Advertisement

என்ன செய்கிறாள் என இவன் உணரும் முன், கீழே கிடந்தவனின்  கன்னம் பழுத்தது ப்ருந்தாவின் விரல்களின் உபயத்தால்

“நீ சாகறதுக்கா உன்னை விட்டு பிரிஞ்சு போனேன்,

நீ வாழனும்  நல்லா வாழனும், ஒரு முறை என்னால நீ பட்ட கஷ்டம் போதும்,

இனியொரு தடவை உன்னை அந்த நிலையில் பார்க்க முடியாதுன்னு தானே, உன்னை விட்டு போனேன்.

ஈசியா சொல்ற செத்துடுவேன்னு

செத்துடுவியா? செத்துடுவியா நீ” என பேசிய ஒவ்வோரு வார்தைக்கும் அவனை சரமாறியாய் விளாசி தள்ளினாள் ப்ருந்தா.

இத்தனை நடந்தும் இவனிடம் எந்த மறுப்பும் வராமல் இருக்க,

“ஏய் என் பிள்ளையை அடிக்காதடி” என ப்ருந்தாவிடம் ஓடிய தேவியை, ஒருகையால் பிடித்து இழுத்து “வாயை மூடிட்டு மரியாதையா வா” என சந்திரா இழுத்து சென்றுவிட்டார்.

அடித்து அடித்து இறுதியில் ஓய்ந்து போனாள் ப்ருந்தா! தன் நலனை மையமாய் வைத்து தான், தன் அன்னை இவளை என்னிடம் இருந்து பிரித்திருக்கிறார்கள், அதே தன்னுடைய உடல் நலனை கருத்தில் கொண்டு தான் இவளும் தன்னை விட்டு பிரிந்து சென்றிருக்கிறாள் என்ற செய்தி அவன் மூளையை நிறைக்க, அடித்து கொண்டிருந்தவளை இழுத்து அணைத்தான் யார் மீது கோபப்படுவது என தெரியாமல்

“ஏண்டா இப்படில்லாம் பேசுற” தன் மீது விழுந்து கதறியவளை அவள் இடையோடு இறுக்கி, நெஞ்சோடு அணைத்து பிடித்து கொண்டான்.

இவளும் அவனது கழுத்தோடு கட்டிக்கொண்டு, இத்தனை காலமாய் அடக்கி வைத்திருந்த அழுகையை, அவன் முகத்தில் முத்தங்களாய்  கொட்டி தீர்த்தாள்.

பிர்லா அவளிடம் ஆறுதலை உணர, ப்ருந்தாவோ அவனிடம் ஆறுதலை மீறி வேறொன்றை தேடினாள். அந்த தேடல் அவளது புத்தியை மழுங்கடிக்க, அவன் முகம் முழுதும் முத்தமிட்டு நிமிர்ந்தவள் இறுக்கி கிடந்த இருவருக்கும் இடையில் கைகளை நுழைத்து அவனது சட்டை பட்டன்களை படபடவென கழற்றினாள்.

ஆனால் அவளின் மாறுதல்களையும், செய்து கொண்டிருக்கும் செயலையும் உணர்ந்தவனுக்கோ,   மூச்சுவிடவும் மறந்து போனது. “ப்ருந்தா  என்ன பண்ற நீ” திடுக்கிடலுடன்  அவளை விலக்க

தீக்குச்சியை அணைக்கும் காற்றாய், சட்டென நிதர்சனம் உணர்ந்து படாரென விலகி அமர்ந்தாள். அவர்கள் இருப்பது ஹால், கிடப்பது டைனிங் டேபிள் முன் என உறைக்க, ப்ருந்தா அங்கே நிற்க கூட பிடிக்காமல் அவளது அறைக்குள் ஓடி மறைந்தாள் வெடித்து கிளம்பிய கோவலுடன்.

அவளை தடுக்க முடியாமல், எழுந்து அமர்ந்தவன், கழன்று கிடந்த சட்டை பட்டன்களை படபடவென இவனும் போட்டபடி அவனது அறைக்கு விரைந்தான்.

ப்ருந்தாவின் அறையை தேடி ஓடிய கால்களை இழுத்து கொண்டு தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

நிற்க கூட முடியாமல் கட்டிலில் குப்புற விழுந்தான். இன்னும் வேண்டும் அந்த உணர்வு, இன்னும் வேண்டும் அந்த ஸ்பரிசம் என நாடி நரம்பெல்லாம் துடி துடிக்க “ப்ருந்தாவிற்கும் தனக்கும் இத்தனை நெருக்கம் உண்டா?” என முஷ்டியால் ஓங்கி ஓங்கி குத்தி கொண்டிருந்தான் மெத்தையை

 ப்ருந்தாவின் செய்கைகள் மொத்தமும்  அவன் நிம்மதியை குலைத்து, சின்னா பின்னமாக்கியது. அதற்கு மேல் அவனால் பொறுக்கவே முடியவில்லை, தயக்கமே இல்லாமல் போனை எடுத்தான்

அவளுக்கு அழைப்பை விடுத்து காத்திருந்தான். இவள் எடுக்கவே இல்லை.

இவனும் விடாமல் போன் மேல் போன் போட  ஒரு கட்டத்தில் இவள் எடுத்தாள்.

“ப்ருந்தா ” குரல் கணீர் என அவள் காதில் வந்து விழுந்தது.

“ம்” அழுகையோடு நமநமத்தது அவள் குரல்.

இன்னுமா அழுகிறாள்? என அவன் மனம் வேதனை கொள்ள

“ஒரு நிமிசம் ரூம்க்கு வா” வெகு அழுத்தமாய் சொன்னான்.

மீண்டும் இவளிடம்  பதிலில்லாமல் போக, “இப்போ நீ வர்றியா இல்லை நான் வரவா?” என இவன் பல்லை கடிக்க

“வ வரேன் வரேன்” என போனை வைத்தாள்.

வேண்டுமட்டும் அழுது தீர்த்து, பின் முகத்தை கழுவி அழுந்த துடைத்து  அவனது அறைக்கு சென்றாள்.

அவனை கொன்று கொண்டிருந்த உணர்வுகள், இவள் அழுத விழிகளை பார்த்து அப்படியே வழிந்தது. தன் முன் தலை குனிந்தபடி வந்து நின்றவளை சமாதானப்படுத்த தான் நினைத்தது அவன் மனது.

“அழுதியா?” கரைபடிந்த முகம் காட்டி கொடுத்ததில் இவன் கேட்க

“இல்லை” என வேகமாய் தலையசைத்தாள் குனிந்த தலை நிமிராமல்

குனிந்திருந்த தலையை நிமிர்த்தினான் இன்னும் கலங்கிக்கொண்டிருந்த கண்களை அழுத்தமாய் துடைத்தது இவன் விரல்கள்.

“இன்னும் எதுக்கு அழற! நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துடாது  செத்திடுவேன்னு சொன்னால் செத்துடுவனா?” இவன் சொல்லி முடிக்கும் முன் “வேணாம் எதுவும் சொல்லாதீங்க” இவனது வார்த்தைகளுக்கு தடை போட்டாள்.

இவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் வார்த்தைகளற்ற மௌனங்களால். இவள் மட்டும் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொண்டாள்.

இவனது பார்வை ஏதோ செய்ய, அந்த இடத்தை விட்டு சென்றுவிடு என அவள் மனம் மத்தளம் கொட்ட, அங்கிருந்து அப்படியே நகர்ந்தாள்.

அழுகை மறைந்த அவளது சாதாரண தோற்றம் இவனுக்கு தைரியம் கொடுக்க, அவளது விரல் பிடித்து தன் புறமாய் இழுத்தான்.

“எதுக்கு உன்னை இங்கே வர சொன்னேன்னு கேட்காமலேயே போற!” கூர்மையாய் வந்தது இவன் வார்த்தைகள்.

அவன் பார்வையை கவனமாய் தவிர்த்தபடி “சொல்லுங்க” என இவள் சொல்ல

“ரொம்ப ரெஸ்ட்லஸ்ஸா இருக்கு!”

‘அதுக்கு?’ என இவள் குழப்பமாய் பார்க்க

“உன்னை ஒரே ஒரு முறை கிஸ் பண்ணிக்கட்டுமா?” பார்வையும் வார்த்தையும் அவள் இதழ் நோக்கியே வந்தது. சற்று முன் மின்னி மறைந்த உணர்வுகள் மீண்டும் ஆட்டம் போட, அதற்கு வடிகால் தேடிடும் பட்சத்தில் கேட்டேவிட்டான்.

அமைதியாய் இருந்த அவள் மனம் அமைதியை தொலைத்து தத்தளித்து ‘நெஞ்சே அடைத்து போனது’ அவளுக்கு. அந்த அதிரவை அப்படியே பிரிதிபலித்தபடி இவள் நிற்க

சற்று முன்பு இவள் தான் தன்னிடம் நெகிழ்ந்தாளா!  ஒருவேளை கண்டது எல்லாம் கனவா! என இரு வேறு நிலைகளில் பயணப்பட்டது இவன் மனம். இவள் மட்டும் கேட்காமலேயே தன்னை நெருங்கலாம், ஆனால் இவளிடம் தான் மட்டும் நெருங்க கூடாதா! என்ற எண்ணம் வலுப்பெற

“பர்மிஷன், ஆபர் பண்ணு இல்லைன்னா பண்ணாத! ஆனால் அதை வார்த்தையில் சொல்லு, அதை விட்டுட்டு இப்படி நின்னா எப்படி?” சற்று கோபம் ஏற இவன் கேட்டதில் இன்னும் இவள் பார்வை சரியாய் மாட்டபட்டு இருந்த அவன் பட்டனில் பதிந்து அதை அவனிடம் பிரதிபலிக்கவும் செய்தது

அந்த பார்வை அவனை ஏதோ செய்ய, “உன்னை முதல் முதலா என் ரூம்க்கு அழைச்சுட்டு வந்தப்போவும் இப்படி தான் பார்த்த, இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட இதே பார்வையை நான் உணர்ந்தேன்? ஏன் இப்படி பார்க்குற?” எத்தனை குழப்பத்தை தான் இவனும் தாங்குவான்.

ஆனால் இவளுக்கோ அழுகை வெடித்துக்கொண்டு கிளம்பியது பெரும் சப்தத்தோடு.  அடுத்த நொடி பேய் விரட்டினார்ப்போல் அவளது அறைக்குள் வந்து கதவை வெறுமனே சாற்றி அதன் மீதே சாய்ந்தவள் அழுது தீர்த்தாள்.

கீழே “ஹால்” என்றும் பாராமல் பிர்லாவோடு நடந்த நெருக்கமான நிகழ்வுகளே இவளை உயிரோடு மென்று தின்று கொண்டிருக்க, இப்போது அவனது அறையில் பிர்லாவே தன் தொடுகையை வேண்டி நிற்கும் போது சத்தியமாய் இவளால் முடியவே இல்லை. இவனின் ஏக்கம் ஒற்றை முத்தத்தில் முடிந்துவிடும். ஆனால் தனக்கு? பெரும் கோவலுடன் அழுகை பீறிட்டு கிளம்பியது

படாரென கதவை திறந்ததில், அதன் மீது சாய்ந்து நின்றிருந்தவள் அறைக்குள்ளேயே சற்று தள்ளி போய் தூர விழுந்திருந்தாள்.

இரண்டெட்டில் அவளை நெருங்கி,  அவள் முழங்கையில் கை கொடுத்து எழுப்பி நிறுத்தினான்.

அழுகையில் கசங்கி நீர் கோர்த்திருந்த முகத்தை அழுத்தமாய் பிடித்து சற்றும் யோசிக்காமல் அவள் இதழில் அழுத்தமாய் வைத்தான் ஒரு முத்தம்.

இதயம் வெடித்து விடும் போல் அப்படி ஒரு ஓசையுடன் துடியாய் துடித்தது ப்ருந்தாவினுள் ! கீழே அவள் கொடுத்த மென்மையான அணைப்பை தேடி வந்தவன், சற்று வன்மையாகவே வைத்தான் தன் இதழ் முத்தத்தை.

“நீ நீ  மட்டும் தான் என்னை தொடுவியா? நான் தொடறது உனக்கு பிடிக்காதா! தொட விடாத அளவுக்கு நான் மோசமானவனா?” என ‘தன்னை தொட விட மாட்டேன் என்கிறாளே!’ என்ற ஏதோ ஒரு வேகம் இவனுள் பிறக்க “கன்னத்தில் ஒரு கிஸ் கேட்டதுக்கே அழுத தானே! அதையும் தாண்டி முத்தமே குடுத்துட்டேன், இதுக்கும் சேர்த்து வச்சு அழு!” என வார்த்தைகள் பறந்து வர  மீண்டும் அவள் இதழை மீண்டும் கவ்வி கொண்டான். போதும் போதும் எனும் அளவிற்கு முத்தமிட்டு கொண்டே இருந்தான்.

அப்படி ஒரு அழுத்தம் அவனிடமும், அவன் இதழ்களிடமும்  திக் பிரமையில் நின்றுவிட்டாள் ப்ருந்தா.

எத்தனை வேகத்தோடு வந்தானோ முத்தம் வைத்தானோ, அதே வேகத்திலேயே சென்றுவிட்டான்.

அப்படியே சுவரோடு சுவராக அமர்ந்துவிட்டாள். தன் காதலை அவனில் உணர காத்திருந்தவளுக்கு, அவனின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அவள் உணர்வுகளை  தகர்த்தெறிந்து கொண்டிருந்தது.

அவளில் இதழ் பதித்த போது, அதிர்ச்சியாய் உள்வாங்கியவள் அதில் உருகி போனாளே தவிர உறையவில்லை. அது இன்னமும் அவனுக்கு கோபத்தை தான் கிளப்பி விட்டது. ஆனாலும் சற்று முன் அவள் மீதிருந்த கோபம் எல்லாம் வடிந்தாற்போல் ஒரு மாயை அவளை சூழவே செய்தது.

அதே யோசனையோடு மீண்டுமாய் தன் அறைக்குள் வந்தவனுக்கு, உணர்வுகள் கட்டுக்குள் வந்தாற்ப்போல் ஒரு எண்ணம். ஒற்றை இதழ் முத்தம் தன்னை கட்டுபடுத்துமா? என்ற அதிர்வில் இருந்து அவனால் வெளியே வரவே முடியவில்லை.

இது வரை தன் பழைய வாழ்வை பற்றி நினைத்து பார்த்ததும் கிடையாது, தவிர உடல் நிலை சரியான பொழுது கூட, இதையெல்லாம் ‘மிஸ்’ செய்து விட்டேனே என எதற்கும்  ஏங்கியதும் இல்லை, ஏங்க விட்டதும் இல்லை.

ஆனால் ப்ருந்தா பற்றிய கடந்த காலத்தை, தன் காதல் வாழ்வை, தங்கள் நெருக்கத்தை மறந்து போனதற்காக  முதல் முறையாய் தவியாய் தவித்தான்.

Advertisement