Advertisement

பகுதி 4

நடந்த கூத்துகளை எல்லாம் பார்த்துவிட்டு தன் அறைக்கு வந்த கெங்காவிற்கு எதையுமே ஏற்று கொள்ள முடியவில்லை. அதைவிட பிர்லாவின் அதீத மனமுதிர்ச்சி பெருத்த ஆச்சர்யத்தை தான் கொடுத்தது  பின்னே ’வேறொரு பெண்ணுடன் தன் தந்தை இருக்குறார் அதுவும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்’ என தன் தாயிடமே சொல்ல எந்த மகனுக்கும் துணிச்சல் வராது.  ஆனால் பிர்லா  சொன்னான் என்றால் எந்தளவு இவர்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பான். எந்தளவிற்கு தன் தந்தையின் மகிழ்ச்சியான முகத்தை  தேடியிருந்திருப்பான்? என நினைக்க நினைக்க   கெங்காவிற்கு தலைவலியே வந்தது.

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என சாதாரண மனிதனுக்கு கூட மூளையில் ஓடும் கலாச்சாரம் பண்பாடு எதுவும் இவன் மூளையில் பதியவேயில்லையா? தன்னையும் சந்த்ரபோஸையும் ஒன்றாப இணைத்து பார்க்கும் இவன் பார்வையில் ஒரு சிறு அருவருப்பு கூட இருந்ததில்லையே!

அந்தளவிற்கு பிராக்டிகல் லைஃபை எதிர்பார்க்கிறானா? அந்தளவு மெச்சூரிட்டியா இந்த பிர்லா, நினைத்த மாத்திரம் பெரும் கவலை ஆட்கொண்டது அவரை.

கூடவே இத்தனை மனமுதிர்ச்சி இருப்பவனிடம் அவனின் உடல் நிலையை மறைப்பது பெரும் தவறு என அவனுக்கிருக்கும் நோயைப்பற்றிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்ல முடிவெடுத்தார். அதன்படி அப்படியே பிர்ராவிடம் சொல்ல வைத்தார் கெங்கா, அதுவும் முரளி மூலமாகவே அடுத்த வந்த நாட்களில்.

மருந்துகளினால் அடுத்த இரண்டு நாள் முழு பொழுதும் தூக்கத்திலேயே கழிந்தது பிர்லாவிற்கு. மூன்றாம் நாள் டிஸ்ஜார்ஜ் என்ற நிலையில் வந்தார் முரளி.

“என்ன பிர்லா ஏதாவது நியாபகம் வந்ததா” என முரளி கேட்டு கொண்டிருந்தார் அவன் பிரஷர் அளவை பரிசோதித்தபடியே!

“இல்லை வரலை” என நிமிர்ந்து முரளியை பார்த்தான் பிர்லா  அந்த கண்களில் ‘ஐய்யோ மறந்து விட்டோமே’ என்ற கவலை இல்லை ’அப்பாடி நடந்த எதுவுமே நியாபகம் இல்லை’ என்ற நிம்மதி தான் தெரிந்தது.

அதை முரளியும் உணர தான் செய்தார், பெருமூச்சொன்றை வெளியிட்ட படி “உனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லாமல் மறைக்க முடியாது, மறைச்சு வைக்கிற அளவுக்கு பெரிய பிரச்சனையும் இல்லை  சரி பண்ண கூடியது தான்” என ஆரம்பித்து அவனின் மூளை பாதிப்பினால் உண்டான ஞாபக மறதி,வலிப்பு தோய், அதன் தாக்கங்கள், தவிர இப்போதைய உடல் நிலை, அதிலிருந்து விடுபட உட்கொள்ள வேண்டிய மருந்துகள், அதையும் தாண்டி மன அழுத்தமில்லாமல் இருப்பதற்கான வழிமுறைகள் என அனைத்தையும் இவர் அவனிக்கு புரியும் விதத்தில் எடுத்து சொன்னார்.

அதை கேட்டவனுக்கு பயம் ஏதும் வரவில்லை, ஆனால் ‘நோய் வாய்ப்படும் வயதா தனக்கு’ என தான் ஓடியது. ஆனாலும் சொல்வதை கேட்டு கொண்டான்.

“பிட்ஸ் வருதோ இல்லையோ  நான் கொடுக்குற டேப்லெடை டெய்லி பாலோ பண்ணனும்”

“எவ்வளவு நாளைக்கு சாப்பிடனும்?”  என பிர்லா கேட்க

“குறைஞ்சது மூனு வருசமாவது சாப்பிடனும்  பிட்ஸ் வராத பட்சத்தில் டோஸஸை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சு, கடைசியில் ஸ்டாப் பண்ணிடலாம்” என

“ம் ஓகே சார்” என்றான் பிர்லா.

அதன்பின் அவனது பெற்றொர்களை தன் தனி அறைக்கு வர வழைத்து “உங்க பையனுக்கு ப்ரசர் கொடுக்காமல் இருந்தாலே போதும்  சரியாகிடுவான்” என அவனது பெற்றோர்களுக்கு சொல்ல வேண்டியதையும் சொல்லி

“என்ன நடந்ததுன்னு அவனுக்கு கொஞ்சம் நியாபகப்படுத்துங்க  மே பி ரெக்கவர் ஆக சான்ஸ் இருக்கு” என சந்த்ரபோஸிடம் சொல்ல

“இல்ல அவனுக்கு எதுவும் ஞாபகம் வர வேண்டாம்” முந்தி கொண்டு தேவி பதில் சொல்ல

“ஏன் ?” என்றார் முரளி

“ஒரு தடவை அவன் பட்ட கஷ்டமே போதும்  இனியொருதடவை அவன் கஷ்டப்பட வேண்டாம்”

“சரி உங்க இஷ்டம்” என தேவியிடம் கூறினாலும் “நியாபகமறதி நல்லதில்லை, முடிஞ்சளவு நியாபகப்படுத்தி அவனுக்கு அந்த நினைவை கொண்டு வர பாருங்க  இல்லை ப்யூச்சர்ல ப்ராப்ளம் ஆக சான்ஸ் இருக்கு” என சந்த்ரபோஸிடம் சொல்ல மறக்கவில்லை முரளி

கவலை பெருமளவு அப்பிகிடக்க, தன் மகனின் அறைநோக்கி தேவி செல்ல  அவர் சென்றதும் சந்த்ரபோஸை தனியாய் அழைத்தார் கெங்கா

“நீங்க இனி என்னோட வீட்டுக்கு வர வேண்டாம்” எடுத்த எடுப்பிலேயே சொல்ல

‘ஏன், ஏன் அப்படி சொல்ற? எதுக்காக சொல்ற?!’ என்பது போல் ஒரு பார்வை

“தப்பு உங்க பேரில் இருந்தாலும் பிர்லாவோட இன்றைய நிலைக்கு நானும் ஒரு காரணம்”

“அப்போ நான் கட்டின தாலி !”

“உங்களோடான உங்க உறவு இப்போதைக்கு வேண்டாம்  ஆனா இந்த உரிமை இப்போ மட்டுமில்ல, எப்போவுமே வேணும்” கழுத்தில் கிடந்த தாலியை தூக்கி காண்பித்து “இந்த உரிமையை ஒருநாளும் விட்டு தர மாட்டேன்” என சொல்லி சந்த்ரபோஸூடனான உறவை முறித்துக்கொண்டவர் உரிமையை முறிக்கவில்லை.

அங்கே அவனது அறையில் கண்மூடி படுத்திருந்த பிர்லாவிற்க்குள் ஆயிரம் யோசனைகள்

பிட்ஸ்ணா,  வலிப்புநோய், ஆமாம் வலிப்பு நோய் தான்! ஆனால் எனக்கா? ஏன் வந்தது? எதுக்காக வந்தது? எப்படி வந்ததுனு என்னால் உணர கூட முடியலயே?

ஏன்! ஏதனால்! இந்த வலிப்பு நோய் வந்தது?

டாக்டர் சொன்னது போல் மனஅழுத்தம் தான் காரணம் என்றால் அந்தளவிற்கு பலவீனமானாவனா நான்? பலமானவன் இல்லையா?

என் மனதை இந்தளவு பாதிக்கும் அளவிற்கு தன் தாய் தந்தை  என்ன பேச இருப்பார்கள்? என்ன சண்டையிட்டிருப்பார்கள் என யோசித்து யோசித்து தலையை தண்டவாளத்தில் வைத்தது போல் அதிர ஆரம்பித்தது பிர்லாவின் மூளை.

“வேண்டாம் அதுவா நியாபகம் வந்தா வரட்டும்  இல்லை வரவே வேண்டாம்” என்ற முடிவுக்கு கொண்டு வந்து விட்டது அவனின் விடாத தலைவலி்

இவன் இப்படியிருக்க அங்கே அவனருகில் அமர்ந்த பார்வதிதேவியோ

பிர்லாவிற்கு இப்படி ஆகிவிட்டதே என மனம் ரணமாய் அழுதாலும் வெளியே காட்டக்கொள்ளவில்லை  ஆனால் மனதார அத்தனை துன்பங்களையும் அனுபவித்தார். மருத்துவமணையில் அவனை விட்டு அகலாமல் பார்த்துகொண்டவர், பிர்லா வீட்டிற்கு வந்த பின்னும் அதை தொடர்ந்தார்

முதலில், வேலைக்காரர்களை இடையில் விடாமல் தாயும் மகனுமே நேரடியாய் பேசிக்கொள்ளும் பழக்கத்தை கொண்டு வந்தார்

“பிர்லா சாப்பிடும் முன்னாடி போடற மத்திரை போட்டியா?” என மாத்திரையுடன் நிற்பதாகட்டும்

“பைக் சேப் இல்லடா, நீ காரிலேயே போ”

‘உங்களுக்கு வேணுமே மாம்’ என கண்ணாலேயே வினவும் பிர்லாவுக்கு

“கண்ணப்பன் முதலில் உன்னை ட்ராப் பண்ணிட்டு வரட்டும், அப்பறம் நான் போய்க்கிறேன்” என்ற அமைதியான பதில் தருவதாகட்டும்

“பிர்லா சாப்பிட்டு அப்பறமா ஹோம் வொர்க் பண்ணலாம்” என அவனை சாப்பிட வைப்பதாகட்டும்

“படிச்சது போதும்  தூங்கு பிர்லா “ என அவன் கையிலிருக்கும் புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டு தலை கோதி, தூக்கம் சுமந்திருக்கும் அவன் விழிகளை உறங்க வைப்பதாகட்டும் என

இப்படி அவனுக்காக சின்ன சின்ன விசயங்களையும் கவனித்து செய்ய துவங்கினார்.

பிர்லா உட்பட, வீட்டில் இருந்த அனைவருக்கும் தெரிந்தது இது கண் கெட்டபின் வரும் சூர்யநமஸ்காரம் என

ஆனால் பிர்லாவின் மன அமைதிக்கு இதுவும் முக்கியம் என தேவி விடாப்பிடியாய் நிற்க, மற்றவர்களும் அவரது போக்கில் விட்டுவிட்டனர்.

மொத்தத்தில் பிர்லாவின் பள்ளி நேரத்தை தான், தன் அலுவலக நேரமாக மாற்றிக்கொண்டார்  மாற்றிக்கொள்வதற்கு அத்தனை சிரம்ப்பட்டார்.  ஒரு சில நேரம் அட்டெண்ட் செய்ய முடியாத மீட்டீங்கினால் பெரிய பெரிய சங்கடங்களுக்கு கூட ஆளானார்

ஒரு கட்டத்தில் “நான் பிர்லாவை பார்க்கனும்  என்னோட ஒர்க்கை கொஞ்சம் ஷேர் பண்ணிக்கோங்க மீட்டிங் எல்லாத்தையும் இன்ன இன்ன நேரத்தில் அட்டென்ட் பண்ணுங்க” என சந்த்ரபோஸிடம் உதவி கேட்கவும் தயங்கவில்லை.

அடுத்ததாக சந்த்ரபோஸோ, தன் மகனின் வாழ்வை விட வேறு எதுவும் பெரிதல்ல என கெங்காவின் வீட்டிற்கு கூட செல்லவில்லை

கடைசி காலமாவது தனக்கு பிடித்தபடி வாழாலாம் என்ற முடிவில் இருந்த கெங்கா கூட, அது ஒரு குடும்பத்தையே சீரழித்துவிடும் என உணர்ந்த கெங்காவும் போஸை கட்டுபடுத்த முயற்சிக்கவில்லை  எப்படி வந்தாரோ அப்படியே விலகினார்  ஆனால் அது சந்த்ரபோஸின் உறவு என்ற முறையில் மட்டுமே  ஆனால் உரிமையை கேட்காமலேயே எடுத்து கொண்டார்.

இப்படி, தேவி-சந்த்ரபோஸ்- கெங்கா மூவரின் வாழ்வும் பிர்லா என்ற ஒருவனால் சீரமைக்கப்பட்டது.

ப்ளஸ் டூ என்பதால் அதிக நாட்கள்  விடுமுறை எடுக்காமல் உடல் நிலை சரியான பின்பு பள்ளி செல்ல துவங்கினான்

பள்ளி சென்ற இரண்டாம் நாள் கெங்கா அவனது பள்ளியில் அவனுக்காக காத்திருந்தார்

“இவங்க எதுக்கு இங்க வந்திருக்காங்க” என நினைத்தாலும், அவரருகே வந்தான்

ஹாஸ்பிடலில் ‘கெங்காம்மா’ என்றவன் தான்  வீட்டிற்கு வந்த பின் திரும்பி கூட பார்க்கவில்லை

Advertisement