Advertisement

 Bhavathi’s Birla weds Brindha

மறுநாள் காலை அய்த காதலர்களின் திருமணம்..

அன்று யாருக்கும் தெரியாமல் நடந்த திருமணம் இன்று ஒருவருக்கும் தெரியாமல் இல்லை! அதை மகிழ்வாய் பிரதிபலித்தடி நிறைந்து வழிந்து கொண்டிருந்தது அந்த திருமண மண்டபம்.

பிர்லா போஸ்! ப்ருந்தா! என்ற ஜோடியால்

முந்தைய திருமண நிகழ்வில் இழந்து நின்ற அத்தனை பேரின் ஆசிர்வாதத்துடன் இனிதாய் அவர்களின் திருமணம் முடிவு பெற்றது.

மனசங்கடங்கள் உடைந்து போக, மகிழ்ச்சியே ஆக்கிரமித்தது போல் அனைவரும் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தனர்.

கெங்காவின் இழப்பு சந்திராவிற்குள்..

மகனுக்கு இது வரை தெரிந்ததே போதுமனாது, இனி எதுவும் தெரியவேண்டாம் என்ற சுயநலம் இன்றும் தேவிக்குள்

இனியாவது இவர்கள் பிரியாமல் மகிழ்ச்சியுடன் சந்தோஷமாக, பிரவேதும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் ப்ருந்தாவின் பெற்றோர்களுக்குள்

நான் பிரிந்தாலும் என் உயர் பிரிந்தாலும் என் காதல் உன்னை ஒரு நாளும் பிரியாது என்ற அதீத நம்பிக்கை ப்ருந்தாவிற்குள்

மறைத்து வைத்த தன் இறந்த கால  வாழ்வை தெரிந்து கொண்டாலும் அதன் பாதிப்பை ஏற்று கொண்டு, மற்றவர்களிடம் அதை கேட்டு கேட்டு குடையாத மனபக்குவம் பிர்லாவிற்குள்.

இப்படி எண்ண அலைகள் ஒவ்ஒரு வகையில் அடித்தி கொண்டிருந்தது ஒவ்வெருவரினுள்ளும்.

ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏதோ ஒரு நிகழ்வை ஏதோ ஒருவரிடம் மறைக்க வேண்டிய நிலை ஒவ்வொருவருக்கும்  நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல..

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான திருப்பத்தையும் வைத்து அழகாய் காய் நகர்த்தி அவர்களது வாழ்வையும் தன் இஷ்டத்திற்கு இழுத்து சென்றது அவர்களின் விதி.

விதியை வெல்ல முடியாது தான்.

அதை தாங்கும் வல்லமை மட்டுமே போதும்.

எதையும் ஜெயிக்கலாம்.

எப்படியும் ஜெயிக்கலாம்.

இதோ பிர்லா ப்ருந்தா ஜோடியினர் ஜெயித்து நிறுபித்தனர். .

………

அன்றிரவு

அலங்கார மின்னிய அறைக்குள் அலைபாய்ந்தது அவன் விழிகள்.

ப்ருந்தாவை தேடி துளாவி அலைபாய்ந்த விழிகள், அவளை பார்த்ததும் தெறித்து விழுந்தது அவன் விழகள்.

காலையில் சர்வ லட்சனம் பொருந்திய சாமுத்திரிகா பட்டு கட்டு குடும்ப பொண்ணு மாதிரி இருந்தவ  இப்போ என்ன சரக்கு பாட்டிலோட குடிகாரியா இருக்கா!

பால்கனியில் டீபாயை இழுத்து போட்டு அதில் இரண்டு ஓட்கா  பாட்டில்கள் கூடவே சற்று பெரிய சைஸ் டெய்ரி மில்க் சாக்லேட்  வேறு  இருந்தது.

ஐய.நோ அப்போ இவள் சொன்னதெல்லாம் நிஜமா?

“சரக்குக்கு சாக்லேட்டா!” நெற்றி சுருங்கி புருவங்கள் மேடேறிக்கொண்டது பிர்லாவிற்கு.

 “ஏய் என்ன ப்ருந்தா இதெல்லாம்” அவள் முன் வந்து நிற்க.

“இது சரக்கு, இது சைட் டிஸ்” பொறுமையாய் இவள் விளக்கம் வேறு கொடுக்க

கடுப்பானான் பிர்லா “அது தெரியுது, எதுக்கு இதெல்லாம்!”

“நல்ல காரியம் செய்ய முன்னாடி சாக்லேட் ஷேர் பண்ணனுமா  எங்கம்மா சொல்லி இருக்காங்க!”

“அப்படி என்ன நல்ல காரியம் செய்ய போற நீ?”

“பர்ஸ்ட் நைட் நல்ல காரியம் இல்லையா?” இவள் உதடுபிதுக்கி கேட்க

திடுக்கிட்ட பிர்லாவின் அடிவியிற்றில் இருந்து அதிர்ச்சி கிளம்ப, அழுத்தமாய் அவளை பார்த்தபடி

“சரி சாக்லேட் நல்ல காரியத்துக்கு, அப்போ சரக்கு? எதுக்கு” என

“நீ மறந்த எல்லாத்தையும் , ரீவைண்ட் பண்ண போறேன்! இது இருந்தா ரீவைண்ட் பணறது ரொம்ப ஈசி!” ஓட்காவை கை காட்டி இவள் பேச

“நான் மறந்து போனதை பத்தி பேசக்கூடாதுன்னு என் பொண்டாட்டி சத்தியம் வாங்கி இருக்கா”

“சத்தியம் எல்லாம் உனக்கு தான் எனக்கு இல்லை!”

“அடிப்பாவி” என இவன் வாய்பிளந்து,

 “இதெல்லாம் நாளைக்கு வச்சுக்கலாம், இப்போ நமக்கு வேற வேலை இருக்கு” என்றபடி பாட்டிலில் இவன் கை வைக்க

“பாட்டில் மேல கை வச்ச முத டெட்பாடி நீ்தான்!” உடைக்கப்படாத பாட்டிலை இவள் பிடுங்கிக்கொண்ட வேகத்திற்கு இவனுக்கு இங்கே கோபம் சுள்ளென ஏற

“உன் மேல் கை வைக்கும் போது கூட இத்தனை கோப்பபடலை நீ” இடுப்பில் கை வைத்து கொண்டு சொன்னவன், இவளது முறைப்பை பார்த்து

 “ப்ருந்தா ப்ளீஸ் இன்னைக்கு மட்டும் இது வேண்டாம் நாளைக்கு பார்த்துக்கலாம்!” சீரியஸாகவே சொல்ல

“இல்லை, இல்லை இன்னைக்கே  தான் எனக்கு வேணும்!”

“ஏன் இன்னைக்கு தான் நல்ல நாளா?” சுள்ளென இவன் விழ

“பிர்லா  போனவருசம் இதே நாளில் தான் நம்பளோட பர்ஸ்ட் மீட் ஸ்டார்ட் ஆச்சு! அதுவும் எங்கே தெரியுமா? ரிதமிக் பப்ல”

“பச்  டைம் என்னன்னு பார்த்தியா இல்லையா?” நேரம் கடந்து கொண்டிருப்பதை உணர்ந்து பொறுமையில்லாமல் இவன் கெஞ்ச

“அச்சோ டைம் நியாபகம் இல்லை ஆனால் எப்படியும் மிட் நைட்க்கு மேல இருக்கும்!” பப்பில் இவனை பார்த்த நேரத்தை இவள் சொல்ல

‘அடிங்கொக்கமக்க’ பற்களுக்கிடையில் மாட்டிக்கொண்டது அவன் வார்த்தைகள். இவள் விளையாட்டு புத்தி அறியாத இவன் பாடு படு திண்டாட்டமாய் போனது.

“விளையாடாத ப்ருந்தா! நான் இப்போ டைம் ஆகிட்டு இருக்குறதை சொன்னேன்” என

 “இட்ஸ் வெரி்சீரியஸ், இது விளையாட்டெல்லாம் இல்லை ! திஸ் இஸ் அ ரிவென்ஜ்?”

“இது என்ன புதுசா ரிவன்ஜ்?”  ரிவென்ஜ் எதுக்கு”

“ஆமா உன்னை தொரத்தி தொரத்தி லவ் பண்ணனிது நான்  முதல் முதலா காதலை சொன்னதும் நான் உனக்கு முன்னாடியே உன் கழுத்தில் தாலி கட்டினது நான், உனக்கு முதல் முதலா முத்தம் கொடுத்தது நான்.  இத்தனை ஏன்  பர்ஸ்ட் நைட்டில்  கூட!” என பேசவந்தவளின் வாயை பொத்தி ”போதும்” என இவன் பல்லை கடிக்க

“அத்தனையும் நான் செய்ய, நீ நோகாமல் எல்லாத்தையும் மறந்துட்டு சுத்துவ.”

“அதுக்கு நான் என்னடீ பண்ணுவேன்? எனக்கு வந்த நோய் அப்படி! அதுக்காக என்னை என்ன பண்ண சொல்ற” என இவன் பார்க்க

“அதுக்கு தான் உனக்கு ரிவென்ஜ் ரெடி பண்ணிருக்கேன்”

ஐய்யோ ஏதோ நான் வெஜ் ரெடி பண்ணிருக்கேன்னு சொல்ற மாதிரியே சொல்றாளே! என எரிச்சலில் நினைத்தபடி “என்ன ரிவென்ஜ்” முறைப்புடன் இவன் கேட்க

“உனக்கு என்னைக்கு பழைய நியாபகம் வருதோ  அன்னைக்கு தான்!” என அவள் நிறுத்தி “அன்னைக்கு தான், நமக்குல்ல எல்லாம் நடக்கும்!“

“ஓ” “அது வரைக்கும் என்ன செய்றதா உத்தேசம்?” இவன் மார்புக்கிடையில் கை கட்டியபடி கேட்க.

“நாம காதலிச்சப்போ என்னலாம் நடந்ததோ! அதெல்லாம் திரும்பவும் நம்ப வாழ்க்கைக்குள்ள கொண்டுட்டு வருவேன்”

“அப்படினா, நான் பர்ஸ்ட்நைட் செலிபரேட் பண்ணனும்னா, இன்னும் ஒரு வருசம் வரை நான் வெயிட் பண்ணனும் ம்?”

“ம்ஹூம், இல்லையில்லை ஒரு வருசமும்!” என யோசித்தவள் விரல்களை நீட்டி மடக்கி ஏதோ ஒரு கணக்கை அதில் கொண்டுவந்து “ஒரு வருசமும் ஒரு நாளும் இருக்கு” என

“அதென்ன ஒரு நாள் எக்ஸ்ட்ராவா சொல்ற? மேக்ஸ்ல வீக்கா நீ” என

“வீக்கும் இல்லை ஸ்ட்ராங்கும் இல்லை. அடுத்த வருசம் லீப் இயர் பிப்ரவரிக்கு 29 நாள் இல்லையா  அதான்”

“அய்யோ நாராயணா?” சுவற்றில் முட்டுக்கொள்ளலாம் போல இருந்தது, பிர்லாவிற்கு. சரக்கடிச்சா எல்லாம் மட்டையாவங்க  இவ என்ன இன்னும் தெளிவா இருக்கா! இதில் லீப் இயர் வேற, பற்கள் நறநறவென கடிபடி

“சரி அதுவரை  உனக்கெதுவும் வேணாமா?!” அவளுக்கு இவன் நூல் விட்டான்.

“எனக்கு சரக்கு இருக்குப்பா!” அசால்ட்டாய் இவள் சொல்ல

“அப்போ எனக்கு” வேகமாய் வந்து விழுந்தது இவன் வார்த்தை.

“உனக்கு தான் சைட் டிஸ் இருக்கே!” என்றவள், அவன் கையில் பெரிய சைஸ் சாக்லேட் ஒன்றை திணித்து “போ  போ, சாப்பிட்டுட்டு போ,  டைம் ஆச்சு  தூங்கு”

“தூங்க முடியாது“ என்ன செய்வ?  சாக்லேட்டை தூக்கி எறிந்துவிட்டு கை கட்டிக்கொண்டு அவள் முன் நிமிர்ந்து நின்றான்.

“சொல்றதை கேட்டால் பெட் மேல தூங்க அலவ் பண்ணுவேன்!” அடாவடியாய் இவள் கூற

“இல்லைனா? என்னடி பண்ணுவ” அடங்காதவனாய் இவன் கேட்க

“என் மேல தான் நீ தூங்கனும், உடனே சந்தோஷ படாத,  அப்பறம் ஒரு கன்டிசனும் இருக்கு  நோ டச்சிங் அண்ட் நோ டிச்சிங்” என

மொட்டை மாடி, பால் கனி என வெளியே பத்தி விடுவாள் என எதிர்பார்த்தவனுக்கு மயக்கமே வருவது போல் இருந்தது.

இதுக்கு முன்னாடி பார்த்த ப்ருந்தாவிற்கும், இப்போதைய ப்ருந்தாவிற்கும் தான் எத்தனை வித்யாசம்?

ஆனாலும் அவள் பேச்சு செயல்கள் என அனைத்தும் வெகுவாய் பிடித்து போய் ஈர்த்தது அவனை.

அவளை முழுதாய் ரசிக்க துவங்கினான், இப்போது இவனுக்கு விளையாடும் ஆர்வம் தலைதூக்க ‘இவள் என்ன தான் செய்கிறாள் பார்ப்போம்?’ என  அமைதியாய் சென்று கட்டிலில் ஏறி படுத்து கொண்டான்.

இவன் உறங்கும் வரையிலும் இவனையே பார்த்திருந்தவள், உறங்கி விட்டான் என உணர்ந்து கூடையில் சரிந்தமர்ந்தாள்.

சுமார் ஒரு மணி்நேரத்திற்கும் மேல் ஓடி இருந்தது. இவள் நிஜமாகவே குடிக்கிறாளா? என அரைகண்களுக்கு இடையில் நோட்டம் விட்டு கொண்டிருந்தான் பிர்லா.

ஆனால் இவளோ, அந்த மூங்கில் கூடையில் நன்றாக சரிந்தமர்ந்து, ஏதோ ஒரு கற்பனையில் மூழ்கியவளாய் கண்களில் காதல் மின்ன, முகத்தில் அப்படி ஒரு தேஜஸ் மின்ன அந்த மூங்கில் கூடையில் சாய்ந்து ஆடிக்கொண்டிருந்தாள்.

ஓடி மறைந்த இந்த ஒரு மணி நேரமும் அவள் அப்படியே இருந்தாளே ஒழிய, பாட்டில்களை திறந்து. கிளாஸில் ஊற்றி இருந்தாளே ஒழிய, குடிக்கவே இல்லை.

அதை பார்த்தவனுக்கு ‘இவ கேடிக்கெல்லாம் கேடியா இருப்பா போலவே’ இவளை  என கட்டிலில் இருந்து எழுந்தவன், வேக வேகமாய் அவள் அருகில் சென்றான்.

அரவம் உணர்ந்து இவள் சுதாரிக்கும் முன்

அவள் முன் இருந்த டேபிளை பாட்டிலோடு சேர்த்து வேகமாய் நகர்த்திவிட்டு, அவளை தூக்கி பால்கனி கம்பியின் மேல் சாய்த்து நிறுத்த

இவனது செய்கையில் “எ  என்ன… பிர்லா ?”

“ஏமாத்திட்டல்ல?”

“என்ன ஏமாத்தினேன் ?”

“குடிக்கற மாதிரி ஆக்டிங் கொடுத்தல்ல !”

“இ  இல்லை…” என இவள் முடிக்கும் முன் அவள் இதழ் மொத்தமும் அவனுக்குள் அடங்கிபோய்விட்டது.

“ஸ்மல் எதுவுமே வரலை! அப்போ நீ குடிக்கல தானே!”

சரியாய் கண்டு கொண்டானே என இவள் பேந்த பேந்த முழிக்க

“எப்படி எப்படி  இன்னும் ஒரு வருசமும் ஒரு நாளும் நான் வெயிட் பண்ணனுமா?”

“இதை ரிவென்ஜ்ன்னு வேற சென்னல்ல! நான் எடுக்குறேன்டீ உனக்கு ரிவென்ஜ்” என அவள் இடையை இழுத்து

“அதே ஒரு வருசமும் ஒரு நாளும் நமக்கு ஹனி மூன் தான்! முடிஞ்சா என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுடி பாப்போம்” என முழு காதலோடு கூற

எப்போதும் போல் பிர்லாவின் அமைதியான அடாவடியில் அடங்கி போய் “ஆ…” வென வாய் பிளந்தவள், வாய் மூடாமல் நிற்க, வாய் மூடும் வேலையை தன் பொறுப்பில் எடுத்து கொண்டு, தன் இதழ்களை அவளுக்கு கொடுத்து அவளை இளைப்பாற வைத்தது, பிர்லாவின் இதழ்கள்.

அவள் எங்கே இருக்கிறாளோ

அங்கு தான் அவன்

காதலும் உயிர் பெறும், உணர்வுகளும் உயிர்தெழும்

அவன் ஜனனத்திற்கான முழு அர்த்தமும் பெறும் !

அவள் எங்கே இருக்கிறாளோ

அங்கே தான் அவன்

மூர்க்கங்களும் மோட்சமாகும், தர்க்கங்களும் தகர்ந்தோடும்

நினைவுகளை இழந்து நின்றாலும்

அவள் நியாபகங்கள் மட்டுமே இவனுக்கு உயிரூட்டும் சுவாசமாய்

இவன் உயிர் அவளை பிரியும் தருவாயில் கூட

மரணமும் மறுபரிசீலனை கேட்டுகொண்டு நிற்கும்

இருவரால் ஜனனம் மீண்டும் பெற்றது காதல்.

ப்ருந்தா எங்கே !

பிர்லாவின் மரணமும் அங்கே!

சுபம்

 

 

 

 

 

Advertisement