Advertisement

எல்லோருக்கும் வணக்கம்!! நாவல் வாசிப்பதில் அதிக ஆர்வமுள்ள நான் , இன்று எனது முதல் நாவலை பதிவிட  இருக்கிறேன். 
நிறை குறைகளை கூறு மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தலைப்பு – சின்னக்கிளி என் செல்லக்கிளி.
நாயகன் – ஆதவன்
நாயகி – மகிழினி
நாகரத்தினம், சரோஜாதேவியின் தவப்புதல்வன் ஆதவன், சென்னையில் உள்ள ஒரு பண்ணாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். 28 வயது நிரம்பிய அழகிய ஆண் மகன். (நம்ம ஜெயம் ரவி போல வச்சிக்கோங்க). திருச்சியை சேர்ந்த நாகரத்தினம் பாங்க் மேநேஜராக பணிபுரிந்து ரிடையர்டு ஆனதும் சென்னையில் வந்து செட்டிலாகிவிட்டார்.
ராம் மற்றும் நீலவேணி தம்பதியற்க்கு 2 பெண் பிள்ளைகள் – மகிழினி , நிலாலினி. நீலவேணி இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் தவரிட, தனது பிள்ளைகளுடன் சென்னை மேடவாக்கம் வந்துவிட்டார். மகிழினி கணித ஆசிரியையாக அருகிலுள்ள பள்ளியில் வேலை பார்க்கிறாள். நிலாலினி இறுதியாண்டு கலை கல்லூரியில் படிக்கிறாள். 
கதையை களம் – ரொமான்டிக் ஸ்டோரி வித் டிவிஸ்ட்ஸ். 
                    

 
காலை 6 மணி அலாரம் அதன் வேலையை செய்ய மெல்ல கண் விழித்தாள் மகிழ்.. தனது காலை கடனை முடித்தவள், சமையலை கவனிக்க சென்றாள். ராம் ஏற்கனவே எழுந்து நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.
“குட் மார்நிங் பா , 5 நிமிஷம் பா காபி போடுறேன்”
“குட் மார்நிங் மா, அவசரமில்ல, பொறுமையாவே செய்மா”
கிச்சன் சென்று பால் காய்ச்சி, ரெண்டு பேருக்கும் காபி கலந்தவள், காலை டிபன்காக பருப்பு குக்கரில் வைத்து விட்டு,  காபி எடுத்துக்கொண்டு ஹாலிற்க்கு வந்தாள்.
ராம்,“மகிழ், என் ப்ரண்டுக்கு தெரிஞ்ச குடும்பம், அவுங்க பையனுக்கு பெண் தேடுறாங்களாம், உன்ன கேட்டான், ஓ.கே சொல்லட்டுமா டா?”
“அப்பா, நிலா காலேஜ் முடிக்கட்டுமே “
“இப்பொவே 26 வயசாச்சுமா, அவ கடைசி வருஷம் வந்தாச்சு, இனியும் நீ காரணம் சொல்லாதே, உங்க அம்மா இருந்தா இந்நேரம் , பேரனோ, பேத்தியோ பார்த்திருப்போம். “
“உங்க விருப்பம் பா..”
மனது சரியில்லை அவளுக்கு… பிறகு எதுவானாலும் நடக்கட்டும் என தன் வேலையை கவனிக்க சென்றாள்.
யோசனையோடே இட்லி, சாம்பார் வைத்தவள், மதியம் தயிர் சாதமும், முட்டைகோஸு பொறியலும் செய்தாள்.
தன் அறைக்கு சென்று , குளித்து, நீல நிற புடவை அணிந்தவள், தன் தந்தையுடன் காலை உணவை முடித்துவிட்டு, தனது பிங்கியில் (ஸ்கூட்டி) பள்ளிக்கு சென்றாள்.
கே.வீ.எஸ் ஸ்கூலில், 6த் “அ” செக்ஷன் க்ளாஸ் டீச்சர், 5,6,7 மாத்ஸ் டீச்சரான மகிழ் வீட்டில் மட்டுமே அமைதி, அம்மாவின் மறைவிற்கு பின் இன்னும் அமைதியாக மாறி விட்டாள். ஆனால் ஸ்கூலில் வேறொரு மகிழை பார்க்கலாம், அனைவரிடமும் அன்பான பேச்சு, தனது தோழி நித்யாவுடன் சேர்ந்து பள்ளியில்அமர்க்களம் தான். 
ஸ்டாப் ரூமில் தன் இடத்தில் அமர்ந்தவள் எதோ சிந்தனையில் இருந்தவளை முதுகில் தட்டி “ என்ன மேடம் கூப்புடறதே காதுல வாங்காம என்ன யோசனை?”
“ம்ச்ச்சு.. ஒன்னூம் இல்லடி.. வீட்ல கல்யாணம் பத்தி அப்பா பேசுநாங்க அதான்… “
“அதுக்கு என்ன இப்போ , ப்ரீயா விடு, எப்படியும் இதெல்லாம் நம்ம லைப்ல நடந்துதா ஆகும், எல்லாம் நல்லதுக்கே, ப்ரேயர்க்கு டைமாச்சு வா ”
ப்ரேயர் முடிந்ததும் அவரவர் கிளாஸிற்க்கு சென்றனர்.
***********************************************************************************************************
காலை 9 மணி, சரோஜாதேவி கத்திக்கொண்டிருந்தார். மணி என்னாச்சு பாருடா, தடிமாடு  மாதிரி தூங்கிட்டேருந்தா நா என்ன பன்ன, நீலாம் என்னத்த வேலைக்குப் போய் என்ன பன்றியோ போ… 
ஆதவன் தூக்க கலக்கத்துடந் “ மா…டெய்லி இப்படி நீ எழுப்பு, அப்போ தா எனக்கு நாள் நல்லாருக்கு…”
“கிளம்பி சாப்பிட வாடா, காலைலயே ஆரம்பிக்காத”
“அடப்போமா வாரேன்”
நம்ம ஆதவ் ஜோவியலானவன்.. நிறைய ப்ரண்ட்ஸ்.. டீம் லீடாக இருந்த போதும், தனது கீழ் வேலை பார்ப்பவர்களை தட்டிக்குடுத்தே காரியம் சாதிக்கும் திறமையானவன். 
சீக்கிரம் கிளம்பி சாப்பிட வந்தவனிடம், “ ஆது.. ஒரு விஷயம் சொல்லனும்பா”
ஆதவ் மைன்ட் வாய்ஸ் என்ன மம்மி பம்முது , எதோ ஆப்பு போலவே… “அம்மா நைட் பேசிக்க்லாம்.. இப்ப நேரமில்ல…”
“ஆது , 2 நிமிஷம் டா..  “
“சொல்லும் சொல்லித் தொலையும்”
“ரொம்ப அலுத்துக்காதடா.. போனாபோகுது வ்யசு 29 ஆகுதேனு பொன்னு பார்த்தா.. “
“ஐயோ மம்மீ.. நீங்க முதல்ல பாருங்க , ஜாதகம் பாருங்க, எல்லாம் ஓகே ணா எனக்கு சொல்லுங்க.. அப்பரம் பார்க்கலாம்.. “ 
“டைமாச்சு.. அந்த அணுகுண்ட(இட்லீ) எடுத்துட்டு வாங்க.. சாப்பிட்டு கிளம்புறேன்..”
“ உன் பொன்டாட்டி சமையல நானு சாப்டதா போறேன்.. அப்ப பார்துக்கறேன்டா உன்ன”
சாப்பிட்டு தன் ஆபிஸ் நோக்கி தனது ராயல் என்பீல்டை கிள்ப்பினான்…
அப்போது தான் தனது வாக்கிங்கை முடித்து வந்த நாகரத்தினம் “ என்ன தேவி அவன் கிளம்பிட்டானா?”
“ம்ம்ம்ம் இப்பொ தா .. வாக்கிங் போனா நேரமே தெரியாதா உங்களுக்கு.. வீட்ல இருக்குறது 3 பேர் ஆனா ஆளுக்கு ஒரு டைம்ல சாப்பிட்றோம்.. மணி 10 ஆச்சே.. நாளைலேந்து கொஞ்சம் சீக்கரமா வாங்க”
“சரிமா.. சரிமா’ (சரன்டர் ஆகிட்டார்)
இருவரும் சாப்பிட அமர்ந்தனர் “ என்னங்க.. ஆது கிட்ட பேசினேன்.. அவன் நம்மல முதல்ல பார்த்துட்டு , ஜாதகம் பொருத்தம் இருந்தா அவன் பார்க்கறானாம்”
“அவன் சொல்ரதும் சரிதா.. என் ப்ரண்டு சதாகிட்ட பேசுறேன்..”
சதாவிற்கு போன் செய்து, பெண்ணின் போட்டோவும் ஜாதகமும் அனுப்புமாரு கேட்டார்”, 
சதா “ சரிடா.. நான் வாங்கி தரேன்.. “
ராம் தன் தனிமையை போக்க, புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். அவரது போன் ஒலித்தது , அதை அட்டன் செய்தார் , “ஹலோ, ராம் நா சதா பேசுறேன் டா “
“சொல்லு சதா”
“நம்ம மகிழ் ஜாதகமும், போட்டோவும் இருக்குமாடா? என் பையன் வீட்ல எல்லாம் மாட்ச் ஆனா அப்புறமா மத்தத பார்க்கலாம் சொல்றாங்க”
“நா குட அதா நினைச்சேன் , நீயும் பையன் வீட்ல டீடெய்ல்ஸ் வாங்கி குடு”
“சரி டா”
இருவரது ஜாதகமும் ஒத்துபோகவே, அடுத்த கட்டத்துக்கு சென்றார்கள் பெற்றோர். ஆதவன் போட்டோவை மகிழிடம் காட்டும்போது, அவள் பார்த்துவிட்டு “உங்களுக்கு ஓகே வா பா? 
“எனக்கு பையன பார்த்தா நல்லவன் மாதிரி தா தெரியுது மா.. ஆனா உன் விருப்பமும் இருக்கனும்.”
“ எனக்கும் ஓகே பா “ அவ்விடத்தை விட்டு எழுந்து சென்றாள்.
நிலா “ எனக்கு காட்டுங்க பா”
போட்டோவை பார்த்தவள், “ மாமா சூப்பர் பா.. அக்காவை பத்தி யோசிக்காதிங்க… அம்மா இறந்ததிலேருந்து இப்டி தா இருக்கா.. சரி ஆகிடுவா”
“ஆதூ.. நீ சொன்ன போலவே செக் பண்ணிட்டேன் பா.. எங்களுக்கு பிடிச்சிருக்கு.. ஜாதகமும் பொருந்துது.. நீ ஒரு தடவ போட்டோ பாத்துட்டா நாங்க அடுத்து பேச வசதியாருக்கும்.
“அம்மா பொன்னுக்கு பிடிச்சிருந்தா அடுத்து தொடரலாமா”
“டேய்… நீ பாக்கலையா?”
“மம்மீ நா நேர்லையே பார்துக்கிறன்”
“என்னங்க இவன்.. “
“விடுமா அவன் நேர்லையே பார்க்கட்டும்.. பொன்னு வீட்ல போன் பன்னா மேற்கொண்டு பேசலாம்”

Advertisement