Advertisement

பகுதி 9

தரையில் சுவரோடு சுவராக அமர்ந்திருந்தவளுக்கு அழுத்தமாய் மீண்டும் மீண்டும் தன் இதழ்களுக்குள் புதைந்து மீண்ட சத்ரியின் இதழ்கள், தன் உடையை விலக்கி, இடையில் வெகுநேரமாய் கவிதை படைத்த  கைகள்,  தன் கழுத்தின் பின்புறம் முரட்டுத்தனத்தை மட்டுமே பிரதிபலித்த விரல்கள்  அமர்ந்த நிலையிலேயே தன் உடலோடு உரசிய அவன் உடல்…  என ஒவ்வொன்றிலும் சத்ரியை உணர்ந்துக் கொண்டிருந்தது அவளின் மூளை.

ஆனால் அவள் மனம் நம்ப மறுத்தது.. சத்ரி அப்படியெல்லாம் என்கிட்ட பிகேவ் பண்ண மாட்டான். அவன் மனதில் அப்படி ஒரு எண்ணமே கிடையாது…  இல்லையென்றால் நான் அவனை கல்யாணம் பண்ணிக்க சொன்னப்போ, அதற்கு இவன் சந்தோஷம் தானே படனும்… எதுக்கு கோபப்பட்டு கத்தனும்…  அப்போ என் மேல் விருப்பம் இல்லைன்னு தானே அர்த்தம்.. விருப்பம் இல்லாமல் எப்படி ஒருவனால் இப்படி நடந்து  கொள்ள முடியும்.. அப்பறம் எப்படி அந்த மாதிரி வார்த்தைகளும் வரும்.

ஒருவேளை இது தன் மனதின் எதிர்பார்ப்பா..

எதிர்பார்ப்பு தான் கனவா வந்திருக்குமா…  அப்போ கனவில் நடந்த மாதிரி நான் ‘அதை’ சத்ரிகிட்ட எதிர்பார்க்கிறேனா?

என ‘சத்ரி’ என்ற ஒருவன் சாத்வியின் ஒவ்வொரு அனுவிலும் கலந்து அவளை அனுவனுவாய் சித்ரவதை செய்தான்.

பல மணி நேரங்களும் இதே நினைவுடன்…  கனவா….நிஜமா… என இரண்டுக்கும் இடையில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தாள்.

ஐந்து வருடங்களுக்கு முன்.. தன் பெற்றோரை விட்டு வெளியேறி, இதோ. இதே  திருச்சியில் வேலைக்கென்று சேர்ந்த பிறகு அடைந்த பரிபூரண அமைதி…  படிப்பிற்கும் அப்பறப்பட்ட வேலை கிடைத்த சந்தோஷம்.. வேலையில் சேர்ந்த பிறகு கிடைத்த மரியாதை.. இரண்டே வருடங்களில் நற்பெயர் வாங்கியது..  தனிமையில் இருந்தாலும் நிறைவான வாழ்க்கை.. இப்படி தெளிவாக இருந்த சாத்வியின் வாழ்க்கையில் சத்ரி என்னும் ஒருவனால்.. அதுவும்.. இந்த ஒரு நாளில்.. ஒரு மணி நேரங்களாக சத்ரியால் படும் அவஸ்தை அவளை வாள் கொண்டு அறுத்தது..அவனால்..… இந்த ஐந்து வருடங்களாய் மனதில் தோன்றாத வெற்றிடம்…  கட்டுப்பாட்டினில் இருந்த தன் மனம்…. என அனைத்தும் இழந்தது போல் ஓர் பிரம்மை ஏற்பட்டது.

மனம் அமைதியை நாட ஆர்ப்ரித்தது. டேபிளின் மேல் கிடந்த டைரியை எடுத்தாள். ஏற்கனவே பாதி பக்கங்கள் எழுத பட்டிருக்க, விட இடத்தில் இருந்து  வேக வேகமாய் எழுத தொடங்கினாள் ‘ஸ்ரீ ராம ஜெயம்’ அவ்வப்போது செய்வது தான்  ஐந்து வருடங்களாய் மனதில் இடம் பெறாத பழக்கம் இன்று ஏற்பட்டது..

இருந்த கோபம் , தாபம், காதல், ஆவேசம், ஆத்திரம் என அனைத்தையும் தன் கைகளில் காட்டினாள். விடியும் வரையிலும் ஒரு பொட்டு உறக்கம் இல்லை..  கிட்டதட்ட முழு டைரியும் முடியும் தருவாயில்…   விரல்கள் வலியெடுக்க ஆரம்பித்தபின்பே நிமிர்ந்தாள் சாத்வி.

மனதில் எந்த ஒரு நினைவும் இல்லாமல் தெளிந்த நீரோடையாய் இருக்க..

கண்களை மூடி…  எதையோ சாதித்தது போல் ஆழ்ந்த அமைதியில் இருந்தாள் சாத்வி…  முன்பெல்லாம் மனதை கட்டுப்பாட்டினுள் வைக்க சத்ரி பழக்கிக் கொடுத்த பழக்கம் தான்.. இன்று வரை மறக்கவில்லை.. ஆனால் இன்று அவனையே மறக்க…. தனக்கு உதவக் கூடும் என கனவிலும் நினைக்கவில்லை சாத்வி.. ஆனால் இன்று அது நடந்தது…  ஆம் சத்ரியை மறக்க…  எந்நேரமும் ஏதாவதொரு நோட்புக், டைரி என கையில் வைத்துக் கொண்டே இருந்தாள்..அதில் முழு வெற்றி கிடைக்காத போதும்…. கிட்டதட்ட வெற்றி பெற்றுக் கொண்டிருந்தாள் சாத்வி..

அங்கே சத்ரி…. சாத்விக்கு வாங்கிய அனைத்தையும் சிவஹாமியிடம் கொடுத்து “வாங்கினது எல்லாம் சரியா இருக்கா பார்த்துகோங்க” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே

கிருத்தி சிவஹாமி மஹா….திவ்யா…  என பெண்கள் கூட்டம் அதை ஆராய்ச்சி செய்ய தயாரானது..

சங்கரன் ‘பில் எங்கே சத்ரி’ என நயமாய் விஷத்தை கக்க.. அவரை முறைத்தபடியே பாக்கெட்டினுள் திணித்து வைத்திருந்த பில்களை அவர் கைகளில் திணித்து ஓரமாய் நின்று கொண்டான்.

சங்கரன் வாங்கியவை சரியாய் இருக்கிறதா என  பார்க்க சென்றுவிட்டார்

விநாயகசுந்தரம் சங்கரையும் சத்ரியையும் மாறி மாறி முறைத்துக் கொண்டிருந்தார்.

அவரின் முறைப்பை பார்த்த சத்ரி “என்னைக்காவது ஒரு நாளாவது பாசாமா பார்க்கிறீங்களா.. எப்போ பாரு…. முறைச்சிகிட்டு.. நான் உங்க பொண்டாட்டி இல்லை…  உங்க பொண்டாட்டி அங்கே இருக்காங்க….” என சத்ரி சொல்ல….

சத்ரி தன்னை திசை திருப்புகிறான் என அவரும் அதை கண்டுகொள்ளாமல் “எந்த பணத்தில் இதையெல்லாம் வாங்கின..” என விநாயகசுந்தரம் கேட்க…

“என்னோட பணத்தில்” சத்ரி அசால்ட்டாக சொல்ல..

“உன்கிட்ட ஏதுடா…  இவ்வளவு பணம்…” என அதிர்ச்சியுடன் கேட்க..

“ம்…  பக்கத்து வீட்டில் கொள்ளை அடிச்சேன்”

“அப்படியே அறைஞ்சனா தெரியும்…  உண்மையை சொல்லுடா” என கண்டிப்பான தந்தையாய் கேட்க…

“என்னோட பணம் தான்பா…  கடன் எல்லாம் வாங்கலை..”என அவருக்கு தேவையான பதிலை கூற

“ஏதுடா அவ்வளவு பணம்… எனக்கு தெரிஞ்சு உன் கடையிலிருந்து வரும் எல்லா வருமானத்தையும் என்கிட்ட தானே கொடுத்து வச்சிருக்க.. உண்மையை சொல்லு…. உன் நடவடிக்கை எதுவும் சரியில்லை… ” என விநாயகசுந்தரம் சந்தேகமாய் பார்க்க…

“அப்பா எனக்கொரு உதவி செய்யனும்….செய்வீங்வளா..” என சம்பந்தமே இல்லாமல் கேட்க…

“டேய், நான் ஒன்னு கேட்டா…  நீ ஒன்னு கேட்கிற..என்னடா பண்ணித் தொலைக்கிற…  சொல்லித் தொலைடா..” என மண்டையை பிய்த்துக் கொள்ளாத குறையாய் கேட்க..

அவரை அர்த்தமாய் பார்த்து புன்னகைத்தபடி இருந்தான் சத்ரி…

சாத்வியின் உடைகளையும், நகைகளையும் பார்வையிட்டுக் கொண்டிருந்த அனைவரின் எண்ணங்களும் வேறு வேறு பாதையில் சென்று கொண்டிருந்தது.

அதிலிருந்து பார்வையை தன் கணவன் புறம் திருப்பினார் சிவஹாமி.

தன் கணவனின் புரிந்து கொள்ளமுடியாத முகபாவனையும்.. சரிப்பை வெகுவாக அடக்கி, ஒரு கையை ஜீன்ஸ் பாக்கெட்டிலும்…  மறுகையினால் தலையை கோதியபடி இருந்த மகனின் தோற்றமும்… சிவஹாமிக்கும் சிரிப்பை வரவழைத்தது…

அதே சிரிப்புடன்… அவர்கள் அருகில் சென்று “என் புருசனை  என்னடா சொன்ன…  வெட்ட போற ஆடு மாதிரி முழிச்சிட்டு இருக்காரு” என சிவஹாமியின் பார்வை இருவரையும் அன்பாய் வருட…

“ நீ இப்போ உன் மகனை திட்டுறியா…. இல்லை என்னை கிண்டல் பண்றியா ” என மகனைவிட்டு மனைவியிடம் பாய…

“என்னங்க இப்படி கேட்கிறீங்க.. நான் என்னைக்கு உங்களை விட்டு கொடுத்து பேசினேன்…. இப்போ பேச… ” என ஏகத்திற்கும் போலியாய் வேடமிட…

“அதானே நீ உன் புருசனுக்கு தானே சப்போர்ட் பண்ணுவ என்னை எல்லாம் உன் கண்ணுக்கு தெரியுமா… ” என சத்ரி பேச

“ஏய், இரண்டு பேரும் உங்க டிராமாவை நிறுத்துறீங்களா… பார்க்க சகிக்கலை” என கடுகடுப்புடன் கூறினார் விநாயகசுந்தரம்

சத்ரின் செய்கை அப்படி இருந்தது… பின்னே…  அவனின் வாய் பேசிக் கொண்டிருக்க…. சத்ரியின் கைகளோ தாயின் தோளை வளைத்து அதில் குனிந்து தன் தலையை சாய்த்து , விநாயகத்தை ஒரு மார்க்கமாய் பார்த்திருந்தான்..

தாயிடம் செல்லம் கொஞ்சும் மகன், மகனை வைத்து கணவனை மட்டம் தட்டும் மனைவி…  என இருவரையும்’ என்ன செய்ய இதுங்களை’…  என்பது போல் பார்த்திருந்த விநாயகசுந்தரம்..

“சிவஹாமி, உன் புத்திரன் ஏதோ கோல் மால் பண்றான்… என்னனு கேளு” என தீயை கொழுத்திப்போட

“ உங்களுக்கு அவனை குறை சொல்லலைன்னா தூக்கம் வராதே…  அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருக்கான்….  குறை சொல்லனும்னா, உங்க மூத்த மகனை சொல்லுங்க..” என விநாயகத்திடம் பொறிந்த சிவஹாமி…  மகனிடம்…. திரும்பி

“சாத்விக்கு வாங்கின எல்லாமே ரொம்ப அருமையா இருக்குடா…  அண்ணா மேல இருக்கிற கோபத்திற்கு கண்டிப்பா சாத்வி எதையுமே செலக்ட் பண்ணி இருக்க மாட்டா நீ தான் செலக்ட் பண்ணினியாடா” என சத்ரியிடம் கேட்டார்….

“ம்… ஆமாம்மா…. அவள் செலக்ட் பண்ண மாட்டேன்டா”என மறைக்காது கூற…

“எதையும் பூசி மொழுகாமல், நான் தான் செலக்ட் பண்ணினேன்னு உண்மையை ஒத்துக்கிட்டான்…  ஆனால் நீங்க…  அவன் செய்யாததற்கு எல்லாம் சேர்த்து திட்டிட்டே இருங்க…  நீ வாடா…  அம்மா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..” என சத்ரியை அழைக்க

“ நீங்க போங்க மா.. நான் வரேன்….” என தாயை அனுப்பி வைத்து தந்தையின் புறம் திரும்பி…

“ கொஞ்சம் பேசனும் பா…  சாப்பிட்டுட்டு என் ரூம் வாங்க பேசலாம்..” என அவ்வளவு நேரமிருந்த விளையாட்டு தன்மை போய் சற்று கூர்மையாய் பேசிய மகனிடம்…

“ என்னடா, எதுவும் பிரச்சனையா..” என கேட்க….

“ ப்ச்…. பிரச்சனை இல்லைப்பா…  இது வேற…  கண்டிப்பா டிஸ்கஸ் பண்ணியே ஆகனும் வாங்க… ” என நில்லாது சென்றுவிட்டான் சத்ரி…

அனைவரும் உணவு உண்டு முடித்து தங்கள் அறையில் புகுந்த பின்,  சத்ரியின் அறையினுள் நுழைந்தார்.

 சத.ரி பேச பேச, விநாயகத்திற்கு கண்கள் இருண்டது.  “சத்ரி இதெல்லாம் சரியா வருமா?” என கேட்டார், இவன் கூறியதை நம்ப முடியாமல்..

“ சரியா வரணும்…. வந்தே ஆகனும்..  ஆக வேண்டியதைப் பாருங்கப்பா” என குழப்பமாய் இருந்த தந்தையை சரிகட்ட வெகு நேரமானது சத்ரிக்கு..

அவனையே குறுகுறுவென பார்த்த விநாயகசுந்தரம் “இதையெல்லாம் தாண்டி இன்னைக்கு உன் முகம் பளிச்சுன்னு இருக்கே தம்பி என்ன காரணம்“ என கேட்க….

முகம் சட்டென சிவந்து போனது சத்ரிக்கு…  தந்தைக்கு காட்டாமல் அதை மறைத்தவன் “இப்போ இவ்வளவு நேரமா பேசினது தான் காரணம்” என அழுத்தமாய் கூறி…. “ கிளம்புங்கப்பா” என அவரையும் அனுப்பி வைத்தவன் காற்றில் பறக்காத குறையாய் ஆரவாரமாய் இருந்தான்…

இனிய கனவுகளில் மனம் லயிக்க கனவு நனவாகும் நாளுக்காய் காத்திருந்தான் சத்ரியன்.

இரண்டு வாரமும் சாத்விக்கு நொடியாய் கடந்தது. பகலில் பேங்கில் தலை நுழைப்பவள்…  இரவில் டைரிக்குள் தலை நுழைத்து கொள்வாள்…

மனம் பாலைவனமாய் அமைதியாய் கிடந்தது பாலைவனத்தினுள் எந்த சோலையையும் தேடவில்லை சாத்வியின் மனம்…. கண் கூசும் வெளிச்சத்தைக் காட்டினாலும் எந்த ஒரு உதயத்தையும் எதிர்பார்க்கவில்லை.

எவ்வளவு தான் மனதை திசை திருப்பினாலும் தன் உயிரை நினையாமல் இருக்க முடியவில்லை…

இரண்டு வாரங்களில் அடிக்கடி வரும் சத்ரியின் நினைவுகளை அசை போட முடியாமல் தடுத்தன அவளின் திருமண வேலைகள்.

தினமும் காலையில்  “ ஸ்ரீ ராம ஜெயத்துடன்” எழுபவள் இன்று “சத்ரியை மறக்கனும்…. எனக்கு சத்ரி வேண்டாம்” என சத்ரி ஜெயத்துடன் எழ தொடங்கினாள்

இடையில் எத்தனையோ முறை சத்ரி சாத்வியின் சந்திப்புகளும் பேச்சுக்களும் நடந்தாலும்…  சாத்வியின் சாதாரணமான நடவடிக்கைகளில் முகம் சுருக்கினான் சத்ரி முகம் சாந்தமாய் , அமைதியாய் இருந்தது.. ஆனாலும் எப்போதும் போல்…  சத்ரி சொன்ன அனைத்திற்கும் எதிர் பேச்சு கிடையாது “சிறு தலையாட்டல் மட்டுமே சரி “ என்பது போல்..

Advertisement