“என்னை விட ப்ருந்தா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்களேடா” என கலங்கியவனின் தோள் தட்டி
“இனி நீயும் சேர்ந்து பாடா படுத்தாமல் ப்ருந்தாவை சந்தோஷமா வச்சுக்கிற வழியை பாரு” என அவனை அனுப்பி வைத்தான்.
இத்தனைக்கும் ப்ருந்தா பிர்லாவின் நெருக்கமான சம்பவங்கள், இருவருக்கும் மட்டுமே இடையேயான அந்தரங்கங்கள் ஏதும் அறியாத போதே அவளுக்காக இவன் கண்ணீர் சிந்த? மீதி கதை அறிந்தால்?
என்னவாகி போவானோ என அவனை படைத்த கடவுள் கூட அறிய மாட்டார்.
ப்ருந்தா ப்ருந்தா என மந்திரமாய் உச்சரித்து கொண்டிருந்தது அவன் உள்ளம்.
—————
அதே நிலையோடு கம்பெனி செல்ல பிடிக்காமல் மீண்டும் வீட்டிற்கே வந்து விட்டான்.
அப்போது தான் மாடியில் இருந்து இறங்கி வந்த பிருந்தாவின் கண்களில் விழுந்தான் பிர்லா.
வெகு நேரமாய் பிர்லாவின் விழிகள் இவளின் விழிகளோடு சிறைபட்டு கிடந்த்தது.
ப்ருந்தாவை முன் போலெல்லாம் பட்டும் படாமல் பார்க்கும் பார்வைகள், இப்போதெல்லாம் அவளை உரிமையாய் தொட்டு தொடர்ந்தது.
அவளை பார்த்தபடியே இவன் பாட்டிற்கு வந்தவன், இவளது மூச்சு காற்றை கூட உரசாமல் மாடிபடியை கடந்து அவன் அறைக்கு சென்று விட்டான்.
நேற்றைய சம்பவத்ததின் பின் உரிமை இருவருக்குள்ளும் இருந்தாலும், சிறு பிளவு மட்டும் நிரப்ப படாமல் தான் இருந்தது.
அது அவனது விலகலில் அப்படியே தெரிய எப்படி சரி செய்வது என தெரியாமல் தவியாய் தவித்து கொண்டிருந்தாள்.
அதற்கு அடுத்து வந்த நேரங்களிலும் அவனது பார்வை மட்டுமே இவளை உரசி கொண்டிருக்க, ஒரு வார்த்தை பேசவில்லை இவன்.
எங்கே கடுமையாக நடந்து கொள்வோமோ என பயந்தே அவளிடம் பேசுவதை தவிர்த்தான்.
நேரம் செல்ல செல்ல அவளது வலியும் வேதனையும் மட்டுமே மிச்சமாகி போனது.
எதையாவது பேசி அவனை சரி செய்திட வேண்டும், என அவன் தன்னிடம் பேசும் தருணத்திற்காக காத்திருந்தாள். ஆனால் அந்த நேரமோ அவளுக்கு வாய்க்கவே இல்லை வாயப்பேனா என்றது.
அவன் இருக்கும் இடங்களுக்கெல்லாம் இவளும் அவன் பின்னேயே வந்து கொண்டே இருந்தாள்.
“பிர்லா, ப்ருந்தா உன்னை தேடி தான் பின்னாடியே வர்றா, என்னன்னு பாரு!” என சந்திராவே சொல்லும் சூழ்நிலை உருவாக, அந்நிலையிலும் இவன் காதிலேயே வாங்காதது போல, இவளை தாண்டி சென்றுவிட்டான்.
உள்ளுக்குள் எழுந்த அழுகையை பெரும் பாடு பட்டு அடக்கி, அங்கிருந்து அகன்றாள்.
அவளின் அழுகையை உணர்ந்தவன், இம்முறை அப்படியே விடாமல் அவள் பின்னே அமைதியாய் வந்தான்.
திறந்திருந்த கதவினுள் நுழைந்து அவளது அறைக்குள் வந்தான்.
இவளோ அதை அறியாமல் கிடைத்த ஏதோ ஒரு பேக்கில் தன் உடைகளை அள்ளி திணித்துக்கொண்டிருந்தாள், நிறைந்து வழிந்த கண்ணீரை துடைத்தபடி.
ஆனால் அதை சற்றும் எதிர்பாராத பிர்லாவோ “எங்க கிளம்பிட்டு இருக்க, அதுவும் எல்லாம் டிரேஸையும் பேக் பண்ணிட்டுழ?” அவள் பின்னே நின்றபடி இவன் கேட்க
அக்குரலில் ஒரு நொடி திகைத்து நிதானித்தது இவளது செயல்.
ஆனால் அதன் பின்னும் கோபமே தலை தூக்க, கண்களை அழுந்த துடைத்து கொண்டு, அவன் புறம் திரும்பாமலேயே “ரொம்ப டார்ச்சர் பண்றீங்க பிர்லா இங்கே இனி இருக்க மாட்டேன். நமக்கு, நமக்கு கல்யாணம் எதுவும் வேணாம்” மிக கடினப்பட்டு வந்தது இவள் வார்த்தைகள்.
“நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்!” என பேசிக்கொண்டிருந்தவளை தடுத்தது இவன் குரல் மிக கடினத்தோடு
“அதுக்கு நீ முதலில் இந்த ரூமை விட்டு வெளியே போகனுமே”, கூடவே கதவு தாழ் போடும் ஓசை வேறு கேட்டது.
சட்டை பட்டனை கழற்றிவிட்டு, தலைக்கு மேல் கை உயர்த்தி நெட்டி முறித்தபடி ஒரு வித பார்வையுடன் நெருங்கினான்.
அவன் செய்ததோ விளையாட்டிற்காக,அவளை சற்று பயம் கொள்ள வைப்பதற்காக, அவளை இங்கே இருந்து வெளியே செல்ல அனுமதிக்க கூடாது என்பதற்காக தான்.
தவிர கணவன் மனைவி என அறிந்தும் இவளை விட்டு தள்ளி இருப்பதால் தான் இவளுக்கு இத்தனை கோபம் வருகிறதோ! என்ற எண்ணமும் ஒரு ஓரமாய் அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.
அதை சரி்செய்யும் பொருட்டு ‘இன்று இவளுடன் தான்’ என முடிவு செய்தபடி தூங்குவதற்கு தான் அவளோடு அவள் கட்டிலையும் நெருங்கியது.
ஆனால் அவனது நடையும் மேனரிசமும் அவளுக்குள் பழைய நியாபகங்களை தட்டி எழுப்பியது. ‘ABCD தான் வேண்டாம், பாப்பாவும் வேண்டாமா?’ முதல் முதலாய் தன்னை நெருங்கிய பிர்லா அவள் கண் முன் தோன்ற
“போஸ்” தன்னை மீறி முழு தாபத்தையும் கொட்டி கவிழ்த்தபடி அழைத்தே விட்டாள் ப்ருந்தா
ஒரு சில உணர்வுகளும் பார்வைகளும் அழைப்புகளும், காதலனை விட கணவனுக்கு மட்டுமே சொந்தம், அந்த சொந்தத்தை இவன் மனம் அப்பட்டமாய் உணர்ந்தது அவளது ‘போஸ்’ என்ற ஒற்றை அழைப்பில்.
அதை கலைப்பது போல் “உரசாத உசுர தான், உருக்காத மனசத்தான்” என பாக்கெட்டில் கிடந்த இவனது போன் மிக மெலிதாய் இசையெழுப்ப
அந்த பாடலை, அதன் வரிகளை, அந்த வரிகளை, அதற்கான அர்த்தங்களை, அனர்த்தங்களை இவன் கற்பித்ததும் இவள் கற்று கொண்டதும் நியாபக அடுக்கில் உலா போக, அதன் கனங்களை தாங்க முடியாமல் வாயை மூடிக்கொண்டு கதறியேவிட்டாள்.
நேரம்கெட்ட நேரத்தில் அழைத்த போனால் எரிச்சல் அடைந்த பிர்லாவிற்கு, இவளது அழுகை பதற்றத்தை கொடுக்க, போனை ஒரு ஓரமாய் வைத்து விட்டு இரண்டே எட்டுகளில் அவளை அடைந்து “ப்ருந்தா ஏன் அழற” இவன் கேட்டு முடிக்கும் முன், அவனை இழுத்து கட்டிக்கொண்டாள்.
அந்த மனைவிக்காக ஒற்றை அணைப்பு இது வரை அவன் அனுபவிக்காதது. மிக மிக வித்யசமாய் பட்டது.
ஆனாலும் அதை ஒதுக்கி வைத்து இப்போதைக்கு அவள் அழுகையை நிறுத்துவது மட்டுமே பிரதானமாய் பட, தன்னை இறுக்கி கட்டிக்கொண்டிருந்தவளின் தோள்களை மென்மையாய் வருடி ‘ஹேய், என்னடா ஏன் இப்படி அழற’ மேலும் கூடிக்கொண்டிருந்த இவளது அழுகையால் அவளை சமாதானப்படுத்த முயன்றான்.
ஆனால் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டிருந்த அந்த பாடலால், குறைவேனா என ஏறிக்கொண்டே இருந்தது இவள் அழுகை. அதுவும் ஒரு முறை அழைப்பு நின்று மறுமுறை அழைப்பில் பாடல் வரிகள் ஒலிக்கும் போது மேலும் மேலும் கூடிக்கொண்டே இருந்தது வள் அழுகை.
ஒரு வேளை இந்த பாடலால் தான் இவள் அழுகிறாளோ என பொறி தட்ட, கை நீட்டி எட்டி எடுத்து போனை ஆப் செய்து விட்டெறிந்தான்.
தோளோடு அணைத்திருந்தவளிடம் “ப்ருந்தா, இந்த பாட்டும், இந்த வரிகளும் நமக்கான பாட்டா?” இவன் ஒரு வித சந்தேகத்துடனே கேட்டான்.
இவள் பதில் சொல்ல மாட்டாள் என நினைத்திருக்க, இவளது பதிலோ ‘ஆம்’ என்ற இறுக்கமான அவளது அழைப்பில் செயலாய் வெளிபட்டது.
அதை உணர்ந்தவனுக்கு ‘இந்த பாடலிலும் தங்களுக்கான காதல் ஒளிந்திருக்கிறதா?’ என எழுந்த கேள்விக்கு ‘ஆம் ஒளிந்திருக்கிறது’ என அவளது இறுக்கமான அணைப்பு காட்டிக்கொடுக்க, தன்னிடம் இருந்து பிய்த்து பிரித்து எடுத்தான் அவளை.
அவள் தோள்களில் கை வைத்தபடி “ப்ருந்தா, உன்கிட்ட தான் கேட்குறேன் வாயை திறந்து சொல்லு” இவள் முகம் பார்த்து பிர்லா உறும
“நம்பளோட பர்ஸ்ட் நைட்” என்றவளுக்கு அதற்கடுத்து சொல்ல முடியாமல், இவன விலக்கி வைத்திருந்த இடைவெளியே இறுக்கமாய் நிரப்பியபடி மேலும் அவனை இறுக அணைத்து கொண்டாள்.
சட்டை பட்டனில் பதியும் போதெல்லாம் அழுகையுடனோ, இயலாமையுடனோ தன்னை விட்டு விலகி செல்பவளின் பார்வைக்கு இன்று அர்த்தம் கிடைத்தது.
‘தன்னை வேண்டாம் என்கிறாள்’ என்ற மறுப்புக்காக வந்த கண்ணீர் அல்ல
‘இவன் மட்டுமே வேண்டும்’ என ஏங்கிய ஏக்கத்திற்கான அர்த்தம் அது என இப்போது புரிந்தது.
தன்னை இறுக்கி கிடந்தவளின் முகத்தை மட்டும் நிமிர்த்தினான், முதல் நாள் இங்கு வந்த போது ‘ஏன் இப்படி பார்க்கிற’ என கேட்ட போது, அவள் கண்களில் கண்ட அதே பார்வை இன்று ப்ருந்தாவின் கண்களில் மீண்டும் கண்டான்.
கண்ணீரோடு உருண்டு உருண்டு தன்னவனை பார்த்திருந்தது அவளது கருவண்டு விழிகள், சில நொடிகளில் பட்டன்கள் கழன்டு கிடந்த அவன் சட்டையில் பார்வை இடம் மாற, அதை தொடர்ந்த இவன் விழிகள்
“சட்டை பட்டனில் என்ன தான் இருக்கு எதுக்குடீ இப்படி பார்க்க! சொல்லி தொலையேன்!” மற்ற நேரமாக இருந்தால் நிச்சயமாய் சொல்லி இருக்க மாட்டாள், ஆனால் இருவருக்கும் இருந்த நெருக்கம் அவளை சொல்ல. வைத்தது.
“இது உங்களோட மேனரிசம், அதுவும் நீங்களும் நானும்” அதற்கு மேல் அவளால் சொல்ல முடியாமல் போனது.
இப்போது அவன் அணைப்பிலிருந்து முழுதாய் விலகுவது இவள் முறையானது. விலகியவளின் முதுகு அழுகையில் குழுங்கியது.
அவள் சொல்லிய வார்த்தைகளை விட சொல்லாத வார்த்தைகளே முழு அர்த்தத்தையும் கொடுக்க, அவன் உடல் சிலிர்த்து அடங்கியது.
ஆக மொத்தம் அவ்வப்போது பார்க்கும் பார்வையின் அர்த்தமும் இப்போது தெளிவாய் விளங்க, அவளின் ஏக்கங்கள் நிறைந்த பார்வையும் தெளிவாய் புரிந்தது.
‘இப்படி ஒரு நிலையிலா, தன் ப்ருந்தாவை வைத்திருக்கிறோம்’ என்ற எண்ணமே அவனுக்குள் வெடித்து சிதறியது.
விலகி நின்றிருந்தவளை நோக்கி நீண்டது அவன் கைகள். ஒரு கை விலகி இருந்த அவளிடையை பற்றி தன்னோடு சேர்த்து இறுக்க, மறு கையால் அவள் தாடையை அழுத்தி பிடித்து தன் பக்கமாய் திருப்பி தன் முகம் காண செய்தான்.
ஓரிரு நொடிகள் வன் கண்ணோடு கவிதை பேசியவன், அவள் இதழோடு இதழ் பதித்தான்.
வன்மையாய் துவங்கியது அவன் முத்த யுத்தம்.
முத்த யுத்தம் கட்டில் யுத்தமாய் மாற எத்தனிக்க, அதற்கு வாகாய் சில பல நொடிகளில் கட்டிலுக்கு இடம் மாற்றி இருந்தான் அவளை.
முகத்தை நிறைத்த முத்தங்கள் முகத்தை விட்டு பயணத.தை துவங்கியது.
தன்னவளை மென்மையாய் அணுக நினைத்தவனுக்கு, ப்ருந்தாவின் இணக்கம் கொடுத்த மோகத்தில், சற்றே மூர்க்கமாகி போனான்.
அணைத்திற்கும் இடம் கொடுத்தாள், அவனுக்காக கொடுத்தாள், அவனுக்காக மட்டுமே இடம் கொடுத்தாள்.
ஆனால் நேரம் செல்ல செல்ல அவன் மூர்க்கத்தை லேசாய் உணர துவங்கி, பொறுத்து போக நினைத்தவளுக்கு இறுதியாய் முடியாமல் போக
“பிர்லா” என அலறியபடி அவனை தடுத்து நிறுத்தினாள் ப்ருந்தா.
அதில் சிறிதும் கோபம் கொள்ளாமல், அவள் நிலை உணர்ந்து அப்படியே அவளை தன் அணைப்புக்குள் கொண்டு வந்து.
“ஒரு மகனா, என்னோட பிகேவியர் பத்தி அம்மாவும் அப்பாவும் சொல்லி கொடுத்தாங்க
ஒரு மனைவியா எனக்கு நீ சொல்லிக்கொடு உன்னோட பிர்லா எப்படின்னு! கேட்டுகிறேன். ஆனால் இப்போ இல்லை இனிமேல் கேட்டுகிறேன்” என்றவனை புரியாமல் இவள் பார்க்க
“எனக்கு இது முதல் தடவை, எதையும் உன்கிட்ட கேட்டு செய்ற அளவுக்கெல்லாம் பொறுமை இப்போ சுத்தமா இல்லை” என்றவன், கண்களாலேயே அவளின் அனுமதி வேண்ட,
லேசய் கண்கள் கரித்து கொண்டு வந்தாலும், அவனை தன்னோடு இறுக அணைத்து கொண்டு சம்மதத்தை வெளிப்படுத்தவும், ஆளே மாறிப்போனான் பிர்லா.
அவன் மூர்க்கத்தை உடைத்தெறியும் வழிதெறியாமல் இவனுக்கு முழுதாய் அடி பணிந்தாள் ப்ருந்தா.
அவனுக்கு தோதாக இவளும் இசைய இசைய ‘ப்ருந்தா ப்ருந்தா’ என உருகி கரைந்து காணாமல் தான் போனான் பிர்லா.
வெகு நேரம் சென்றும் அவளை விலக அனுமதிக்கவில்லை பிர்லா. ஆனால் விலக வேண்டுமே.
முழுதாய் கலைந்து களைத்து கிடந்தவளுக்கு சில நிமிடமாவது ஓய்வு வேண்டுமே! என விலகினான்.
இவன் விலகிய நிமிடமோ அவன் மேலேறி படுத்து கொண்டாள் ப்ருந்தா.
எனினும் அவளை விட்டு விலகும் போதும் காமம் கடந்தும் காதல் மட்டும் கடக்காமல் அப்படியே அவனுள் தேங்கி கிடந்தது.
தன் மார்பில் முகம் பதித்து படுத்திருந்தவளின் கன்னம் வருடினான்.