று தன் போனை எடுத்து போட்டோ எடுக்க ஆரம்பித்தாள் ஆனால் முடிக்கவில்லை.. “மாமு சிரி, மாமு திரும்பு, மாமு என்ன பாரு.. மாமு மாமு…. “
“அடியேய்.. போதும் டி நிறுத்து.. “
“சரி சரி போனா போகுதுனு விடுறேன்”
ஐஸ்க்ரீம் சாப்பிடும் போது அவன் அவளை தன் ஐ போனில் வித விதமாக போட்டோ எடுத்தான். அவள் ஐஸ்க்ரீமை சின்ன குழந்தை போல் சாப்பிட்டு கொண்டிருந்தாள். ஏதோ ஒரு படத்திற்கு சென்றவர்கள், ஷாஷா படத்தை பார்க்க.. இவன் ஷாஷாவையே பார்த்து கொண்டு இருந்தான்.
“மாமு என்னை ஏன் பார்க்குற?”
“இப்போதைக்கு பார்க்க தான் முடியும், நீ தான் தடா போட்டு வச்சிருக்கியே”
“அது வந்து மாமு.. “
“போதும் உன் விளக்கம்.. ப்ளீஸ்.. நீ படத்தையே பாரு”
“கோவமா?”
“ஆமாம் என்ன பண்ண போற?”
“போன போகுது கிளம்பும் போது ஒன்னு தரலாம்னு இருந்தேன், இப்படி உம்முனு இருந்தா ஒன்னும் கிடையாது.. ஓடி போ.. “
“அம்மு குட்டி போம்போது குடுக்கிறத இப்ப குடுக்கிறது”
“முடியாது”
“போடி”
அவன் எதிர்பார்க்காத போது அவன் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு யாரேனும் பார்த்து விடுவார்கள் என்ற பயத்தில் வேகமாக திரும்பிக் கொண்டாள்.
“இப்ப என்னமா பண்ணுன..”
“ம்ம்ம் தெரியலயா ?”
“இதை தான் போகும் போது தரேன்னு சீன் போட்டியா?”
“மாமு ரொம்ப கின்டல் பண்ணினா அடுத்த தடவ இதுவும் கிடைக்காது”
“அம்மு சாரிடா செல்லகுட்டி” சரண்டர் ஆகிட்டான்..
இரவு வரை நன்றாக ஊர் சுற்றியவர்கள் , 8 மணி அளவில் ஹாஸ்டல் வந்து சேர்ந்தார்கள். 
“அம்மு இன்னும் எத்தனை நாள் அங்க வேலை பார்க்கனும்?”
“இன்னம் 3 வாரம் அப்புறம் சமஸ்டர் எக்ஸாம்… அது முடிஞ்ச அடுத்த மாதமே ஸ்கூலில் வேலைக்கு சேர்ந்திடுவேன்.”
“சரி எக்ஸாம் முடிஞ்சதும் சொல்லு நம்மை பத்தி வீட்டில் சொல்லனும்”
“சரி மாமு”
“என்ன குறல் உள்ள போகுது உன்னை இப்படி தனியா தங்க வைக்க எனக்கு இஷ்டமில்லை . என் கூடவே நீ இருக்கனும்.. அதனால் தான் சொல்றேன் சரியா?”
“ம்ம் சரி.. மாமு நம்ம போட்டோவை மகிழ் கேட்டா அனுப்பிகிட்டா?”
“ம்ம்ம் சரி.. 1 மட்டும் அநுப்பு போதும்.. “ என்னமோ அவனுக்கு மகிழை முதலிலிருந்தே பிடிக்கவில்லை.
வீடு வந்த அதுரனை இந்திராவும் லட்சுமி பாட்டியும் பிடித்து கொண்டார்கள்..
“மருமகளே இவன் ஒன்னும் சரியில்லை பார்த்துக்கோ.. லீவு நாள் வீட்டிலேயே குட்டி போட்ட பூனை போல சுத்துறவன் கொஞ்ச நாளா ஊர் சுத்தறான் “
“டேய் அதுரா என்னடா?”
“அம்மா சும்மா தான் மா “ என்னமோ சொல்லி சமாளித்தான்.. அப்போது உள்ளே வந்த விதுரன் , “டேய் அதுரா ஒரு நிமிஷம் இங்கே வா “ என கூறிவிட்டு தன் அறைக்கு சென்றான்.
தப்பிச்சோம் டா சாமி என அதுரனும் ஓடி விட்டான்.
“என்னடா கூப்பிட்ட?”
“யாருடா அந்த பொண்ணு?”
“எந்த பொண்ணு?”
“நடிக்காதடா நாயே.. இன்னைக்கு நீ போன் தியாட்டருக்கு தான் நானும் போயிருந்தேன் சீதா தான் உன்னை பார்த்துட்டு சொன்னா”
“ஓ தெரிஞ்சிடுச்சா ஆமா சீதா எப்படி இங்க ?”
“ம்ம்ம் எல்லா வீக்கின்டும் அவ இங்க வருவா இல்லை நான் போவேன் அங்க.. நீ பேச்சை மாத்தாதே உண்மையை சொல்லு”
ஷாஷாவை பத்தி அனைத்தும் அதுரன் கூற, விதுரன் வாயை திறக்கும் முன்
இந்திரா, “அடப்பாவி…”
இருவரும் “அம்மா” என அலறினர்கள்..
“ஏன் டா இப்படி பண்ணிட்ட அப்பாவிற்கு தெரிஞ்சா என்ன சொல்லுவாரோ.. ஏதோ சீதா குடும்பம் நம்ம அந்தஸ்திற்கு தகுந்த மாதிரி இருக்கிறதால அப்பா ஒத்துகிட்டார் இப்படி ஒரு பொண்ணு மனசில் ஆசையை வேற வளர்த்திட்ட என்ன ஆக போகுதோ.. “
“அப்பாவை நான் பார்த்துகிறேன் மா.. உனக்கு சம்மதமா?”
“போட்டோவை காட்டு முதலில்”
இன்று எடுத்த போட்டோவை காட்டினான்..
“அழகா இருக்காளே.. “
“ஆமாமா ரொம்ப அழகு.. “
“ரொம்ப வழியாத டா.. எதுவானாலும் அப்பா சம்மதிச்சா தான் “ என முறுக்கி கொண்டார்.
“சரி சரி அப்படியே பாட்டி கிட்டயும் சொல்லிடு”
“போடா” என கீழே சென்றுவிட்டார் தன் மாமியாரிடம் விஷயத்தை கூற..
“ஷாஷா கிட்ட உண்மையை சொல்ல வேண்டி தானே அதுரா ?”
“இப்ப எதுவும் குழப்ப வேண்டாம் டா எக்ஸாம் முடியட்டும், நம்ம வீட்டிற்கு கூட்டிட்டு வந்து எல்லாம் சொல்லிக்கலாம்”
“சரிடா அப்ப 2 கல்யாணமும் ஒன்னா வைக்கலாமா?”
“இல்லைடா.. உன் கல்யாணம் முதலில் நடக்கட்டும் “
“ம்ம்ம்ம்” 
********************************************************************** 
ஷாஷா, “மகிழ் மாமு போட்டோ அனுப்பியிருக்கேன் பார்த்தயா?”
மகிழ், “ம்ம்ம்ம்ம் நீ சொன்ன மனேஜர் மாதிரிலாம் தெரியலை டி.. ரொம்ப பணக்காரன் மாதிரி தெரியது.. “
“போடி என் மாமு ஏன் பொய் சொல்ல போறாங்க.. அவங்க ரொம்ப நல்லவங்க டி.. எனக்கு எக்ஸாம் முடிந்ததும் அவங்க வீட்டில் பேசி கல்யாணம் பண்ணிக்கலாம் சொன்னாங்க நீ நேரில் பார்த்தால் அப்படி சொல்ல மாட்ட ”
“சரி சரி எப்படியோ நல்ல படியா உனக்கு ஒரு வாழ்க்கை அமைந்தால் போதும் டி”
“சரிங்க பாட்டி”
“போடி குரங்கே”
************************************************************************ 
ஒரு மாதம் கழித்து தேர்வு தொடங்கியதும் ஷாஷாவும் மகிழும் நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்து கொண்டார்கள்.
மகிழ் ,” ஷாஷா ஒழுங்கா படிச்சாயா இல்லை போன் பேசிட்டே இருந்தியா?”
“கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன்.. அது போதும் டி.. ஒரு வேலைக்கு சேர்ந்திட்டால் என் கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும் “
“ம்ம்ம்ம்“
தேர்வு முடிந்து இருவரும் கல்லூரி வெளியே வரும் பொழுது அதுரன் ஷாஷாவிற்காக காத்திருந்தான். அவனை கண்டதும் மகிழிடம் “ மகிழ் மாமு வந்திருக்காங்க பாரு.. வா உன்னை அறிமுக படுத்திறேன்.
“வேண்டாம் டி நான் கிளம்புறேன்”
“வாடி குரங்கே”
மகிழின் கை பிடித்து இழுத்து சென்றவள் முறையாக அறிமுக படுத்தினாள்.
இருவரும் சம்பிரதாயமாக புன்னகைத்தார்கள்.
“எக்ஸாம் எப்படி பண்ணி இருக்கீங்க?”
மகிழ், “நல்லா பண்ணி இருக்கோம்.. சரிடி ஷாஷா நான் கிளம்புறேன்”
அதுரன் “ வாங்க 2 பேரையும் நான் ட்ராப் செய்றேன்”
ஷாஷா “ ஆமா வாடி.. தனியா எப்படி போவ?”
மகிழ் “ பரவாயில்லை டி.. “ அவள் தயக்கத்தை உணர்ந்த ஷாஷாவும் வற்புறுத்தவில்லை..
ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்க்கிறவன் ஆடி கார் வச்சிருப்பானா? இந்த ஷாஷா  இதெல்லாம்  சிந்திக்காமல் பைத்தியமா அவனை நம்புறா அவன் ஷூ , சன் கிளாஸ், ட்ரெஸ் , கார் எல்லாமே காஸ்ட்லியா தான் தெரியுது, மனதளவில் மிகவும் குழம்பினாள்.. மாலை வரை குழப்பி கொண்டிருந்தவள், ஷாஷாவிற்கு அழைத்தாள்.. 
படிக்காமல் மாமுவுடன் இருப்பது தெரிந்தால் மகிழ் திட்டுவாள் அதனால் முதலில் போனை எடுக்கவில்லை. அடுத்த பரிட்சைக்கு இன்னும் 3 நாள் இருப்பதால் இன்று மட்டும் வெளியே வருமாறு அதுரன் கேட்டதால் வந்திருக்கிறாள்.. இருவரும் தங்களது காரில் அமர்ந்து ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தார்கள். மகிழ் திரும்ப அழைக்கவும் மாமுவிடம் ப்ளீஸ் பேசாதிங்க என சைகை காட்டிவிட்டு போனை எடுத்தாள்.
“ஷாஷா எங்க டி இருக்க ?”
“ஹாஸ்டலில் தான்” இவள் பதிலில் முறைத்தான் அதுரன்..
“ஒரு விஷயம் சொல்லனும் டி.. நீ தப்பா எடுத்துப்பியோனு பயமா இருக்கு”
“நமக்குள்ள என்னடி புதுசா.. எதுனாலும் சொல்லு”
“அந்த அதுரன்.. அவ்வளவு நல்லவனா தெரியலை டி”
“ஏன் டி அப்படி சொல்லுற ?” ஷாஷாவின் குறல் உள்ளே சென்றது.. பக்கத்தில் அதுரன் இருப்பதால் அவன் காதில் விழுந்திடுமோ என பதற்றமாகவும் இருந்தது..
“அவர் ரொம்ப பணக்காரர் மாதிரி தெரியுது.. முதலில் அவர் குடும்பம் பத்தி விசாரி . ஏதோ உன் கிட்ட மறைக்கிறார் டி.. எனக்கு பயமா இருக்கு .. உன்ன ஏமாத்திட்டா?” இன்னம் என்ன சொல்லியிருப்பாளோ.. “வில் யூ ஷட் அப்?” என கத்திய அதுரனின் குறலில் அதிர்ந்து நின்றாள் மகிழ்.
“ஆமாம் நான் பணக்காரன் தான்.. அதுக்காக இவளை ஏமாத்திடுவேனு நினைப்பியா.. எங்க 2 பேர் நடுவில் நீ ஏன் குறுக்க குறுக்க வர.. “ என இவன் கோபத்தில் சீர மகிழ் பயத்தில் போனை கட் செய்து சுவிட்ச் ஆப் செய்தாள்.. 
மகிழ் தன் தோழி தன்னிடம் பொய் சொல்லியதை ஏற்க முடியவில்லை.. அதுமட்டுமல்லமல் அதுரன் பற்றி பேசியதை அவனே கேட்க நேர்ந்ததும் அவமானமாக வேறு இருந்தது…
அதுரன் இங்கே ஷாஷாவைடம் குதித்து கொண்டிருந்தான்.. ஷாஷாவின் முகம் மாறியதும் போனை பிடிங்கி ஸ்பீக்கரில் போட்டதால் அனைத்தையும் கேட்க நேர்ந்தது.
“என்ன பத்தி உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா சொல்லு நான் பதில் சொல்றேன் ஆனால் உன் ப்ரண்டுக்குலாம் பதில் சொல்லனுமனு அவசியமில்லை.. அது மாதிரி அந்த ஏவீ ஸ்டார் ஹோட்டல் எங்களோடது தான் எங்க என் கிட்ட பேச மாட்டனு பயத்தில் தான் அங்க வேலை பார்க்கிறேன் பொய் சொன்னேன் அதுக்காக உன்னை விட்டுட்டு போற ஐடியாலாம் இல்லை. “
“எங்க அப்பாவை தவிற வீட்டில் எல்லார்கிட்டையும் உன்னை பத்தி சொல்லிட்டேன்.. சந்தேகம் நா இரு.. “ தன் அன்னைக்கு கால் செய்தவன் “அம்மா உன் மருமக உன் கிட்ட பேசனுமாம்.. “ போனை அவளிடம் குடுத்து பேச சொன்னான்…அவள் தயங்க, அவன் பார்த்த பார்வையில் போனை வாங்கி  “ஹலோ “
“ஷாஷா எப்படிமா இருக்கிற..”
“நல்லா இருக்கிறேன் ஆன்ட்டி”
“ஆன்ட்டியா அத்தைனே கூப்பிடுமா.. உன்ன போட்டோவில் பார்த்தே ரொம்ப பிடிச்சு போச்சு எனக்கு ஆனால் அதரன் அப்பாவை நினைத்து தான் கொஞ்சம் பயம்.. என்ன சொல்வார்னு .. அதுக்காக நீ கவலை படாதே அதுரன் பார்த்துப்பான் எல்லாத்தையும்”
“சரிங்க அத்தை”
“டேய் அதுரா வீட்டிற்கு கூட்டிட்டு வாயேன் டா ஒரு நாள்”
“சரி மா நான் அப்புறமாக பேசுறேன்” போனை வைத்து விட்டான்.
ஷாஷா “ முன்னாடியே ஹோட்டல் உங்களோடதுனு ஏன் சொல்லலை”
“சொன்னா ஓடி போயிருப்ப.. அதான் சொல்லலை.. அந்த வேலைக்கு போக வேண்டாம்னு எவ்வளவு சொல்லியும் கேட்கலை.. போன் கூட உன் சம்பளத்தில் தான் வாங்குவேன்னு வீர வசனம் பேசுன.. எக்ஸாம் முடிந்ததும் வீட்டிற்கு கூட்டிட்டு போய் சர்ப்ரைஸாக சொல்ல நினைச்சேன்.. எல்லாம் உன் தோழி கெடுத்திட்டாள்..”
“அவள் என் மேல் உள்ள அக்கரையில் தான் அப்படி பேசிட்டா.. அவளை தப்பா நினைக்காதிங்க ப்ளீஸ்”
“போடி”
“உங்க மேலையும் தப்பு இருக்கு.. நீங்க முன்னாடியே உண்மையை சொல்லியிருந்தால் அவளுக்கு சந்தேகம் வர வாய்ப்பே இருந்திருக்காது.. “
“சரி மா தாயே இதை இத்தோடு விடு”
“மாமு நான் தான் இப்ப கோவமா இருக்கனும் .. “
“ம்ம் சரி இருந்துக்க”
வேகமாக காரை எடுத்தவன் அவளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பினான்.
  • தொடரும்

Advertisement