Advertisement

பகுதி 3

உயிரையே ஆட்டி்படைத்த நொடிகள் அவை. அத்தனை பேருக்கும் முன் சுதாரித்தார் சந்த்ரா.

உருக்குலைந்து விழுந்தவனை உயிருக்கும் நோகாமல் வாரிக்கொண்டு தன் கையில் ஏந்தி “கண்ணப்பன்” என வீறிட்டதில் கண்ணப்பன் வீட்டின் உள்ளே விரைந்து வர  பிர்லாவின் நிலையை பார்த்து அவரும் சேர்ந்து கொள்ள பிர்லாவை தூக்கிச்சென்று காரில் கிடத்தி தங்களோடு யார் வருகிறார்கள் என திரும்பியும் பாராமல் கெங்காவிடம் விரைந்தது அந்த கார்.

ஒரு நிமிடத்தில் அத்தனையும் நடந்து முடிந்திருக்க சதானந்தம் உயிரிழந்தவர் போல் சுவரோடு சுவராய் அமர, தேவி பேய் அடித்தார்போன்று நின்றிருக்க  சந்த்ரபோஸின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பின் தங்கிய மரகதாம்பாள் “ஏங்க ஏங்க… பிர்லாவை எங்க கூட்டிட்டு போறான்னு சந்திராக்கு போன் பண்ணுங்க  நாமளும் போகனும், ஐய்யோ ஏன் இப்படி உக்கார்ந்துருக்கீங்களே  ஏய் தேவி  எழுந்திருடீ  உன் புருசனுக்கு போன் பண்ணுடீ” மரகதத்தின் ஆவேசம் பார்த்து சந்திராவிற்கு போன் செய்ய, போனை எடுத்தது என்னவோ டிரைவர் தான்.

அவனிடம் விவரம் கேட்டு கெங்கா வேலை பார்க்கும் மருத்துவமணைக்கு அவர்களும் விரைந்தனர்    அங்கே காரில் இருந்து லாவகமாய் தன் மகனை கையில் ஏந்திக்கொண்டு கெங்காவிடம் அவரின் கால்கள் விரைய கண்ணப்பன் பின்னால் ஓடி தான் வந்தார்

இருவரையும் பார்த்த கெங்கா அவர்களை நோக்கி விரைந்தார். இப்போது தான் சிரித்த முகமாய் தன்னுடன் உரையாடி சென்றவன், உயிரில்லாத ஜடம் போல் வருவதை பார்த்து கெங்காவிற்கு நெஞ்சே அடைப்பது போல் இருந்தது.

“என்ன செஞ்சு வச்சுருக்கீங்க சந்திரா, பிர்லாவை  இப்படி தூக்கிட்டு வர்றீங்க!” என பேச்சு பேச்சாக இருக்கும் போதே, ஸ்ரெச்சர் ஒன்றை இழுத்து அதில் பிர்லாவை கிடத்த சொல்ல

“என்னாச்சு சந்த்ரா, உங்க கிட்ட தான் கேட்குறேன்” என

கண்ணீர் வடிந்த முகத்தோடு “படியில் உருண்டுட்டான்” என சதானந்தம் சொல்ல

“தவறி விழுந்தனா?” என சந்த்ரபோஸின் முகம் பார்க்க

“தவறி விழல, தள்ளி விட்டுட்டேன். என் வார்த்தையாலேயே தள்ளி விட்டுட்டேன்”

“என்னன்னு புரியுற மாதிரி சொல்லுங்களேன்”

“பிட்ஸ்… கெங்கா. பிர்லாக்கு பிட்ஸ் வந்திருச்சு கெங்கா…” என்ற வார்த்தையில் கெங்காவிற்கு கையில் எடுத்த ஸ்ட்தஸ்கோப் கையில் இருந்து தவறி கீழே விழுந்தது.

“பிட்ஸா?” காற்றில் கலந்தது கெங்காவின் குரல் பின் மருத்துவராய் துரிதமானாவர்.

சிஸ்டர், பேசண்டை ஐசீயூக்கு கொண்டு போங்க என வேகமாய் துரிதபடுத்திய கெங்கா  அங்கிருந்த இன்டர்காமில் அதே மருத்துவமணையில் வேலை செய்யும் நியுரோ டாக்டரிடம் “இட்ஸ் எமிர்ஜென்சி முரளி, பேசண்ட் அன்கான்சியஸ், கம் க்விக்” என்ற இருவரி பேச்சுகளின் பின் ஐசியூக்குள் நுழைந்தார்.

சில நிமிடங்களில் அதே ஐசியூவுக்குள் முரளியும் நுழைந்திட அவர்கள் அந்த அறையைவிட்டு வெளி வர அரை மணி நேரம் பிடித்தது.

“நீங்க பார்த்துக்கோ கெங்கா” என சொல்லிவிட்டு முரளி அகன்றிட, கெங்காவோ படபடப்பாய் இருந்த பிர்லாவின் பெற்றோரிடம் சென்று ‘பிர்லா நார்மல், ஈவ்னிங் நார்மல் ரூம் ஷிப்ட் பண்ணிடலாம்‘ சொல்லவேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு கெங்காவும் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அடுத்த கனம் இவர்கள் பிர்லாவிடம் ஓடினர். முகத்தில் மாஸ்க் எதுவுமின்றி ட்ரிப்ஸ் மட்டும் ஏறிக்கொண்டிருந்தது பிர்லாவிற்கு. அதை பார்த்தபடி அவனருகில் அமர்ந்தார் சந்த்ரா.

“நீ தான் காரணம்! நீ தான் காரணம்!” என சண்டை பிடித்த  அவனது தாய் தந்தை இருவரும், “எங்களால் தான் பிர்லாக்கு இப்படியானதோ!” என கண்ணீர் விட்டு, கடந்து போன அந்த காலமும் அந்த நேரமும் மீண்டும் வராதா! சண்டை போடாமல் இருந்திருக்கலாமே! பிர்லாவிற்கு இப்படி ஆனதை தடுத்திருக்கலாமே! என ஏக்கத்தில் தவித்து கொண்டிருந்தனர்.

விருட்டென எழுந்தவர் பிர்ராவின் உண்மை நிலை அறிந்திட அவரது அறைக்கு சென்றார்.

இவரை கண்டதுமே செந்தனலாய் மாறியது கெங்காவின் முகம்.

“அப்போ கேட்க நேரமில்லை இப்போ சொல்லுங்க? என்ன நடந்தது முழுசா சொல்லுங்க” என

தயக்கமான முகத்துடனே அத்தனையையும் இவர. சொல்ல, சொல்ல மேலும் பயங்கரமாய் மாறியது இவர் முகம்.

“பிர்லா முன்னாடி சண்டை போடாதீங்கனு அத்தனை சொல்லியும் அவன் முன்னாடியே இத்தனையும் பேசி வச்சுருக்கீங்க. உங்களுக்கு பிர்லா வேணாம்னா எங்கிட்ட கொடுத்துடுங்க  நான் பார்த்துக்கிறன்.  பிள்ளை இல்லாத எனக்கு தான் அதோட அருமை தெரியும்  பிட்ஸ் வருவதே கொடுமை  இதில் மாடியில் இருந்து உருள வேற விட்டு இருக்கீங்க கெங்கா கொட்டி தீர்க்க

அவர் திட்டுவதை கூட கண்டு கொள்ளாமல் “அவன் இப்போ நல்லா இருக்கான்ல  எதுவும் பிரச்சனை இல்லை தானே!”  பயந்த குரலில் இவர் கேட்க

“நீங்க இங்க கொண்டு வரும் போதே  அன்கான்சியஸா  ஆயிட்டான். எம் ஆர் ஐ பண்ணனும், ஈஈஜியும் பார்க்கனும் இரண்டோட ரிசல்ட் வச்சு தான் சொல்ல முடியும்” மருத்துவராய் பொறுமையாய் இவர் பதில் சொல்ல

அவர் கூறியதும், அர்த்தம் புரியாதவராய், பேந்த பேந்த முழித்தார்

“என்னாச்சு சந்த்ரா  என்ன செய்து?” என கேட்க

இத்தனை பேச்சிற்கும் ஒரு பதிலும் இல்லை அவரிடம், தன்னிலை இழந்தார்போல் இருந்தவரை “சந்திரா” என தொட்டு உசுப்ப

“உனக்கு பண்ணின பாவத்துக்கு கடவுள் என்னை தண்டிக்காமல் என் பிள்ளையை தண்டிச்சுட்டானே கெங்கா” தலையில் பலமாய் அறைந்தபடி சேரில் இருந்து தன் வயதை மறந்தவராய் தரையில் வெட்டிய மரம் போல விழ

“ஐய்யோ சந்திரா” என கெங்கா தாங்கி பிடிக்க  அவரது பிடியில் இருந்து

“பெயருக்கு தகுந்த மாதிரி நீ புனிதமானவ  உன்னோட சூழ்நிலையை எனக்கு சதாகமா பயண்படுத்தினேன்னு கடவுள் எனக்கு இப்படி தான் சொல்லி புரிய வைக்கனுமா!” பிர்லாவிற்கு இப்போது வந்திருக்கும் நோய், பல வருடங்களுக்கு முன்பிருந்தே கெங்காவிற்கு இருக்கிறது. அது அப்படியே சந்திராவின் மூலம் வெளியே வார்த்தைகளால் கிளம்பிவர

இருக்கும் இயலாமையை சந்திராவிடம் காட்டுவதை நிறுத்தி விட்டு “பயப்படற மாதிரி ஒரு கண்டிசனில் தான் பிர்லா இருக்கான்னு நான் சொல்லி இருந்தா இந்தளவு அவனை விட்ருக்க மாட்டீங்க தானே  நானாவது உண்மையை சொல்லி இருந்து இருக்கனும்.  பின் தலை வலிக்குனு சொன்னப்பவே உண்மையை போட்டு உடைச்சிருக்கனும் எல்லா தப்பும் என் மேல தான்”  என பழியை தன் மீதே போட்டு விட்டு சென்றுவிட்டார்.

நான்கு மணி நேரம் சென்று தான் பிர்லாவிற்கு நினைவு திரும்பியது. இரத்தகாயம் எதுவும் இல்லாத போதும் ஊமையடியால்  ஊசியால் குத்தியது போல் உடல் வலிக்க கண்களை இறுக்கமாய் மூடி பின் திறந்தான்.

மங்கலாய் தெரிந்த உருவங்கள் தெளிவு பெற, அவன் கண்களுக்கு முதலில் தெரிந்தது தாய் தந்தை தான்.

அதன் பின்பே சுற்றுபுறம் உறைக்க “என்னப்பா ஆச்சு, நான் எப்படி ஹாஸ்பிடல் வந்தேன்” தெளிவாய் கேட்டபடி எழுந்து அமர்ந்தவன், கண்களில் நீர்கோர்த்து நின்றிருந்த தாயிடம்

“மாம், ஏன் அழறீங்க? டாட் எதுவும் திட்னாங்களா!” சர்வ சாதாரணமாய் கேட்க, அங்கிருந்த பிர்லாவின் பெற்றோர், சந்த்ராவின் பெற்றோர் என நால்வருமே அதிர்ந்து போக

“என்னை எதுக்கு ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி்ருக்கீங்க  என்னாச்சு” என இவன் அவர்களிடம் கேட்டது மட்டும் அல்லாது, தன் நியாபகங்களிடமும் கேட்டான்.

ஆனால் இருவரிடமிருந்தும் பதில் வரவே இல்லை.

சந்த்ரபோஸ், பார்வதிதேவி இருவருக்கும் ஏதோ அசாம்பாவிதம் நடக்க போகிறது என மனம் பட படவென அடித்துகொண்டது.

“மாடிப்படியில் உருண்டதில் ஏதும் பிராப்பளம் ஆயிடுச்சா முரளி” என கெங்கா முரளி அருகில் வந்து கேட்க

அவரை திரும்பி பார்த்த முரளியோ, ‘பேசாதே” என்பது போல் கண்ஜாடை காட்ட அமைதியாகி விட்டார்.

“பிர்லா எப்படி மாடிபடியில் இருந்து உருண்ட  இத்தனை பெரிய பையனா வளர்ந்திருக்க பார்த்து இறங்க மாட்டியா?” இவனது பெட்டிற்கு அருகில் நின்றிருந்த முரளி மெதுவாய் அவனிடம் பேச்சு கொடுக்க

பார்வையை அவர் புறம் திரும்பியவன், முரளியின் தோற்றத்தில் ‘டாக்டர்’ என உணர்ந்தாலும்

“மாம் நான் படியில் இருந்து உருண்டேனா?” என முரளி கேட்ட கேள்விக்கு, பார்வதிதேவியிடம் இவன் பதில் கேள்வி கேட்க

பார்வதிதேவியோ அதிர்ந்தே போனார். அதை பார்த்து இவன் முகம் சுருங்கிப்போக

“அப்போ எப்படி படியில் உருண்ட, எதனால உருண்டு வந்தனு உனக்கு நியாபகம் இல்லையா?” என முரளி மீண்டுமாய் கேட்க

மீண்டும் பார்வதிதேவியையும், சந்த்ரபோஸையும் ஓரிரு நொடிகள் வெறித்து பார்த்தான்.

அதில் அவனது நோய் முரளிக்கு புரிந்து போனது “ஓகே  நடந்ததில் கடைசியாய் எது நியாபகம் இருக்கு!” என அவனிடம் பேச்சை கொடுக்க

“காலையில் ஹாஸ்பிடல் வந்தோம்  கெங்காம்மா  கிட்ட ட்ரீட்மெண்டுக்கு” என ஏதோ ஒரு நினைவில் சொல்லியும் விட்டு இவன் யோசிக்க

“கெங்காம்மா” என்ற வார்த்தையில் கெங்காவின் விழிகள் விரிய  ‘ஓ  இந்த விசயம் இவனுக்கும் தெரிந்துவிட்டதா’ என முரளி யோசிக்க, மற்றவர்கள் ‘கெங்காம்மா’ என்ற வார்த்தையை, கண்டுகொண்டார் போல் தெரியவில்லை

“அப்பறம் வீட்டுக்கு போய்ட்டோம் . கொஞ்ச நேரத்தில் டாட் மாம் ஏதோ சண்டை போட்டுட்டு இருந்தாங்க  சத்தம் கேட்டு ரூமை விட்டு வெளியே வந்தேன்“ நெற்றியும் கண்களோடு சேர்ந்து ஒன்றாய் சுருங்கி தன் நினைவடுக்கில் அதன் பின்னான நிகழ்வுகளை தேடியது. ஆனால் நிழலாய் கூட அந்நினைவுகள் தெரியவில்லை அவனுக்கு.

“சண்டை போட்டாங்க  ஆனா எதுக்காக சண்டை போட்டங்கனு நியாபகம் இல்லை  தலை ரொம்ப வலிச்சது அப்பறம் என்னாச்சுனு தெரியலை” என

“சரி வேண்டாம்  யோசிக்க வேண்டாம்  விடு  நியாபகம் வந்தா கண்டிப்பா சொல்லனும்!” என சொல்லி சென்றுவிட்டார்.

அவர்கள் சென்ற பின்  சந்திரா, சதா, மரகதாம்பாள் மூவரும் அவன் அருகில் நெருங்க

“அவங்கள ஏன் கெங்கம்மானு சொன்ன?” என பார்வதிதேவி எல்லோருக்கும் முன் வந்து கேட்க

“அவங்க அவங்க” என இவன் எப்படி சொல்ல என தெரியாமல் இழுக்க

“ஏண்டா, உனக்கு தெரிஞ்சிருக்குல்ல ஏண்டா எங்கிட்ட சொல்லலை , ஒரு வேளை உங்கப்பாவை மாதிரி உனக்கும் அவளை தான் பிடிச்சிருக்கோ”  என ஆத்திரமாய்  பார்வதிதேவி கேட்க

விருட்டென நிமிர்ந்தார் சந்த்ரபோஸ்

“சொல்லுடா, உன்கிட்ட தானே கேட்குறேன்” என  தேவி கூச்சலிட

“இதுக்கு என்கிட்ட பதில் இல்லை  அப்பா கிட்ட தான் நீங்க கேட்கனும்  என்னை பொறுத்தவரை கங்கம்மா வீட்டில் அப்பா சந்தோஷமா இருக்காங்க” எனக்கு தெரிஞ்சது அது ஒன்று தான் என்பது போல் இவன் பதில் சொல்லியும் விட்டான்

அவன் சொன்ன பதிலில் பார்வதிதேவியின்  ஈரக்கொலையே நடுங்கிப்போனது, ‘அப்போ இவர் என்கூட இருக்கும் போது சந்தோஷமா இல்லையா’ என.

ஒரு குடும்பத்தின் அஸ்திவாரமே பெண் கையில் இருந்தாலும், அதை தன் கடமையை பொறுப்பை தட்டிக்கழிக்கும் போது தான், சரி செய்ய முடியாதளவு பெரும் பிரச்சனை உருவாகும் என மனதில் சம்மட்டியாய் அடித்து உறைக்க மனதார உடைந்து தான் போனார் தேவி.

தாய், மனைவி என்ற இரு பதவியிலும் முழுவதுமாய் டெபாசிட் இழந்து நின்ற போது தான் தெரிந்தது, தான் செய்த இமாயலயத் தவறு.

‘என்கிட்ட பேசி இருக்கலாமே .அதுக்காக இன்னொரு பொண்ணை தேடிப்போகனுமா” என இந்த முறை நிம்மதியை இழந்து போனது என்னவோ தேவி மட்டும் தான்.

தேவி மட்டும் மனதால் அழுது கொண்டிருக்க, சந்த்ராவிற்கோ சொல்ல முடியாத வலி பிறந்தது உடலில்.

ஆனால் மரகதமோ “எதுவா இருந்தாலும் உன் புருஷன் கிட்ட பேசிக்கோ, என் பிள்ளை வாழ்க்கை தான் பாழாக்கின  என் பேரனையாவது நிம்மதியா இருக்க விடு” கதறிய மரகதத்தை  மீறி ஒரு வார்த்தை பேசமுடியவில்லை பார்வதிதேவியால்.

Advertisement