Advertisement

அவள் கையைப் பிடித்து தடுத்த ராம்குமார் இதுக்கா கிட்டத்தட்ட என் ஒரு மாச சம்பளத்தை கொடுத்து இந்த ஹால ஏற்பாடு செஞ்சேன்… என்று பீல் பண்ண அதுவரை ராம்குமார் மேலே மட்டுமே பார்வையை வைத்திருந்த வஞ்சுவின் பார்வை அந்த அறையை சுற்றி வந்தது.
சிறு நிகழ்ச்சிகளுக்காக எடுக்கப்படும் பார்ட்டி ஹால் தங்கள் இருவருக்காக மட்டுமே வாடகைக்கு எடுத்து இருந்தான் ராம்குமார்.
சின்ன அறை தான். ஆனாலும் அலங்காரம் பிரமாதம். அறையெங்கும் எங்கு பார்த்தாலும் கண்ணாடிகள். ஒவ்வொன்றும் ஒரு வடிவில் அவர்களை பல கோணங்களில் பிரதிபலிக்க அதை எடுத்துக்காட்ட அழகான விளக்கு அமைப்புகள்.
நடுநடுவே காதலை குறிக்கும் சிவப்பு ரோஜா கொத்துகள் அழகான ப்ளவர்வாசில் அடுக்கி இருந்தன.
அவற்றோடு வெள்ளை ஆர்கிட் மலர்கள். தரை முழுக்க இதய வடிவ சிவப்பு பலூன்கள். அங்குமிங்கும் ஏசி காற்றில் பறந்தன. சில பலூன்கள் நைட்ரஜன் காற்று நிரப்பப்பட்டதால் விட்டத்தில் ஓட்டி இருக்க மேலே பார்த்தாள் வஞ்சு.
அங்கே இருந்த கண்ணாடிகளில் அவர்கள் இருவரின் பிம்பத்தையும் சுற்றி அந்த பலூன்கள் அணை கட்டின. அதையெல்லாம் விட வஞ்சுவின் பார்வையை அங்கே தெரிந்த ராம்குமாரின் முகபாவம் ஈர்த்தது.
அவள் ஒரு வருடமாக பார்க்க ஏங்கிய காதல் பார்வை.. அவள் காதலின் எதிரொலி அவன் கண்களில் தெரிய அவள் பார்வை மேலே இருந்து மறுபடி ராம்குமாரின் மேல் படிந்தது.
ராம்குமாரின் அந்தப் பார்வையை நேராக சந்தித்தவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் ராம்குமாரின் டீஷர்ட்டை கழுத்தருகே பற்றி கீழே இழுத்தாள்.
ராம்குமார் என்னமா? என்று குனிய எட்டி இரு கைகளாலும் அவன் முகத்தைப் பற்றி அவன் கன்னத்தில் அழுத்தமாக தன் இதழ்களைப் பதித்தாள்.
அந்த முத்தத்தில் ராம்குமார் மறுபடியும் அவளைப் பற்றி மேலே தூக்க அவள் உதடுகள் அவன் முகமெங்கும் தடையின்றி பதிந்தன.
அதில் ஆசையை விட தன் காதல் ஜெயித்த சந்தோசம் அதிகம் தெரிய ராம்குமார் அதை ஆழ்ந்து அனுபவித்தபடி தன்னை அவளிடம் ஒப்புக்கொடுத்து விட்டு அப்படியே நின்றான்.
      முகமெல்லாம் முத்தமிட்டவளிடம் அவன் உதடுகளின் அருகே வரும்போது சிறு தயக்கம் வர தானே அவள் உதடுகளை தன் உதடுகளால் லேசாக தொட்டான்.
 இதெல்லாம் நம்ம பர்ஸ்ட் நைட்க்கு மிச்சம் வெச்சிப்போம் சின்ன பாக்கெட்! ஏன்னா இங்க ஆரம்பிச்சா அப்புறம் நிக்காது…. என்று ரசனையாக சொல்ல வஞ்சு அவன் முகத்திலேயே தன் முகத்தோடு வெட்கத்தையும் மறைத்துக் கொண்டாள்.
      இப்ப டைரெக்ட் அட்டாக் பண்ண தைரியம் வந்திடுச்சா சின்ன பாக்கெட் ….?
      என்று ராம்குமார் அவள் காதோரம் சிரிக்க வஞ்சுவிற்கு புரியவில்லை.
ராம்குமார் நிதானமாக தங்கள் இருவரையும் பார்த்து நீ யூசுவலா நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில உன் பேகை வச்சுட்டு தான் பைக்ல என் பின்னால வருவே? அதை சொன்னேன். என்க வஞ்சுவிற்கு புரிந்தது.
 அவனை செல்லக் கோபத்தோடு முறைத்தவள் அதுவும் இதுவும் ஒண்ணா? என்று கேட்க ராம்குமார் அது சரி தான்! ஆமா இப்ப எஸ்கலெட் ஆகிட்டோம் இல்ல? என்றவன் தான் அமர்ந்து தன் மடியில் அவளை அமர்த்திக்  கொண்டான்.
வஞ்சு எந்த தயக்கமும் இல்லாமல் அவன் மடியில் அமர ராம்குமாருக்கு ஒன்று தோன்றியது.
எப்படி இப்படி என் மேல நம்பிக்கை வந்ததுடா?
அவன் கேள்வி அவர்கள் அமர்ந்திருந்த நிலையை பற்றியது என்று வஞ்சுவிற்கு புரிந்தது.
வஞ்சு இப்போது அவனைப் பார்த்த பார்வையில் அதற்கு பதில் இருந்தாலும் வாயாலே சொல்லட்டும் என்று காத்திருந்தான்.
உங்க பார்வைல எப்பவும் ஒரு கண்ணியம் இருக்கும் குரு. நம்பி நடுராத்திரில கூட உங்க கூட தனியா வரலாம். சுற்றி நாங்க எல்லாம் அதான் நானு வந்தனா, மணி, சோனு எப்போதும் தானே இருக்கோம்.?
ஏன் உங்க டீம்ல இருக்கும் லேடீஸ் கூட உங்க கூட இருக்கும் போது ரொம்ப கம்பார்டபுளா பீல் பண்ணுவோம். பார்வை எப்பவும் கழுத்துக்கு கீழே போனதே இல்லை.
லவ் வரதுக்கு முன்ன இவன் நல்லவன் என்று நம்பிக்கை வரணும் குரு.. அது உங்க மேலே எனக்கு காலேஜ்ல முதல் தடவை பார்த்த போதே வந்திடுச்சு.
மத்தவங்க எல்லாம் கிண்டல் பண்ணி சிரிச்சப்ப நீங்க மட்டும் தான் எனக்காக வந்தீங்க. அந்த கேர் தான் உங்க மேல எனக்கு லவ் வரக் காரணம்.
கதையிலோ சினிமாவிலோ தான் முரட்டு ஹீரோவை ரசிக்க முடியும். நிஜ வாழ்க்கைல எல்லா பொண்ணுங்களுக்கும் பிரெண்ட் மாதிரி லைப் பார்ட்னர் தான் பிடிக்கும் குரு!
அவன் ஊட்டி விட்ட பிரியாணியை சாப்பிட்டபடி சீரியசாக பேசிக் கொண்டிருந்தாள் வஞ்சு. 
நடுநடுவே அவள் கை உரிமையாக அவன் தலை முடியை சரி செய்து அவன் மீசையை முறுக்கி கன்னம் தடவி சட்டையை சரி செய்து என்று தனியாக இயங்கிக் கொண்டிருந்தது.
 ராம்குமார் அவள் பேச்சோடு அவள் உரிமையும் ரசித்தபடி நடுநடுவே தானும் உண்டபடி உணவை அவளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
பேசிக்கொண்டு இருக்கும் போதே வஞ்சு திடீரென ஆரம்பித்தாள்.
குரு…குரு… உன் கிட்ட ஒண்ணு கேக்கணும். நா அன்னிக்கி ஒயின் குடிச்சதால உனக்கு என் மேல கோபமா?
குருவிடம் அவளுக்கு எப்போதுமே எந்த தயக்கமும் இருந்ததில்லை.
அதனால் இதையும் வெளிப்படையாக கேட்க ராம்குமார் அவள் நெற்றியில் விழுந்த கூந்தலை ஒதுக்கி பேப்! நீ உனக்கு பிடிச்ச மாதிரி இரு. சரியா? இதெல்லாம் யார் சொல்றதையும் கேட்டு குழப்பிக்காதே! என்று சொன்ன நேரம் அவன் நாக்கில் சனி இருந்திருக்க வேண்டும்.
அப்போது அவனுக்கு அது தெரியாதே!
இருவரும் பேசியபடி சாப்பிட்டு முடிக்க இரண்டு மணி நேரம் ஆனது. இடையே பல போஸ்களில் செல்பீக்கள். வீடியோக்கள் அவர்களின் வாழ்வின் முக்கியமான தருணங்களை பதிவு.
எல்லாம் முடிந்து சாவகாசமாக வஞ்சு கேட்டாள்.
நீங்க வரும்போது பர்த்டே பார்ட்டினு தானே சொன்னீங்க? அப்ப அது சும்மாவா?
இல்லையே! பர்த்டே செலேப்ரேஷன் இருக்கு. இரு. என்றவன் போன் பேச சில நிமிடங்களில் ஒரு ஒயிட் போரேஸ்ட் கேக் வந்தது..
ராம்குமார் அவளை தோளோடு அணைத்து கேக் அருகே அழைத்துச் சென்றவன் இன்னிக்கி நம்ம லவ்வோட பொறந்த நாள் இல்லையா? அதனால தான் பர்த்டே பார்ட்டினு சொன்னேன்…. என்று அதில் எழுதி இருந்த வாசகத்தை காட்டினான்.
வெள்ளை கேக் ஐசிங் மேலே சிவப்பு எழுத்துக்களில் ஹாப்பி பர்த்டே டு அவர் லவ். மே இட் ஸ்டே அலைவ் பார் எவர் என்று எழுதி இருந்தது.
நீ காதலிச்சது வேணா பல வருஷங்களா இருக்கலாம். அதை நான் உணர்ந்தது சில நாட்களுக்கு முன்னால தான். ரெண்டு பேரும் அதை இப்ப தானே ஷேர் பண்ணப் போறோம்?
அவள் நெற்றியில் தன் உதடுகளை அழுத்தி ஐ லவ் யூ சோ மச் டியர்! என்று சொல்ல வஞ்சுவின் முகம் சந்தோஷத்தில் விகசித்தது.
அவன் வார்த்தைகளில் இதுவரை இருந்த அழுத்தம் எல்லாம் ஓடி விட மறுபடி எட்டி அவன் டீஷர்ட்டை இடித்து இழுத்தாள்.
என்னைத் தூக்குங்க! என்று கட்டளையிட ராம்குமார் புன்னகையோடு கூடவே சிறு ஆர்வத்தோடு அவளைத் தூக்கினான்.
அவனை பார்த்து கண் சிமிட்டியவள் நீங்க வேணா பர்ஸ்ட் நைட் அன்னைக்கு கிஸ் பண்ணுங்க. நான் இன்னிக்கே பண்ணிக்கறேன்… என்றவள் தன் சிறு உதடுகளால் அவன் அழுத்தமான உதடுகளை மூடினாள்.
      அவள் செய்வதை ரசித்தபடி அமைதியாக அனுமதித்தான் ராம்குமார்.
 வஞ்சு சில நொடிகள் தன் உதடால் அவன் உதடை தடவினாள். அதற்கு மேல் எப்படி முத்தமிடுவது என்று தெரியாமல் உதடுகளை எடுத்து விட்டு
குரு! இந்த சினிமால எல்லாம் லிப்லாக் காட்டறாங்க. அதுல நிமிஷக்கணக்கா போகுது. எனக்கு இதுக்கு மேல என்ன செய்யணும் என்று தெரியலியே. வழக்கம் போல இதயும் நீங்களே சொல்லிக் குடுங்க…. என்று  ஏமாற்றத்தோடு அவன் முகத்தைப் பார்த்தாள்.
அவள் கடுப்பாக சொன்னதைக் கேட்டு ராம்குமாருக்கு சிரிப்பு தாங்கவில்லை. வாய் விட்டு சிரித்தவன் அவள் நெற்றியோடு தன் நெற்றியை மோதினான்.
சின்ன பாக்கெட்! நீ ஒரு யுனிக் பீஸ்! இதெல்லாம் என்ன பிடெக் சிலபஸ்லையா வைப்பாங்க. நாம தான் முட்டி மோதி கத்துக்கணும்…
முதல்ல தலைக்குப் பின்னால் கையை இப்படி வெக்கணும்..  என்று அவள் கைகளை தன் தலைக்குப் பின்னால் கொண்டு சென்றான்.
அடுத்து தலையை லேசா ஒரு பத்து டிகிரி சாயக்கணும். இல்லனா மூக்கு இடிக்கும்…
      அவள் தலையை லேசாக ஒரு கையால் சாய்த்தவன் தான் சொன்னது போலவே கையால் அவள் தலையை பின்னால் தாங்கினான்.
      வஞ்சு அவன் சொல்வதை கவனமாக கற்கும் ஆர்வத்தில் தீவிரமாக அவன் சொன்னதை கவனிக்க அந்த தீவிரம் அவனுள் இருந்த கட்டுப்பாடை தகர்த்தது.
      இரண்டு வீட்டிலும் அனுமதி வாங்காமல் எல்லை மீறக்கூடாது என்று அவனுக்குள் வைத்திருந்த கட்டுப்பாடு அது.
      சில நிமிஷங்கள் தான் ப்ளீச்.. என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டவன் மெல்ல ரோஜா இதழ்களை முத்தமிடுவது போல அவள் உதட்டில் லேசாக உதடு பதிக்க அதன் பிறகு இருவருக்கும் இந்த உலகம் மறைந்து போனது.

Advertisement