Advertisement

“நீ நினைக்கிற மாதிரி கிடையாதுடா சீனிவாஸ் ” ஏதையோ தப்பாக நினைத்துக்கொண்டானோ என்ற தவிப்பில் சந்திரா சொல்ல

“டாட் நீங்க நினைக்கிற மாதிரியும் கிடையாது சீனிவாஸ்”  அவருக்கு புரிந்தும் புரிந்திராத பதில் ஒன்றை சொல்ல

“டேய் ஏதோ முடிவு பண்ணிட்ட நடத்துடா  ஆனால் எதுவும் பிரச்சனையில்லாமல் பண்ணு” என அத்துடன் அவன் தந்தை விலகி கொண்டார்.

அதன்படி டென்டர் கொட்டேசன் எல்லாம் பிர்லாவின் கைக்கு தான் சென்றது

டென்டர் விடும் நாளும் வந்தது, என்னவோ ஏதோவென மனதின் ஒரு மூலையில்சற்று பதட்டத்துடன் இருந்த சந்த்ரபோஸூக்கு அந்த பதட்டம் சற்று அதிகம் தான் ஆனது

காரணம் டென்டர் சீனிவாஸ்க்கு கிடைக்கவில்லை  கிடைத்தது என்னவோ வேறு ஒருவருக்கு

சீனிவாஸ்க்கு கிடைக்கவில்லை  என்ற கோபம்

வேறொருவருக்கு கிடைத்த சந்தோஷம்  பிர்லாவிற்கு

இருவரின் முக மாறுதல்களை பார்த்து அதன் விளைவுகளை எண்ணி பதட்டம் கொண்டது சந்த்ரபோஸின் மனம்

“டேய், என்னடா இந்த தடவே என்ன ஏமாத்திட்டேல ” பிர்லாவின் கல்லூரியில் வேலை பார்க்கும் அட்டெண்டரை பிடித்து மிரட்டியதோடு மட்டும் இல்லாமல் அவனை இழுத்து வைத்து இரண்டடி வைக்கவும் செய்தான் சீனிவாஸ்

“கிட்டதட்ட ஐஞ்சு முறை உனக்கு தான் டென்டர் கிடைச்சிருக்கு, அதுவும் என் மூலமாக தான்  அதுவும் எப்படி  எல்லாம் நீ கொடுத்த பணத்துக்கு தான்

பணத்துக்கு தான்  நியாயமா இருப்பேன்  இருந்தேன்  அவ்வளவு தான்  இதுக்கு மேல சந்தேகபடாத ” என அந்த அட்டென்டர் பேசி செல்ல  ‘பொய்‘ என தோன்றவில்லை சீனிவாஸ்க்கு  ‘இந்த தடவை பிர்லா தான் ஏதோ கோல்மால் பண்ணிருக்கான்’ என நறநறவென பற்களை கடித்தான் சீனிவாஸ் .

ஆனால் இங்கோ  பிர்லா சொல்வதை நம்ப முடியாமல்,

“பிர்லா, என்ன நடக்குது இங்க! ஸ்ரீநிவாஸா இப்படி?” என சந்த்ரபோஸ் சற்று குழப்பமாய் கேட்க

“ம்” என ஆமோதிப்பாய் தலையசைத்தவன் “நம்ப கம்பெனியில் யாரோ ஒருத்தர் சீனிவாஸ்க்காக வேலை பார்க்குறாங்க!” என

“அதெப்படி உனக்கு தெரியும் ?”

“ஒவ்வொரு முறையும் சீனிவாஸ் கைக்கு தான் போகும்னு நீங்க சொல்லும் போதே டௌட் தான், அதுவும் ஸ்ரீநிவாஸோட டென்டர் கொட்டேசன் தான் எப்போவும் கடைசியா வரும்னு சொல்லும் போது இன்னமும் சந்தேகம்

அதான் ஸ்ரீநிவாஸோட கைக்கு எல்லாரோட கொட்டேசன் அமௌண்டும் தெரிய முன்னாடி நான் தெரிஞ்சுகிட்டேன், பாலா க்ரூப் தான் இருக்குறதிலேயே கம்மியான கொட்டேசன் போட்டு இருந்தாங்க  ஒரிஜினல நான் தூக்கிட்டு, டூப்ளிகேட்டா வேற ஒரு அமௌண்ட்க்கு டென்டர் ரெடி பண்ணி எப்போவும் வைக்கிற கப்போர்ட்டில் வச்சுட்டேன்

நான் கெஸ் பண்ணின மாதிரி பாலாவை விட சின்ன அமௌண்ட் வித்யாசத்தில் தான் சீனிவாஸ் கம்பெனியோட டென்டர் வந்தது ”

“அப்பறம்!”

“அப்பறம் என்ன  டூப்ளிகேட்ட எடுத்துட்டு ஒரிஜினலை ப்ளேஸ் பண்ணிட்டேன்” என வழக்கம் போல் கண்ணடித்தான் அந்த குறும்பு கண்ணன்.

“ஏண்டா? நம்ம ஆபிஸ் ரொம்ப சேப்டியா  இருக்கேடா ! சிசிடிவி கூட இருக்கேடா !” என

“உங்களுக்கே ஆப்பு வச்சவன் சிசிடிவியை விட்டு வைப்பானா அதிலேயும் ஏதாவது வேலை பார்த்திருப்பான் ”

“அப்போ அவனை எப்படி கண்டுபிடிக்கிறது ?”

“அவனை மாதிரி ஏதாவது ப்ராடு வேலை பார்த்து தான் ”

“அதான் எப்படி”

“நூதனமா அவனுக்கு கொள்ளையடிக்க தெரிஞ்சா, நமக்கு நூதனமா காப்பத்தற திறமை தெரிஞ்சு இருக்கனும் பா !”

 “சரி சரி  இது பார்வதிதேவிக்கு எதுவும் தெரிய வேணாம்…எதுவும் ஹெல்ப் வேணும்னா கேளு  நீயா டீல் பண்ணாத !”என அவனை அலார்ட் செய்ய மறக்கவில்லை அவர்

இப்படி தான் ஆரம்பமானது பிர்லாவின் தொழில் உக்திகள். அதன் பொருட்டு முக்கியமான முடிவுகள் அனைத்தும் அவன் கேட்காமலேயே ஒப்படைக்கப்பட்டது சந்த்ரபோஸ் மூலமாக.

—————

பகல் நேரம் முழுவதும் கம்பெனியை பற்றியும், இரவு முழுவதும் ப்ருந்தாவை பற்றியும் எண்ணியபடியே நாட்கள் ஓட ஒரு கட்டத்திற்கு மேல் ப்ருந்தாவே அவன் மனம் முழுதையும் ஒட்டுமொத்தமாய் ஆட்கொண்டாள்  பார்த்த இரண்டே சந்திப்புகளில் இதயத்தை இரண்டாய் பிளந்து, ஒட்டு மொத்தமாய் இவளே ஆட்கொண்டாள்.

 இதற்கு மேல் தாங்கவே முடியாது, இதற்கு ஒரு தீர்வை கண்டே ஆக வேண்டும் என ஒரு முடிவை கையில் எடுத்தான். தனக்கு இருக்கும் நோய்க்கு திருமணம் செய்து கொள்ளலாமா?  கூடாதா ? என்ற கேள்வி தலையாய கேள்வியாய் பிறப்பெடுக்க  அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என கெங்காவை தேடிச் சென்றான்

மருத்துவமணையில் வைத்து கெங்காவை பார்த்துவிட்டு, தனக்கு தேவையான சந்தேகங்களை தீர்த்து கொண்டு வீட்டிற்குள் வந்தவனை பிடித்துக்கொண்டாள் பார்வதிதேவி

 “பிர்லா, கெங்காகிட்ட எல்லாம் சொல்ல தெரிஞ்சு இருக்கு ஏன் என்கிட்ட சொல்லலை” என்றபடி பார்வதிதேவி வர

‘ஐய்யோ மாம்க்கு எப்படி தெரியும் ?’ என குழப்பம் கூடவே அவரின் கோபத்தை பார்த்து

‘மாம் கிட்ட சொல்லிட்டே போய் இருந்திருக்கலாம் !’ தாமதமாய் எழுந்த எண்ணத்திற்கு தடையிட்டு நிமிர்ந்து நின்றான்

குழப்பத்துடன் பார்த்திருந்த சதானந்த்திடம் “கெங்கா வீட்டுக்கு உங்க பேரன் போய் இருக்கான் மாமா  நீங்களாவது என்னனு கேளுங்க !” என அவரையும் பார்வதிதேவி இழுக்க

“என்னது ?” என அதிர்ந்து பார்த்தார் சதானந்ம் !

“கெங்கா வீட்டுக்கு நீ போனியா ?” என சந்த்ரபோஸூம் புருவங்கள் மேலேற கேட்க

“இப்போ தான் பிரச்சனை இல்லாமல் நிம்மதியா இருக்கிறோம், மறுபடியும் ஏண்டா ஆரம்பிக்குற !” மரகதமும் வர

“என்னனு கேட்போம் தேவி கோபப்படாத!” என சதானந்ம் சமாதானம் செய்ய

“கோப படக்கூடாதுனு நினைச்சாலும் அப்பாவும் மகனும் பண்ற வேலைக்கு கோபம் மட்டுமா வருது!” என ஏகத்துக்கும் எகிறியவர் “இத்தனை பேர் கேட்டும் ஏதாவது பதில் சொல்றானா பாருங்க” இன்னும் முறைத்தபடி பார்த்திருக்க

“மாம், அவங்களை ஒரு டாக்டர்ன்ற முறையில் தான் பார்க்க போனேன் வேற எந்த ஒரு காரணமும் இல்லை” சட்டென போட்டு உடைத்தான் பிர்லா

‘தனக்கு திருமணம் செய்து கொள்ள தகுதி இருக்கிறதா என தான் கேட்க போனேன் ’ இதை எப்படி சொல்வது என தெரியாமல் நின்றிருக்க

“டாக்டரா  கெங்காவை மீட் பண்ண போய் இருந்தனா ? என்ன அர்த்தம் ? மறுபடியும் பிட்ஸ் எதாவது வந்ததடா ?” என பார்வதிதேவி கதி கலங்கிப்போய் நின்றிருந்த இடத்தைவிட்டு பிர்லாவின் அருகில் வந்து கேட்க ?

“ஐய்யோ பிட்ஸா !”

“என்ன பிர்லா மறுபடியுமா ?” என ஆளாளுக்கு வர

“ஐய்யோ அப்படிலாம் ஒன்னுமில்லை ” அவனது அலறலில் வீடே அதிர்ந்து நின்றது

“அப்போ வேற எதுக்காகடா  போன ?” சந்த்ரபோஸ் அவனை தன் புறம் திருப்ப

“நான் கல்யாணம் பண்ணிக்கலாமா வேண்டாமானு கேட்க போனேன் போதுமா !” என ரத்தம் பாய்ந்த முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டான்

என்னவோ ஏதோ வென கதிகலங்கி நின்றிருந்த  பிர்லாவின் வீட்டார் அத்தனை பேரின்  பதட்டமான முக பாவம் சிறு ஆச்சர்யத்துடன் சிரிப்புக்கு தாவியது.

எல்லோருக்கும் அவனை கிண்டல் செய்யும் எண்ணமிருந்தாலும் அதை இப்போதைக்கு தள்ளி வைத்து அவனையே குறுகுறுவென பார்த்திருக்க

மேலும் அவர்கள் முன் நிற்காமல் தன் அறைக்குள் புகுந்து கொண்டான் பிர்லா.

‘தன் மகனுக்கு தான் நிம்மதியான வாழ்வு கிடைக்கவில்லை  தன் பேரனுக்காவது அமைய வேண்டும்’ என இஷ்ட தெய்வத்திடம் வேண்டினர் அந்த வயதான தம்பதியினர்.

தங்களின் திருமண வாழ்க்கையின் தோல்வியினால் பிர்லா திருமணத்தையே வெறுத்துவிடுவானோ என பயத்தில் இருந்த சந்த்ரபோஸ்க்கு அத்தனை மகிழ்ச்சி.

‘ஐய்யோ நாம் எதிர்பார்த்த தருணம் வந்தேவிட்டது இனி என்ன செய்வது! அந்த ப்ருந்தா தான் தன் மருமகளா? இல்லை இது வேறு  பெண்ணா?’  என  குழப்பத்தில் இருந்த பார்வதிதேவியிடம்

“இதுக்கு மேலேயும் டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் பார்வதிதேவி  வா கெங்காகிட்டயே நாம பேசிக்கலாம்”  என சந்த்ரபோஸ் தன் மனைவியை இழுத்துக் கொண்டு சென்றார் முகம் நிறைந்த மகிழ்வுடன்

இந்த முறை கெங்காவை ஒரு மருந்துவராகவே இருவரும் அனுகினர்.

“பிர்லாவுக்கு மேரேஜ்க்கு அப்பறம் எதுவும் ப்ராப்ளம் வராது தானே!” தேவி கேட்க

“அதை சொல்றதுக்கு நான் கடவுள் இல்லை!”

“டாக்டரும் கடவுளுக்கு சமானம் தான்  சொல்லுங்க” என

“கிட்ட தட்ட பத்து வருசமா இந்த நோய் அவனுக்கு இல்லை, அதாவது திரும்ப பிட்ஸ் வரலை, வராத அளவுக்கு பிர்லாவுக்கு ரொம்ப அமைதியான லைப் கிடச்சிருக்கு, இது இப்படியே கண்டின்யூ ஆனால் பிர்லாவுக்கு அவனோட லைப்க்கு நான் கியாரண்டி தரேன் அதர் வைஸ்” என இழுக்க

“அதர் வைஸ் னா ?”

“அதர் வைஸ் டார்ச்சர் பண்ற மாதிரி ஒரு லைப் பார்ட்னர் அவனுக்கு கிடைச்சா நான் எந்த ஸ்சூரிட்டியும் தர முடியாது” என

பயம் கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை கெங்காவிற்கு ஆனால்  உண்மையையும் சொல்ல வேண்டிய சூழ்நிலை அவருக்கு.

“முழுசா அவனை பத்தி் அந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டு கல்யாணம் பண்ணி வைங்க. அதுதான் ரொம்பவே முக்கியம்  மத்தபடி பேமிலி லைப்பில் எந்த ஒரு ப்ராப்ளமும் அவனுக்கு இல்லை. குழந்தை பெத்துகிறதிலேயும் எதுவும் பிரச்சணை இல்லை” என வேண்டிய பதிலை கொடுக்க

இன்னமும் தெளியாத தேவியை பார்த்து “நல்லா இருப்பான் தேவி  நம்பிக்கையோட கல்யாணம் பண்ணி வைங்க   பிர்லாக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு  அதுக்காகவாவது நாம அந்த பொண்ணை அக்சப்ட் பண்ணி தான் ஆகனும்“ என

தன் வீட்டு குடும்ப குத்துவிளக்கு குடிகாரியா? என நினைக்க நினைக்க சற்று அசூசையாக தான் இருந்தது, தேவிக்கு.

அதை விட பிர்லாவிற்கு அந்த பெண் தான் என்பது, கடவுள் போட்ட முடிச்சென்றால் தன்னால் என்ன! அந்த கடவுளால் கூட மறுக்க முடியாது, என்ற தீர்க்கமான முடிவுக்கும் வர தூண்டியது

“தேங்கஸ் கெங்கா” என பார்வதிதேவி எழ “ம்” என தலையசைத்து அனுப்பி வைத்தார் கெங்கா

வெளியில் வந்தபின் “நீ காருக்கு போ நான் கெங்கா கூட பேசிட்டு வரேன்” என சந்த்ரபோஸ் சொல்ல

“நல்ல காரியம் நடக்க போகுது, பழைய மாதிரி என்னை மாத்தாமல், என்னை பத்ரகாளியா ஆக்காமல் இருந்தா சரி தான்” என்ற முறைப்பு கொடுக்க மறக்கவில்லை தேவி.

சுருக்கென வலித்தாலும் கெங்காவை தேடிச்சென்றார்.

“கெங்கா” என அறைகதவை தட்டிவிட்டு உள்ளே வந்தவரை ‘எதிர்பர்த்தேன்’ என்றொரு பார்வையுடன்

“உட்காருங்க சந்திரா ” என

அதெயெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை அவர் “முன்னாடிலாம் பேசவாவது செஞ்சே? இப்போலாம் ஏன் என்கிட்ட சரியா கூட பேசறதில்லை! நல்லா இருக்கியானு கேட்க கூட நேரமில்லையா உனக்கு? ஒருவேளை நான் முக்கியமா படலையா?” கேட்க

பிர்லாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனதில் இருந்து சிறிது சிறிதாய் விலக ஆரம்பித்து இப்போதெல்லாம் முழுதாய் விலகியிருந்தார்

வீண் விவாதங்களை தவிர்த்த இருவருமே நேரடியாய் பேச தொடங்கினர்.

“புருஷனை விட பிள்ளை தான் முக்கியம்னு நினைக்கிற சாதாரண தமிழ் பொண்ணுங்களில் நானும் ஒருத்தி! உங்களை விட உங்க பிள்ளை தான் எனக்கு முக்கியமாய் படறான்”  என நேரடியாய் பேச

கெங்கா சொல்லாமல் விட்ட மற்றவை எல்லாம் ஆணியடித்தார் போல சந்த்ரபோஸின் முகத்தில் அறைந்தது.

தன்னைவிட தன் மகன் முக்கியமா ?

“முதலில் இருந்தே அவனை பிடிக்குமா கெங்கா?”

“உங்களை பிடிச்சு போனதினால் தான் பிர்லாவையும் பிடிச்சது  நமக்கிடையிலான பேச்சில் பிர்லாவை பற்றி தான் ஜாஸ்தியாக பேசி இருக்கேனு எனக்கு அடிக்கடி தோணும், உங்களுக்கு தோணினதில்லையா?”

‘ஓ  அதனால் தான் முன்னெல்லாம் பிர்லாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆர்வமாய் கெங்கா கேட்டாளா?’

“பிர்லாவுக்கு அப்பாவா நடந்துகோங்க சந்திரா  , எனக்கு கணவனா வேண்டாம்  அவ்வளவு தான்  சொல்வேன்.!”

“பெத்தவங்க பண்ற பாவமெல்லாம் பிள்ளைங்களை தான் வந்து சேருமாம்.  நீங்க தேவிக்கு பண்ணின துரோகத்துக்கு கடவுள்  பிர்லாவுக்கு தண்டனை கொடுத்துட்டான், அப்போ  நான் தேவிக்கு பண்ணின துரோகத்துக்கு? கடவுள் எந்த தண்டனையை எனக்கு கொடுக்க போறானு தெரியலை சந்திரா. என்னால ஒரு குடும்பமே வெட்டுபட்ட மாதிரி கிடக்குறதை பார்க்கும் போது  தான் என்னால் தாங்க முடியல

நாம வாழ்ந்து முடிச்சிட்டோம்  ஏதோ ஒரு வகையில் எனக்கு திருப்தி தான்.  ஆனால் பிர்லா இனி தான் அவனோட வாழ்க்கை ஆரம்பிக்கப்போகுது  நம்ம வாழ்க்கை வெளியில் தெரியறதை நான் விரும்பலை.

நமக்காக கொஞ்ச வருசம் வாழ்ந்தோம் இனி பிர்லாவுக்காக வாழ்வோம்” என

இதுவரை சந்திராவின் கண்கள் காட்டாத கலக்கத்தை இன்று காட்ட

“நம்ப பிள்ளைக்காக சந்திரா” என கை கூப்பி நிற்க

அதற்கு மேல் ஒரு நொடி கூட தாமதிக்காமல் சிறிதாய் திறந்திருந்த கதவை மேலும் அகலமாய் திறக்க

அங்கே தேவி நின்றிருந்தார்  சந்திராவின் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் உருண்டோட

அதை துடைக்க வேண்டும் என தோன்றாமல் விறு விறு என சென்று காரில் ஏறினார்.

விடாமல் அடித்த ஹாரன் சத்தத்தில் தன் விழியிலும் வழிந்த விழிநீரை சுண்டிவிட்டு காரினுள் ஏறினார்.

வீட்டிற்கு வந்தவர்களுக்கு பிர்லாவின் திருமணத்தை உடனே ஏற்று நடத்தும் மனநிலையில் இல்லை

Advertisement