Advertisement

அவன் கையில் ஒரு விசிட்டிங் கார்டை திணித்தார். தினமும் காலை ஆறு டூ ஏழு நீ இங்கே இருந்தே ஆகனும்  உங்கப்பாகிட்ட அல்ரெடி சொல்லிட்டேன்  உங்கம்மா நான் சொன்னா கேட்க மாட்டாங்க  அதான் இப்படி வர வேண்டியதா போச்சு” என சென்றுவிட்டார்

விசிட்டிங் கார்டை பார்த்தவனுக்கு “அடுத்த ட்ரீட்மெண்டா!” என தலையில் கை வைக்க தான் தோன்றியது

மறுநாள் காலையில் எழுப்பி விட்டதே பார்வதிதேவி தான் சந்த்ரபோஸ் தான் கூறியருந்தார்   இந்தளவாவது நெருக்கம் வந்ததே என யோசித்தபடி  கெங்கா சொன்ன இடத்திற்கு கிளம்பினான்.

கெங்கா சொன்ன இடத்தில் அவனுக்கு முன்பாக அவர் இருக்க ”வா பிர்லா உனக்காக தான் வெய்ட்டிங் ” என அழைத்து சென்றார் அங்கிருந்த ஒருவரிடம் “பிர்லா “ என அறிமுகம் செய்து “பிர்லா இவங்க கெவின் ” என அவரையும் அறிமுகம் செய்து வைத்தபின்  பிர்லா அவரிடம் ஒப்படைக்கபட்டான்

“ஒரு ஆறு மாசம் இங்கே தான் கன்ட்னியூ பண்ணி ஆகனும்   அப்பறம் வீட்டில் இருந்து பண்ணிக்கலாம்  ஆனா அதுக்கப்புறமும் மன்த்லி ஒன் டைம் வந்தாகனும்” என மேலும் அவனது உடல் நிலையை பற்றி தனக்கு தேவையானவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டபின்

“இன்னையில் இருந்து சிம்பிளான யோகா ஸ்டார்ட் பண்ணலாம்  ஆனால் போக போக கொஞ்சம் கஷ்டம் தான்  மனசை கன்ட்ரோலா வச்சுக்கனும்  உன்னோட, கண்ட்ரோலில் வச்சிக்கனும் அதுக்காக தான் ” என்றவர் மன அழுத்ததை வேரோடு பிடுங்கி எறியும்  யோகா எனும் கலையை அவனுக்கு கெவின் மூலமாக கற்று கொடுக்க துவங்கினார்.

ஆம்  கெங்கா தான் அவனை யோகாவில் சேரும் படி வற்புறுத்தி சேர்த்து விட்டார்  பிர்லாவின் நோய்க்கான காரணம் அவனது பெற்றோர்கள் மட்டுமில்லை  எளிதான விசயங்களை கூட மனதால் ஏற்கமுடியாமல் அழுத்ததிற்கு உள்ளாவதும் தான்.

அதன்படி அவனுக்கு தேவையான அனைத்து யோகாக்களையும் கற்று கொடுத்த சில மாதங்களில் அவன் கெங்காவுடன் இணைத்துவிடப்பட்டான்.

கெங்காவிற்கு சற்று தள்ளி அமர்ந்தான் அங்கு வரும் ஒவ்வொருவரும் நோயின் தாக்கத்திற்கேற்ப ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து பல வகை யோகாக்களை செய்து கொண்டிருப்பர்  அப்படியானால் ? தன்னுடன், தான் செய்யும் தே்யோகாக்களை கெங்காவும் செய்கின்றார்  அப்படியானால் அவருக்கும் வலிப்பு நோய் இருக்கிறதா ? சிறு அதிர்வுடன் ஒரு கேள்வி மனதில் எழ  அதை ஒதுக்கி வைத்துவிட்டு யோகாவில் ஆழ்ந்தான்.

முடிந்து வெளி வரும் போது

“உங்களுக்கும் பிட்ஸ் இருக்கா ” என பிர்லா தயங்கி தயங்கி கேட்க

“நம்ம கூட யோகா செய்த அத்தனை பேருக்கும் இருக்கு ”என கெங்கா இதழ்வளைவுடன் சொல்ல

“அப்போ எங்கப்பா உங்களை ஆசை பட்டு கல்யாணம் பண்ணக்கலையா ” இரக்கத்தில் நடந்ததா உங்க கல்யாணம்? என பாதியை கேட்டும் மீதியை கேட்காமலும் நிறுத்த

கெங்காவின் புருவங்கள் இரண்டும் உச்சி்மேட்டுக்கே செல்ல “நீ ஓவர் மெச்சூர்டா பேசற பிர்லா “என

“சாரி ”என

“கெங்காம்மானு அன்னைக்கு ஈசியா சொன்ன  இப்போ ஏன் வர மாட்டுது ?” என

‘தந்தையுடனான உறவு முடிந்ததை இருவரின் நடவடிக்கையே காட்டும் போது பிர்லாவால் அந்த உறவை புதுபித்து கொள்ளமுடியவில்லை.

அதை புரிந்தவராய் “உங்காப்பாவோட உறவை தான் வெட்டிஇருக்கேன்  உரிமையை இல்லை ”  என வார்த்தைகளையும் வெட்டி பேசி விட்டு சென்றார்.

அதன் பின் பிர்லா யோகா கலையில் கற்று தேர்ந்து,  அவனது உடலையும், மனதையும் உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல், அதனை தள்ளி நிறுத்தும் வித்தையை ஆழ்மனதின் ஒத்துழைப்புடன் செவ்வனே கற்று கொண்டான்.

அதையும் மீறி ஒரு நாள் கெங்காவின் தனிமை வாழ்க்கை உறுத்த தன் தந்தையிடம் “என்னால் தான் எல்லா பிரச்சனையும் “ என கேட்டுவிட

“உன் மேல எந்த தப்புமில்லை அத முதலில் புரிஞ்சுக்கோ  தவிர நீ இதெல்லாம் மனசில் போட்டுக்காதே, நாங்க வாழ்ந்து முடிச்சிட்டோம்  ஆனா நீ  வாழ வேண்டியவன் !”  என அவனுக்காக பார்வதிதேவியுடனான தன் வாழ்விற்கே திருப்பினார்

இடையில் ஒரு நாள் மரகதாம்பாள் தன் பேரனுக்கு இரும்பினால் செய்யப்பட்ட ஆனால் வெகு நேரத்தியாய் ,வெறும்  பதினாறுகிராம் எடையில் இருந்த ஒரு செயினை போட்டுவிட்டார் அதில் கூடுதலாய் சிவ லிங்க டாலருடன்

அது இரும்பால் ஆனது என பார்த்த போதே தெரிந்து போனது அது பிர்லாவின் கழுத்தில் ஏறியதற்கான காரணம் ! வலிப்பு நோய்க்காக இரும்பா? என கேலி எழுந்தாலும் பிர்லாவும் மறுக்கவில்லை  வாங்கி போட்டு கொண்டான்

பிர்லாவின் உடல்நலத்திற்காகவே ஒன்றானனர் பார்வதிதேவியும் சந்த்ரபோஸூம்  அவர்களுக்காகவே பிர்லாவும் மாறிக்கொண்டான்,நிறைய விசயங்களில்

உடல் மனம் என அத்தனையையும் கட்டுக்குள் கொண்டு வந்து, தன் படிப்பில் கவனம் செலுத்தி, கொடுத்த மருந்துகளும் எடுத்துக்கொண்ட மருத்துவமும் அவனுக்கு வலிப்பு நோயை தூர விரட்டியிருந்தது  ஆனாலும் மருந்துகள் சாப்பிடுவது நின்றபாடில்லை

வருடங்கள் உருண்டோடி கல்லூரி வாழ்க்கை முடிந்து தந்தையுடனும் தாயுடனும் இரு நிர்வாகங்களிலும் பொறுப்பெடுத்து இருந்தான்  இருபத்தி ஏழு வயதை கடந்த ஆண்மகனின் முழு பரிணாமமும் அவன் உருவத்தில் மொத்தமாய் தெரிந்தது.

தொழிலில் கால்வைத்தபின் அவனது மற்றொரு அங்கமாய் மாறப்போன மற்றொன்று ‘பப் – ரிதமிக் பப் ’

 அங்கே தான் தன் வாழ்வு இடம் மாறப் போகிறது என தெரியாமல் அங்கேயே கழித்தான் தன் விடுமுறை நாளையும், பர்சில் இருந்த பணத்தையும்….யோகா உடல்நலத்திற்கென்றால், டான்ஸ் அவனது ஆசைக்காக கற்று கொண்டான்.

ஏனோ  தம், டிரிங்கிங் இரண்டிலும் ஆர்வம் இருக்காது… அதை விட கூடவே கூடாது என ஒட்டு மொத்த குடும்பமும் சத்தியம் வாங்கிருக்க . பப் டான்ஸ் மட்டும் தான்  வாரம் ஒருமுறை தன் ஆட்டத்தை காட்டாமல் அங்கிருந்து அகல மாட்டான்….

கவர்ச்சியான அவனது முகம், அதீத மகிழ்ச்சியில் வைரமாய் ஜொலித்தாலும், அதையும் தாண்டிய ஏதோ ஓர் வசீகரம் அவன் முகத்தில் இருக்கும்.

“எப்படி இருந்தாலும் கேர்ள் பிரெண்டை அக்செப் பண்ண மாட்டான்… பின்னே ஏண்டா இத்தனை ஆட்டம் ”  என ஒவ்வொரு வாரமும் புலம்பித் தள்ளிவிடுவான் ஸ்ரீநாத்  அந்தளவு இருக்கும் அவன் ஆட்டம்.

‘கன்டெம்ப்ரரி சால்சா’ எனப்படும் பிரத்யேக  மேற்கத்திய நடனத்தை பெயருக்கு கற்காது ஆசையாய் கற்றுக் கொண்டான்….

யோகாவுடன், தினமும் ஒரு ஆட்டம் போடுவது அவன் வழக்கம்…. தினமும் பாட்டை அலற விட்டு வியர்வை வழிய வழிய புதிதாய் கற்று, அந்த வார இறுதியில் தன் ஆட்டத்தை பப்பில் காட்டிவிடுவான்.

இன்றும் வந்திருந்தான் ரிதமிக் பப்பிற்கு  ஸ்ரீநாத் இன்னமும் வரவில்லை  அவனுக்காக காத்திருந்தவனின் கண்கள்

ஆங்காங்கே தங்கள் நிலையை மறந்த காதலர்கள்

மனைவி தொல்லையில் இருந்து தப்பி வந்த கனவான்கள்

நாங்களும் நவீன கால யுவதிகள் என பறைசாற்றியபடி மதும்பானங்களுடன் சிகரெட் பாக்கெட்களோடும் சண்டையிட்டு கொண்டிருந்த மேல்தட்டு பெண்கள்

போதையில்  நடனமாடிக்கொண்டிருந்த யுவன் யுவதிகள் என அனைவரின் மீதும் பார்வை  ஆர்வமாய் ஊர்ந்தது  தீடீரென தன் காதுக்கருகில் ஒரு பாடல் சப்தம் கேட்க  பார்வையை விட்டு செவிகளை கூர்மையாக்கினான்.

“ என்ன விலை அழகே…

சொன்ன விலைக்கு வாங்க வருவேன்….

விலை உயிரென்றாலும் தருவேன்….

உன் அழகை கண்டு வியந்து போகிறேன்  ஹோஓஓஓஓஓ….

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…”

ஆண்குரலில் பாட வேண்டிய அந்த பாடல் பெண் குரலில் வந்தது

சுற்றும் முற்றும் பார்த்தான் பிர்லா  அதன் பின் சப்தம் தன் பின்னால் இருந்து தான் வருகிறது என, திரும்பி அந்த டேபிளை பார்க்க அவன் கண்களில் சற்று அதீதமான ஸ்வாரஷ்யம் எழுந்தது

பெண்கள் சேலையில் தான் பூஞ்சோலையாக இருக்கமுடியும் என்ற எண்ணத்தை தகர்த்த முழு வெள்ளை ஸ்லீவ்லெஸ் கவுன் முழங்காலுக்கு சற்று கீழ் குடைபிடித்திருந்தது

இடை தொடும் கூந்தலை தகர்த்து தோள்தட்டி நின்றது அவள் கூந்தல்

எப்போதும் தற்காப்பை ஏந்தி நிற்கும் பெண்ணவளின் கண்களில்  போதை

பெண்களின் கண்களே போதை  இதில் போதை ஏறிய கண்கள்  சொல்லவும் வேண்டுமோ!

அவள் தான் பிர்லாவின் வாழ்க்கை பாதையை மாற்ற வந்த பாவை என அறியமல் அவளை அளவெடுத்துக்கொண்டிருந்தது இவனது கரிய விழிகள்

புன்னகையை சுமக்கும் இதழ்களில், உதட்டு சாயம்

விரல்களுக்கு கீரீடம் வைத்த நெயில் ஆர்ட்

அடக்கமாய் காதில் இருக்க வேண்டியது,  அடங்காமல் கழுத்தில் உரசி சென்ற   கம்மல்

வளையல்கள் அணிய வேண்டிய வளைகரத்தில் ஒய்யாரமாய் குடிகொண்டிருந்த அழகிய வாட்ச்.

ஒட்டுமொத்ததில் உலக அழகியை மிஞ்சும் ஒரு பேரழகி…

நவீன யுகத்தில் நவநாகரீகமாய் ஒரு அழகிய தமிழ் மகள் என கவி பாடிய பிர்லாவின் மனம்  இறுதியில்

‘ம்ஹூம்  அழகிய குடிமகள் ’ என மனம் கவுண்டர் கொடுத்தது  பின்னே

ஒயிலாய் அமர்ந்திருக்க வேண்டிய உலக அழகி ஓட்காவுடன் அமர்ந்திருந்தாள் ஆம் ஓட்காவே தான்

 தன் முன் இருந்த ஓட்கா பாட்டிலில் நெயில் பாலிசில் பளபளத்த விரல்களால் கோலமிட்டபடி தெளிவான குரலில் பாடிகொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டிருந்த பிர்லாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

Advertisement