Advertisement

    புதன் கிழமை காலை 5 மணி அளவில் செந்தாமரை தனது கணவனுடன் அண்ணன் வீட்டிற்கு வந்தார். அவர்களை வரவேற்த்து  சிறிது நேரம் ஓய்வு எடுக்க கூறினார், ராம்.
“பரவாயில்லை  மச்சான், காரில் தானே வந்தோம். நீ போய் ரெஸ்ட் எடு தாமரை.. நாங்க பேசி கிட்டு இருக்கோம்”
“நான் ரெண்டு பேருக்கும் காபி கலந்து குடுத்து விட்டு பிறகு போகிறேன்”
இருவரும் பரஸ்பரம் விசாரித்த பின்,
பாலு, “என்ன மச்சான், மகிழ் கல்யாணத்துக்கு தேவையான நகை பாத்திரம் எடுக்க, மத்த செலவுக்கெல்லாம் பணம் போதுமானதாக இருக்குமா? 
“போதும் மச்சான், அவங்க அம்மா நகையே இருக்கு.. அதை மாத்தி செய்து விடலாம். இன்னும் தேவை பட்டா சேமிப்பில் கொஞ்சம் இருக்கு பார்த்துக்கலாம்”
“எதுவானாலும் என் கிட்ட சொல்லுங்க .. மகிழ் என் பொண்ணு மாதிரி, அவளை எந்த குறையும் யாரும்  சொல்லி விட கூடாது “
“சரிங்க மச்சான்.. மகேஷ் எப்படி இருக்கான்?அவன் வந்திருக்கலாம்.“
“லீவ் இல்லையாம்… சன்டே வருவான்..”
மகிழ் எழுந்து ப்ரெஷாகி வந்தவள்,
“மாமா எப்படி இருக்கிங்க.. அத்தை எங்கே?”
“நல்லா இருக்கேன் மா.. அத்தை ரெஸ்ட் எடுக்கிறாள்..”
“நான் காபி போடுகிறேன்..”
“குடிசாச்சு மா.. “
“மாப்பிள்ளை வீட்டில் 10 மணி போல வருவாங்க.. அத்தை கூட சமையலுக்கு உதவி பண்ணிட்டு சீக்கிரம் ரெடியாகிடுமா”
“சரிங்கப்பா.. நான் போய் நிலாவை பார்க்கிறேன்”
சிறிது நேரம் கழித்து, மூவரும் சேர்ந்து தடபுடலாக காலை உணவை சமைத்தார்கள்.
இன்றே  மாப்பிள்ளை வீடு பார்க்க முடிவு செய்ததால், பெரியவர்கள் மூவரும் தயாராக இருந்தார்கள்.10.15 மணி அளவில் சதாசிவம், தேவி, நாகரத்தினம்  மூவரும் வந்தனர்.
“வாங்க வாங்க.. சதா.. வாடா.. எப்படி இருக்க உன்னை பார்த்து நாளாச்சு”
“இவர் என் தங்கை செந்தாமரை.. மச்சான் பாலு, கோவையில் கார் சேல்ஸ் & சர்விஸ் (sales & service) show room ஷோ ரூம் வச்சிருக்காங்க..”
தேவி “எல்லாரும் மன்னிக்கனும்  ஆதவன் வருவதாய் இருந்தது ஆனால் கொஞ்சம்  ஆபிஸ் வேலை அவசரமாக கிளம்பி விட்டான்.. “
ராம், “அதனால் என்ன மா.. பரவாயில்லை…”
“மகிழ் உன் கிட்ட ரொம்ப சாரி சொல்ல சொன்னான் மா”
“சாரி எல்லாம் சொல்ல வேண்டாம் அத்தை பரவாயில்லை”
தாமரை “எல்லாரும் வாங்க டிபன் ரெடி , சாப்பிட்டு பேசலாம்
நிலா பரிமாற வாம்மா ”
மகிழ் மற்றும் நிலா பரிமாற அனைவரும் உண்டார்கள்.  
நாகரத்தினம் “நல்ல நாள் பார்த்து சீக்கிரம் நிச்சயம் வைக்கலாம்.. கல்யாணம் மட்டும் ஜூன் மாசம் வைக்கலாம், சரி தானே சம்பந்தி?”
“நீங்க நல்ல நாள் பார்த்து சொல்லுங்க.. எங்களுக்கு சம்மதம் எப்ப இருந்தாலும்”
மகிழ் கிடைத்த கேப்பில் ஆதுவிற்கு அழைத்தாள். ஸ்விட்சுடு ஆப் (switched off) என்று வந்தது.. வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும்  சிறிது ஏமாற்றமாகவே இருந்தது மகிழுக்கு.
**************************************************************************
 மகிழ் அவ்வாறு வருந்திக்கொண்டிருக்க,  அவள் எண்ணத்தின் நாயகன் அவனது நண்பன் ரூமில் நன்றாக தூங்கி கொண்டிருந்தான்.
அவன் முதுகில்  ரெண்டு தட்டு தட்டி எழுப்பினான் சதீஷ்.
“ஏன்டா எழுப்புன?”
“இன்னைக்கு ஆபிஸ் வர மாட்டேன் அது இது சொன்ன, இப்ப இங்கே வந்து ஒய்யாரமாக  தூங்குற.. தலையில் கட்டு வேறு என்னடா?”
“ஒன்றுமில்லை மச்சி.. காலையில பூ வாங்க அம்மா கடைக்கு போக சொன்னாங்க.. பூ வாங்கிட்டு திரும்பும் போது  என் வண்டியை ஒருத்தன் இடிச்சுட்டான், ஸ்கிட் ஆகி கீழ விழுந்துட்டேன் டா.. அதான் சின்ன அடி.. இதோட வீட்டுக்கு போன சகுனம் அது இதுனு அம்மா பயப்படு வாங்க.. அதனால்  பொய் சொல்லிட்டு இங்கே வந்துட்டேன், அது மட்டுமில்லை இடித்தவன் தெரிந்து தான் செய்திருக்கான்”
“எப்படி சொல்லுற?”
“திரும்பி பார்த்து நக்கலான சிரிப்பு சிரிச்சு கிட்டு  போனான் “
“ஏன் டா அவனை சும்மாவா விட்ட? பொண்ணை நல்லா விசாரிச்சியா X Y Z எவனாவது இருக்க போகிறான் ?”
“அவள் அப்படி இல்லை மச்சி “
“ரெண்டு நாளில் தெரிஞ்சிடுச்சா?”
“ரெண்டு நாள் இல்ல, 2 வருஷமாக தெரியும், ஆனால் மகி தான் எனக்கு பார்த்திருக்கும்  பொண்ணுனு தெரியாது”
“என்ன மச்சி குழப்புற”
சொல்லுறேன் ..அதுக்கு முன்னாடி ரொம்ப பசிக்குது  வா போய் சாப்பிட்டு வரலாம்”
அருகில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் சதீஷ்
அறைக்கு திரும்பினர்.
“ம்ம்ம் இப்ப சொல்லு “
“ என் கூட ராகுல்னு ஒருத்தன்  படித்தான், ஹாஸ்டலில் என் ரூம் தான். வேலைக்கு போகும் போது கூட நாங்க ரெண்டு பேரும் ஒரே  ரூம் தான், அவனோட மாமா பொண்ணு மகி .. கோயிலில் மகி அப்பாவை பார்க்கும் போது தான் எனக்கு தெரியும் ”
“நான் மகியை பார்த்ததில்லை.. ஆனால் நிறைய தடவை அவளை பற்றி சொல்லியிருக்கான்.. ரொம்ப அமைதி, பொறுப்பானவ, தெரிந்தவர்கள் கிட்ட மட்டும் சகஜமாக பேசுவாள்.. ராகுல் அவளை காதலித்தான் நான் கூட நிறைய தடவை கேட்டிருக்கேன் காதலை அவள் கிட்ட சொல்லிட்டியானு அதற்கு அவன் அவள் படிப்பை முடித்ததும் வீட்டில் சொல்லி ரெண்டு பேருக்கும் கல்யாணம்              பண்ண போவதாக சொன்னான்..”
“என்னடா சொல்லுற”
“ஆமாம் மச்சி”
“அவன் இது விஷயமாக மகி அம்மா கிட்ட பேசினான், அப்போ நானும் கூட இருந்தேன்”
“மகி அம்மா ஜாதகம் பொருத்தம் பார்க்க வேண்டும், அதுவரை மகி கிட்ட சொல்ல வேண்டாம் என கூறியதும், அது விஷயமாக ஊருக்கு போனான். ராகுலும் மகி அம்மாவும் ஒரு வண்டியிலும், ராகுல் அப்பா ஒரு வண்டியிலும் ஜாதகம் பார்க்க  போகும் போது தான் விபத்தில் அவனும், மகி அம்மாவும் இறந்தாங்க.. விஷயம் கேள்வி பட்டு கோவை போனேன் நான் அவன் டெட் பாடியை தான் பார்த்தேன்.. எனக்கு அதுக்கு அப்புறம் அந்த ரூமில் இருக்க முடியலே.. உடனே அப்பாவை இங்கே குடி வர வச்சிட்டேன் .. அப்போ விபத்து என நினைத்தேன்.. இப்ப சந்தேகமாக இருக்குடா ”
“டேய் இப்ப என்ன பண்ண போற”
“இது நிஜமாகவே விபத்தா இல்லை வேறு எதாவதா கண்டு பிடிக்கனும் “
“தேவையில்லாத வேலை பார்க்கிற மச்சி, உனக்கு எதாவது ஆகிற போகுது டா.. “
“ஒன்றும் ஆகாதுடா .. நான் பார்த்துக்கிறேன்…. இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது.. “
“சரி மச்சி ஏதாவது உதவி தேவைப்பட்டால் கூப்பிடு மச்சி”
“சரி சரி.. இந்த கட்டை எடுத்து விட்டு சின்னதா ப்லாஸ்ட்டர் போட்டு விடுடா.. மதியம் பையன் வீடு பார்க்க வருவாங்க.. நான் அங்க போகிறேன்.. “
“ம்ம்ம்.. வண்டி ஓட்டுவாயா .. இல்லை ட்ராப் செய்யட்டுமா?”
“நான் போய்டுவேன் டா.. சின்ன அடிதான் நான் பாலன்ஸ் (balance) பண்ணிட்டேன்.”
கிளம்பும் முன் தன் கைப்பேசியை ஆன் செய்து, மகிக்கு அழைக்கும் முன் அவளே அழைத்து விட்டாள்..
“ஹலோ.. ஆது”
“மகி குட்டி.. என்ன பண்ணுறீங்க…”
“இப்ப தான் எல்லாம் கிளம்பி அங்க வந்து கிட்டு இருப்பார்கள்… ஏன் நீங்க வரலை?”
“சாரிடி அவசரமான வேலை, ப்ரொடஷன் சர்வர் வொர்க் ஆகல  கால் வந்ததும் அவசரமாக போயிட்டேன்.. கண்டிப்பாக நாளை பார்க்க வரேன்”
சதிஷ் அடப்பாவி நல்லா பொய் சொல்ற டா மனதில் நினைத்து கொண்டான்.
சிறிது நேரம் பேசி விட்டு தன் வீட்டுக்கு சென்றான். ஏற்கனவே மகி வீட்டிலிருந்து வந்திருந்தார்கள். 
உள்ளே நுழைந்த ஆதவை பார்த்த தேவி, “டேய் என்னடா தலையில்…” 
“ஷ்ஷ்ஷ்.. அம்மா சத்தம் போடாதே சின்ன அடி, வேகமாக வண்டி ஓட்டி ஸ்கிடாகிடுச்சி அவ்வளவு தான்.. பதற வேண்டாம்”
அனைவரிடமும் புன்னகையுடன் “அவசர வேலை அதனால் காலையில் வர முடியலே. “
பாலு “பரவாயில்லை தம்பி.. உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?”
“நான் ராகுல் கூட பிடிச்சவன், போட்டோவில்  பார்த்திருக்கலாம், விபத்தப்போ வீட்டுக்கு கூட  வந்திருப்பேன் “
செந்தாமரை கண் கலங்கியபடி “ அப்படியாப்பா அவன் இல்லைனு மனசு இன்னும் நம்ப மாட்டேங்குது , என் கூடவே இருக்கிற மாதிரி தான் இருக்குது”
பாலு “தாமரை நல்ல விஷயம் பேச வந்து விட்டு  என்ன இது”
பிறகு சகஜ நிலைக்கு திரும்பியவர் கல்யாணத்தை பற்றி ஆலோசித்தார். அனைவரும் சேர்ந்து நிச்சயம் 2 வாரம் கழித்து புதன் அன்றும் ,கல்யாணம் ஜூன் மாதம் 4ஆம் தேதி வைப்பதாகவும் முடிவு செய்தார்கள்.
*****************************************************************************************************
தனது ஆடிக் காரை மிக வேகமாக செலுத்தி கொண்டிருந்தான் அவன்.. கடந்த 3 வருடங்களாக இப்படி தான் இருக்கிறான். எதற்கெடுத்தாலும் வேகம் , கோபம் தான். ஒரு அழகிய பங்களா முன் தன் காரை நிறுத்தி விட்டு உள்ளே வந்தான், அங்கு அவனுடைய பிஏ சிவா “சார் உங்களை பார்க்க சங்கர் வந்திருக்கிரார்.”
“உள்ளே அனுப்பு” என்று கூறி விட்டு விடு விடுவென தன் அலுவலக அறைக்குள் நுழைந்தான்.
சங்கர் உள்ளே சென்று கதவை சாத்தி விட்டு “ சார், நீங்க சொன்ன மாதிரி செய்துவிட்டேன். சின்ன அடியோடு தப்பி விட்டான்.”
“குட்”
“இப்ப நான் சொல்லுகிற மாதிரி செய்” என சில திட்டங்களை கூறிவிட்டு 10,000 பணத்தை அவரிடம் கொடுத்தான்.
“நன்றி சார், நான் பார்த்துக்கிறேன்”
“லுக் விஷயம் வெளியில் தெரிய கூடாது.. தெரிந்தால் நீ இருக்க மாட்ட.. இப்ப கிளம்பு.. “
“கண்டிப்பாக தெரியாது சார் .. நான் வருகிறேன்”
அவன் மனதில் கோவத்தீ எரிந்து கொண்டிருந்தது. கண்கள் சிவந்து இருந்தது.. என் ஷாஷா இப்படி இருக்க அதற்கு காரணமான நீ மட்டும் சந்தோஷமாக வாழ நினைக்கிறாய் விட மாட்டேன்.. டேபிளை ஓங்கி ஒரு அடி அடித்தான் .. அதிலுள்ள பொருட்கள் கீழே சிதறியது..
வெளியே வந்தவன் “சிவா.. ரூமை க்ளீன் பண்ண சொல்லுங்க”
“சரிங்க சார்”
தனது அறைக்கு வந்தவன், ஷாஷாவிடம் சென்றான். அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் , குளித்து விட்டு இரவு உணவு கூட உண்ணாமல் அவளருகே  படுத்து உறங்கி விட்டான்.
“யாரோ இவன் யாரோ இவன்..”
-தொடரும்
 
                                                                                               
                                                                  
   

Advertisement